என் மலர்
தர்மபுரி
- பி.இ படித்து முடித்துவிட்டு கோயம்புத்தூரில் தனியார் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வந்தார்.
- வீட்டில் யாரும் இல்லாதபோது பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே உள்ள வரகூரான் கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா.இவரது மனைவி பழனியம்மாள் (வயது 46).இவருக்கு 2 மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.
இவருடைய முதல் மகன் தங்கமணி. இவர் பி.இ படித்து முடித்துவிட்டு கோயம்புத்தூரில் தனியார் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வந்தார். அங்கு வேலை செய்யும் இடத்தில் ஒரு பெண்ணிடம் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இந்நிலையில் இருவரிடையே ஏற்பட்ட மனவேறுபாடு காரணமாக அந்த பெண் தங்கமணியை திருமணம் செய்ய மறுத்துள்ளார். இதனால் மனவிரக்தி அடைந்த தங்கமணி வீட்டில் யாரும் இல்லாதபோது பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார்.
உடனேஅக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த தங்கமனி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து அவரது அம்மா பழனியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் கிருஷ்ணாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 2000-க்கும் மேற்பட்ட நுகர்வோர்கள் காய்கறிகளை வாங்கி செல்கின்றனர்.
- 43 டன் 894 கிலோ காய்கறிகள் ரூ.11, லட்சத்து 67 ஆயிரத்து 475 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டத்தில் உழவுத் தொழில் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. மாவட்டத்தில் கத்தரி, வெண்டை, அவரை, பூசணி, வெள்ளை பூசணி, முருங்கைக்காய், முள்ளங்கி, கோவைக்காய்,கேரட் பீன்ஸ், சுரைக்காய், புட லங்காய், பாகற்காய், கொத்தமல்லி இலை, புதினா, கருவேப்பிலை என அனைத்து வகை காய்கறிகள் மற்றும் பழ வகைகள் சாகுபடி செய்யப்படுகிறது.
மாவட்டத்தில் விளையும் காய்கறிகள் தருமபுரி மாவட்டம் மற்றும் வெளி மாவட்ட மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. உழவர்கள் தினசரி காய்கறிகள் தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 உழவர் சந்தைகளுக்கும் தருமபுரி மாவட்ட வேளாண்துறை மூலம் காய்கறிகளை கொண்டு வந்து நேரடியாக நுகர் வோருக்கு விற்பனை செய்யப்படுகிறது.
தருமபுரி உழவர் சந்தை யில் நாள் ஒன்றுக்கு 3 டன் முதல் 4 டன் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது. இதில் 2000-க்கும் மேற்பட்ட நுகர்வோர்கள் காய்கறிகளை வாங்கி செல்கின்றனர்.
அந்த வகையில் பண்டிகை காலங்களில் கூடுதலாக காய்கறிகள் விற்பனை செய்யப்படுவது வழக்கம். இந்நிலையில் இன்று புரட்டாசி 2-வது சனிக்கிழமை என்பதால் இன்று தருமபுரி உழவர் சந்தைக்கு 8,779 நுகர்வோர்கள் காய்கறிகளை வாங்கிச் சென்றுள்ளனர். இதில் 43 டன் 894 கிலோ காய்கறிகள் ரூ.11, லட்சத்து 67 ஆயிரத்து 475 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளதாக வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
- பிரச்சாரத்தை கலெக்டர் சாந்தி, கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
- அடுத்த மாதம் வரை மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு பணி நடைபெறவுள்ளது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு தொடர்பாக மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் 3 சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி, விழிப்புணர்வு பிரச்சார வாகனம், மற்றும் தெருமுனை கலைநிகழ்ச்சி பிரச்சாரம் உள்ளிட்டவற்றை கலெக்டர் சாந்தி, கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.
