என் மலர்
தர்மபுரி
- தருமபுரி அருகேயுள்ள அரசுப்பள்ளியில் 10 வருடமாக மாணவர்களுக்கு கழிவறை இல்லை என்று தலைமையாசிரியர் புகார் தெரிவித்தார்.
- அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே பாலஜங்கமனஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட இருசன்கொட்டாய் பகுதியில் காந்தி ஜெயந்தி சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தசாமி தலைமை தாங்கினார்.
இந்த கூட்டத்தில் சிறப்பு பார்வையாளராக தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி கலந்து கொண்டு கூட்டத்தின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்து விளக்கி பேசினார். அப்பகுதியில் செயல்பட்டு வரும் உயர்நிலைப் பள்ளியில் கடந்த 10 ஆண்டுகளாக மாணவர்களுக்கு கழிவறை இல்லாமல் மாணவர்கள் அவதிப்படுவதாகவும் இதனால் சேர்க்கை விகிதமும் குறைந்து விட்டதாக தலைமை ஆசிரியர் தெரிவித்தார்.
மேலும் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் உள்ளிட்ட வற்றில் ஆசிரியர்கள் மாணவர்கள் சிறப்புடன் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும் பள்ளியில் பயின்ற மாணவர்கள் 500 மதிப்பெண்களுக்கு 490 மதிப்பெண் பெற்றுள்ளனர் என தெரிவித்தார். ஆனால் மாணவர்க ளுக்கான அடிப்படை வசதிகள் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வருவதாகவும் கூறினார்.
மாவட்ட கலெக்டர் நபார்டு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டால் கட்டிடம் கட்ட அனுமதி தருகிறோம் என்று தெரிவித்தார். இதில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்க ளுக்கு தன்னு டைய சொந்த நிதியில் இருந்து தலா ரூ. 10 ஆயிரம் வீதம் பரிசுத் தொகையை ஊராட்சி மன்ற தலைவர், மாவட்ட கலெக்டர் மூலம் வழங்கினார்.
இந்த கிராம சபை கூட்டத்தில் தருமபுரி எம்எல்ஏ வெங்க டேஸ்வரன், தாசில்தார் ஆறுமுகம், பி.டி.ஓ ஆறுமுகம், மற்றும் துறை சார்ந்த அலுவலர் பெருமக்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், ஊராட்சி பொதுமக்கள், மகளிர் சுயஉதவிக்குழு பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- மணியம்பாடி கோவிலில் பக்தர்கள் நேர்ந்து விட்ட மாடு, கன்றுகள் ஏலம் விடப்பட்டன.
- சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.
தருமபுரி மாவட்டம் மணியம்பாடி ஊராட்சி யில் வெங்கட்டரமண சுவாமி கோவில் உள்ளது. இந்து அறநிலை துறை கட்டுபாட்டில் உள்ள இந்த கோவிலில் சனி கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றது.
புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமைகளில் வேண்டுதல் நிறைவேற்ற பக்தர்கள் மாடுகளை காணிக்கையாக கொண்டு வந்து விட்டு வருவது வழக்கமாக இருந்து வருகின்றது. இந்த புரட்டாசி மாதம் இரண்டு சனிக்கி ழமைகளில் ஒரு மாடு உள்பட 15 கன்றுகள் கோயிலுக்கு நேர்ந்து விடப்பட்டது. இதனை ஆயிரத்துக்கு ஏலம் விட்டனர்.
பக்தர்கள் நேர்த்திகடனாக விடும் மாடுகளை கோசாலைகள் அமைத்து பாதுகாத்து வளர்க்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கோவிந்தராஜ் உடல் உறுப்புகளை தானமாக கொடுக்க உறவினர் முன் வந்தனர்.
- அரசின் சார்பாக இன்று கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலுவலர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார்.
தருமபுரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அடுத்த கோத்தகோட்டா கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் (வயது40) என்பவர் விபத்தில் படுகாயம் அடைந்துள்ளார்.
இதனால் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு மூளை செயல் இழந்தது தெரிய வந்தது.
பின்னர் உறுதி செய்து கொண்ட மருத்துவ குழுவினர் அவர்களது உறவினர்களுக்கு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து கோவிந்தராஜ் உடல் உறுப்புகளை தானமாக கொடுக்க உறவினர் முன் வந்தனர்.
