என் மலர்
தர்மபுரி
- தருமபுரியில் திமுக மூத்த முன்னோடிகள் 1588 பேருக்கு பொற்கிழியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
- விழாவில் அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் பங்கேற்பு
தருமபுரியில் தி.மு.க. சார்பில் மூத்த முன்னோடிகள் 1588 பேருக்கு பொற்கிழிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டா லின் வழங்கினார். தருமபுரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி, மேற்கு மாவட்ட செயலாளர் பி. பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம் பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் 1080 பேருக்கும், கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் 508 பேருக்கும் என மொத்தம் 1588 பேருக்கு பொற்கிழி வழங்கினார்.
விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
தமிழக முழுவதும் குற்றப் பயணம் மேற்கொண்டு மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கி வருகிறேன். அதன்படி மாநில முழுவதும் 32 மாவட்டங்களில் மொத்தம் ரூ.41 கோடி பொற்கிழி வழங்கி உள்ளேன். இது எனக்கு மிகவும் பெருமை யாக இருக்கிறது. உங்களை பார்க்கும்போது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது. பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரை உங்கள் உருவங்கள் மூலம் பார்க்கிறேன். தி.மு.க.வின் வலுவான அணியாக திகழும் இளைஞர் அணிக்கு நீங்கள் வழி காட்ட வேண்டும். இளைஞர்களை நீங்கள் வாழ்த்த வேண்டும்.
இளைஞர் அணி சார்பில் இரண்டாவது மாநில மாநாடு சேலத்தில் டிசம்பர் மாதம் 17-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த மாநாடு வரலாற்று திருப்புமுனை மாநாடாக அமைய உள்ளது. இப்படி ஒரு மாநாடு இதுவரை நடந்ததில்லை. இனிமேலும் நடக்கப் போவதில்லை என்ற அளவுக்கு மிகச் சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்து வருகிறோம். இந்த மாநாட்டில் நீங்கள் அனைவரும் கலந்து கொண்டு எங்களை வாழ்த்த வேண்டும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.
விழாவில் டாக்டர் செந்தில்குமார் எம்.பி., முன்னாள் எம்.பி.க்கள் எம்.ஜி. சேகர், தாமரைச்செல்வன், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் தர்மச்செல்வன், சத்தியமூர்த்தி, இளைஞர் அணி மாவட்ட அமைப்பா ளர்கள் எம்.ஜி.எஸ். வெங்கடேஸ்வரன், ஆர். சிவகுரு, மாவட்ட அவைத் தலைவர்கள் செல்வராஜ், மனோகரன், மாவட்ட பொருளாளர்கள் எம்.எம். முருகன், தங்கமணி, மாவட்ட துணை செயலாளர் உமா சங்கர், வக்கீல் ஆ. மணி, ஆறுமுகம், ரேணுகாதேவி, ராஜகுமாரி, கிருஷ்ணகுமார், பாலக்கோடு பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி, முன்னாள் ஒருங்கிணைந்த மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் எல். முருகன், சார்பு அமைப்பு மாவட்ட அமைப்பாளர்கள் தடங்கம் இளைய சங்கர், பெரியண்ணன், பெரு மாள், முத்துலட்சுமி, பொன்மகேஸ்வரன் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- பாப்பாரப்பட்டி அருகே ஆசிரியர் வீட்டில் 40பவுன் நகை கொள்ளையடித்த சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
- வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் கைவரிசை
தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே பென்னாகரம் மெயின் ரோட்டில் அப்பு முதலி தெருவை சேர்ந்தவர் சிவசேகர் (வயது 52). இவர் கம்மாளப்பட்டி உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஜெயந்தி கௌரிசெட்டிபட்டி அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகிறார்.
இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் ஆசிரியர் சிவசேகரும், அவரது மனைவி ஜெயந்தியும் வேலைக்கு சென்று விட்டனர். சிவசேகரின் தாயார் பெருமா (76). இவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.
அப்போது நேற்று மதியம் 2 மணிக்கு ஒரு காரில் இருந்து இறங்கி வந்த 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ஆசிரியர் சிவசேகர் வீட்டுக்கு வந்துள்ளார். அந்தப் பெண் ஒரு பையில் பழங்களை வாங்கிக் கொண்டு மூதாட்டி பெருமாவிடம் நைசாக பேச்சு கொடுத்துள்ளார். அவரது உறவினர் என்று சொல்லி அவருக்கு பழங்களை கொடுத்து விட்டு வெளியே செல்வது போல் சென்று மீண்டும் வீட்டுக்குள் சென்றுள்ளார்.