தமிழ்நாடு முதல்-அமைச்சர் கட்டுபாட்டில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் தமிழ்நாடு உரிமைகள் திட்டம் மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்தியேகமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் ஒரு நடவடிக்கையாக ஆண்ட்ராய்டு கைபேசி செயலி மூலம் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு பணி மேற்கொண்டு, சமூக தரவு தளத்தை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் தருமபுரி மாவட்டத்தில் அடுத்த மாதம் 12.10.2023 வரையில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு பணி நடைபெறவுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் கணக்கெடுப்பு பணியினை நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம் தடங்கம் ஊராட்சியில் மாவட்ட கலெக்டர் நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் இக்கணக்கெடுப்பு பணியினை பொதுமக்கள் அறியும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்திடும் பொருட்டு, மாவட்ட கலெக்டர் வளாகத்தில் மூன்று சக்கர வண்டி விழிப்புணர்வு பேரணி, விழிப்புணர்வு பிரச்சார வாகனம் மற்றும் தெருமுனை கலை நிகழ்ச்சி பிரச்சாரம் உள்ளிட்டவற்றையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செண்பகவள்ளி, மாநில உரிமைகள் திட்ட மேலாளர் பிலிப்ஸ், திட்ட அலுவலர் அனிதா, மற்றும் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- இரவு நேரங்களில் செல்ல பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
- அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடத்தூர்,
தருமபுரி மாவட்டம், கடத்தூர் அருகே புட்டிரெட்டிப்பட்டி, புதூர், தாளநத்தம் உள்ளிட்ட சுற்று பகுதிகளி ல் உள்ள கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் தங்களின் கால்ந டைகளை சிகிச்சைக்காக கொண்டு வந்து சிகிச்சை பெற அவர்களின் வசதிக்காக புட்டிரெட்டிப்பட்டி கூட்ரோடு அருகே கால்நடை மருத்துவமனை கட்டப்பட்டது.
மருத்துவமனையின் சுற்று சுவர் இடிந்து பல மாதங்கள் ஆன நிலையில் அது சரி செய்யாததாலும் கேட் பூடப்படாத நிலையில் இருப்பதாலும் அந்த பகுதியை சேர்ந்த சிலர் அதனை மது குடிக்கும் கூடாரமாக மாற்றி வருகின்றனர்.
இதனால் அந்த பகுதியில் இரவு நேரங்களில் செல்ல பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
மேலும், இதுபோன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- வரத்து அதிகரிப்பால் பூக்களின் விலை படு வீழ்ச்சி அடைந்துள்ளது.
- போதிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டத்தில் உள்ள பென்னாகரம், பிக்கிலி, பெரியூர், பாலக்கோடு, மாரண்டஹள்ளி, காரிமங்கலம், தொப்பூர், நல்லம்பள்ளி, கடத்தூர், பொம்மிடி உள்ளிட்ட பல பகுதிகளில் விவசாயிகள் மலர் சாகுபடி செய்து வருகின்றனர்.
இதில் குண்டுமல்லி, கனகாம்பரம், சாமந்தி, செண்டுமல்லி, சம்பங்கி, பட்டன் ரோஸ், கோழிகொண்டை, அரளி உள்ளிட்ட பூ வகைகளை பயிர் செய்து வருகின்றனர். இந்த பூக்கள் அனைத்தும் தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் தினசரி நடைபெறும் பூக்கள் சந்தையில் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழ் மாதங்களில் புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் என்பதால் சனிக்கிழமை தோறும் தருமபுரி மாவட்டத்தில் அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும் மற்றும் இந்துக்கள் வீடுகளிலும் சனிக்கிழமை தோறும் இதனை பண்டிகையாக கொண்டாடுவர். இந்த விசேஷ நாட்களில் பூக்களின் தேவை அதிகரிக்கும். அதனால் புரட்டாசி மாதத்தில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பூக்களின் வரத்து அதிகரிக்கும். அந்த வகையில் புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையான இன்றும், நேற்றும் தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் இயங்கி வரும் பூ மார்க்கெட்டில் 7 டன் பூக்களுக்கு மேல் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
வரத்து அதிகரிப்பால் பூக்களின் விலை படு வீழ்ச்சி அடைந்துள்ளது. இதில் சாமந்தி பூ கிலோ 30 ரூபாய், பட்டன் ரோஸ் கிலோ 40 ரூபாய், பன்னீர் ரோஸ் கிலோ 40 ரூபாய், சம்பங்கி கிலோ 40 ரூபாய், அரளி கிலோ 60 ரூபாய், குண்டுமல்லி கிலோ 350 ரூபாய், சன்னமல்லி கிலோ 250 ரூபாய், கனகாமரம் கிலோ 300 ரூபாய், கோழி கொண்டை கிலோ 20 ரூபாய், செண்டு மல்லி கிலோ 10 முதல் 20 ரூபாயும், காக்கட்டா கிலோ ரூ. 200 ரூபாய் என விற்பனை செய்யப்பட்டது.