இதனை தொடர்ந்து தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ குழுவி னர், உடல் உறுப்புக்கள் தானமாக பெற்றனர். முதலில் தானமாக பெறப்பட்ட உடல் உறுப்புகள் முதலில் இருதயம் பிரத்தேயகமாக தயார் செய்யப்பட்ட ஆம்புலன்ஸ் வாகனத்தில் காவல் துறை பாதுகாப்புடன் சென்னையில் உள்ள எம் ஜி எம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் அவரது உடலில் இருந்து 2 சிறுநீரகங்களில், ஒன்று சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் மற்றொரு சிறுநீரகம் கோவை மருத்துவமனைக்கும், கல்லீரல் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது.
மேலும் 2 கண்கள் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலேயே கண் பார்வை வேண்டி பதிவு செய்தவர்களுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதனை தொடர்ந்து பிரேத பரிசோதனை முடிந்தவுடன் கோவிந்தராஜன் உடல் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்பொழுது பிரேத பரிசோதனை கூடம் அருகே மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள், உடலுக்கு மலர் மாலை வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதனை அடுத்து பிரேத பரிசோதனை கூடத்தில் இருந்து அமரர் ஊர்திக்கு எடுத்துச் செல்கின்ற வரை, சுமார் 500 மீட்டர் தொலைவுக்கு இருபுறமும், அரசு மருத்துவக் கல்லூரியில் பணியாற்றம் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், அதேப்போல் பயின்று வருகின்ற மருத்துவ, செவிலியர் மாணவ, மாணவிகள் நீண்ட வரிசையில் நின்று, இறந்தாலும், சில உயிர்களை வாழ வைக்கு உடல் உறுப்புகளை தானம் செய்த கோவிந்தராஜனின் உடலுக்கு மலர் தூவி மரியாதை செய்து, வழி அனுப்பி வைத்தனர்.
மேலும் இதயம் அறுவை சிகிச்சை செய்துவுடன், போதிய பாதுகாப்பு வசதிகள், ஏற்படுத்தப்பட்டு, காவல் துறையினர் பாதுகாப்புடன் ஆம்புலன்ஸில் சென்னைக்கு விரைவாக கொண்டு செல்லப்பட்டது.
தமிழக அரசின் உடல் உறுப்பு தானம் செய்பவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் வெளியிட்ட அறிவிப்புகள் இனி வரும் காலங்களில் பல உயிர்களை காப்பாற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.
உடல் தானம் செய்தவரின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்த வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து கோவிந்தராஜின் உடல் அவரது சொந்த ஊரான போச்சம்பள்ளிக்கு கொண்டு செல்லப்படுகிறது.
அங்கு உடல் உறுப்பு தானம் செய்த கோவிந்தராஜூக்கு அரசின் சார்பாக இன்று கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலுவலர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார்.
- தருமபுரியில் நில அளவைத்தறையின் கழிவு வாகனம் நாளை ஏலம் விடப்படுகிறது.
- அதிக தொகை கோருபவருக்கு ஏலம் முடிவு செய்யப்படும்
தருமபுரி நில உதவி இயக்குநர் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தருமபுரி மாவட்ட நில அளவை உதவி இயக்குநர் பயன்பாட்டில் இருந்த வாகனம் எண். மகேந்திரா ஜீப் கழிவு செய்யப்பட்ட தையடுத்து அந்த வாகனம் நாளை 3-ந்தேதி காலை 11 மணியளவில் தருமபுரி மாவட்ட நில அளவை அலுவலகத்தில் பொது ஏலம் விடப்படவுள்ளது.
மேற்படி ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வர்கள் ஏலத்தில் கலந்து கொண்டு விலைப்புள்ளியைக் கோரலாம். ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் அரசு நிர்ணயித்துள்ள ஏலத் தொகையில் 10 சதவீதம் முன் பிணைத்தொகையாகவோ அல்லது வரைவோலையாக செலுத்த வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்கு பின் வருபவர்கள் ஏலம் கேட்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
ஏலத்தில் அதிக தொகை கோருபவருக்கு ஏலம் முடிவு செய்யப்படும். அரசு நிர்ணயித்த தொகைக்கு குறைவாக ஏலம் கோரப்படின் ஏலம் ரத்து செய்யப்பட்டு மறு ஏலம் வேறு தேதியில் நடத்தப்படும்.
