என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தீ பிடித்து எரிந்த தென்னை மரம்
    X

    மின்கம்பி பட்டு தீ பிடித்து எரியும் தென்னை மரத்தை படத்தில் காணலாம்.

    தீ பிடித்து எரிந்த தென்னை மரம்

    • போலீஸ் ஸ்டேஷனில் தென்னை, மா, கொய்யா, உள்ளிட்ட மரங்கள் உள்ளன.
    • தீ வண்டிகள் மீது விழுந்தால் பெரும் விபத்து எற்பட்டு இருக்கும்.

    கடத்தூர்,

    தருமபுரி மாவட்டம், கடத்தூரில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் தென்னை, மா, கொய்யா, சப்போட்டா உள்ளிட்ட மரங்கள் உள்ளன.

    இங்கு தென்னை மரங்களின் அருகில் உயர் மின்னழுத்த மின் ஒயர்கள் செல்கின்றது. அவ்வப்போது தென்னை ஓலைகள் அதில் பட்டு தீப்பற்றி எரிந்து வருகிறது.

    இந்நிலையில் திடீரென நேற்று தென்னை ஓலையில் தீப்பற்றி எரிந்தது. அந்த மரங்களின் அடியில் வழக்குகளில் கைப்பற்றபட்ட சுமார் 50-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது.

    மரத்தில் ஏற்பட்ட இந்த தீ வண்டிகள் மீது விழுந்தால் பெரும் விபத்து எற்பட்டு இருக்கும். இந்த தீயால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்த மின்சாரதுறையினர் மின்சாரத்தை நிறுத்தி மரத்தின் ஓலைகளை வெட்டி சரி செய்தனர். இதனால் தென்னை மரம் தீயினால் முழுவதும் எரியாமல் தப்பியது.

    Next Story
    ×