என் மலர்tooltip icon

    தர்மபுரி

    • பென்னாகரத்தில் தூயமை பணி முகாம் நடத்தப்பட்டது.
    • செயல் அலுவலர் கீதா தூய்மைப் பணியினை தொடங்கி வைத்தார்.

    தருமபுரி மாவட்டம் ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் சிறப்பு தூய்மை பணி முகாம் பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் நடைபெற்றது. பென்னாகரம் பேரூ ராட்சி நிர்வாகம், பென்னாகரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் மாணவர்கள், அரசு மருத்துவமனையின் ஆயுஷ்மான் கேம்பைன் பணியாளர்கள் ஒன்றி ணைந்து ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் ஒரு மணி நேர தூய்மை பணி நடைபெற்றது.

    இதற்கு மருத்துவம் ஊரக பணிகள் இணை இயக்குநர் சாந்தி தலைமை வகித்தார். பென்னாகரம் பேரூராட்சி செயல் அலுவலர் கீதா தூய்மைப் பணியினை தொடங்கி வைத்தார். அரசு கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் பேரூராட்சி பணியாளர்கள், மருத்துவமனை பணியா ளர்கள் ஆகியோர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து மருத்துவமனை வளாகம், மருத்துவப் பிரிவுகளின் பகுதிகள், தற்காலிக பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், பென்னாகரம் வாரச்சந்தை என பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்கள் உள்ளிட்ட பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டு பகுதிகளில் தூய்மைப் பணிகள் நடைபெற்றது.

    இதில் பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையின் மருத்துவ அலுவலர் கனிமொழி, மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டனர். இந்தத் தூய்மைப் பணியில் சேகரிக்கப்பட்ட குப்பைகளை மக்கும் குப்பை மக்காத குப்பை 35 வகையாக தரம் பிரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • அரூர் அருகே இடிந்து விழும் நிலையில் உள்ள ஊராட்சி மன்ற கட்டிடத்தை சீரமைக்க கோரிக்கை.
    • 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.

    தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ளது அச்சல்வாடி ஊராட்சி. இதில் 9 வார்டுகள் உள்ள ஊராட்சியில் 5000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அச்சல்வாடி ஊராட்சியில் கல்லடிப்பட்டி குடுமியாம்பட்டி ஓட்டுமில், ஒடசல்பட்டி, பெரு மாள்கோவில், கதவனேரி ஆகிய குக்கிரா மங்களை உள்ளடக்கியது.

    அச்சல்வாடி ஊராட்சி மன்ற கட்டிடம் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. தற்போது அந்த கட்டிடம் ஆங்காங்கே பெயர்ந்து விழும் நிலையிலும் மழை பெய்தால் தண்ணீர் உள்ளே புகுந்து ஆவணங்கள் மழை நீரில் நனைந்து அழியும் நிலையில் உள்ளதாக பொதுமக்கள் குற்றச் சாட்டை முன்வைக்கின்றனர்.

    இந்த ஊராட்சிக்கு அடிப்படை தேவைகளான நூலகம் மற்றும் சமுதாயக் கூடம், கிராம நிர்வாக அலுவலர் கட்டிடம் ஆகியவை அமைத்து தர வேண்டுமென பலமுறை தருமபுரி மாவட்ட நிர்வாகத்திறகு தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என குற்றச்சாட்டை முன்வைக் கின்றனர்.

    இன்று நடைபெற உள்ள கிராம சபா கூட்டத்தில் இது குறித்து பொதுமக்கள் கேள்விகளை எழுப்பு வார்கள் என்று தெரிகிறது. இடிந்து விழும் நிலையில் உள்ள ஊராட்சி கட்டிடத்தை அகற்றி புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

    • தருமபுரி எம்.எல்.ஏ வீடு வீடாக சென்று கும்பைகளை சேகரித்தார்.
    • தூய்மை இந்தியா திட்ட இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

    நாடு முழுவதும் தூய்மை இந்தியா இயக்கம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. காந்தியின் தூய்மையான பாரதம் தூய்மையான இந்தியா என அவரின் கனவுகளை நிறைவேற்றும் வகையில் தூய்மை இந்தியா திட்டம் பாரத பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் தொடர்ந்து மக்கள் இயக்கமாக மாறியுள்ளது.

