என் மலர்tooltip icon

    தர்மபுரி

    • அரூர் அரசு பள்ளியில் நாட்டு நலப்பணி திட்டம் நிறைவு விழா நடைபெற்றது.
    • போலீஸ இன்ஸ்பெக்டர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    தருமபுரி மாவட்டம், அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சித்தேரி ஊராட்சியில் நாட்டு நலப்பணி திட்டம் முகாமின் மூலம் தூய்மை பணியில் கடந்த ஒரு வாரமாக ஈடுபட்டனர்.

    இதனையடுத்து இதன் நிறைவு விழா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் ஆறுமுகம் தலைமை தாங்கினார் . இணை திட்ட இயக்குநர் சங்கர் முன்னிலை வகித்தார்.

    சிறப்பு விருந்தினராக காவல் ஆய்வாளர் பாஸ்கரபாபு, பேரூராட்சி தலைவர் இந்திராணி, தனபால், துணை தலைவர் சூர்யா, தனபால் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி வாழ்த்தினார்கள்.

    இதில் பேரூராட்சி உறுப்பினர் உமாராணி, முன்னாள் மாணவர்கள் சத்தியபிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பாலக்கோடு பகுதியில் ரூ.74 லட்சம் மதிப்பில் வளர்ச்சி திட்டப் பணிகளை அன்பழகன் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.
    • பல்வேறு பணிகளுக்கு பூமி பூஜை நடந்தது.

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஒன்றியம் ,பி.செட்டி அள்ளி ஊராட்சியில் புதிய அங்கன்வாடி கட்டிடம் உள்ளிட்ட பணிகளுக்கு பூமி பூஜை மற்றும் திறப்பு விழா ஊராட்சி மன்ற தலைவர் கணபதி தலைமையில் நடைப்பெற்றது.

    நிகழ்ச்சிக்கு ஒன்றிய குழு தலைவர் பாஞ்சாலை கோபால், கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் நாகராசன், முன்னாள் ஒன்றிய செயலாளர் ரங்கநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பி.செட்டி அள்ளி ஊராட்சியில் உள்ள தீத்தார அள்ளியில் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைத்தல், ஜோதி அள்ளியில் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்ட பூமி பூஜை, ரூ.13 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் பி.செட்டி அள்ளியில் கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிட திறப்பு விழா, பி.செட்டி அள்ளி காலணி யில் ரூ.6 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பில் புதிய கழிவு நீர் கால்வாய் அமைத்தல், ரூ.13 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் கொம்மநாய்கன அள்ளியில் புதிய அங்கன்வாடி மைய கட்டிட திறப்பு விழா மற்றும் ரூ.8 லட்சத்து 72 ஆயிரம் மதிப்பில் புதிய கழிவு நீர்கால்வாய் அமைக்க பூமி பூஜை என மொத்தம் ரூ.74 லட்சம் மதிப்பீட்டிலான பணிகளுக்கு முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ கலந்து கொண்டு பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் பி.செட்டி அள்ளி ஒன்றிய கவுன்சிலர் முத்துசாமி, கவுன்சிலர் விமலன், கூட்டுறவு சங்க தலைவர்கள் வீரமணி, புதுர் சுப்ரமணி, அ.தி.மு.க தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • தருமபுரி ஏல அங்காடியில் வெண் பட்டுக்கூடுகள் வரத்து அதிகரித்துள்ளது.
    • வெண் பட்டுக்கூடுகள் ரூ. 24.23 லட்சத்துக்கு ஏலம்

    தமிழகத்திலேயே மிகப்பெரிய பட்டுக்கூடு ஏல அங்காடி தருமபுரியில் அமைந்துள்ளது. இந்த பட்டுக்கூடு அங்காடிக்கு கன்னியாகுமரி, ராம நாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர் கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள பட்டுக்கூடு உற்பத்தி செய்யும் விவசாயிகள் பட்டுக்கூடு ஏலத்தில் கலந்து கொள்ளுகின்றனர்.

