search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மீண்டும் படுவீழ்ச்சியில் தக்காளி: கிலோ ரூ.8-க்கு விற்பனை
    X

    மீண்டும் படுவீழ்ச்சியில் தக்காளி: கிலோ ரூ.8-க்கு விற்பனை

    • விலை வீழ்ச்சி தக்காளி விவசாயிகளுக்கு பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்துகிறது.
    • விலை வீழ்ச்சி காலங்களில், தக்காளி விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு அரசு தீர்வு காண வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

    தருமபுரி:

    தமிழகத்தில் கடந்த பல மாதங்களாகவே ஏற்ற, இறக்கங்கள் நிறைந்த விலையில் தக்காளி விற்பனை ஆகி வந்துள்ளது. இருப்பினும், சராசரியாக கிலோ ரூ.15 என்ற நிலைக்கு குறையாத அளவில் விவசாயிகளுக்கு விலை கிடைத்து வந்தது.

    இந்நிலையில், கடந்த 2 வாரங்களாக தக்காளி விலையில் வேகமான சரிவு ஏற்பட்டது. கடந்த வாரத்தில் கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை தக்காளியின் தரத்துக்கு ஏற்ப விலை கிடைத்து வந்தது.

    ஆனால், நடப்பு வாரத்தில் தக்காளியின் விலை சந்தையில் கிலோ ரூ.6 முதல் ரூ.8 வரை என்ற நிலைக்கு கீழே சரிந்து விட்டது.

    விவசாயிகள் இடத்தில் தக்காளி கிலோ ரூ.3 முதல் ரூ.5 வரை வியாபாரிகள் கொள்முதல் செய்வதால் தக்காளி பயிரிட்டுள்ள தருமபுரி மாவட்ட விவசாயிகள் கடும் வேதனைக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

    தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் விளையும் தக்காளிப் பழங்கள் சென்னை, மதுரை, திண்டுக்கல், கும்பகோணம் உள்ளிட்ட தமிழக பகுதிகளுக்கும், பெங்களூருவுக்கும் விற்பனைக்காக செல்கிறது.

    விலை வீழ்ச்சி தக்காளி விவசாயிகளுக்கு பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்துகிறது. இருப்பினும், தெரிந்த ஒரே தொழில் விவசாயம் தான் என்பதால் விவசாயிகள் நஷ்டங்களையும் சகித்துக் கொண்டு விலை உயரும் என்ற நம்பிக்கையில் மீண்டும் சாகுபடிக்கு செல்கின்றனர்.

    தக்காளிக்கு மட்டுமன்றி இதர சில காய்கறி பயிர்களிலும் இதேபோன்ற விலைவீழ்ச்சி சிரமங்களை விவசாயிகள் அவ்வப்போது எதிர்கொள்கின்றனர்.

    இன்று உழவர் சந்தையில் தக்காளி கிலோ ரூ.8 க்கு விற்பனை செய்யப்பட்டது.

    விலை வீழ்ச்சி காலங்களில், தக்காளி விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு அரசு தீர்வு காண வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

    Next Story
    ×