மூதாட்டி பெருமா ஏமாந்த நேரத்தில் வீட்டில் இருந்த பீரோ சாவி வைத்த இடங்களை நோட்டமிட்டு எடுத்து பீரோவை திறந்து சுமார் 40 பவுன் நகைகளை திருடிச் சென்றுள்ளார்.
மாலை வீடு திரும்பிய ஆசிரியர் சிவசேகர் மற்றும் அவரது மனைவி ஜெயந்தி ஆகியோர் பீரோ திறந்து கிடப்பதையும் பீரோவில் இருந்த நகைகள் திருடப்பட்டதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தாயார் பெருமாவிடம் விசாரித்த போது வீட்டை நோட்டமிட்ட பெண் நகைகளை திருடி சென்றது தெரியவந்தது.
இது குறித்து ஆசிரியர் சிவசேகர் பாப்பாரப்பட்டி போலீசுக்கு தகவல் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து பாப்பாரப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று நேரில் ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.
பட்டப் பகலில் மெயின் ரோட்டில் உள்ள வீட்டில் மூதாட்டி கவனத்தை திசை திருப்பி நகை திருட்டில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
- பாலகோட்டில் ஆமை வேகத்தில் நடைபெறும் பஸ் நிலைய சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை
- பள்ளி, கல்லூரி மாணவர்கள் கடும் அவதி
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பஸ் நிலைய சீரமைப்பு பணிகளை செய்ய கடந்த ஏப்ரல் மாதம் 2-ந் தேதி வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் புதிய தரைதளம் அமைக்க ரூ. 83 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் திட்டத்திற்க்கு அடிக்கல் நாட்டினார். அதனை தொடர்ந்து ஏப்ரல் 24- ந்தேதி புதிய தரைத்தளம் அமைக்கும் பணி துவங்கப்பட்ட நிலையில் தற்போது புறநகர் பஸ் நிலைய சீரமைப்பு பணிகள் தரைத்தளத்தை ஜே.சி.பி இயந்திரம் மூலம் வெட்டி எடுக்கப்பட்டது.
ஜல்லி கற்களை கொட்டப்பட்டு தற்போது வரை சமன் செய்யப்பட்ட நிலையிலே உள்ளது. பஸ் நிலைய சீரமைப்பு பணிகள் ஆரம்ப கட்ட பணிகள் முடிந்த நிலையில் நகர பஸ் நிலைய முழு சீரமைப்பு பணிகள் நடைபெறாமல் நீண்ட நாட்கள் கடந்தும் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெ றுவதால் பஸ் நிலையத்தை சுற்றியுள்ள வணிக நிறுவனங்கள் நடைபாதை வியாபாரிகள் பொது மக்கள் மற்றும் பள்ளி ,கல்லூரி மாண வர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர் .
மேலும் ஒப்பந்ததாரரின் வேலை சுணக்கத்தால் தினந்தோறும் பாலக்கோடு பஸ் நிலையத்தில் இருந்து செல்லும் தனியார் மற்றும் அரசு பஸ்கள் 200-க்கும் மேற்பட்டவை மற்றும் ஆட்டோக்கள் பஸ் நிலையத்தில் வெளியே நிறுத்த வேண்டி இருப்பதால் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதனால் அந்த பகுதி முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்த முடியாமல் போக்குவரத்து போலீசார் திணறி வருகின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் இது குறித்து விரைந்து நடவடிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணி களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உதயநிதி ஸ்டாலினிடம் பொற்கிழி பெற்ற தி.மு.க முன்னோடிகள் கவுரவிக்கப்பட்டார்கள்
- 1071 பேருக்கு பொற்கிழி வழங்கப்பட்டது.
தருமபுரி மாவட்டத்தில் நேற்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.
காரிமங்கலத்தில் நடைபெற்ற இளைஞர் அணி செயல் வீரர்கள் கூட்டத்திலும் கலந்து கொண்டு இளைஞரனி நிர்வாகிகள் இடையே சிறப்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து முக்கிய நிகழ்வாக நேற்று இரவு ஆட்டுக்காரம்பட்டி பகுதியில் உள்ள ஜோதி மகாலில் தி.மு.க முன்னாடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்வு தொடங்கியது.