    தருமபுரி மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் நேற்று தூய்மை இந்தியா திட்டம் மற்றும் தூய்மை பணிகள் மேற்கொள் ளப்பட்டன. தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் பாகலஹள்ளி ஊராட்சியில் நேற்று தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் தூய்மை இந்தியா திட்ட இயக்கத்தை தொடங்கி வைத்தார். மேலும் பாகலஹள்ளி, கெங்களாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தெருக்களில் தூய்மை பணிகளை மேற் கொண்டார்.

    அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள வீடுகளிலும் வீடு வீடாகச் சென்று ஊராட்சிக்கு சொந்தமான வாகனத்தில் குப்பைகளை சேகரித்தார். தூய்மை இந்தியா திட்டம் மக்கள் இயக்கமாக மாறியதில் நாடு முழுவதும் மக்கள் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. தர்மபுரி சட்டமன்ற தொகுதி பாமக எம்எல்ஏவும் தூய்மை இந்தியா திட்டத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு மக்களிடையே விழிப்பு ணர்வை ஏற்படுத்தும் விதமாக பாகலஹள்ளி ஊராட்சி முழுவதும் தூய்மைப் பணிகளை ஆர்வமுடன் மேற்கொண்டார். இந்நிகழ்ச்சியில் பாகல ஹள்ளி ஊராட்சி மன்ற தலைவர் முருகன் மற்றும் தூய்மை பணியாளர்கள், வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • தருமபுரியில் ஒய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது.
    • அனைவருக்கும் முறையான பேன்சன் வழங்க வேண்டும்

    உலக முதியோர் தினம் மற்றும் பென்சன் பாதுகாப்பு நாள் தேசிய ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் முடிவின்படி ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் தேதியை ஓய்வூதியர் தினமாக உலகதொழிற்சங்கத்தின் அங்கமான சர்வதேச தொழிற்சங்க ஓய்வூதியர் மற்றும் பணி ஓய்வுபெற்றோர் அமைப்பு அனுசரித்து வருகிறது.

    மரியாதையான வாழ்க்கை என்பது அனைவரின் அடிப்படையான உரிமை, அனைவருக்கும் முறையான பென்சன், நல்ல உறைவிடம், சுகாதாரமான குடிநீர், ஆரோக்கியமான உணவு, சிறந்த மருத்துவம், தரமான போக்குவரத்து, இவை யாராலும் மறுக்க முடியாத உரிமையாகும். இவை அனைத்தும் கிடைத்திட கோரி பென்சன் பாதுகாப்பு நாள் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இதில் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் சுப்பிரமணி தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதூயர் சங்க மாவட்ட செயலாளர் பெருமாள், அரசு போக்குவரத்து கழக ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் மாநில இணைசெயலாளர் குப்புசாமி, தமிழ்நாடு மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் மாவட்ட தலைவர் சுந்தரமூர்த்தி, மாவட்ட செயலாளர் விஜியன், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் கிருஷ்ணன், எல்ஐசி ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் சோமசுந்திரம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். 

    • பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் போக்குவரத்து இடையூறாக வைக்கப்படும் பேனர்களை அகற்ற கோரிக்கை.
    • அனுமதியில்லாமல் பேனர்கள் வைக்கப்படுவதாக புகார்.

    தமிழகத்தில் பேனர்களால் விபத்துக்கள் அதிகரித்த நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து பொது இடங்களில் பேனர்கள் வைக்க பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டது.

    இதையடுத்து ஆர்டிஓ, பேரூராட்சி, பஞ்சாயத்து, போலீஸ் என அனுமதி பெற்று பேனர்கள் வைக்க வேண்டும் என அறிவித்துள்ளது.