ஏலம் எடுத்தவர் உடன் பணத்தை செலுத்தி பின் பொருளினை எடுத்து செல்ல வேண்டும். ஏலம் எடுத்தவர் நீங்கலாக மற்றவர்களின் முன்பிணைத் தொகை மீள வழங்கப்படும்.
இந்த ஏலத்தை ரத்து செய்வதற்கோ, ஏலத்தை நிறுத்தி வைக்க, ஏலத்தை முடித்து வைப்பதற்கு துறை தலைவருக்கு முழு அதிகாரம் உண்டு.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தருமபுரி மாவட்டத்தில் நிலக்கடலை அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
- நிலக்கடலை விலை அதிகரிக்க வாய்ப்பு.
தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பென்னாகரம், நல்லம்பள்ளி, தருமபுரி, காரிமங்கலம் உள்ளிட்ட வட்டங்களில் மானா வாரி நிலங்களில் மழைக் காலங்களில் விவசாயிகள் பெரும்பாலும் நிலக்கடலை சாகுபடியை அதிக அளவில் மேற்கொள் கின்றனர். பாசன வசதியுள்ள விவசாயிகள் இறவை முறையிலும் நிலக்கடலை சாகுபடியில் ஈடுபடுகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், நிலக்கடலைக்கு தண்ணீர் இன்றி காய்ந்தன. ஆனால் கடந்த, 2 மாதங்களாக இப்பகுதிகளில் கன மழை பெய்து நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளதால், நிலக்கடலை மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளன.
தற்போது, நிலக்கடலை அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில், அறுவடை செய்யும் பணியில் விவ சாயிகள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.
கடந்த ஆண்டை விட இம்முறை நிலக்கடலை விளைச்சல் குறைந்து உள்ளதால், நிலக்கடலை விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது, ஒரு கிலோ நிலக்கடலை, ரூ.30 முதல் ரூ.50 வரை கொள்முதல் செய்யப்பட்டு, ரூ.40 முதல், ரூ.70 வரை விற்பனை செய்யப்படுகிறது.
இங்கிருந்து நிலக்கடலையை, மூட்டைகளாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா மற்றும் கர்நாடகா பகுதிகளுக்கும் விவசாயிகள் விற்பனைக்காக அனுப்பி வருகின்றனர்.
- தருமபுரி மாவட்டத்திறகு 59-வது பிறந்த நாள் கொண்டாப்பட்டது.
- எம். ஏல்.ஏக்கள் அதியமான்- அவ்வை சிலைகளுக்கு மாலை அணிவித்தனர்
தருமபுரி மாவட்டம் சேலம் மாவட்டத்தில் இருந்து பிரிந்து தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது. அதன் காரணமாக இன்று தருமபுரி மாவட்டத்திற்கு 59-வது பிறந்தநாள் மாவட்டம் முழுவதும் கொண்டா டப்பட்டு வருகிறது.
அதனை கொண்டாடும் வகையில் அதியமான் கோட்டை பகுதியில் உள்ள வள்ளல் அதியமான் கோட்டத்தில் அதியமான் அவ்வையார் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதியில் பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி மற்றும் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் ஆகியோர் அதியமான் மற்றும் அவ்வையார் சிலை களுக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து தருமபுரி மாவட்டத்திற்கான 59-வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக கேக் வெட்டி கொண்டாடினர். பின்னர் நிகழ்ச்சிக்காக வந்திருந்த கட்சித் தொண் டர்கள் மற்றும் இப்பகுதி வளாகத்தில் போட்டித் தேர்வுக்காக பயின்று வரும் மாணவர்கள் உள்ளிட்ட வருக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
இந்நி கழ்ச்சியில் நல்லம் பள்ளி ஒன்றிய குழு தலைவர் மகேஸ்வரி பெரியசாமி, பா.ம.க. அமைப்பு செயலாளர் சண்முகம், மாநிலத் துணைத் செயலாளர் சாந்தமூர்த்தி, பாகலஹள்ளி ஊராட்சி மன்ற தலைவர் முருகன், ஒன்றிய செய லாளர் ஓ.கே.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய தலைவர்கள் வெங்கடே சன், சிவபிரகாசம் மற்றும் பா.ம.க. நிர்வாகிகள் முத்து வேல், குப்பன், சுப்பிரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- தருமபுரி ஒருங்கிணைந்த வளாகத்தில் தூய்மை பணி நடைபெற்றது.
