என் மலர்
உள்ளூர் செய்திகள்

அனுமதியின்றி மது விற்ற 5 பேர் கைது
- தருமபுரி மாவட்டத்தில் அனுமதியின்றி மது விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
- மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
காந்தி ஜெயந்திக்கு மதுக்கடைகளுக்கு அரசு விடுமுறை அளித்தது. இதனையடுத்து முன் கூட்டிய சில பகுதிகளில் ரகசியமாக மது விற்பனை நடப்பதாக தருமபுரி எஸ்.பிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அவர் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர காண்காணிப்பில் ஈடுப்படனர்.அப்போது தருமபுரி மாவட்டம் பெரும்பாலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கடைவீதி பகுதியில் ஒருவர் மது விற்பனையில் ஈடுபட்டு இருந்தார் அவரை மடக்கி பிடித்தனர்.
அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் பென்னாகரம் அனுமந்தபுரத்தை சேர்ந்த பெருமாள் மகன் செல்வம் (வயது50) என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது போலீசார் அவரிடமிருந்து 20 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். அதே போன்று பென்னாகரம் அடுத்துள்ள தின்னுர் கிராபத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் தங்கராஜ் (வயது60) என்பவர் தனது பெட்டிக்கடையில் மது விற்பதாக வந்த தகவலின் பேரில் அவரை கைது செய்து அவரிடமிருந்து 28 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
அதே போன்று பெரும்பாலை போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட அரகாசனப்பள்ளி பகுதியில் சப்இன்ஸ்பெக்டர் மோகன் காண்காணிப்பு பணியில் ஈடுபட்டபோது மது விற்பனையில் ஈடுபட்ட ஒருவரை பிடித்து விசாரித்தார். அவர் அரகாசனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த கொளந்தை மகன் சின்னத்துரை (வயது60) என்பது தெரியவந்தது. அவரிடமிருத்து 20 மதுப்பாட்டில்களை பறிமுதல் செய்தனர். அதே போன்று தின்னுர் பகுதியில் மது விற்கப்படுவதாக பெரும்பாலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற போலீசார் தின்னுரில் பெட்டிக்கடை பின்புறம் மது விற்று கொண்டிருந்த மாதையன் மகன் பசுபதி (வயது 30) என்பவரை பிடித்து அவரிடமிருந்து 20 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். அதே போன்று அரூர் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது சந்தைமேடு என்ற இடத்தில் ஒருவர் மது விற்று கொண்டிருந்தார். அவரை மடக்கி பிடித்து விசாரணை செய்தனர். அதில் அவர் அரூர் சந்தைமேடு பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் சக்திவேல் என்பது தெரியவந்தது அவரிடமிருந்து 72 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். அவரை கைது செய்து விசாரித்து வருகின்றர். வெவ்வேறு பகுதிகளில் மது விற்பனையில் ஈடுபட்ட 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.