    தருமபுரி பட்டுக்கூடு அங்காடியில் மஞ்சள், வெள்ளை என தினசரி 5 முதல் 8 டன் வரையிலான பட்டுக்கூடுகள் ஏலம் விடப்படும். இந்நிலையில் கடந்த இரண்டு வாரம் பட்டுக்கூடு வரத்து கடுமையாக குறைந்து ரூ.2.5 லட்ச த்திற்கு விற்பனையா னது. இந்நிலையில் இன்று நடைபெற்ற ஏலத்தில், 73 விவசாயிகள் கொண்டு வந்த 5240 கிலோ வெண் பட்டுக்கூடுகள் ரூ.24.23 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது. இதில் குறைந்தபட்சம் ரூ.301-க்கும், அதிகபட்சமாக ரூ.583-க்கும், சராசரியாக 462 ரூபாய் என ஏலம் போனது.

    மேலும் கடந்த இரண்டு வாரத்தில் பட்டுக்கூடு வரத்தும், விலையும் குறைந்து இரண்டு லட்சத்திற்கு விற்பனையானது. ஆனால் இன்று பட்டுக்கூடு வரத்து அதிகரித்து 5240 கிலோ வெண் பட்டுக்கூடுகள் 24.23 இலட்சத்திற்கு விற்பனையானது.

    மேலும் இனிவரும் நாட்களில் பட்டுக்கூடு வரத்து, மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அலுவ லர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் தருமபுரி மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • நல்லம்பள்ளி அருகே இருசக்கர வாகனம் மோதி உடல் நசுங்கி தொழிலாளி உயிரிழந்தார்
    • 100 அடி தூரம் உடலை இழுத்து சென்றது

    தருமபுரி மாவட்டம், தடங்கம் ஊராட்சி பெருமாள் கோவில் மேடு பகுதியை சேர்ந்த வர் பாலகிருஷ்ணன் (வயது 36).

    இவர் தருமபுரியில் இருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது கெங்கலாபுரம் பகுதி தேசிய நெடுஞ்சாலையிலேயே நிறுத்தபட்டிருந்த லாரியை ஒதுங்க முற்பட்டுள்ளார்.

    அப்போது கண் இமைக்கும் நேரத்தில் பின்னால் வந்த கார் பைக் மீது மோதியது.இதனால் தூக்கி வீசப்பட்ட பாலகிருஷ்ணன் சாலையின் வலது புறம் சென்று கொண்டிருந்த கிரானைட் கற்கள் ஏற்றி சென்ற லாரியின் பின் சக்கரத்தில் சிக்கியுள்ளார்.

    இருசக்கர வாகனத்தில் வந்த நபர் விபத்துக்குள்ளாகி லாரியின் சக்கரத்தில் சிக்கியது தெரியாத லாரியின் ஓட்டுநர் தொடர்ந்து வாகனத்தை இயக்கியுள்ளார். இதனால் சுமார் 100 அடி தூரம் வரை பாலகிருஷ்ணன் உடல் நசுங்கியவாறு லாரி இழுத்துச் சென்றுள்ளது.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தொப்பூர் காவல் துறையினர் மற்றும் சாலை பராமரிப்பு குழுவினர் லாரியின் சக்கரத்தில் சிக்கி நசுங்கிய பாலகிருஷ்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் பைக் மீது மோதிய கார் மற்றும் தேசிய நெடுஞ்சாலையிலேயே நிறுத்தபட்டிருந்த லாரியின் ஓட்டுநர் குறித்து தொப்பூர் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • பென்னாகரம் ரோட்டில் ஆட்டுக்காரம்பட்டி அருகே நடந்து வந்தார்.
    • இருசக்கர வாகனம் மோதியதில் படுகாயம் அடைந்தார்.

