என் மலர்tooltip icon

    தர்மபுரி

    • நீர்வரத்து சற்று சரிந்து 3 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.
    • சினிபால்ஸ், ஐந்தருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் சீராக பாய்ந்து செல்கிறது.

    காவிரி மேலாண்மை உத்தரவுப்படி கர்நாடகா அணைகளில் இருந்து3 ஆயிரம் கனஅடி அளவில் தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. இந்த தண்ணீர் தமிழக-கர்நாடாக மாநில எல்லையில் பிலிக்குண்டுலு வழியாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வந்து அடைகிறது.கடந்த சில நாட்களாக கர்நாடாக அணைகளில் திறந்து விடப்பட்ட திறந்து விடப்பட்ட தண்ணீரால் ஒகேனக்கல்லில் நீர்வரத்து நேற்று முன்தினம் 4 ஆயிரம் கனஅடியாக இருந்தது.

    கர்நாடகா அணைகளில் இருந்து நீர்திறப்பு குறைவானதாலும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததாலும், ஒகேனக்கல்லுக்கு இன்று நீர்வரத்து சற்று சரிந்து 3 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.நீர்வரத்து குறைந்த–போதிலும் ஒகேனக்கல்லில் உள்ள மெயின்அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் சீராக பாய்ந்து செல்கிறது.

    கர்நாடகா அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவை குறித்து தமிழக-கர்நாடகா எல்லையான பிலிக்குண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • பெரியாம்பட்டி சப்தகிரி பொறியல் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கியது
    • முன்னாள் எம்.பி.யுமான எம்.ஜி. சேகர் தலைமை தாங்கினார்.

    தருமபுரி பெரியாம்பட்டி–யில் உள்ள சப்தகிரி பொறி–யியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்பு கள் தொடக்க விழா கல்லூரி கூட்ட அரங்கில் நடைபெற்றது.

    விழாவுக்கு சப்தகிரி, பத்மாவதி, பீ.ஜீ. கல்வி நிறுவனங்களின் தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான எம்.ஜி. சேகர் தலைமை தாங்கினார். கல்லூரி துணைத் தலைவர் எம்.ஜி.எஸ். வெங்கடேஸ்வரன் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் டாக்டர் வெங்கடரத்தினம் வரவேற்று பேசினார்.

    கே.எஸ்.ஆர். கல்லூரி பேராசிரியர் தமிழரசன், தருமபுரி அகில இந்திய வானொலி நிலைய அலு வலர் லீலா வினோதன் என்கிற அதியமான் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி முதலாமாண்டு வகுப்புகளை தொடங்கி வைத்து பேசினர்.

    நிகழ்ச்சியில் கல்லூரி செயலாளர் சக்திவேல், பேராசிரியர் அருண், சேர்க்கை அலுவலர்கள் வேலு, முனுசாமி, கணக்கு அலுவலர் சின்னசாமி மற்றும் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    முடிவில் கல்லூரி செயலாளர் ராஜா நன்றி கூறினார்.

    • காரிமங்கலத்தில் பேரூராட்சியில் தூய்மைப் பணிகள் துவங்கியது.
    • பேரூராட்சி தலைவர் பி.சி.ஆர். மனோகரன் தலைமை வகித்தார்.

    தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் பேரூராட்சியில் தூய்மை தினத்தை முன்னிட்டு 6-வது வார்டில் ஒருங்கிணைந்த தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.

    பேரூராட்சி தலைவர் பி.சி.ஆர். மனோகரன் தலைமை வகித்து தூய்மை பணியை தொடங்கி வைத்தனர். தூய்மை பணியாளர்கள் மற்றும் அரிமா சங்கத்தினர் இணைந்து குப்பைகளை அகற்றி தூய்மைப்படுத்தி பொதுமக்கள் தங்களது வீட்டு குப்பைகளை பொது இடத்தில் போடாமல் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக பிரித்து வழங்கு வதுடன் தங்களது பகுதிகளை குப்பை இல்லாத பகுதிகளாக மாற்ற பேரூராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப் பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் செயல் அலுவலர் ஆயிஷா, துணை தலைவர் சீனிவாசன், வார்டு கவுன்சிலர்கள் ரமேஷ், சதீஷ்குமார், மாதப்பன், சத்திரமேஷ், ராதாராஜா, கீதமுத்து செல்வம், பிரியா சங்கர், சிவக்குமார், செவத்தா, நாகம்மாள் மற்றும் பொது மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஏரியூர் அருகே சாலை வசதி வேண்டி வட்டாச்சியர் அலுவலகத்தை பொது மக்கள் முற்றுகையிட்டனர்.
    • காமராஜர் ஆட்சி காலத்தில் இந்தப் பகுதிக்கு சாலை அமைக்கப்பட்டது.