    தருமபுரி மாவட்டத்தில் பேனர் வைப்பது தற்போது அதிகரித்து வருகின்றது. குறிப்பாக, பொம்மிடி, பாப்பிரெட்டிபட்டி, மற்றும் கிராமப்பகுதிகளில் அனுதியில்லாமல் பஸ் நிறுத்தம் உள்ளிட்ட பொது இடங்களில் பேனர்கள் விபத்து ஏற்படுத்தும் வகையிலும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் வகையிலும் வைக்கப்படுகிறது.

    சில இடங்களில் வைக்கப்படும் பேனர்களால் மோதல்கள் ஏற்பட்டு வருகிறது. உரிய அனுமதியில்லாமல் ஒரு சில இடங்களில் சில நாட்கள் பேனர் வைக்க அப்பகுதி போலீசாரிடம் அனுமதி பெற்று பேனர்கள் வைக்கப்பட்டு வருவதாத கூறப்படுகின்றது.

    அரசின் விதிமுறைகளை மதித்து பேனர்கள் வைக்க அதிகாரிகள் சரியான நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வருகின்றனர் என கூறப்படுகின்றது.

    அரசின் விதிமுறைகளை முழுமை யாக நடைமுறை படுத்தி விபத்து, மற்றும் மோதல்கள் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சுதந்திர தினத்தையொட்டி பேரூராட்சியின் சார்பாக மாலை அணிவித்து மரி யாதை செலுத்தப்பட்டது.
    • ரூராட்சியின் நிர்வாகத்தினர் எவரும் கண்டுகொள்ளவில்லை.

     தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பழைய பேரூராட்சி வளாகத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தி மற்றும் பாரதமாதா சிலைகளுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 15 ந்தேதி சுதந்திர தினத்தையொட்டி பேரூராட்சியின் சார்பாக மாலை அணிவித்து மரி யாதை செலுத்தப்பட்டது.

    இந்த நிலையில் சுமார் 45 நாட்கள் கடந்த நிலையில் காந்தி சிலைக்கு அணிவிக்–கப்பட்ட மாலை காய்ந்து கருகி உள்ளது. இன்று வரை அந்த சிலைகளில் உள்ள காய்ந்துபோன மாலைகளை அகற்றாமல் அப்படியே உள்ளது. அதனை அகற்றும் நடவடிக்கையில் யாரும் ஈடுபடாமல் பேரூராட்சியின் நிர்வாகத்தினர் எவரும் கண்டுகொள்ளவில்லை.

    நாளை காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிலையில் உள்ள பழைய மாலைகளை அப்புறப்–படுத்தி விட்டு புதிய மாலை அணிவித்து காந்தி சிலைக்கு உரிய மரி–யாதை செலுத்து–வார்களா? என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்பி உள்ளனர்.

    • இறைச்சி, மீன் கடைகளில் வியாபாரம் மந்தம் உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
    • புரட்டாசியில் பெருமாளுக்கு விரதம் இருக்கிறார்கள்


    புரட்டாசி மாதம் பெருமாள் வழிபாட்டுக்கு உரிய மாதம் ஆகும். இந்த மாதம் இந்து மக்கள் விரதம் இருந்து சனிக்கிழமைகளில் பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வார்கள். இந்த மாதம் முழுவதும் சிலர் அசைவ உணவுகளை சாப்பிட மாட்டார்கள்.

    இந்த நிலையில் 2- வது புரட்டாசி ஞாயிற்றுக்கி–ழமையான இன்று கிருஷ்ணகிரி, ஒசூர், தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை, சூளகிரி, காவேரிப்பட்டினம் ஆகிய ஊர்களில் உள்ள ஆடு மற்றும் கோழி இறைச்சி கடைகளில் மிக குறைவாக மக்கள் இறைச்சி வாங்க வந்திருந்தனர். அதே போன்று மீன் கடைகளுக்கு மீன் வாங்க வருவோர் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்தது. இதனால் இறைச்சி மற்றும் மீன் வியாபாரிகள் கவலை அடைந்தனர்.

