என் மலர்
தர்மபுரி
- மைதிலியை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
- மூதாட்டி ஆப்பிளை சாப்பிடவே சுயநினைவை இழந்து மயங்கி விழுந்திருக்கிறார்.
தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியை சேர்ந்தவர் சிவசேகர். அரசுப்பள்ளி ஆசிரியர். இவருடைய மனைவி ஜெயந்தியும் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். கடந்த 26 - ம் தேதி கணவன், மனைவி இருவரும் பணிக்கு சென்றிருந்தனர். அப்போது வீட்டில் சிவசேகரின் வயதான தாயார் பெருமா, மற்றும் இவருடைய வயதான உறவினர் ஆகிய இருவர் இருந்துள்ளனர்.
அப்போது கார் ஒன்றில் வந்த அடையாளம் தெரியாத பெண் ஒருவர் வீட்டினில் நுழைந்து தான் உங்கள் மருமகள் ஜெயந்தியுடைய தோழி என தெரிவித்து, அவர்களிடம் நலம் விசாரித்து பேசத் தொடங்கியுள்ளார். அப்போது அங்கிருந்த முதியவர் தனக்கு தருமபுரியில் வேலை இருப்பதாக தெரிவித்து சென்றுள்ளார். இவரை கண்காணிக்க அந்த பெண்னும் பின்தொடர்ந்துள்ளார்.
இதனையடுத்து மற்றொரு பெண் வாங்கி வந்த ஆப்பிள் ஒன்றை மூதாட்டிக்கு சிறு சிறு துண்டுகளாக வெட்டி கொடுத்துள்ளார். அந்த மூதாட்டி அதை சாப்பிடவே சில நிமிடங்களில் சுயநினைவை இழந்து அங்கேயே மயங்கி விழுந்திருக்கிறார். அப்போது பீரோவில் இருந்த ரூ.15 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் 40 பவுன் தங்க நகைகளை திருடி சென்றுள்ளார்.
இது குறித்த புகாரின் பேரில் அங்கிருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது கொள்ளையடித்து சென்றது, சேலத்தை சேர்ந்த பிரபல கொள்ளைக்காரியான மைதிலியாகத்தான் இருக்கும் என வலுவான சந்நேகம் எழுந்துள்ளதை தொடர்ந்து, மைதிலியை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 24 -ம் தேதி தருமபுரி மாவட்டம் பெரியாம்பட்டி அருகே உள்ள பூலாபட்டி கிராமத்தில் பெருமாள் கோவில், பச்சையம்மன் கோவில், உள்ளிட்ட கோவில்களில் 9 பவுன் தங்க நகை மற்றும் உண்டியல் பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. அன்று இரவே பெரியாம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அரசு ஆவணங்கள் அனைத்தும் பதிவு செய்து வைத்துள்ள டேட்டாவுடன் கம்ப்யூட்டர் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து கடந்த 26 -ம் தேதி தருமபுரி மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்திருந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கும்போதே பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள ஆசிரியரின் வீட்டில் மூதாட்டிக்கு ஆப்பிள் பழத்தை கொடுத்து மயக்கம் அடைந்த பின் 40 பவுன் தங்க நகை மற்றும் ரூ.15,000 பணத்தை சத்தம் இல்லாமல் கொள்ளையடித்துள்ளனர்.
இந்த சம்பவத்தை அடுத்து நேற்று இரவு 5 கிலோ தங்கம் கொள்ளை யடிக்கப்பட்ட சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- சடலத்தை மயானத்திற்கு கொண்டு சென்ற போது சிலர் தடுத்ததாக தெரிகின்றது.
- இரண்டு நாட்களாக சடலம் புதைக்கப்படாதமலேயே இருந்தது.