இதில் கலந்துகொண்ட உதயநிதி ஸ்டாலின் திமுக முன்னோடிகளின் மத்தியில் சிறப்புரை ஆற்றி அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு செய்த பணிகள் மற்றும் தியாகங்களையும் நினைவு கூர்ந்து வாழ்த்தி பேசினார். அதனைத் தொடர்ந்து மூத்த முன்னோடிகளுக்கு பொற்கி ளியினை வழங்கினார்.
உதயநிதி ஸ்டாலினிடம் பொற்கிழியினை பெற்ற கட்சியின் மூத்த முன்னோ டிகளை நல்லம்பள்ளி மத்திய ஒன்றிய செயலாளர் கே.பி.மல்லமுத்து வாழ்த்து தெரிவித்து கௌரவித்தார். அப்போது மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகம், ஒன்றிய துணை செயலாளர் வெங்கடேஷ் உள்ளிட்டோர் உடனி ருந்தனர்.
- கடத்துர் அருகே ரூ. 50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நவீன லேப் கட்டிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
- தேவையான உபகரணங்கள் வழங்க வேண்டும்.
தருமபுரி மாவட்டம், கடத்தூர் யூனியனுக்கு உட்பட்ட கடத்தூர் மற்றும் பாப்பிரெட்ப்பட்டி தாலுகாவில் உள்ள மக்கள் மேல் சிகிக்சை பயன்பெறும் வகையில் 15-வது நிதி ஆணையம் 2021 - 2022 ஆண்டு திட்டம் மூலம் கடத்தூரில் ரூ.50 லட்சம் மதிப்பில் நவின லேப் கட்டிடம் கட்டப்பட்டது.
இந்நிலையில் இது கட்டப்பட்டு பல மாதங்களான நிலையில் அதற்கான அறிவியல் உபகரணங்கள் இன்று வரை வராத நிலையிலும், மின்இணைப்பு முறையாக கொடுக்கப்படாமலும் இருந்து வருகின்றது.
மருத்துவத்துறை மக்க ளுக்கான தேவைகளை நிவர்த்தி செய்து வருவதாக கூறிவரும் நிலையில் இந்த லேப் கட்டிடம் முறையாக இயங்கவும், உபகரணங்கள் வழங்கப்படாமல் உள்ளது.
பல ஆயிரக்கணக்கான மக்கள் பயன்பெறும் விதமாக கட்டப்பட்ட லேப் செயல்படும் வகையில் தேவையான உபகரணங்கள் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற இளைஞர் அணியினர் பாடுபட வேண்டும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
- திமுகவில் இளைஞரணி முதன்மையானது.
வருகிற பாராளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி 40 40 தொகுதிகளிலும் வெற்றி பெற இளைஞர் அணியினர் தீவிரமாக பணியாற்ற வேண்டும் என்று காரியமங்கலத்தில் நடந்த செயல்விரல்கள் ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
தர்மபுரி மேற்கு மற்றும் கிழக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் காரிமங்கலத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.பழனி யப்பன் வரவேற்று பேசினார்.
மாநில இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சீனிவாசன், பிரகாஷ், கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எம்.ஜி.எஸ். வெங்கடேஸ்வரன், மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆர். சிவகுரு, மாவட்ட துணை அமைப்பாளர்கள் வக்கீல் அசோக்குமார், செல்வராஜ், ராஜகோபால், நர்த்தம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் கலைச்செல்வன், கார்த்திக், முத்தமிழன், மகேஷ்குமார், ஹரி பிரசாத், கோடீஸ்வரன், நாசர், தங்கசெழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சரும், தி.மு.க. இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:-
சேலத்தில் வருகிற டிசம்பர் மாதம் 17- ந்தேதி தி.மு.க. இளைஞரணி 2- வது மாநில மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பதற்காகவும், மாநாட்டிற்கு தயார்படுத்து–வதற்காகவும் உங்களை சந்திக்க இங்கு வந்துள்ளேன்.
இங்கு ஏற்பட்டுள்ள எழுச்சி மற்றும் இளைஞர்களின் அன்பை பார்க்கும்போது அந்த மாநாட்டில் பங்கேற் பதில் என்னை விட நீங்கள் ஆர்வமாக இருப்பதை உணர முடிகிறது. வழக்கமாக தேர்தலுக்கு முன்பு தலைமைக் கழகம் மாநில மாநாட்டை நடத்தும். இப்போது அந்த வாய்ப்பு இளைஞர் அணிக்கு வழங்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு முதல்- அமைச்சர் அந்த அளவிற்கு இளைஞர் அணி மீது நம்பிக்கை வைத்து உள்ளார்.
