என் மலர்
உள்ளூர் செய்திகள்

பென்னாகரம் நீதிமன்ற வளாகத்தில் தூய்மைப் பணி
- பென்னாகரம் நீதிமன்ற வளாகத்தில் தூய்மைப் பணிகள் நடந்து வருகிறது.
- மாணவர்கள் தூய்மைப் பணிகளில் ஈடுபட்டனர்
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் நீதிமன்ற வளாகத்தில் மாநிலத் திட்ட இயக்குனர் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மற்றும் மத்திய கல்வி அமைச்ச கத்தின் வழிகாட்டுதலின்படி அனைத்து பள்ளிகளிலும் தூய்மை பாரத திட்டத்தின் அடிப்படையில் செப். 15-ந்தேதி முதல் அக்டோபர் 2 வரையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு தூய்மை பணிகள் என்எஸ்எஸ் முகாம் நடைபெற்றது.
இதில் பென்னாகரம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற வளாகத்தில் மகாத்மா காந்தி பிறந்த தினமான நேற்று நீதிபதி நாகலட்சுமி(எ) விஜயராணி தலைமையில் தூய்மை பணி களை மேற்கொண்டனர்.
இதில் குள்ளனூர், பி.அக்ரஹாரம், பண்டஹள்ளி , மாங்கரை, உள்ளிட்ட அரசு மேல்நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு தூய்மை பணிகளை மேற்கொண்டனர்.
இந்த பணியில் மாண வர்களோடு இணைந்து நீதிமன்றப் பணியா ளர்கள், சிவக்குமார், சரவணன், வக்கீல்கள், என்எஸ்எஸ் திட்ட ஒருங்கி ணைப்பா ளர்கள் ஜி.அன்பரசு, முருகேசன், பிரபாகரன், யோ கேஷ்வரன், அசோக்கு மார் உள்ளிட்டோர் கலந்துகொண்டு தூய்மை பணி நடைபெற்றது.






