என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    40 தொகுதிகளிலும் வெற்றி பெற இளைஞர் அணியினர் தீவிரமாக பாடுபட வேண்டும்: அமைச்சர் உதயநிதி பேச்சு
    X

    40 தொகுதிகளிலும் வெற்றி பெற இளைஞர் அணியினர் தீவிரமாக பாடுபட வேண்டும்: அமைச்சர் உதயநிதி பேச்சு

    • பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற இளைஞர் அணியினர் பாடுபட வேண்டும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
    • திமுகவில் இளைஞரணி முதன்மையானது.

    வருகிற பாராளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி 40 40 தொகுதிகளிலும் வெற்றி பெற இளைஞர் அணியினர் தீவிரமாக பணியாற்ற வேண்டும் என்று காரியமங்கலத்தில் நடந்த செயல்விரல்கள் ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

    தர்மபுரி மேற்கு மற்றும் கிழக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் காரிமங்கலத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.பழனி யப்பன் வரவேற்று பேசினார்.

    மாநில இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சீனிவாசன், பிரகாஷ், கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எம்.ஜி.எஸ். வெங்கடேஸ்வரன், மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆர். சிவகுரு, மாவட்ட துணை அமைப்பாளர்கள் வக்கீல் அசோக்குமார், செல்வராஜ், ராஜகோபால், நர்த்தம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் கலைச்செல்வன், கார்த்திக், முத்தமிழன், மகேஷ்குமார், ஹரி பிரசாத், கோடீஸ்வரன், நாசர், தங்கசெழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த கூட்டத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சரும், தி.மு.க. இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:-

    சேலத்தில் வருகிற டிசம்பர் மாதம் 17- ந்தேதி தி.மு.க. இளைஞரணி 2- வது மாநில மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பதற்காகவும், மாநாட்டிற்கு தயார்படுத்து–வதற்காகவும் உங்களை சந்திக்க இங்கு வந்துள்ளேன்.

    இங்கு ஏற்பட்டுள்ள எழுச்சி மற்றும் இளைஞர்களின் அன்பை பார்க்கும்போது அந்த மாநாட்டில் பங்கேற் பதில் என்னை விட நீங்கள் ஆர்வமாக இருப்பதை உணர முடிகிறது. வழக்கமாக தேர்தலுக்கு முன்பு தலைமைக் கழகம் மாநில மாநாட்டை நடத்தும். இப்போது அந்த வாய்ப்பு இளைஞர் அணிக்கு வழங்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு முதல்- அமைச்சர் அந்த அளவிற்கு இளைஞர் அணி மீது நம்பிக்கை வைத்து உள்ளார்.

    இது செயல்வீரர்கள் கூட்டம். செயல்வீரர்கள் என்பவர்கள் யார்? தலைமை சொல்வதை சுயநலம் பார்க்காமல் செய்து முடிப்பவரே செயல்வீரர். கழகத்தில் 23 அணிகள் உள்ளன. அவற்றில் முதன்மையானது இளைஞர் அணி. திமுகவின் கொள்கை, வரலாறு ஆகியவற்றை இளைஞர் அணியினர் பொதுமக்களுக்கு மேலும் சிறப்பாக கொண்டு போய் சேர்க்க வேண்டும். மாவட்டம் தோறும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மாரத்தான் போட்டி நடத்துதல், மாவட்டங்களில் கலைஞர் நூற்றாண்டு நூலகங்களை தொடங்குதல் ஆகிய பணிகள் இளைஞர் அணிக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த பணிகளை சிறப்பாக செய்ய வேண்டும்.

    தி.மு.க. இளைஞரணியில் மாவட்டத்தைச் சேர்ந்த 10 ஆயிரம் பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அனைத்து இளைஞர்களும் குடும்பத்தோடு சேலத்தில் நடைபெற உள்ள மாநாட்டில் பங்கேற்க வேண்டும். இந்தியாவை மாற்றிக் காட்டுவோம் என்று கூறி இந்தியாவின் பெயரை பாரத் என்று மாற்றுகிறார்கள். பிரதமர் மோடி 2020- ம் ஆண்டு இந்தியாவை வல்லரசாக மாற்றி காட்டுவோம் என்று கூறினார். ஆனால் இப்போது 2047- ல் இந்தியா வல்லரசாக மாறும் என்று கூறுகிறார்.

    இந்தியாவின் நலன்களை பாதுகாக்க வருகிற பாராளுமன்றத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெற இளைஞர் அணியினர் தீவிரமாக பணியாற்ற வேண்டும். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

    கூட்டத்தில் டாக்டர் செந்தில்குமார் எம்.பி., முன்னாள் எம்.பி.க்கள் எம்.ஜி. சேகர், தாமரைச்செல்வன், மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் பி. தர்மசெல்வன், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் சத்தியமூர்த்தி, மேற்கு மாவட்ட பொருளாளர் எம்.எம். முருகன், காரிமங்கலம் பேரூராட்சி தலைவர் பி.சி.ஆர். மனோகரன், துணைத் தலைவர் சீனிவாசன், மாவட்ட துணை செயலாளர் உமா சங்கர், வக்கீல் ஆ.மணி, ஆறுமுகம், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பெரியண்ணன், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் தடங்கம் இளைய சங்கர், மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் பெருமாள், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் தாமோதரன், நகர செயலாளர் முல்லை ரவி, ஒன்றிய செயலாளர்கள் இல.கிருஷ்ணன், முத்துக்குமார், சரவணன், சிவப்பிரகாசம், சக்திவேல், மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் முனிராஜ், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி நன்றி கூறினார்.

    Next Story
    ×