- முதன்மை மாவட்ட நீதிபதி தொடங்கி வைத்தார்.
நாடு முழுவதும் ஸ்வச் பாரத் தூய்மை இந்தியா இயக்கம் மகாத்மா காந்தியடிகளின் கனவை நிறைவேற்றும் வகையில் தூய்மையான மற்றும் சுகாதாரமான நாட்டை உருவாக்குவது லட்சியம் என்று பாரத பிரதமர் தொடங்கப்பட்டு தற்போது மக்களிடையே மக்கள் இயக்கம் மாறியுள்ளது.
நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வரும் தூய்மை இயக்கம் சார்ந்த திட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தர்மபுரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலும் இன்று தூய்மை இயக்க பணிகள் நடைபெற்றன.
அதன்படி தடங்கம் பகுதியில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் முதன்மை மாவட்ட நீதிபதி மணிமொழி நீதிமன்ற வளாகத்தில் தூய்மை பணியினை தொடங்கி வைத்து நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணியாளர்களுடன் இணைந்து நீதிமன்ற வளாகம் முழுவதும் தூய்மை பணிகளை மேற்கொண்டார்.
அதன் தொடர்ச்சியாக நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகளையும் நட்டு வைத்தார். இந்தத் தூய்மை இயக்கத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- தருமபுரியில் தீபா சில்க்ஸ் பட்டு அரண்மனை திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது.
- ஜவுளிகள் வாங்கும் அனைவருக்கும் அழகிய அன்பு பரிசு வழங்கப்பட்டது.
தருமபுரி நகரில் நேதாஜி பைபாஸ் ரோடு, வள்ளலார் மைதானம் எதிரில் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில், 50 ஆயிரம் சதுர அடியில் 4 தளங்களுடன் தீபா சில்க்ஸ் என்னும் பட்டு அரண்மனை அமைக்கப்பட்டுள்ளது.
முற்றிலும் குளிர்சாதன வசதியுடன் தரைத்தளத்தில் பெண்களுக்கான சேலை பிரிவு, முதல் தளத்தில் பட்டு சேலைகளுக்கான சிறப்பு பிரிவு, பெண்களுக்கான ரெடிமேட் பிரிவு மற்றும் பெண் குழந்தைகளுக்கான பிரிவு, 2-ம் தளத்தில் ஆண்கள் பிரிவு மற்றும் ஆண்கள் ரெடிமேடு பிரிவு மற்றும் ஆண் குழந்தைகளுக்கான பிரிவு என லிப்ட் வசதியுடன் தனித்தனி பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளது.
வடதமிழகத்தில் மிகவும் பிரமாண்டமான முறையில் அமைந்துள்ள இந்த வளாகத்தில் உள்ள அடித்த–ளத்தில் 100 கார்கள் நிறுத்தும் வகையில் பிரமாண்ட கார் பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இது போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட இந்த தீபா சில்க்ஸ் பட்டு அரண்மனை திறப்பு விழா தருமபுரி மாவட்டம் உருவான இன்று காலை நடைபெற்றது.
விழாவில் ஸ்ரீ விஜய் வித்யாலயா பள்ளி நிறுவனங்களின் தலைவர் டி.என்.சி. மணிவண்ணன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி தீபா சில்க்ஸ் ஜவுளி ஷோரூமை திறந்து வைத்தார். தி.மு.க. மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். விழாவுக்கு வந்த முக்கிய பிரமுகர்களை தீபா சில்க்ஸ் நிறுவனத்தின் நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர். இதில் முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள், வனிகர் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திறப்பு விழாவை முன்னிட்டு ஜவுளிகள் வாங்கும் அனைவருக்கும் அழகிய அன்பு பரிசு வழங்கப்பட்டது. மேலும் தீபா சில்க்ஸ் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள டாடா டியாகோ காருடன் செல்பி எடுக்கும் சிறந்த வாடிக்கையாளர் தேர்வு செய்யப்பட்டு தீபாவளி பண்டிகை நாளன்று அந்த கார் பரிசாக வழங்கப்படுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை தீபா சில்க்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டி.சி. சம்பத், இயக்குனர்கள் எஸ்.தியாகராஜன், எஸ்.கார்த்தி–கேயன் மற்றும் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.
