search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரியில் தீபா சில்க்ஸ் திறப்பு விழா
    X

    தருமபுரியில் தீபா சில்க்ஸ் புதிய ஜவுளி ஷோரூமை ஸ்ரீ விஜய் வித்யாலயா கல்வி நிறுவனங்களின் தலைவர் டி.என்.சி. மணிவண்ணன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்த போது எடுத்த படம். அருகில் தி.மு.க. மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி மற்றும் பலர் உள்ளனர்.

    தருமபுரியில் தீபா சில்க்ஸ் திறப்பு விழா

    • தருமபுரியில் தீபா சில்க்ஸ் பட்டு அரண்மனை திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது.
    • ஜவுளிகள் வாங்கும் அனைவருக்கும் அழகிய அன்பு பரிசு வழங்கப்பட்டது.

    தருமபுரி நகரில் நேதாஜி பைபாஸ் ரோடு, வள்ளலார் மைதானம் எதிரில் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில், 50 ஆயிரம் சதுர அடியில் 4 தளங்களுடன் தீபா சில்க்ஸ் என்னும் பட்டு அரண்மனை அமைக்கப்பட்டுள்ளது.

    முற்றிலும் குளிர்சாதன வசதியுடன் தரைத்தளத்தில் பெண்களுக்கான சேலை பிரிவு, முதல் தளத்தில் பட்டு சேலைகளுக்கான சிறப்பு பிரிவு, பெண்களுக்கான ரெடிமேட் பிரிவு மற்றும் பெண் குழந்தைகளுக்கான பிரிவு, 2-ம் தளத்தில் ஆண்கள் பிரிவு மற்றும் ஆண்கள் ரெடிமேடு பிரிவு மற்றும் ஆண் குழந்தைகளுக்கான பிரிவு என லிப்ட் வசதியுடன் தனித்தனி பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளது.

    வடதமிழகத்தில் மிகவும் பிரமாண்டமான முறையில் அமைந்துள்ள இந்த வளாகத்தில் உள்ள அடித்த–ளத்தில் 100 கார்கள் நிறுத்தும் வகையில் பிரமாண்ட கார் பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    இது போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட இந்த தீபா சில்க்ஸ் பட்டு அரண்மனை திறப்பு விழா தருமபுரி மாவட்டம் உருவான இன்று காலை நடைபெற்றது.

    விழாவில் ஸ்ரீ விஜய் வித்யாலயா பள்ளி நிறுவனங்களின் தலைவர் டி.என்.சி. மணிவண்ணன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி தீபா சில்க்ஸ் ஜவுளி ஷோரூமை திறந்து வைத்தார். தி.மு.க. மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். விழாவுக்கு வந்த முக்கிய பிரமுகர்களை தீபா சில்க்ஸ் நிறுவனத்தின் நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர். இதில் முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள், வனிகர் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    திறப்பு விழாவை முன்னிட்டு ஜவுளிகள் வாங்கும் அனைவருக்கும் அழகிய அன்பு பரிசு வழங்கப்பட்டது. மேலும் தீபா சில்க்ஸ் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள டாடா டியாகோ காருடன் செல்பி எடுக்கும் சிறந்த வாடிக்கையாளர் தேர்வு செய்யப்பட்டு தீபாவளி பண்டிகை நாளன்று அந்த கார் பரிசாக வழங்கப்படுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை தீபா சில்க்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டி.சி. சம்பத், இயக்குனர்கள் எஸ்.தியாகராஜன், எஸ்.கார்த்தி–கேயன் மற்றும் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

    Next Story
    ×