ஏழு டன் பூக்களுக்கு மேல் விற்பனை செய்யப்பட்டாலும் போதிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.
- தருமபுரி உழவர் சந்தையில் 72 கடைகள் செயல்பட்டு வருகின்றன.
- இருசக்கர வாகனங்களை நிறுத்துபவர்கள் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத் துள்ளனர்.
தருமபுரி,
தருமபுரியில் கடந்த 2000 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11 ந்தேதி உழவர் சந்தை தொடங்கப்பட்டது. இதை தொடர்ந்து தருமபுரி 4 ரோடு அருகிலும், ஏ.ஜெட்டி அள்ளி, பாலக்கோடு, பென்னாகரம், அரூர் ஆகிய பகுதிகள் உள்பட 5 இடங்க ளில் உழவர் சந்தைகள் தொடங்கப்பட்டு செயல்ப டுகின்றன.
மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தி உள்ளதால் மேலும் காரிமங்க லத்தில் உழவர் சந்தை விரிவாக்கம் செய்யப் பட்டுள்ளது. உழவர் சந்தைகளுக்கு அதிகாலை 4 மணிக்கு விவசாயிகள் தங்கள் விளை வித்த காய்கறி, பழங்களை கொண்டு வருகிரார்கள். காலை 6 மணிக்கு தொ டங்கும் விற்பனை மதியம் 12 மணி வரை நடக்கிறது.தருமபுரி உழவர் சந்தையில் நிர்வாக அலுவலர்,உதவி நிர்வாக அலுவலர்கள், வாட்ச்மேன், துப்புரவு பணியாளர் என நிரந்தர பணியாளர்களுடன் செயல்பட்டு வருகிறது.
தருமபுரி உழவர் சந்தையில் 72 கடைகள் செயல்பட்டு வருகின்றன. திறந்த வெளியில் 40 கடை கள் செயல்படுகின்றன. இந்த உழவர் சந்தைக்கு தினமும் சராசரியாக 5 ஆயிரம் பேர் வந்து செல்கி றார்கள்.ஒரு நாளில் சரா சரியாக 18 டன் காய்கறிகள், 2 டன் பழங்கள் இங்கு விற்பனை செய்யப்படுகிறது.
அமாவாசை, புரட்டாசி சனிக்கிழமை மற்றும் பண்டிகை காலங்களில் சுமார் 40 டன் முதல் 50 டன் வரை இங்கு காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் உழவர் சந்தைக்கு வரும் பொது மக்கள் மற்றும் உழவர் சந்தையில் காய்கறிகளை வாங்கி வெளிமார்க்கெட்டில் விற்பனை செய்யும் வியாபா ரிகள் தங்கள் கொண்டுவரும் இருசக்கர வாகனங்களை கிருஷ்ணகிரி தருமபுரி சாலையில் நிறுத்துவதாலும் போதிய இடம் இல்லாததால் உழவர் சந்தையின் நுழைவா யிலில் சிலர் அத்துமீறி இருசக்கர வாகனங்களை நிறுத்துவதாலும் போக்கு வரத்து பாதிப்படைவது மட்டுமல்லாமல் காய்கறி வாங்க செல்லும் நுகர் வோர்கள் உழவர் சந்தை க்குள் உள்ளே சென்று வெளியே வருவதற்குள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மேலும் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் இந்த உழவர் சந்தையை ஆய்வு செய்து இரு சக்கர வாக னங்கள் நிறுத்துவதற்காக சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து கழிவுநீர் கால்வாய் மீது சிமெண்ட் தளம் அமைத்து கொடுக்கப் பட்டது. சிலர் உழவர் சந்தை அதிகாரிகள் மற்றும் போக்கு வரத்து காவல்துறை யினரையும் மீறி சாலையில் கடை விரித்துள்ளதால் வாகனங்கள் நிறுத்துவதற்கு இடம் இன்றி சாலையிலேயே நிறுத்தி வருகின்றனர்.