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த எர்ரபையனஅள்ளி பஞ்சாயத்திற்கு உட்பட்ட கருபையன அள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சின்னசாமி (70). இவர் தனது மருமகன் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 24-ந் தேதி இரவு தருமபுரி-பென்னாகரம் ரோட்டில் ஆட்டுக்காரம்பட்டி அருகே நடந்து வந்தார்.

    அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனம் அவர் மீது மோதியதில் படுகாயம் அடைந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பின்னர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் சின்னசாமி உயிரிழந்தார்.

    இது குறித்து தருமபுரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • 14 பெண்கள் உள்பட 84 பேர் கைது செய்யபட்டனர்.
    • 504 மதுபாட்டில்கள், 50 லிட்டர் சாராயம், 14 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

    அரூர் போலீஸ் உட்கோட்டத்தில் உள்ள இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார்கள் நடத்திய அதிரடிச் சோதனையில் காவல் நிலைய உட்கோட்ட பகுதிகளில் கள்ளச்சாராயம், அனுமதியின்றி மதுபாட்டில் கள் விற்பனை, அதிக விலைக்கு விற்பனை செய்த வழக்கில். ஒட்டல், பெட்டி கடையில் குடிக்க அனுமதித்த கடைக்காரர்கள் அரூர், கோட்டப்பட்டி, கோபி நாதம்பட்டி, மொரப்பூர், கம்பைநல்லூர், அ.பள்ளிப் பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்தூர், போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சென்ற மாதம் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இதனை யடுத்து 14 பெண்கள் உள்பட 84 பேர் கைது செய்யப்பட்ட அவர்களிடமிந்து 504 மதுபாட்டில்கள், 50 லிட்டர் சாராயம், 14 இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

    • விலை வீழ்ச்சி தக்காளி விவசாயிகளுக்கு பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்துகிறது.
    • விலை வீழ்ச்சி காலங்களில், தக்காளி விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு அரசு தீர்வு காண வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

    தருமபுரி:

    தமிழகத்தில் கடந்த பல மாதங்களாகவே ஏற்ற, இறக்கங்கள் நிறைந்த விலையில் தக்காளி விற்பனை ஆகி வந்துள்ளது. இருப்பினும், சராசரியாக கிலோ ரூ.15 என்ற நிலைக்கு குறையாத அளவில் விவசாயிகளுக்கு விலை கிடைத்து வந்தது.

    இந்நிலையில், கடந்த 2 வாரங்களாக தக்காளி விலையில் வேகமான சரிவு ஏற்பட்டது. கடந்த வாரத்தில் கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை தக்காளியின் தரத்துக்கு ஏற்ப விலை கிடைத்து வந்தது.

    ஆனால், நடப்பு வாரத்தில் தக்காளியின் விலை சந்தையில் கிலோ ரூ.6 முதல் ரூ.8 வரை என்ற நிலைக்கு கீழே சரிந்து விட்டது.

    விவசாயிகள் இடத்தில் தக்காளி கிலோ ரூ.3 முதல் ரூ.5 வரை வியாபாரிகள் கொள்முதல் செய்வதால் தக்காளி பயிரிட்டுள்ள தருமபுரி மாவட்ட விவசாயிகள் கடும் வேதனைக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

    தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் விளையும் தக்காளிப் பழங்கள் சென்னை, மதுரை, திண்டுக்கல், கும்பகோணம் உள்ளிட்ட தமிழக பகுதிகளுக்கும், பெங்களூருவுக்கும் விற்பனைக்காக செல்கிறது.

    விலை வீழ்ச்சி தக்காளி விவசாயிகளுக்கு பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்துகிறது. இருப்பினும், தெரிந்த ஒரே தொழில் விவசாயம் தான் என்பதால் விவசாயிகள் நஷ்டங்களையும் சகித்துக் கொண்டு விலை உயரும் என்ற நம்பிக்கையில் மீண்டும் சாகுபடிக்கு செல்கின்றனர்.