தருமபுரி மாவட்டம், அரூர் அடுத்த கெளாப்பாறை கிராமத்தைச் சேர்ந்த சக்கு, (61) என்பவர் கடந்த புதன் கிழமையன்று காலமானார். அவரது சடலத்தை அருகில் உள்ள மயானத்திற்கு கொண்டு செல்ல முயன்றபோது மயானத்திற்கான பாதை சிலர் தடுத்ததாக தெரிகின்றது.
இதனால் இப்பிரச்சனைக்கு நிரந்த தீர்வு கிடைக்க வலியுறுத்தி நேற்று முன்தினம் அப்பகுதியில் பொதுமக்கள் சடலத்தை கொண்டு செல்லாமல் மறியலில் இடுபட்டனர். அவர்களுடன் அதிகாரிக்ள் மற்றும் காவல் துறையினர் பல்வேறு சமாதானப் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டும் பொது மக்கள் ஒத்துக்கொள்ளவில்லை.
இதனால் இரண்டு நாட்களாக சடலம் புதைக்கப்படாதமலேயே இருந்தது. இந்நிலையில் நேற்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் சாக்கன்சர்மா பாதிக்கப்பட்ட மக்களிடத்திலும், காவல்துறை, வருவாய்த்துறை நிர்வாகத்திடம் பேச்சு வார்த்தை நடத்தி, விரைவில் இப்பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்றளிக்கப்பட்ட உறுதிமொழிக்கு பிறகு இறந்துபோன சக்குவின் உடலை தானே சுமந்துக்கொண்டு மயானத்திற்க்கு சென்று அடக்கம் செய்தார்.
நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொகுதி துணைச்செயலாளர் கேசவன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
- கால்நடைதுறைக்கு சொந்தமான நிலத்தை பொது வழியாக பயன்படுத்தி வந்தனர்.
- ஒரு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் மக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே உள்ள கிட்டேசம்பட்டி கிராமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து விவசாயம் செய்து வருகின்றனர். இக்கிராமத்தில் வசித்து வரும் சிலரின் நிலங்கள் சுமார் 50 ஏக்கருக்கும் மேல் அருகே உள்ள கால்நடை துறைக்கு சொந்தமான மேய்ச்சல் நிலத்திற்கு அருகே உள்ளது.
கடந்த 50 ஆண்டுகளாக விவசாயம் செய்வதற்கும், விவசாய நிலத்திற்கு செல்வதற்கும் கால்நடைதுறைக்கு சொந்தமான நிலத்தை பொது வழியாக கிராம மக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நி லையில் கால்நடைதுறைக்கு சொந்தமான நிலத்தின் அருகே உள்ள ஒரு குடும்பத்தார் நிலத்தை அபகரித்து பொதுமக்கள் யாரும் இவ்வழியை பயன்படுத்தாதவாறு தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனால் விவசாய நிலத்திற்கு செல்ல முடியமால் கிராம மக்கள் தவித்து வந்தனர்.
இந்நிலையில் கால்நடை துறையினர் நிலத்தை அளந்து ஆக்கிரமிப்புகளை அகற்றியுள்ளனர். ஆனாலும் அவ்வழியை பயன்படுத்த ஒரு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் கிராம மக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். இது குறித்து காவல்துறையிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேலும் கால்நடைக்கு சொந்தமான இடத்தில் பொதுவழிப்பாதை அமைத்து தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சென்னை உயர்நீதிமன்றம் தண்டனை பெற்றவர்கள் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கும் ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
- வாச்சாத்தி கிராமத்தில் உள்ள பெண்கள் இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள வாச்சாத்தி மலைக் கிராமத்தில், கடந்த 1992ம் ஆண்டு வனத்துறை, காவல் துறையினர் மற்றும் வருவாய் துறை ஊழியர்கள் பாலியல் வன்முறை தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டதாக தொடரப்பட்டிருந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்டிருந்த 215 பேரும் குற்றவாளிகள் என்று தருமபுரி மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
இவர்களில் 126 பேர் வனத்துறை அலுவலர்கள். 84 பேர் காவல் துறையினர். மீதமுள்ள 5 பேர் வருவாய்த்துறை ஊழியர்கள் இதில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட 17 பேர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்டது. இவர்களில் 12 பேருக்கு 10 ஆண்டுகளும், 5 பேருக்கு 7 ஆண்டுகளும் தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து தண்டனை பெற்றவர்கள், சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த நிலையில் இன்று காலை சென்னை உயர்நீதிமன்றம் தண்டனை பெற்றவர்கள் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கும் ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இந்த தீர்ப்பை அறிந்த வாச்சாத்தி கிராமத்தில் உள்ள பெண்கள் இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
- பிளாஸ்டிக் பைகள் விற்பனை தடுக்க கோரிக்கை சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.