இதனால் பண்டிகை காலங்களில் இந்த முக்கிய சாலை பெரும் போக்கு வரத்து பாதிப்படைகிறது. இது போன்ற சமயங்களில் இருசக்கர வாகனம் மற்றும் பொதுமக்கள் செல்போன், பொருட்கள் என தங்களு டைய உடைமைகளை பறிகொடுக்கும் அவல நிலை ஏற்பட்டு வருகிறது. இது குறித்து சமூக ஆர்வலர்களும் நுகர்வோர்களும் கூறுகையில்;-
மாவட்ட நிர்வாகம் உடன டியாக சாலை ஓரத்தில் கடை வைத்து ஆக்கிரமிப்பு செய்தவர்களை அகற்றி இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு வழிவகை செய்ய வேண்டும் அதே போல் உழவர் சந்தையில் நுழைவாயில் இருசக்கர வா கனங்களை நிறுத்துபவர்கள் மீது கடுமையான நடவ டிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத் துள்ளனர்.
- போலீஸ் ஸ்டேஷனில் தென்னை, மா, கொய்யா, உள்ளிட்ட மரங்கள் உள்ளன.
- தீ வண்டிகள் மீது விழுந்தால் பெரும் விபத்து எற்பட்டு இருக்கும்.
கடத்தூர்,
தருமபுரி மாவட்டம், கடத்தூரில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் தென்னை, மா, கொய்யா, சப்போட்டா உள்ளிட்ட மரங்கள் உள்ளன.
இங்கு தென்னை மரங்களின் அருகில் உயர் மின்னழுத்த மின் ஒயர்கள் செல்கின்றது. அவ்வப்போது தென்னை ஓலைகள் அதில் பட்டு தீப்பற்றி எரிந்து வருகிறது.
இந்நிலையில் திடீரென நேற்று தென்னை ஓலையில் தீப்பற்றி எரிந்தது. அந்த மரங்களின் அடியில் வழக்குகளில் கைப்பற்றபட்ட சுமார் 50-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது.
மரத்தில் ஏற்பட்ட இந்த தீ வண்டிகள் மீது விழுந்தால் பெரும் விபத்து எற்பட்டு இருக்கும். இந்த தீயால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த மின்சாரதுறையினர் மின்சாரத்தை நிறுத்தி மரத்தின் ஓலைகளை வெட்டி சரி செய்தனர். இதனால் தென்னை மரம் தீயினால் முழுவதும் எரியாமல் தப்பியது.
- ஒன்றிய குழு சேர்மன் பாஞ்சாலை கோபால் தலைமையில் நடைபெற்றது.
- வரவு செலவு கணக்குகளை அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.
பாலக்கோடு,
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் ஆலோசனைக் கூட்டம் ஒன்றிய குழு சேர்மன் பாஞ்சாலை கோபால் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்திற்க்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுருளிநாதன், சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற வரவு செலவு கணக்குகளை அதிகாரிகள் எடுத்து ரைத்தனர்.