இது செயல்வீரர்கள் கூட்டம். செயல்வீரர்கள் என்பவர்கள் யார்? தலைமை சொல்வதை சுயநலம் பார்க்காமல் செய்து முடிப்பவரே செயல்வீரர். கழகத்தில் 23 அணிகள் உள்ளன. அவற்றில் முதன்மையானது இளைஞர் அணி. திமுகவின் கொள்கை, வரலாறு ஆகியவற்றை இளைஞர் அணியினர் பொதுமக்களுக்கு மேலும் சிறப்பாக கொண்டு போய் சேர்க்க வேண்டும். மாவட்டம் தோறும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மாரத்தான் போட்டி நடத்துதல், மாவட்டங்களில் கலைஞர் நூற்றாண்டு நூலகங்களை தொடங்குதல் ஆகிய பணிகள் இளைஞர் அணிக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த பணிகளை சிறப்பாக செய்ய வேண்டும்.
தி.மு.க. இளைஞரணியில் மாவட்டத்தைச் சேர்ந்த 10 ஆயிரம் பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அனைத்து இளைஞர்களும் குடும்பத்தோடு சேலத்தில் நடைபெற உள்ள மாநாட்டில் பங்கேற்க வேண்டும். இந்தியாவை மாற்றிக் காட்டுவோம் என்று கூறி இந்தியாவின் பெயரை பாரத் என்று மாற்றுகிறார்கள். பிரதமர் மோடி 2020- ம் ஆண்டு இந்தியாவை வல்லரசாக மாற்றி காட்டுவோம் என்று கூறினார். ஆனால் இப்போது 2047- ல் இந்தியா வல்லரசாக மாறும் என்று கூறுகிறார்.
இந்தியாவின் நலன்களை பாதுகாக்க வருகிற பாராளுமன்றத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெற இளைஞர் அணியினர் தீவிரமாக பணியாற்ற வேண்டும். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
கூட்டத்தில் டாக்டர் செந்தில்குமார் எம்.பி., முன்னாள் எம்.பி.க்கள் எம்.ஜி. சேகர், தாமரைச்செல்வன், மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் பி. தர்மசெல்வன், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் சத்தியமூர்த்தி, மேற்கு மாவட்ட பொருளாளர் எம்.எம். முருகன், காரிமங்கலம் பேரூராட்சி தலைவர் பி.சி.ஆர். மனோகரன், துணைத் தலைவர் சீனிவாசன், மாவட்ட துணை செயலாளர் உமா சங்கர், வக்கீல் ஆ.மணி, ஆறுமுகம், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பெரியண்ணன், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் தடங்கம் இளைய சங்கர், மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் பெருமாள், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் தாமோதரன், நகர செயலாளர் முல்லை ரவி, ஒன்றிய செயலாளர்கள் இல.கிருஷ்ணன், முத்துக்குமார், சரவணன், சிவப்பிரகாசம், சக்திவேல், மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் முனிராஜ், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி நன்றி கூறினார்.
- நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக இவர் மீது மாவட்ட நிர்வாகத்திற்க்கு புகார்கள் சென்றன.
- ஊராட்சி மன்ற செயலாளர் வேலுவை பணி நீக்கம் செய்து பணியிலிருந்து விடுவித்துள்ளார்.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியம் கரகதஅள்ளி ஊராட்சி மன்ற செயலாளராக பணிபுரிந்து வந்தவர் கடமடையை சேர்ந்த வேலு (வயது.40). இவர் ஊராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களில் நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக இவர் மீது மாவட்ட நிர்வாகத்திற்க்கு புகார்கள் சென்றன.
இது குறித்து விசாரணை நடத்த மாவட்ட கலெக்டர் சாந்தி உத்தரவிட்டார். இந்த நிலையில் அதிகாரிகள் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இருந்த பதிவேடுகளை கைபற்றி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது இவர் நிதி முறைகேட்டில் ஈடுபட்டது உறுதியானது. இது குறித்து கலெக்டருக்கு அறிக்கை அளித்தனர்.
இதடையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலர் கரகதஅள்ளி ஊராட்சி மன்ற செயலாளர் வேலுவை பணி நீக்கம் செய்து பணியிலிருந்து விடுவித்துள்ளார். நிதி முறைகேட்டால் ஊராட்சி செயலாளரின் பணி நீக்கம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ரூ.30.60 லட்சம் மதிப்பில் இரண்டு புதிய வகுப்பறை கட்டி முடிக்கப்பட்டது.
