என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மது விற்ற வாலிபர் கைது
    X

    மது விற்ற வாலிபர் கைது

    • மாரண்டஅள்ளி அருகே மது விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்
    • 180 பாட்டில்கள் பறிமுதல்

    தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் சட்டவிரோதமாக அரசு மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக மாரண்ட அள்ளி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதனை தொடர்ந்து போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.அப்போது சீரியம்பட்டி அருகே குண்டுபள்ளம் சுடுகாட்டில் மதுபான விற்பனை நடப்பது தெரியவந்தது.

    அங்கே சென்று மது விற்பனையில் ஈடுபட்ட நபரை பிடித்து விசாரித்ததில் அவர் அதே பகுதியை சேர்ந்த சரண்ராஜ் (வயது. 29) என்பதும், அரசு மது பானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததும் தெரிய வந்தது.

    அவரை கைது செய்த மாரண்டஅள்ளி போலீசார் அவரிடமிருந்து 4 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 180 மில்லி அளவுள்ள 30 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×