மேலும் மருத்துவத் துறை சார்பில் மழைக்காலங்களில் பரவும் வைரஸ் நோய்கள், டெங்கு, மலேரியா மற்றும் கொசு ஒழிப்பு மற்றும் அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஒவ்வொரு ஊராட்சி பகுதிகளிலும் பனை விதைகள், மரக்கன்றுகளை நடுதல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர்கள் முத்துசாமி, ஜோதி, சரண்யா, உள்ளிட்ட கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
- தங்க நகைகள் காருடன் கொள்ளையடிக்கப்பட்டதாக கொடுத்த தகவலின் பேரி்ல் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
- கொள்ளை சம்பவம் தொடர்பாக ஏதாவது சி.சி.டி.வி. பதிவுகள் உள்ளதா? எனவும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே சேலம்பெங்களூரு சாலையில் பூலாப்பட்டி மேம்பாலம் என்ற இடத்தில் காருடன் 5 கிலோ கொள்ளை சம்பவம் நடந்தது. கோவையை சேர்ந்த பிரசன்னா என்பவர் காரிமங்கலம் போலீஸ் நிலையத்தி்ல் தங்க நகைகள் காருடன் கொள்ளையடிக்கப்பட்டதாக கொடுத்த தகவலின் பேரி்ல் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இதில் கோவை ராஜவீதியில் உள்ள நகை கடை ஒன்றிற்கு பெங்களூரில் 5 கிலோ தங்க நகைகள் வாங்கி கொண்டு கார் ஒன்றில் தருமபுரி வழியாக கோவை சென்று கொண்டிருந்தபோது, காரிமங்கலம் அருகே பூலாப்பட்டி மேம்பாலம் அருகே வந்தபோது 2 கார்களில் வந்த மர்ம நபர்கள் காரை வழிமறித்து தங்கம் எடுத்து வந்தவர்களை தாக்கி விட்டு காருடன் தங்கத்தை கடத்தி சென்று விட்டதாக தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து சேலம் சரக டி.ஐ.ஜி ராஜேஸ்வரி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். சம்பவம் தொடர்பாக கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு காரில் தங்கத்தை எடு்த்து வந்த 4 பேரின் கைரேகை பதிவுகளை சேகரித்துள்ளனர்.
இது தவிர கொள்ளையர்கள் விட்டு சென்றதாக கூறப்படும் செல்போன் ஒன்று எங்கே இருக்கிறது, அது யாருடையது என்பதும் குறித்தும், கொள்ளை சம்பவம் தொடர்பாக ஏதாவது சி.சி.டி.வி. பதிவுகள் உள்ளதா? எனவும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
கொள்ளை சம்பவத்தில் தங்கத்தை காரி்ல் கொண்டு வந்தவர்களுக்கும், கொள்ளையர்களுக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா? என்ற சந்தேகத்தின் அடிப்படையிலும் விசாரைண நடந்து வருகிறது.
கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சொகுசு கார் ஒன்று தருமபுரி-சென்னை ரோட்டில் திப்பப்பட்டி அடுத்த கொல்லாபுரி அம்மன் கோவில் அருகே இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
தமிழக-கர்நாடக மாநில எல்லையிலுள்ள அத்திப்பள்ளி சுங்கச்சாடி, மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள சுங்கச்சாவடிகளில், தங்கம் எடுத்து வரப்பட்ட கார் கடத்தலில் ஈடுபட்டவர்களின் கார் பதிவெண்களின் விபரம் எதாவது கிடைக்கிறதா? என்பது குறித்தும் காரிமங்கலம் உள்ளிட்ட இடங்களில் சி.சி.டி.வி.க்களில் கார்கள் பயணித்தது பதிவாகியிருக்கிறதா? என்பதும் குறித்தும் தனிப்படை சோதனை செய்து வருகிறது.
இந்நிலையில் சேலம் சரக டிஐஜி ராஜேஸ்வரி தலைமையில் தருமபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி ஆகிய 3 மாவட்ட எஸ்.பிகள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களுக்கும் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர்.
- தருமபுரி தொன்போஸ்கோ கல்லூரியில் இலக்கியத் திறனாய்வு கருத்தரங்கு நடைபெற்றது.
- ஆய்வு முறைகள் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது.
தருமபுரி, தொன் போஸ்கோ கல்லூரியில், ஆங்கிலத்துறை சார்பாக இலக்கியத் திறனாய்வு குறித்த கருத்தரங்கம் 27.9.2023 அன்று நடைபெற்றது.
இந்நிகழ்விற்குக் கல்லூரிச் செயலரும், சமூகப் பணித்துறைத் தலைவருமான ராபர்ட் ரமேஷ் பாபு தலைமை வகித்தார். முதல்வர் ஆஞ்சலோ ஜோசப் முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்கினார்.