    தக்காளிக்கு மட்டுமன்றி இதர சில காய்கறி பயிர்களிலும் இதேபோன்ற விலைவீழ்ச்சி சிரமங்களை விவசாயிகள் அவ்வப்போது எதிர்கொள்கின்றனர்.

    இன்று உழவர் சந்தையில் தக்காளி கிலோ ரூ.8 க்கு விற்பனை செய்யப்பட்டது.

    விலை வீழ்ச்சி காலங்களில், தக்காளி விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு அரசு தீர்வு காண வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

    • ஏலகிரி அடுத்துள்ள எள்ளுகுளி பகுதியில் செல்லும்போது முன்னாள் சென்ற அரசு பேருந்தை முந்தி செல்ல முயன்றுள்ளனர்.
    • அரசு பேருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் மோதியதில் குழந்தை பிரித்திகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

    தொப்பூர்:

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள ஈச்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி-ஆர்த்தி தம்பதியினருக்கு 3 வயதில் பிரித்திகா என்ற பெண் குழந்தை உள்ளது.

    நேற்று இரவு ஈச்சம்பட்டியில் இருந்து நாகாவதி அணை நோக்கி மூர்த்தி மற்றும் அவரது மனைவி குழந்தை உடன் அவரது உறவினர் தசரதன் என்பவர் இருசக்கர வாகனத்தை ஓட்டி செல்ல பின்னால் அமர்ந்து சென்றுள்ளனர்.

    அப்போது ஏலகிரி அடுத்துள்ள எள்ளுகுளி பகுதியில் செல்லும்போது முன்னாள் சென்ற அரசு பேருந்தை முந்தி செல்ல முயன்றுள்ளனர். பேருந்தை முந்தி சென்றவுடன் பதற்றத்தில் கையில் இருந்த குழந்தை தவறி சாலையில் விழுந்ததாக கூறப்படுகிறது.

    அப்போது பின்னால் வந்த அரசு பேருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் மோதியதில் குழந்தை பிரித்திகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் . இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள் அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்தாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்து வந்த தொப்பூர் காவல்துறையினர் குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    மேலும் விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    • அரூர் பேரூராட்சியில் காந்தி ஜெயந்தியையொட்டி மராத்தான் போட்டி நடைபெற்றது.
    • மாணவிகள் கலந்து கொண்டனர்.

    தருமபுரி மாவட்டம், அரூர் பேரூராட்சியில்  காந்தி ஜெயந்தியை முன்னிட்டு 18 வார்டு களிலும் தூய்மையே சேவை தலைப்பில் தூய்மை பணி நடைபெற்றது.

    இது குறித்த விழிப்பு ணர்வுக்காக மராத்தான் போட்டி நடைபெற்றது. இதனை அரூர் பேரூராட்சி தலைவர் இந்திராணி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் துணைத்தலைவர் சூர்யா, தனபால், செயல் அலுவலர் விஜயசங்கர் மற்றும் நியமன குழு உறுப்பினர் முல்லை ரவி, வார்டு உறுப்பினர்கள், தன்னார்வ லர்கள், நாட்டு நலப்பணி  மாணவிகள், தூய்மை பணியாளர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

    பேரூராட்சி அலுவல கத்தில் பேரணி தொடங்கி கடைவீதி, பஸ் நிலையம், வர்ண தீர்த்தம், பைபாஸ் சாலை மற்றும் முக்கிய வழியாக சென்றது.

    • காரிமங்கலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலியானார்.
    • அதிகாலையில் சம்பவம்

    கிருஷ்ணகிரி பழையபேட்டை சேர்ந்தவர் அக்பர். இவரது மகன் அசிம் (வயது20) இவர்கள் கால்நடைகளை வாங்கி வியாபாரம் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலை அசிம் தனது மோட்டர் சைக்கிளில் காரிமங்கலத்தில் நடைபெறும் வர சந்தைக்கு கால்நடைகளை வாங்க வந்துள்ளார்.