- மனைவி இறந்த துக்கத்தில் முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
- மனைவி கடந்த 8 மாதங்களுக்கு முனபு இறந்து விட்டார்
பென்னாகரம் அருகே
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அரகாசன அள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சுப்புரு (வயது70). இவரது மகன் பழனிசாமி.
இந்த நிலையில் சுப்புரு வின் மனைவி கடந்த 8 மாதங்களுக்கு முனபு இறந்து விட்டார். இதன் காரணமாக சுப்புரு துக்கத்தில் இருந்து வந்துள்ளார்.
சம்பவத்தன்று மதியம் சுப்புரு வீட்டில் மயங்கி கிடந்தார். இதனை கண்ட பழனிசாமி அவரது தந்தையிடம் கேட்டபோது விவசாயப் பயிர்களுக்கு பயன்படுத்தும் விஷம் சாப்பிட்டு விட்டதாக தெரிவித்தார். இதனையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சுப்புருவை சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பின்னர் தருமபுரி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து பழனிசாமி கொடுத்த புகாரின் பேரில் பெரும்பாலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தருமபுரி மாவட்டத்தில் அனுமதியின்றி மது விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
- மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
காந்தி ஜெயந்திக்கு மதுக்கடைகளுக்கு அரசு விடுமுறை அளித்தது. இதனையடுத்து முன் கூட்டிய சில பகுதிகளில் ரகசியமாக மது விற்பனை நடப்பதாக தருமபுரி எஸ்.பிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அவர் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர காண்காணிப்பில் ஈடுப்படனர்.அப்போது தருமபுரி மாவட்டம் பெரும்பாலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கடைவீதி பகுதியில் ஒருவர் மது விற்பனையில் ஈடுபட்டு இருந்தார் அவரை மடக்கி பிடித்தனர்.
அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் பென்னாகரம் அனுமந்தபுரத்தை சேர்ந்த பெருமாள் மகன் செல்வம் (வயது50) என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது போலீசார் அவரிடமிருந்து 20 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். அதே போன்று பென்னாகரம் அடுத்துள்ள தின்னுர் கிராபத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் தங்கராஜ் (வயது60) என்பவர் தனது பெட்டிக்கடையில் மது விற்பதாக வந்த தகவலின் பேரில் அவரை கைது செய்து அவரிடமிருந்து 28 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
அதே போன்று பெரும்பாலை போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட அரகாசனப்பள்ளி பகுதியில் சப்இன்ஸ்பெக்டர் மோகன் காண்காணிப்பு பணியில் ஈடுபட்டபோது மது விற்பனையில் ஈடுபட்ட ஒருவரை பிடித்து விசாரித்தார். அவர் அரகாசனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த கொளந்தை மகன் சின்னத்துரை (வயது60) என்பது தெரியவந்தது. அவரிடமிருத்து 20 மதுப்பாட்டில்களை பறிமுதல் செய்தனர். அதே போன்று தின்னுர் பகுதியில் மது விற்கப்படுவதாக பெரும்பாலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற போலீசார் தின்னுரில் பெட்டிக்கடை பின்புறம் மது விற்று கொண்டிருந்த மாதையன் மகன் பசுபதி (வயது 30) என்பவரை பிடித்து அவரிடமிருந்து 20 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். அதே போன்று அரூர் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது சந்தைமேடு என்ற இடத்தில் ஒருவர் மது விற்று கொண்டிருந்தார். அவரை மடக்கி பிடித்து விசாரணை செய்தனர். அதில் அவர் அரூர் சந்தைமேடு பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் சக்திவேல் என்பது தெரியவந்தது அவரிடமிருந்து 72 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். அவரை கைது செய்து விசாரித்து வருகின்றர். வெவ்வேறு பகுதிகளில் மது விற்பனையில் ஈடுபட்ட 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
- பாளையம் டோல்கேட்டில் தூய்மை இந்தியா இயக்கப் பணிகள் தொடங்கப்பட்டது.
