என் மலர்
உள்ளூர் செய்திகள்

மக்காச்சோள பயிர்களில் படைப்புழு தாக்குதல்: வேளாண்மைத்துறையினர் ஆலோசனை வழங்க கோரிக்கை
- பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் மக்காச்சோள பயிர்களில் புடைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மருந்து கடைகளில் வாங்கி அடிப்பதில் பலன் இல்லை.
தருமபுரி மாவட்டம் கடத்தூர் ஒன்றியத்தில் இராமியண அள்ளி, சில்லார அள்ளி,, கடத்தூர்,தாளநத்தம், அய்யம்பட்டி, சிந்தல் பாடி கேத்தி ரெட்டிப்பட்டி அதனை சுற்றுவட்டார பகுதியில் ஏராளமான விவசாயிகள் மக்காச் சோள பயிர் சாகுபடி செய்துள்ளனர். தற்பொழுது பருவ மழை பெய்த தால் பயிர் நன்கு வளர்ந் துள்ள நிலையில், அதில் படைப்புழு தாக்குதல் அதிகரித்துள்ளது.
மக்காச்சோள செடி களில் உள்ள குருத்துகளை துளைத்து அதிகப்படியான தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. இது குறித்து விவசாயி வேலுசாமி கூறுகையில்;- கடந்த மாதம் பயிரிட்ட நிலையில் செடிகள் நன்கு வளர்ந்தது. ஆனால் புழு தாக்குதலால் பயிர்கள் பாதிப்பு அடைந்துள்ளது. இதனால் குருத்து காய்ப்பது தள்ளி போயுள்ளது. தண்டின் வளர்ச்சியும் குறைந்துள்ளது.
மருந்து கடைகளில் பாதிப்பு குறித்து கேட்டால் மருந்து கடைக்காரர் ஏதோவொரு மருந்து கொடுக்கிறார்கள். அதை வாங்கி வந்து அடித்தால் புழுக்கள் இறப்பதில்லை . இது குறித்து வேளாண்மை துறை அதிகாரிகளை கேட்க சென்றால் அவர்கள் அலட்சியமாக பதில் கூறு கின்றனர்.
இப்பகுதி விவசாயி களுக்கு இது குறித்து விழிப்பு ணர்வு ஏற்படுத்தவும் தரமான மருந்தை வாங்க விவசாயிகளுக்கு தக்க ஆலோசனைகள் வழங்க வேண்டும் என்றார்.