    அப்போது மொரப்பூர் சாலையில் உள்ள செல்லம்பட்டி பகுதிக்கு அசிம் மோட்டர் சைக்கிளில் வந்தபோது அவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த அசிம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அளித்த புகாரின் பேரில் காரிமங்கலம் போலீசார் உடலை மீட்டு தருமபுரி அரசு மருத்துவ மனைக்கு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    • கடத்தூர் அருகே பா.ம.க கொடியேற்று விழா நடைபெற்றது.
    • 200க்கும் மேற்பட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.

    தருமபுரி மாவட்டம், கடத்தூர் மேற்கு ஒன்றியம் சில்லாரள்ளி கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் கொடியேற்று விழா நடைபெற்றது. கொடியை மாவட்ட செயலாளர் அரசாங்கம் ஏற்றிவைத்தார்.

    கிளை செயலாளர் முருகன் சதீஷ், கிளைத்தலைவர் சத்தியப்பன் வேடியப்பன் மூத்த முன்னோடிகள் முருகன், தங்கராஜ், குப்புசாமி, வெங்கட்ராமன், சிவராஜ், பரசுராம் ,நவீன், சதீஷ், சக்தி ,பாலாஜி, அரிகிருஷ்ணன், பெருமாள், அஜித் ,ராமன், பச்சையப்பன், சிவா, வெங்கடேஷ், ராஜ்குமார், தமிழ்மணி, ஏ.வி.இமயவர்மன் மாநில செயற்குழு உறுப்பினர் முத்துசாமி, உழவர் பேரிக்க மாவட்ட தலைவர் கலைமணி ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், பாட்டாளி தொழிற்சங்க மாவட்ட செயலாளர் முருகன், மாவட்ட துணை செயலாளர் கோவிந்தசாமி, இன்பம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாஸ்கர் ஒன்றிய இளைஞர் சங்க செயலாளர் மற்றும் 200- க்கு மேற்பட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.

    • பென்னாகரம் நீதிமன்ற வளாகத்தில் தூய்மைப் பணிகள் நடந்து வருகிறது.
    • மாணவர்கள் தூய்மைப் பணிகளில் ஈடுபட்டனர்

     தருமபுரி மாவட்டம் பென்னாகரம் நீதிமன்ற வளாகத்தில் மாநிலத் திட்ட இயக்குனர் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மற்றும் மத்திய கல்வி அமைச்ச கத்தின் வழிகாட்டுதலின்படி அனைத்து பள்ளிகளிலும் தூய்மை பாரத திட்டத்தின் அடிப்படையில் செப். 15-ந்தேதி முதல் அக்டோபர் 2 வரையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு தூய்மை பணிகள் என்எஸ்எஸ் முகாம் நடைபெற்றது.

    இதில் பென்னாகரம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற வளாகத்தில் மகாத்மா காந்தி பிறந்த தினமான நேற்று நீதிபதி நாகலட்சுமி(எ) விஜயராணி தலைமையில் தூய்மை பணி களை மேற்கொண்டனர்.

    இதில் குள்ளனூர், பி.அக்ரஹாரம், பண்டஹள்ளி , மாங்கரை, உள்ளிட்ட அரசு மேல்நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு தூய்மை பணிகளை மேற்கொண்டனர்.

    இந்த பணியில் மாண வர்களோடு இணைந்து நீதிமன்றப் பணியா ளர்கள், சிவக்குமார், சரவணன், வக்கீல்கள், என்எஸ்எஸ் திட்ட ஒருங்கி ணைப்பா ளர்கள் ஜி.அன்பரசு, முருகேசன், பிரபாகரன், யோ கேஷ்வரன், அசோக்கு மார் உள்ளிட்டோர் கலந்துகொண்டு தூய்மை பணி நடைபெற்றது.

    ×