- இந்தியா திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கி பேசினர்.
இந்தியா முழுவதும் தேசிய இயக்கமாக தூய்மை இந்தியா இயக்கம் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. அக்டோபர் 2ந்தேதி நாடு முழுவதும் தூய்மை இந்தியா திட்டம் கடைபிடிக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக நல்லம்பள்ளி அருகே அமைந்துள்ள பாளையம் சுங்க சாவடி பகுதியில் நேற்று தூய்மை இந்தியா திட்டம் தொடக்கம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் நல்லம்பள்ளி வட்டாட்சியர் ஆறுமுகம் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். நம்முடைய பகுதியில் தூய்மை மற்றும் சுகாதாரம் குறித்த உறுதிமொழி ஏற்றுக் கொண்டு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் பொதுமக்களுக்கு வழங்கப் பட்டது. வனத்துறை அதிகாரிகள் மற்றும் சாலை பராமரிப்பு குழுவினர் தூய்மை இந்தியா திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கி பேசினர். அதைத் தொடர்ந்து சுங்கச்சாவடி பகுதி சாலைகளில் தூய்மை செய்யும் பணியினை வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக கிருஷ் ணகிரி முதல் தொப்பூர் வரையிலான சாலை பராமரிப்பு குழுவினருக்கு உட்பட்ட பகுதி முழுவதும் தொடர்ந்து இந்த மாதம் முழுவதும் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் பாளையம் வருவாய் அலுவலர் ருக்மணி, வனத்துறை அதிகாரிகள் அரவிந்த், சத்யா, தரணி, பாளையம் கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணன், பாளையம் சுங்க சாவடி மேலாளர் அருண்குமார் மற்றும் சுங்கத்துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
- கோவில் பூஜைகள், சாமி ஊர்வலம் பாரம்பரிய முறைப்படி நடைபெற்று வந்தது.
- இருதரப்பினருக்கும் இடையே வாக்கு வாதம் செய்ததாக கூறப்படுகிறது.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகேயுள்ள அரங்காபுரம் கிராமத்தில் பல்வேறு சமூகத்தை சேர்ந்த சுமார் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இக்கிராமத்தில் சுமார் 100 ஆண்டு கால பழைமை வாய்ந்த ஸ்ரீ சென்றாய வரதாரஜா பெருமாள் கோவில் அரசு நடுநிலை பள்ளி அருகே அமைந்துள்ளது.
இந்நிலையில் இந்த கோவில் பூஜைகள், சாமி ஊர்வலம் பாரம்பரிய முறைப்படி நடைபெற்று வந்தது. மேலும் பழமை வாய்ந்த கோவில் என்பதாலும், போதிய பராமரிப்பின்றியும் பாழடைந்து போனது.மேலும் இக்கோவில் பள்ளி கூட வளாகத்தில் உள்ளதாலும் இடவசதி உள்ளிட்ட காரணங்களால் ஒரு சில சமூகத்தை சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து பணம் வசூல் செய்து அதே கிராமத்தில் பள்ளிகூடம் அருகில் உள்ள நிலத்தில் புதியதாக சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீ சென்றாய வரதாரஜா பெருமாள் கோவிலை கட்டி முடித்தனர்.
இந்நிலையில் வருடாந்திர புரட்டாசி மாத பூஜைக்காக காலகாலமாக பின்பற்றும் நடைமுறைப்படி ஊர்வலம் எடுத்து செல்ல திட்டமிட்டனர். ஆனால் இதுசம்மந்தமாக மற்றொரு தரப்பினர் கூடுதல் இடங்களுக்கு சாமி ஊர்வலம் வரவேண்டும் என கூறியதாக தெரிகிறது. இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்கு வாதம் செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவலறிந்து வந்த பென்னாகரம் போலீஸ் துணை சூப்பிரண்டு மகாலட்சுமி, இன்ஸ்பெக்டர் முத்தமிழ்செல்வம் உள்ளிட்ட போலீசார் இருதரப்பினரையும் அழைத்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதனால் அக்கிராமத்தில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.