- 10 குடோன்களில் பதுக்கி வைத்திருப்பதாக புகார்
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளிலும் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்,
பேரூராட்சி பகுதிகளில் வணிக நிறுவனங்கள், நடைபாதை வியாபாரிகள் என எப்போதும் பரபரப்பாக காணப்படும் நகரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு சர்வ சாதாரணமாக பொதுமக்கள் மத்தியில் அதிக புழக்கத்தில் உள்ளது.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது;-
தமிழ்நாடு முழுவதும் 2019 -ம்ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த கூடாது என்று தமிழக அரசு தடை விதித்து உத்தவிட்டுள்ளது.
பிளாஸ்டிக் பயன் பாட்டை கட்டுப்ப டுத்தும் விதமாக மீண்டும் மஞ்சப்பை இயக்கத்தின் மூலம் மஞ்சப்பை பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் பாலக்கோடு பேரூராட்சியில் 10 -க்கும் மேற்பட்ட பெரிய குடோன்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரியர் பேக்குகள், தண்ணீர் டம்ளர், தட்டு போன்றவற்றை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.
பேரூராட்சி நிர்வாகம் பிளாஸ்டிக்கை கட்டு ப்படுத்து கிறேன் என்ற பெயரில், பெய ரளவில் மட்டுமே வணிக நிறுவனங்கள், நடைபாதை வியாபாரிகளிடம் சொற்ப அளவில் பிளாஸ்டிக்கை பறிமுதல் செய்து கடும் நடவடிக்கை எடுப்பது போல் நடந்து கொள்கின்றனர். ஆனால் குடோன்களில் பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்கள் மீது இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
விழிப்புணர்வு என்ற பெயரில் பொது மக்களுக்கும் மாணவர்க ளுக்கும் விளம்பரத்திற்காக பேரூராட்சி நிர்வாகம் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.இது குறித்து சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பிளாஸ்டிக் பயன்பாட்டினை முற்றிலும் நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- ரூ. 5 கோடி 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அதற்கான பணிகள் தொடங்கியது.
- முதியவர்கள் அடிக்கடி குழியில் விழுந்து விபத்து ஏற்படடு வருகிறது.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பேரூராட்சி 18 வார்டு களிலும் பொது மக்களின் நலன் கருதி மத்தி ஜல்சக்கி திட்டத்தின் கீழ் வீடுகள் தோறும் குடிநீர் வழங்க கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 5 கோடி 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அதற்கான பணிகள் துவங்கின.
தற்போது வரை குடிநீர் குழாய் பதிக்க தோண்ட ப்பட்ட குழிகள் பெரும்பா லும் மூடப்ப டாமலும் திறந்த வெளியில் காணப்படுவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்கள், முதியவர்கள் என அடிக்கடி குழியில் விழுந்து விபத்து ஏற்படடு வருகிறது.
மேலும் பாலக்கோடு 11-வது வார்டு அல்லா கோவிலுக்கு செல்லும் தெருவில் குடிநீர் குழாய்க்காக தோண்டப்பட்ட குழி மூடப்படாமல் உள்ளதால் விபத்து ஏற்படும் முன்பு குழியை உடனடியாக மூட வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனை நடைபெற்று வருகிறது.
- ஏராளமான பக்தர்கள் சாமியை தரிசனம் செய்தனர்.