    இதே போன்று தருமபுரி நகரில் உள்ள இறைச்சி கடைகளில் ஞாயிற்றுக்–கிழமைகளில் அதிகளவில் வந்து வாங்கி செல்வார்கள்.

    ஆனால் இன்று மிக குறைவானே நபர்களே வந்து இறைச்சியை வாங்கிச் சென்றனர். மீன் மார்கெட்டிலும் மீன் வாங்க வருபவர்களின் எண்ணிக்கையும் குறைந்து இருந்தது. இதே போன்று அரூர், மொரப்பூர், பென்னாகரம், பாப்பி ரெட்டிப்பட்டி, ஏரியூர் போன்ற பகுதிகளில் உள்ள இறைச்சி கடைகளிலும் விற்பனை மந்தமாகவே இருந்தது.

    இது குறித்து இறைச்சி கடை வியாபாரி ஒருவர் கூறியதாவது;-

    பொதுவாக வார விடுமுறையான ஞாயிற்றுக்–கிழமைகளில் அசைவ பிரியிர்கள் அதிகாலை முதல கடை முன்பு அதிக அளவில் வந்து காத்திருந்து இறைச்சியை வாங்கி செல்வார்கள். இன்று புரட்டாசி மாத ஞாயிற்று கிழமை என்பதால் மிக குறைவானவர்களே வந்து இறைச்சியை வாங்கி சென்றனர். இதனால் வியாபாரம் பாதிப்பு அடைந்துள்ளது என்றார். 

    • மணியாம்பாடி வெங்கட்ரமண சாமி கோவிலில் சாமி தரிசனம் செய்ய கட்டணம் வசூலிப்பதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
    • நபருக்கு ரூ. 50 வசூல் என புகார்-

    தருமபுரி மாவட்டம் கடத்தூர் அருகே உள்ள மணியம்பாடியில் வெங்கட்டரமண சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் சனிக்கிழமைகள் தோறும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றது.

    மூகூர்த்த நாட்களில் 100- க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்று வருகின்றது. விஷேச நாட்களில் சிறப்பு பூஜைகளும் புரட்டாசி சனிக்கிழமைகளில் மாவட்டத்தில் உள்ளவர்கள் மட்டும் இன்றி வெளியூர், வெளி மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஊர்களில் இருந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து விரதம் முடித்து தரிசனம் செய்து வருவது பல ஆண்டாத தொடர்ந்து வருகின்றது.

    இந்த நிலையில் இந்த ஆண்டு புரட்டாசி சனிக்கிழமைகள் 3 மட்டும் உள்ளதால் நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. நடுசனி விரதம் முடிக்க பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். இங்கு பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர். இந்த நிலையில் எந்த நாலும் இல்லாத வகையில் சிறப்பு தரிசனம் என்ற வகையில் ரூ.50 என கட்டாய வசூலில் சிலர் ஈடுபட்டனர். இதனால் குடும்பத்துடன் சாமி கூம்பிட வந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    பணம் இல்லாத ஏராளமானோர் பல மணிநேரம் காத்துருந்து தரிசனம் செய்தனர். அறநிலையதுறை அதிகாரிகளிடம் தெரிவிக்க சென்றால் அதிகாரிகள் இல்லாத நிலையில் பெரும் அதிர்ச்சியடைந்தனர். மன அமைதிக்காகவும், விரதம் முடிக்கவும் குடும்பத்தாருடன் கடவுளை தரிசனம் செய்ய வருபவர்களிடம் கட்டாய வசூலில் ஈடுபட்டு வரும் சிலருக்கு அறநிலையத்துறை அதிகாரிகள் துணையாக உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மாவட்ட அளவிலான கேரம் போட்டிகளில் ஸ்டான்லி பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.
    • மாநில அளவிலான போட்டிக்கு தகுதி

    தருமபுரி மாவட்ட அளவில் நடைபெற்று வரும் விளையாட்டு போட்டிகளில ்ஸ்டான்லி மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் கேரம் மற்றும் சதுரங்க போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளனர்.