    தருமபுரி மாவட்டம், ஏரியூர் அருகே உள்ள அஜ்ஜன அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட, பொன்னேரி காடு பகுதியில் 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் காமராஜர் ஆட்சி காலத்தில் இந்தப் பகுதிக்கு சாலை அமைக்கப்பட்டது.

    அதன் பின்பு எந்த அரசும் முன்னெடுக்காததால், தற்போது மண் பாதையாகவும், குண்டும் குழியுமான சாலையாகவும் மாறி உள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது இப்பகுதி மக்கள், சாலை வசதி வேண்டி தேர்தலை புறக்கணித்து வீடுகளின் மேல் கருப்பு கொடியை ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட அரசு அதிகாரிகள், தேர்தல் முடிந்தவுடன் சாலை வசதி செய்து தரப்படும் என வாக்குறுதி அளித்து இருந்தனர்.

    ஆனால் தற்போது வரை சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட எந்த வசதியும் செய்து தரப்படாததால் இப்பகுதியைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், ஏரியூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டு வட்டார வளர்ச்சி அலுவ லரிடம் மனு அளித்தனர்.

    விரைவில் சாலை வசதி மற்றும் குடிநீர் வசதி செய்து தரவில்லை எனில், ஊராட்சி மன்ற அலுவலகத்தில் குடிபுகும் போராட்டமும், சாலை மறியல் போராட்டமும் நடத்துவோம் என தெரிவித்தனர்.

    • அரூரில் மனைவி நல வேட்பு விழா நடைபெற்றது
    • மனைவிகளுக்கு மாலை அணிவித்து கணவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    தருமபுரி மாவட்டம் அரூர் மனவளக்கலை தவ மையம் சார்பில் வாழ்க்கைப் பாதையில் இன்ப, துன்பங்களை சரி பாதியாக ஏற்றுக் கொண்டு கணவருக்காகவும், தம் குடும்பத்திற்காகவும் பல தியாகங்களை செய்து வாழ்ந்து வரும் பெண்களை போற்றும் வகையிலும், பெண்களின் பெருமைகளையும், மாண்புகளையும் உலகிற்கு உணர்த்தும் வகையில் மனைவி நல வேட்பு விழா அரூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    விழாவுக்கு ஓசூர் மண்டல தலைவர் ராஜி தலைமை தாங்கினார். செயலாளர் தங்கமணி வரவேற்று பேசினார். தலைவர் பார்த்திபன் முன்னிலை வகித்தார். விழாவில் உலக சமுதாய சேவா சங்கத் துணைத் தலைவர் உழவன் தங்கவேல், காளியம்மாள் தங்கவேல் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தனர். ஆழியாறு அறிவு திருக்கோயில் அறங்காவலர் அரங்க துரைராஜ் பெண்களின் பெருமை குறித்து விளக்கி பேசினார்.

    நிகழ்ச்சியில் 450-க்கும் மேற்பட்ட தம்பதியினர் கலந்து கொண்டனர். அப்போது பெண்களை பெருமைப்படுத்தும் வகையில் மனைவிகளுக்கு கணவன்மார்கள் மாலை அணிவித்து ரோஜா பூ மற்றும் ஆப்பிள் உள்ளிட்ட பழங்களை கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து மனைவிகளிடம் கணவன்மார்கள் அன்பை பரிமாறிக் கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் பாரதிபுரம் பேராசிரியர் பழனிசாமி மற்றும் மனவளக் கலை பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் சிற்றரசு நன்றி கூறினார்.