தருமபுரி நகரில் கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற வரமகாலட்சுமி சமேத பரவாசுதேவ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் புரட்டாசி மாதம் முழுவதும் மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனை நடைபெற்று வருகிறது.
கடந்த 23-ந் தேதி முதல் புரட்டாசி சனிக்கிழமையொட்டி பரவாசுதேவ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராள மான பக்தர்கள் சாமியை தரிசனம் செய்தனர். இதனைத்தொடர்ந்து புரட்டாசி மாத 13-வது நாளான 2-வது சனிக்கிழமையையொட்டி வருகிற 30-ந் தேதி மதியம் 12.30 மணியளவில் மூலிகை வர்ண கலாபங்களுடன் மூலவரான பரவாசுதேவ பெருமாளுக்கும், விசேஷ சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறுகிறது.
பின்னர் பக்தர்களுக்கு ஸ்ரீவாரி சேவா டிரஸ்ட் சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் இந்து சமய அறநி–லையத்துறை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
- திருமணமான பெண்ணை காதலிக்க வலியுறுத்தி அரிவளால் வெட்டிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்
- பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
தருமபுரி மாவட்டம், மொரப்பூர் அருகேயுள்ள இராணிமூக்கனூர் அண்ணாநகரை சேர்ந்த வர் பன்னீர்.இவரது மனைவி நந்தினி (வயது25). இருவக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன. தற்போது இரண்டு மாத கர்ப்பிணியாக உள்ளார்.
இந்த நிலையில் இவருக்கும் ,கணவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2019 -ம் ஆண்டு பிரிந்து வந்து சொந்த ஊரான மொட்டாங்குறிச்சியில் தங்கி இருந்தார். அப்போது மீனன ்கொட்டாய் கிரா மத்தை சேர்ந்த கணேசன் மகன் சண்முகம்(31) என்பவர் அவருடன் நன்கு பேசி பழக்கமாகி உள்ளார்.
மேலும் இவர் நந்தினி கணவரிடமிருந்து விவகாரத்து பெறுவதற்கு உதவி செய்வதாக தெரிவித்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கணவர் பன்னீர் வந்து சமாதானம் செய்து நந்தினியை அழைத்து சென்று குடும்பம் நடத்தி வந்தார். இதில் ஆத்திரம் அடைந்த சண்முகம் நந்தினிக்கு தொடர்ந்து காதலிப்பதாக சொல்லி தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது குறித்து அவர் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் சண்முகத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சிறையில் இருந்து வெளியே வந்த சண்முகம் மீண்டும் தொடர்ந்து நந்தினிக்கு தொல்லை அளித்து வந்த நிலையில் சம்பவத்தன்று ரோட்டில் நடந்து சென்ற நந்தினியை மோட்டர் சைக்கிள் பின் தொடர்ந்து வந்து தனது மோட்டர் சைக்கிளில் அமரச் சொல்லி மிரட்டி உள்ளார். அவர் மறுக்கவே மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து அவரை வெட்டியுள்ளார்.
இதில் நந்தினிக்கு இடது பக்கத்து தோளில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை கண்ட அந்த பகுதி பொதுமக்கள் கூச்சலிட்டனர். இதனை கண்டதும் அங்கேயிருந்து சண்முகம் தப்பி யோடினார். அந்த பகுதியை சேர்ந்தவர்கள் நந்தினியை மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இது குறித்து நந்தினி அளித்த புகாரின் மொரப்பூர் போலீஸ் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து் தலைமறைவாக உள்ள சண்முகத்தை தேடி வருகின்றனர்.
- அரூரில் மாற்றுத்திறனாளிகள் குறித்து இல்லம் தேடி கணக்கெடுப்பு பணி துவங்கியது.