    வயது வரம்பு அடிப்படையில் நடைபெற்ற கேரம் போட்டியில் 14 வயதுக்கு உட்பட்டவர்கள் இரட்டையர் பிரிவில் கவிசரண்மற்றும் சரன்பாபு முதலிடமும் பிடித்து வெற்றி பெற்றுள்ளனர்.

    14 வயதுக்கு உட்பட்டவர்கள் ஒற்றையர் பிரிவில் கவிசரண் முதலிடம் பிடித்து வெற்றி பெற்றுள்ளார். 17 வயதுக்கு உட்பட்டவர்கள் ஒற்றையர் பிரிவில் செங் கொடி 2-ம் இடமும், 19 வயதுக்கு உட்பட்டவர்கள் ஒற்றையர் பிரிவில் சச்சின் தாசன் 2-ம் இடமும் பிடித்து வெற்றி பெற்றுள்ளனர்.

    வெற்றி பெற்ற மாணவர் களையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் சத்யராஜ், மற்றும் ஆனந்த– குமார் ஆகியோரை பள் ளியின் தாளாளர் முரு கேசன், செயலாளர் பிரு ஆனந்த்பிரகாஷ் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    மேலும் இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாநில அளவிலான போட் டிக்கு தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கடத்தூர் பகுதியில் தேங்கி கிடக்கும் குப்பையால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதை தடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • 3 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர்-

    தருமபுரி மாவட்டம் கடத்தூர் ஒன்றியம், சில்லார அள்ளி ஊராட்சியில் இந்திரா நகர், அம்பேத்கர் நகர், பாரதி நகர், குண்டல் மடுவு , பூஞ்சோலை நகர் மற்றும் அண்ணா நகர் என 6 குக்கிராமங்கள் உள்ளன. இதில், 3-ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

    இதில் சில்லாரஅள்ளியில் வசிக்கும் மக்கள் பயன்ப டுத்தும் குப்பைகள் தெருக்களில் கொட்டப்ப டுகிறது. இதனை ஊராட்சி நிர்வாகம் தூய்மை பணியாளர் மூலம் அப்புறப்படுத்தி தருமபுரி- பொம்மிடி மெயின் ரோட்டில் கொட்டி தீ வைத்து அழித்தனர்.

    இதனால் புகை மூட்டத்தால் அப்பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். தருமபுரி -பொம்மிடி சாலையில் குப்பைகளை கொட்ட கூடாது என அப்பகுதி மக்கள் , கடத்தூர் ஒன்றிய அலுவலகத்தில் அமர்ந்து போராட்டங்களை கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடத்தினர்.

    இதனால் குப்பைகளை கொட்ட ஊராட்சி நிர்வாகம் மூலம் தனி இடத்தை பார்த்து கொட்ட வேண்டும் என ஒன்றிய அதிகாரிகள் அறிவு றுத்தினார்கள். ஆனால் , அதிகாரிகளே வந்து எந்த இடம் என காட்ட வேண்டும் என கூறி, கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தெருக்களில் உள்ள குப்பைகளை ஊராட்சி நிர்வாகம் அப்பு றப்படுத்தாமல் விட்டு வைத்துள்ளது.

    பணியாளர்களையும் குப்பைகளை அகற்ற கூடாது என வாய்மொழி யாக தெரிவித்ததாக கூறப்படுகின்ற நிலையில் ஆங்காங்கே தெருக்களில் குப்பைகள் மழை போல் தேங்கி உள்ளது. தேங்கி இருக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகின்றது.

