என் மலர்
உள்ளூர் செய்திகள்

தொழிற்சங்கத்தினர் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்
- தருமபுரியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்
- ஆண்டுக்கு 200 நாள் வேலை வழங்கி ரூ600 கூலி வழங்க வேண்டும்.
தருமபுரி பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு அனைத்து தொழிற் சங்கத்தின் சார்பில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விவசாயிகள் மீது கார்ஏற்றி கொலை செய்த ஒன்றிய பி.ஜே.பி அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு எதிராக கொண்டுவந்த சட்டங்களை முற்றிலுமாக நீக்க வேண்டும். விவசாயிக ளின் விலை பொருட்களுக்கு கட்டுப்படியான விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ஆண்டுக்கு 200 நாள் வேலை வழங்கி நாள் ஒன்றுக்கு ரூ.600 கூலி வழங்கவேண்டும். படித்த இளைஞர்களுக்கு தகுதிக்கேற்ப வேலை வழங்கவேண்டும். தொழிலாளர்களுகு எதிரான நான்கு சட்ட தொகுப்புகளை நீக்க வேண்டும்.
பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை ரத்து செய்ய வேண்டும்.விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தி ரேஷன் முறையை பலப்படுத்தவேண்டும். முறைசாரா தொழிலாளர்க ளுக்கு சமூக பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு மாநில செயலா ளரும் ஒருங்கிணைப்பாள ருமான சி.நாகராசன் தலைமை வகித்தார். எஸ்.கே.எம் ஒருங்கி ணைப்பாளர் எஸ்.அர்சுணன், ஏ.ஐ.டி.யு.சி மாவட்ட செயலாளர் மணி, சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் ஜீவா, எல்பிஎப் மாவட்ட செயலாளர் அன்புமணி, மாவட்ட செயலாளர் சன்முகராஜா , ஐஎன்டியுசி மாவட்ட தலைவர் சிவலிங்கம், மாவட்ட செயலாளர் சண்முகம், எஸ்எம்எஸ், பேரவை செயலாளர் முருகானந்தம், மாவட்ட செயலாளர் அர்சுணன், ஏஐசிசிடியு மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், மாவட்ட செயலாளர் முருகன் உள்ளிட்டோர் பேசினர்.