இக்கருத்தரங்கில் சிறப்பு அழைப்பாளராக பாலக்கோடு, மூகாம்பிகை மகளிர் கலை, அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத்துறை உதவிப்பேராசிரியை, லிஸ்சி கலந்துகொண்டு, ஆங்கில இலக்கியங்களில் திறனாய்வுக் கோட்பாடுகள் வாயிலாக நிகழ்த்தக்கூடிய ஆய்வு முறைகளைப் பற்றி விளக்க உரையாற்றினார்.
இந்நிகழ்வில் கல்லூரித் துணை முதல்வர் முனைவர் பாரதி பெர்னாட்ஷா, பொருளாளர் அந்தோணி பாப்புராஜ், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் எனப்பலரும் கலந்து கொண்டனர். ஆங்கில இலக்கியங்களில் திறனாய்வுக்குரிய தளங்கள் மற்றும் இலக்கியங்களின் தரத்தை ஆய்வு செய்யும் திறனாய்வு கோட்பாடுகளின் அவசியம் குறித்தும் மாணவ, மாணவியர் உணரும்விதமாக அமைந்த இந்நிகழ்வுக்கான ஏற்பாடு களை ஆங்கிலத்துறை தலைவர் ரெஜினா மேரி தலைமையில் துறைப்பேராசிரியர்கள் செய்திருந்தனர்.
- பாலக்கோடு அருகே மின்சாரம் தாக்கி கூலித்தொழிலாளி உயிரிழந்தார்.
- கேபிள் வயரை சரி செய்தபோது சம்பவம்
தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே சீரியனஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ரகுபதி (வயது 50). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் அப்பகுதியில் உள்ள கேபிள் டிவி உரிமையாளரிடம் கூலி வேலை செய்து வந்தார்,
இந்நிலையில் நல்லூர் கிராமத்தில் வேப்பமரத்தில் சிக்கி கேபிள் ஒயர் அறுந்து விட்டதாக தகவல் வந்தது. இதனை அடுத்து அதனை சரிசெய்ய ரகுபதி சென்றார். அப்போது வேப்பமரத்தில் ஏறி கேபிள் ஒயரை சரிசெய்த போது மின்சாரம் தாக்கி மரத்தில் இருந்து கீழே விழுந்தார்.
உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே ரகுபதி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து தகவலறிந்த மாரண்டஅள்ளி போலீசார் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- e-Shram என்ற இணைய தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்
- பொது விநியோக திட்ட அத்தியாவசியப் பொருட்கள் பெற்று பயன்பெறலாம்.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள நிரந்தரமாக புலம்பெயர்ந்த வெளிமாநிலத் தொழிலாளர்களில் குடும்ப அட்டை இல்லாதவர்கள், புதிய குடும்ப அட்டை பெறும் பொருட்டு e-Shram என்ற இணைய தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதில் விண்ணப்பிக்கும் புலம்பெயர்ந்த வெளி மாநிலத்தவர்கள் தங்கள் விவரங்களை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து தொடர்புடைய வட்ட வழங்கல்அலுவலகத்தில் அளிக்க வேண்டும்.
அதன் அடிப்படையில் சம்மந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் அம்மனுவின் மீது விசாரணை செய்து மனுதாரர்களின் சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்படும். உரிய விசாரனைக்கு பின் தகுதியுள்ள நபர்களுக்கு புதிய குடும்ப அட்டை வழங்கப்பட்டவுடன் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தின் கீழ் பொதுவிநியோ கதிட்ட அத்தியாவசியப் பொருட்கள் பெற்று பயன்பெறலாம்.
எனவே வெளி மாநிலத்திலிருந்து புலம்பெயர்ந்து தருமபுரி மாவட்டத்தில் வசிக்கும், இதுவரை குடும்ப அட்டை இல்லாதவர்கள் புதிய குடும்ப அட்டை வேண்டி e-Shram என்ற இணையதனத்தின் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.