- மாணவ மாண வர்களின் பயன்பா ட்டிற்காக திறந்து வைக்க ப்பட்டது.
கடத்தூர்,
அரூர் யூனியன் பாப்பி ரெட்டிப்பட்டி வட்டம் ஜம்மணஅள்ளி கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுக்காக குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேன்பாட்டு திட்டம், 2022 - 2023 மூலம்ரூ. 30.60 லட்சம் மதிப்பில் இரண்டு புதிய வகுப்பறை கட்டி முடிக்கப்பட்டது.
அது நேற்று மாணவ மாண வர்களின் பயன்பா ட்டிற்காக திறந்து வைக்க ப்பட்டது. இந்த நிகழ்சியில் பஞ்சாயத்து தலைவர் சிவராஜ், பள்ளி மேலாண் மை குழு உறுப்பினர்.அறிவழகன். பள்ளியின் இருபால் ஆசிரியர்கள். இன்ஜினியர் சத்தியவாணி, ஒப்பந்ததாரர் அழகரசன், கட்டிட மேற்பார்வையாளர் மாதையன்.பள்ளி
மாணவ, மாணவிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- தி.மு.க இளை ஞரணி செயல்வீரர்கள் கூட்டம் காரிமங்க லத்தில் நடை பெற்றது.
- இளைஞரணி நிர்வா கிகளின் செயல்பா டுகள் குறித்து ஆய்வு செய்து சிறப்புரை ஆற்றினார்.
மொரப்பூர்,
தமிழ்நாடு வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர் கே.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சரும், தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளருமான பி.பழனி யப்பன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், தருமபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளருமான தடங்கம் சுப்பிரமணி ஆகி யோர் முன்னிலையில் ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்ட தி.மு.க இளை ஞரணி செயல்வீரர்கள் கூட்டம் காரிமங்க லத்தில் நடை பெற்றது.
இக்கூட்டத்தில் தி.மு.க இளை ஞரணி செயலா ளரும், தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு இளைஞரணி நிர்வா கிகளின் செயல்பா டுகள் குறித்து ஆய்வு செய்து சிறப்புரை ஆற்றினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட தருமபுரி மேற்கு மாவட்ட தி.மு.க வர்த்தகர் அணி அமைப்பாளரும், பூதநத்தம்- ஆலாபுரம் ஒன்றிய குழு உறுப்பி னரு மான வெ.தாமோதிரன் தலைமையில் பூதநத்தம் கிராமத்தில் இருந்து இளைஞர் அணியை சேர்ந்த 55 பேர் காரி மங்கலத்தில் நடைபெற்ற தி.மு.க இளை ஞரணி செயல்வீ ரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு தி.மு.க இளை ஞரணி செயலாளரும், அமைச்சரு மான உதயநிதி ஸ்டாலினுக்கு மலர் கொடுத்து வரவேற்பு அளித்தனர்.
- தருமபுரியில் கூட்டுறவு வங்கி பணியாளர் சங்கம் சார்பில் இணை பதிவாளரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
- 3ந்தேதி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவிப்பு
தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் தருமபுரி மாவட்ட கிளை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது;
தருமபுரி மாவட்டத்தில் 133 தொடக்க வேளாண்மை சங்கங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கங்களில் பல்நோக்கு சேவை மையம், விவசாய உள் கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ் விருப்பமுள்ள கூட்டுறவு சங்கங்களில் மட்டுமே இத்திட்டத்தை செயல்படுத்த முடியும் என கூட்டுறவுத்துறையால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால் தற்போது நலிவடைந்து நட்டத்தில் இயங்கும் சங்கங்களுக்கு விவசாய உபகரணங்கள் மற்றும் லாரி, டெம்போ போன்ற வாகனங்கள் வாங்க நிர்பந்தி க்கப்படுகிறது. இதனால் சங்கங்கள் மேலும் நட்டத்துக்கு உள்ளாகி நிதி நிலை மேலும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதிகாரிகள் உபகர ணங்கள் வாங்க கட்டா யப்படுத்துவதை கைவிடக் கோரி இன்று தருமபுரி இணை பதிவாளரிடம் மனு அளிக்கப்பட்டது. இதே போல் தமிழ்தாடு முழுவதும் அனைத்து மண்டல பதிவா ளர்களுக்கும் கோரிக்கை மனு டாக்பியா தொழி ற்சங்கம் மூலம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் தொடக்க வேளாண்மை பணியா ளர்கள் சுமார் 500 பேர் கலந்து கொண்டனர்.