- செப் 29ந்தேதி முதல் அக் 12ந்தேதி வரை நடைபெறும்---
தருமபுரி மாவட்டம், அரூர் வட்டாரம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க அலுவலகத்தில் திட்ட இயக்குநர் முகமது நசீர் ஆலோசனைபடி, 34 ஊராட்சிகளில் பணிபுரியும் சுய உதவி குழு பயிற்று நருக்கு மாற்றுத்திற னாளிகளுக்கான சமூக தரவுகள் கணக்கெ டுப்பாளர் பயிற்சி நடைபெற்றது .
இப்பயிற்சி மாவட்ட மாற்றுத்தி றனாளி அலுவலர் தலைமையில், முதன்மை பயிற்சி பெற்ற திட்ட அலுவலர் மற்றும் மாவட்ட அளவில் பயிற்சி பெற்ற பயிற்சியாளர்களின் பயிற்றுநரை கொண்டு பயிற்சி வழங்கப்பட்டது. இதில் வட்டார இயக்க மேலாளர் அறிவழகன் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் தருமபுரி மாவட்டத்தில் வரும் 29-ம் தேதி முதல் அடுத்த மாதம் 12-ம் தேதி வரை கணக்கு எடுக்கும் பணி நடைபெற உள்ளது. மகளிர் திட்ட மேம்பாட்டு நிறுவனத்தின் களப்பணியாளர்கள் கணக்கெடுக்கும் பணிக்காக உங்கள் இல்லம் தேடி வருவார்கள்.
எனவே கணக்கெ டுக்கும் பணிக்கு தேவைப்படும் தகவல்க ளை தயக்கமின்றி வழங்கி ஒத்துழைப்பு தருமாறு நிகழ்ச்சியில் கேட்டு கொண்டனர்.
- கடத்தூர் அரசுப்பள்ளியில் டெங்கு காயச்சல் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
- சுகாதாரத்துறையினர் விளக்கம் அளித்தனர்.
தருமபுரி மாவட்டம் கடத்தூர் அரசு பெண்கள் பள்ளியில் டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்பு ணர்வு நடைபெற்றது.
இதில் டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் ,பரவும் முறைகள், வராமல் தடுக்க முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் அதனால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துக் கூறினர்.
இதில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மதியழகன், சுகாதார ஆய்வாளர் ரமேஷ் மேற்பார்வையில் , சுகாதார பணியாளர்கள், கொசு ஒழிப்பு பணியாளர்கள் ஆகியோர் பள்ளி மாணவிகளுக்கு டெங்கு தடுப்பு குறித்து விழிப்பு ணர்வை ஏற்படுத்தினர்.
- காரிமங்கலம் அருகே பெங்களூரில் இருந்து 5 கிலோ நகையுடன் வந்த காரை மர்ம நபர்கள் கடத்திக் கொண்டு சென்றனர்.
- சம்பவம் நடந்த இடத்தில் இருந்த இரும்பு ராடு, செல்போன் ஆகியவை பறிமுதல் செய்தனர்.
காரிமங்கலம்:
கோவை ராஜ வீதியில் பிரசன்னா (வயது 40) என்பவர் நகைக்கடை வைத்துள்ளார். இவர் நகைக்கடைக்கு தேவையான 5 கிலோ எடையுள்ள பல்வேறு புதிய நகைகளை வாங்கிக் கொண்டு கார் மூலம் நேற்று இரவு பெங்களூரில் இருந்து காரில் கோவை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அவருடன் கடை பணியாளர்கள் விஜயகுமார் (46), சுரேஷ்குமார் (45), ஜெய்சன் (40) ஆகியோர் வந்தனர்.
பிரசன்னா ஓட்டி வந்த கார் தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த பெரியாம்பட்டி ஆற்று மேம்பாலம் மீது சென்றது. அப்போது பின்னால் 2 கார்களில் வந்த மர்மநபர்கள் பிரசன்னா வந்த காரை வழிமறித்து காரின் சைடு கண்ணாடிகளை இரும்பு ராடால் உடைத்து நொறுக்கினர்.