    • காரிமங்கலம் அகரம் சாலையில் நிறுத்தப்படிருந்த காரில் ரூ. 3 லட்சம் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
    • 500 கிலோ சிக்கியது

    தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வழியாக கர்நாடகா, ஆந்திர உள்ளிட்ட மாநிலங்க ளிலிருந்து சேலம், கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு தடை செய்யபட்ட குட்கா பொருட்களை கடத்தி செல்வது வாடிக்கையாக இருந்து வருகிறது. அப்படி கடத்தலில் ஈடுபடும் நபர்களை போலீசார் அவ்வப்போது கண்டறிந்து பிடிக்கும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் அகரம் பிரிவு சாலையில் காரிமங்கலம் சப் இன்ஸ்பெக்டர் மதியழகன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சாலையோரம் நீண்ட நேரம் சொகுசு கார் நின்று கொண்டிருப்பதாக காரிமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சொகுசு கார் கேட்பாரற்று இருப்பதை கண்டு சந்தேகமடைந்து காரை திறந்து சோதனை மேற்கொண்டனர். அதில் சுமார் ரூ.3 லட்சம் மதிப்பிலான 500 கிலோ ஹான்ஸ் , குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் இருந்ததை கண்டறிந்தனர்.

    உடனடியாக சொகுசு காருடன் கடத்தப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து குட்கா பொருட்களை கடத்தி வந்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் மக்காச்சோள பயிர்களில் புடைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • மருந்து கடைகளில் வாங்கி அடிப்பதில் பலன் இல்லை.

    தருமபுரி மாவட்டம் கடத்தூர் ஒன்றியத்தில் இராமியண அள்ளி, சில்லார அள்ளி,, கடத்தூர்,தாளநத்தம், அய்யம்பட்டி, சிந்தல் பாடி கேத்தி ரெட்டிப்பட்டி அதனை சுற்றுவட்டார பகுதியில் ஏராளமான விவசாயிகள் மக்காச் சோள பயிர் சாகுபடி செய்துள்ளனர். தற்பொழுது பருவ மழை பெய்த தால் பயிர் நன்கு வளர்ந் துள்ள நிலையில், அதில் படைப்புழு தாக்குதல் அதிகரித்துள்ளது.

    மக்காச்சோள செடி களில் உள்ள குருத்துகளை துளைத்து அதிகப்படியான தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. இது குறித்து விவசாயி வேலுசாமி கூறுகையில்;- கடந்த மாதம் பயிரிட்ட நிலையில் செடிகள் நன்கு வளர்ந்தது. ஆனால் புழு தாக்குதலால் பயிர்கள் பாதிப்பு அடைந்துள்ளது. இதனால் குருத்து காய்ப்பது தள்ளி போயுள்ளது. தண்டின் வளர்ச்சியும் குறைந்துள்ளது.

    மருந்து கடைகளில் பாதிப்பு குறித்து கேட்டால் மருந்து கடைக்காரர் ஏதோவொரு மருந்து கொடுக்கிறார்கள். அதை வாங்கி வந்து அடித்தால் புழுக்கள் இறப்பதில்லை . இது குறித்து வேளாண்மை துறை அதிகாரிகளை கேட்க சென்றால் அவர்கள் அலட்சியமாக பதில் கூறு கின்றனர்.

    இப்பகுதி விவசாயி களுக்கு இது குறித்து விழிப்பு ணர்வு ஏற்படுத்தவும் தரமான மருந்தை வாங்க விவசாயிகளுக்கு தக்க ஆலோசனைகள் வழங்க வேண்டும் என்றார்.

    • அ.தி.முக. ஆட்சியில் வழங்கிய பட்டா செல்லாது கன்று கூறியதால் பெண்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • தாசில்தார் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சிக்கு ட்பட்ட 18 வார்டுகளில் 20 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். பெரும்பாலனவர்கள் கூலி தொழில் செய்து வருகின்றனர். இவர்கள் சொந்த வீடு இன்றி வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.

    இவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று கடந்த அ.தி.மு.க ஆட்சியில் சுமார் 1500 ஏழைகளுக்கு பாலக்கோடு அருகே கூசுக்கல் கிராமத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. ஆட்சி மாறியதால் வழங்கிய பட்டாக்களுக்கு இடத்தை ஒதுக்காமல் பொது மக்களை அதிகாரிகள் அலைகழித்து வந்தனர்.

    இந்நி லையில் பாலக்கோடு தாசில்தார் அலுவலகம் சென்ற பெண்கள் சிலர் குடி இருக்க இடமில்லை, வீட்டு வாடகை கட்ட முடியவில்லை. எனவே பட்டா இடத்தை அளந்து வழங்குமாறு கேட்டனர். ஆனால் அதிகாரிகள் கடந்த ஆட்சியில் வழங்கிய பட்டா செல்லாது என தெரிவித்தனர். இத்தகவல் காட்டு தீயாக பரவியதால் பெண்கள் தாசில்தார் அலுவலகம் முன்பு கூட்டம் கூட்டமாக குவிய தொடங்கினர். 100-க்கும் மேற்பட்ட பெண்கள் தாசில்தார் அலுவலகத்தில் குவிந்து முற்றுகையில் ஈடுபட்டு தங்களுக்குரிய வீட்டு மனைகளை அளந்து இடத்தை கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

