என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 3 ஆயிரம் கனஅடியாக சரிவு
- நீர்வரத்து சற்று சரிந்து 3 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.
- சினிபால்ஸ், ஐந்தருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் சீராக பாய்ந்து செல்கிறது.
காவிரி மேலாண்மை உத்தரவுப்படி கர்நாடகா அணைகளில் இருந்து3 ஆயிரம் கனஅடி அளவில் தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. இந்த தண்ணீர் தமிழக-கர்நாடாக மாநில எல்லையில் பிலிக்குண்டுலு வழியாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வந்து அடைகிறது.கடந்த சில நாட்களாக கர்நாடாக அணைகளில் திறந்து விடப்பட்ட திறந்து விடப்பட்ட தண்ணீரால் ஒகேனக்கல்லில் நீர்வரத்து நேற்று முன்தினம் 4 ஆயிரம் கனஅடியாக இருந்தது.
கர்நாடகா அணைகளில் இருந்து நீர்திறப்பு குறைவானதாலும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததாலும், ஒகேனக்கல்லுக்கு இன்று நீர்வரத்து சற்று சரிந்து 3 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.நீர்வரத்து குறைந்த–போதிலும் ஒகேனக்கல்லில் உள்ள மெயின்அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் சீராக பாய்ந்து செல்கிறது.
கர்நாடகா அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவை குறித்து தமிழக-கர்நாடகா எல்லையான பிலிக்குண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.