இதனால் காருக்குள் உட்கார்ந்து கொண்டிருந்த பிரசன்னா, விஜயகுமார், சுரேஷ்குமார், ஜெய்சன் ஆகியோர் பதறிப்போய் வண்டியில் இருந்து கீழே இறங்கினர். அப்போது மர்ம நபர்கள் 5 கிலோ நகைகள் மற்றும் பிரசன்னா வந்த காரையும் கடத்தி சென்றனர்.
இதுகுறித்து காரிமங்கலம் போலீஸ் நிலையத்தில் பிரசன்னா புகார் தெரிவித்தார். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து தகவலறிந்த சேலம் சரக டி.ஐ.ஜி. தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர். சம்பவம் குறித்து நகையை பறிக்கொடுத்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், சம்பவம் நடந்த இடத்தில் இருந்த இரும்பு ராடு, செல்போன் ஆகியவை பறிமுதல் செய்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சோதனை சாவடிகளில் பதிவான சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து பிரசன்னா வந்த கார் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நள்ளிரவில் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- மாவட்டத்தில் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்கள் டெங்கு காய்ச்சல் வார்டில் சேர்க்கப்பட்டு தனி கவனம் செலுத்தி டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.
- ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகளுக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டு ஒரு பெண் குழந்தை உயிர் இழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தருமபுரி:
தமிழகம் முழுவதும் பருவ நிலை மாற்றம் காரணமாக பொதுமக்கள் அடிக்கடி காய்ச்சல், சளி போன்ற நோய் தொல்லைகளால் அவதிப்பட்டு வந்தனர். மேலும் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு அவதியடைந்து வந்தனர்.
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் விதமாக தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் அரசு அதிகாரிகள் வீடு, வீடாக சென்று கொசுப்புழுக்களை அழிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், அந்தந்த மாவட்டங்களில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனியாக சிறப்பு டெங்கு காய்ச்சல் வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 50 படுக்கைகள் கொண்ட தனி வார்டும், மேலும் மாவட்டத்தில் உள்ள 4 அரசு மருத்துவமனைகளில் 60 படுகைகள் கொண்ட வார்டுகளும் தயார் செய்து வைக்கப்பட்டிருந்தது.
மாவட்டத்தில் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்கள் டெங்கு காய்ச்சல் வார்டில் சேர்க்கப்பட்டு தனி கவனம் செலுத்தி டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சிவராஜ்பேட்டை பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (45) மற்றும் சுமித்ரா(35) ஆகிய தம்பதியினருக்கு பிரித்திகா (15), தாரணி (13), யோகலட்சுமி (7), அபிநிதி(4), புருஷோத்தமன் 8 மாத கைக்குழந்தை என 5 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் யோகலட்சுமி, அபிநிதி, புருஷோத்தமன் ஆகிய 3 குழந்தைகளுக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டு கடந்த 23-ந் தேதி திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்ததினர்.
இந்நிலையில் யோகலட்சுமி மட்டும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் இருந்து தற்போது பெங்களூரில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனைத் தொடர்ந்து திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் இருந்து அபிநிதி மற்றும் புருஷோத்தமன் ஆகிய 2 குழந்தைகளும் தருமபுரி அரசு மருத்துவமனைக்கு கடந்த 26-ந் தேதி மேல் சிகிச்சைக்காக மாற்றம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் நேற்று இரவு அபிநிதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேலும் புருஷோத்தமன் தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அப்போது அங்கு இருந்த சிறுமியின் பெற்றோர் அபிநிதியின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதைத்தொடர்ந்து டாக்டர்கள் சிறுமியின் உடலை அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் சிறுமியின் உடலை சொந்த ஊருக்கு எடுத்து சென்றனர்.
திருப்பத்தூர் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகளுக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டு ஒரு பெண் குழந்தை உயிர் இழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிறுமியின் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் டெங்கு தடுப்பு பணிகளில் மாவட்ட நிர்வாகத்தினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.