    இதனால் அப்பகுதி மக்கள் வைரஸ் காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோயால் கடுமையாக பாதிக்கப்படும் நிலை உருவாகி வருகின்றது. ஆகவே தெருக்களில் கொட்டப்படும் குப்பை களை மாவட்ட நிர்வாகம் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அரூர் ஆர்.டி.ஓ விடம் ஏரிகளில் நீர் நிரப்பக் கோரி சமூக ஆர்வலர்கள் மனு அளித்தனர்.
    • -100 ஏரிகளை நிரப்ப கோரிக்கை

    அரூர் ஆர்.டி.ஓ வில்சன் ராசசேகரிடம் நேற்று அரூர் பகுதியைச் சேர்ந்த தாமலேரிப்பட்டி மற்றும் கே. வேட்ரப்பட்டி பொதுமக்கள் சார்பில் சமூக ஆர்வலர் ஜி. மாதேஸ்வரி, மணி, முருகன், மத்தியம்பட்டி சிவன், ரா ஜவேலு, பொன்னுரங்கன், ஆர்.ஆர்.ராஜா, மனோஜ் உள்ளிட்டோர் கோரிக்கை மனு ஒன்று அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது;-

    தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு இடையில் ஓடும் தென்பெண் ணையாற்றில் மழைக்கா லங்களில் வீணாக சென்று கடலில் கலக்கும் நீரை நீரேற்று நிலையம் அமைத்து அதன் மூலம் ஏரிகளில் நிரப்பிட வேண்டும்.

    ஏற்கனவே 12 ஆண்டுகளுக்கு முன் கொளகம் பட்டி ஏரிக்கு நீரேற்று முறையின் மூலம் தண்ணீர் நிரப்பப்பட்டு பயன் பாட்டில் உள்ளது. இதே போன்று தென்பெண்ணை யாற்றில் கே. ஈச்சம்பாடி அணை நிரம்பி வீணாகிடும் நீரை சேமித்து, போர்வெல் மோட்டர் மூலம் பல டி.எம்.சி நீரை 100-க்கும் மேற்பட்ட ஏரிகளில் நிரப்பிடவேண்டும் . இதன் மூலம் பல்வேறு கிராமங்களில் விவசாயம் பெருகிடவும், நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்திடவும் வழிவகுக்கும்.போர்க்கால அடிப்படையில் இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி யிருந்தனர். மனுவை பெற்ற ஆர்.டி.ஓ கோரிக்கை குறித்து உரிய துறை அதிகாரி களுடன் நேரில் ஆய்வு செய்து சாத்தி யக்கூறுகள் இருப்பின் அரசிற்கு பரிந்து ரைப்பதாக உறுதியளித்தார்.  

    • பாலக்கோடு அரசு மருத்துவமனையில் ஆயுஷ்மான்பவ வாராந்திர சுகாதார முகாம் நடைபெற்றது.
    • சிறப்பு மருத்துவ்ர்கள் கலந்து கொண்டனர்.

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் மத்திய சுகாதாரத் துறை மூலம் ஒவ்வொரு மாநிலத்திலும் சுகாதாரத்தை மேம்படுத்தும் விதமாக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.

    அதனை தொடர்ந்து சுகாதாரத்துறை மூலம் ஆயுஷ்மான் பவ என்ற திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மருத்துவ மனையிலும் சுகாதார விழிப்புணர்வு முகாம் நடை பெற அறிவுறுத்தப்பட்டது. இதை யொட்டி பாலக்கோடு அரசு மருத்துவ மனையில் தலைமை மருத்து வர் பாலசுப்பிரமணியம் தலைமையில் மருத்துவ முகாம் நடைப்பெற்றது. முகாமில் சுகாதார நல பணிகள் இணை இயக்குநர் டாக்டர் சாந்தி முன்னிலை வகித்தார்.

    இதில் மருத்துவர்கள் சசிரேகா, பாலசுதா, தீபிகா உள்ளிட்ட மருத்துவ குழுவி னரால் பொதுமக்களுக்கு ரத்த அழுத்தம், காது, மூக்கு, மற்றும் தொண்டை பரிசோதனை, கண் சிகிச்சை தொடர்பான பரிசோதனை, கர்ப்பிணி பெண்களுக்கான மருத்துவ சேவை உள்ளிட்ட பரிசோ தனைகள் மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இம்முகாமில் மருந்தா ளுநர்கள் முத்துசாமி, முருகேசன், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ×