என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாலைப்பணியாளர் சங்க பொதுக்குழு கூட்டம்
- தரும்புரியில் சாலைப்பணியாளர் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
- 41 மாத பணி நீக்க காலத்தை ரத்து செய்ய வேண்டும்.
தமிழ்நாடு சாலைப்பணியாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் தருமபுரியில் நடைபெற்றது. பொதுக்குழு கூட்டத்திற்கு தருமபுரி வட்டத் தலைவர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். செயலாளர் நாராயணன் வரவேற்றார். நிர்வாகிகள் முருகன், ஜெகதீசன், பெரியசாமி, அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு சாலைப்ப ணியாளர் சங்கத்தின் மாநில பொது செயலாளர் பாஸ்கரன், மாநில தலைவர் அர்ச்சுனன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். அரசு பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் நிர்மல், இணைச் செயலாளர் கிருஷ்ணன், சாலைப் பணியாளர் சங்க மாவட்டத் தலைவர் பழனி, மாவட்ட செயலாளர் சசிக்குமார், மாவட்ட பொருளாளர் நரசிம்மன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
கூட்டத்தில் தேர்தல் வாக்கு றுதியில் தெரிவித்துள்ள சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக் காலமாக கருதி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் பணிபுரியும் சாலைப் பணியாளர் களுக்கு தளவாட கருவிகள்,காலணிகள் வழங்க வேண்டும். பராமரிப்பு ஒப்பந்த சாலைகளில் நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்களை பணி செய்ய அனுமதிப்பதை நிர்வாகம் கைவிட வேண்டும்.
மேலும் நிலுவையில் உள்ள பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வரும் அக்டோபர் மாதம் இறுதியில் மாநாடு நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்ற ப்பட்டன. மேலும் இக் கூட்டத்தில் வேல், கந்தசாமி, ஜனார்தனன், நாகராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.