இதில் டாக்பியா மாவட்ட செயலாளர் வி. கே. நரசிம்மன், தலைவர் அசோகன் ஆகியோர் தலைமையிலும் பொருளார் ஸ்டாலின் மணிக்குமார், துணைத்த லைவர் துரை ராஜ், துணைத்த லைவர் வினாயகம், இணைச்செ யலாளர் உஷாராணி, மாநில, மாவட்ட இணைச்செயலாளர் செந்தி ல்குமார் ஆகியோர் முன்னி லையிலும் மனு அளிக்கப்பட்டது. இதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில் வரும் அக்டோபர் 3ந்தேதி ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மாரண்டஅள்ளி அருகே மது விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்
- 180 பாட்டில்கள் பறிமுதல்
தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் சட்டவிரோதமாக அரசு மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக மாரண்ட அள்ளி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனை தொடர்ந்து போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.அப்போது சீரியம்பட்டி அருகே குண்டுபள்ளம் சுடுகாட்டில் மதுபான விற்பனை நடப்பது தெரியவந்தது.
அங்கே சென்று மது விற்பனையில் ஈடுபட்ட நபரை பிடித்து விசாரித்ததில் அவர் அதே பகுதியை சேர்ந்த சரண்ராஜ் (வயது. 29) என்பதும், அரசு மது பானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததும் தெரிய வந்தது.
அவரை கைது செய்த மாரண்டஅள்ளி போலீசார் அவரிடமிருந்து 4 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 180 மில்லி அளவுள்ள 30 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
- தருமபுரியில் இயங்கி வரும் அரசு கல்லூரி விடுதியில் எம்.எல். ஏ.,ஆய்வு செய்தார்.
- விடுதியில் போதிய வசதிகள் இல்லை என் மாணவர்கள் தெரிவித்தனர்.
தருமபுரி டாக்டர் அம்பேத்கார் அரசு கல்லூரி மாணவர்கள் விடுதி அதியமான்கோட்டை அருகே தனியார் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இவ்விடுதியில் சுமார் 440 மாணவர்கள் தங்கி கல்லூரியில் கல்வி பயின்று வருகிறார்கள்.
இம்மாணவர்களுக்கு ஒட்டப்பட்டி அருகே புதியதாக அரசு விடுதி அமைக்கப்பட்டு சில வருடங்க ளாகியும் திறக்கப்ப டாமல் பூட்டியே உள்ளது.
தற்போது உள்ள விடுதி வாடகை கட்டிடத்திற்கு அரசு மாதந்தோறும் ரூ. 65 ஆயிரம் வாடகை செலுத்தி வருகிறது. இக்கட்டிடத்தில் மாணவர்களுக்கு போதுமான கழிவறை வசதி, தூய்மையான குடிநீர் வசதி, மழைக்காலங்களில் விடுதியின் மேற்கூரை பழுதால் தங்கும் அறையில் நீர் வடிந்து ஒழுகுதல், மாணவர்களின் பாதுகாப்பு குறைவு, கல்லூரிக்கு செல்ல பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கும் நிலையை அறிந்த, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் விடுதியின் கழிவறை, தங்கும் அறை, உணவு, குடிநீர் போன்றவற்றை நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
பின்னர், மாணவர்க ளிடையே அமர்ந்து இரவு உணவு சாப்பிட்ட அவர், வழங்கப்படும் உணவு குறித்தும் மாண வர்களி டையே கேட்டறிந்தார். மாணவர்கள், விடுதியில் போதுமான வசதியின்றி அவதியுறும் நிலையில் உள்ளனர். 440 மாணவர்களுக்கு இரண்டு கழிவறைகளை மட்டுமே உள்ளதால் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலையால் கல்லூரி செல்வதற்கு காலதாமதம் ஏற்படுகிறது.
இதனால் புதியதாக அமைக்கப்பட்டுள்ள விடுதி கட்டிடத்தை உடனடியாக திறந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்வதாக மாணவர்களி டையே தெரிவித்தார். இந்த ஆய்வின் போது, தனி வட்டாட்சியர் ஆர்.சரவணன், விடுதியின் காப்பாளர் மூ.சாமிநாதன், கூடுதல் காப்பாளர் மகாலிங்கம், அரசு கல்லூரி மகளிர் விடுதியின் தேர்வு குழு உறுப்பினர் ஒ.கே.கிருஷ்ணமூர்த்தி, விடுதி உதவியாளர், சமையலர் , உள்ளிட்டோர் உடனிருந்தனர்.






