search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாளையம் டோல்கேட்டில் தூய்மை இந்தியா இயக்கப் பணிகள் தொடக்கம்
    X

    பாளையம் டோல்கேட்டில் தூய்மை இந்தியா இயக்கப் பணிகள் தொடக்கம்

    • பாளையம் டோல்கேட்டில் தூய்மை இந்தியா இயக்கப் பணிகள் தொடங்கப்பட்டது.
    • இந்தியா திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கி பேசினர்.

    இந்தியா முழுவதும் தேசிய இயக்கமாக தூய்மை இந்தியா இயக்கம் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. அக்டோபர் 2ந்தேதி நாடு முழுவதும் தூய்மை இந்தியா திட்டம் கடைபிடிக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக நல்லம்பள்ளி அருகே அமைந்துள்ள பாளையம் சுங்க சாவடி பகுதியில் நேற்று தூய்மை இந்தியா திட்டம் தொடக்கம் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் நல்லம்பள்ளி வட்டாட்சியர் ஆறுமுகம் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். நம்முடைய பகுதியில் தூய்மை மற்றும் சுகாதாரம் குறித்த உறுதிமொழி ஏற்றுக் கொண்டு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் பொதுமக்களுக்கு வழங்கப் பட்டது. வனத்துறை அதிகாரிகள் மற்றும் சாலை பராமரிப்பு குழுவினர் தூய்மை இந்தியா திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கி பேசினர். அதைத் தொடர்ந்து சுங்கச்சாவடி பகுதி சாலைகளில் தூய்மை செய்யும் பணியினை வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் தொடங்கி வைத்தனர்.

    இந்நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக கிருஷ் ணகிரி முதல் தொப்பூர் வரையிலான சாலை பராமரிப்பு குழுவினருக்கு உட்பட்ட பகுதி முழுவதும் தொடர்ந்து இந்த மாதம் முழுவதும் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் பாளையம் வருவாய் அலுவலர் ருக்மணி, வனத்துறை அதிகாரிகள் அரவிந்த், சத்யா, தரணி, பாளையம் கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணன், பாளையம் சுங்க சாவடி மேலாளர் அருண்குமார் மற்றும் சுங்கத்துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×