    இதையறிந்த தாசில்தார் ராஜா அடுத்த மாதம் பட்டா வழங்கிய இடத்தை அளந்து இடம் ஒதுக்கீடு செய்து தர ஏற்பாடு செய்வதாக உறுதி கூறினார். அதனை தொடர்ந்து பெண்கள் திரும்பி சென்றனர். கடந்த அ.தி.மு.க ஆட்சியில் வழங்கிய இலவச வீட்டுமனை பட்டா செல்லாது என்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் மக்கள் குறைத்தீர்க்கும் முகாம் நடைபெற்றது.
    • 98 மனுக்களுக்கு உடனடித் தீர்வு காணப்பட்டது.

    தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் வாரந்தோ றும் புதன்கிழமை எஸ்.பி அலுவல கத்தில் பொது மக்கள் குறைத்தீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி  பொது மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடந்தது.

    முகாமிற்கு மாவட்ட எஸ்பி ஸ்டீபன் ஜேசுப் பாதம் தலைமை வகித்தார். ஏடிஎஸ்பி இளங்கோவன் முன்னிலை வகித்தார். முகாமில் மாவட்டம் முழுவதும் 31 காவல் நிலையங்களில் இருந்து தனித்தனியாக புகார் மனுதாரர்கள் நேரில் வரவழைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

    நிலத்தகராறு, சொத்து தகராறு, அடிதடி, பொது வழி பிரச்சினை, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 112 புகார் மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொண்டு 98 மனுக்கள் மீது விசாரணை முடித்து வைக்கப்பட்டது. 14 மனுக்கள் நிலுவையில் உள்ளது.

    முகாமில் டிஎஸ்பி ஜெயபால், காவல் ஆய்வாளர்கள் சுரேஷ், அன்பழகன், சரவணன், எஸ்ஐக்கள் கண்ணம்மாள், மாதையன், பாரூக் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

    • தருமபுரியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்
    • ஆண்டுக்கு 200 நாள் வேலை வழங்கி ரூ600 கூலி வழங்க வேண்டும்.

    தருமபுரி பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு அனைத்து தொழிற் சங்கத்தின் சார்பில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    விவசாயிகள் மீது கார்ஏற்றி கொலை செய்த ஒன்றிய பி.ஜே.பி அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு எதிராக கொண்டுவந்த சட்டங்களை முற்றிலுமாக நீக்க வேண்டும். விவசாயிக ளின் விலை பொருட்களுக்கு கட்டுப்படியான விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ஆண்டுக்கு 200 நாள் வேலை வழங்கி நாள் ஒன்றுக்கு ரூ.600 கூலி வழங்கவேண்டும். படித்த இளைஞர்களுக்கு தகுதிக்கேற்ப வேலை வழங்கவேண்டும். தொழிலாளர்களுகு எதிரான நான்கு சட்ட தொகுப்புகளை நீக்க வேண்டும்.

    பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை ரத்து செய்ய வேண்டும்.விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தி ரேஷன் முறையை பலப்படுத்தவேண்டும். முறைசாரா தொழிலாளர்க ளுக்கு சமூக பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு மாநில செயலா ளரும் ஒருங்கிணைப்பாள ருமான சி.நாகராசன் தலைமை வகித்தார். எஸ்.கே.எம் ஒருங்கி ணைப்பாளர் எஸ்.அர்சுணன், ஏ.ஐ.டி.யு.சி மாவட்ட செயலாளர் மணி, சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் ஜீவா, எல்பிஎப் மாவட்ட செயலாளர் அன்புமணி, மாவட்ட செயலாளர் சன்முகராஜா , ஐஎன்டியுசி மாவட்ட தலைவர் சிவலிங்கம், மாவட்ட செயலாளர் சண்முகம், எஸ்எம்எஸ், பேரவை செயலாளர் முருகானந்தம், மாவட்ட செயலாளர் அர்சுணன், ஏஐசிசிடியு மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், மாவட்ட செயலாளர் முருகன் உள்ளிட்டோர் பேசினர்.

    • தருமபுரி தென் போஸ்கோ கல்லூரி மாணவர்கள் கூடைப்பந்து போட்டியில் சாதனை படைத்தனர்.
    • வெற்றி மாணவர்களை பேராசிரியர்கள் பாராட்டினர்

    பெரியார் பல்கலைக் கழகக் கல்லூரிகளுக்கு இடையேயான கூடைப் பந்துப் போட்டிகள் ராசிபுரம் மெட்டாலா, லயோலா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், கடந்த 25, 26-ந் தேதிகளில் 2 நாட்கள் நடைபெற்றன. சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த 12 அணிகள் இப்போட்டி களில் பங்குபெற்றன.

    இதில் 3-ம் இடத்திற்கான போட்டியில், தருமபுரி தொன் போஸ்கோ கல்லூரி அணியுடன், ராசிபுரம் மெட்டாலா, லயோலா கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணியினர் விளை யாடினர். இப்போட்டியில் 51-46 என்ற புள்ளிக் கணக்கில் தருமபுரி, தொன் போஸ்கோ கல்லூரி அணி 3-ம் இடம் பிடித்து வெற்றிப்பெற்றது.

    வெற்றி பெற்ற மாண வர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர் பேராசிரியர் சேவியர் டெனிஸ் ஆகியோரை் கல்லூரிச் செயலர் ராபர்ட் ரமேஷ் பாபு, முதல்வர் ஆஞ்சலோ ஜோசப், துணை முதல்வர் பாரதி பெர்னாட்ஷா, பொருளாளர் அந்தோணி பாப்புராஜ், மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.

    • தருமபுரி மாவட்ட பிறந்த நாளையொட்டி புதிய பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது.
    • மாவட்டத்தின் சிறப்பு குறித்து பாடல்கள் எழுதப்பட்டுள்ளது.

    தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் உள்ள ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் அலுவலக அரங்கத்தில் கடந்த 1-ந் தேதி தருமபுரி மாவட்ட எழுத்தாளர்கள் எழுதிய புதிய 3 ஆல்பம் பாடல் வெளியீடு விழா மற்றும் பாடல்கள் அறிமுக விழா நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் எழுத்தாளர் சுதாகர், புலவர் ராமசாமி, அரிநாத், குமார், அரிநாத் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். எழுத்தாளர் சம்பத் தலைமை தாங்கினார். புலவர் ராமசாமி முன்னிலை வகித்தார். தகடூர் குணசேகரன், ஆசிரியர் பயிற்றுநர் எழுதிய பாடல் வரிகள், ஒருங்கிணைப்பில் தருமபுரி சிறப்பு ஆல்பம் புதிய வீடியோ பாடல் வரிகளுடன் வெளியீடு செய்யப்பட்டது.

    இந்த பாடல்களில் தகடூர் எனும் தருமபுரி குறித்து பல உண்மை தகவல்களை பதிவு செய்து தருமபுரியின் பெரு மையை புதிய தலைமுறை யினர், பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் இளை–ஞர்கள் அறிந்து கொள்ளும் வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து தமிழ் மொழியின் சிறப்பு, தமிழ் நாட்டின் வரலாறு என பல்வேறு சிறப்புகளை குறித்து குணசேகரன் எழுதிய 2-வது பாடல் வெளியிடப்பட்டது.

    விழாவில் அரங்க முருகேசன் எழுதிய தமிழ் மொழியின் சிறப்பு மற்றும் தமிழ் நாட்டின் சிறப்பு கூறும் புதிய ஆல்பம் பாடல் வெளியீடும் நடைப்பெற்றது. இப்பாடல் சங்கத்தமிழில் உள்ள சிறப்புகளை மற்றும் தமிழ் மன்னர்களின் பெருமைகளை கூறுகிறது.

    இப்பாடல்களை திரைப்பட பின்னணி பாடகர்கள் மகாலிங்கம், ஜெய், சபிதா ஆகியோர் பாடியுள்ளனர். இப்பாடலுக்கு அருள்மணி இசையமைத்துள்ளார். இப்பாடல்களை தேவிகுணா தயாரித்து வழங்கியுள்ளார்.

    பாடல்களின் இசைத்தட்–டுக்களை அரிமா சங்க நிர்வாகிகள் இனாயத்துல்லா, வஜ்ஜீரவேல், எழுத்தாளர் புனித வள்ளி, திரைப்பட நடிகர் கமலேஷ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை தமிழ் படைப்பாளர் பேரவை மற்றும் மாவட்ட எழுத்தா–ளர்கள் செய்திருந்தனர்.

    ×