என் மலர்
உள்ளூர் செய்திகள்

நல்லம்பள்ளி அருகே பாலஜங்கமனஅள்ளியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் சாந்தி கலந்து கொண்டு புகார் மனுக்களை பெற்று கொண்டபோது எடுத்த படம்.
பாலஜங்கமனஅள்ளி அரசு பள்ளியில் 10 வருடமாக கழிவறை இல்லை: கலெக்டரிடம் பள்ளி தலைமையாசிரியர் புகார்
- தருமபுரி அருகேயுள்ள அரசுப்பள்ளியில் 10 வருடமாக மாணவர்களுக்கு கழிவறை இல்லை என்று தலைமையாசிரியர் புகார் தெரிவித்தார்.
- அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே பாலஜங்கமனஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட இருசன்கொட்டாய் பகுதியில் காந்தி ஜெயந்தி சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தசாமி தலைமை தாங்கினார்.
இந்த கூட்டத்தில் சிறப்பு பார்வையாளராக தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி கலந்து கொண்டு கூட்டத்தின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்து விளக்கி பேசினார். அப்பகுதியில் செயல்பட்டு வரும் உயர்நிலைப் பள்ளியில் கடந்த 10 ஆண்டுகளாக மாணவர்களுக்கு கழிவறை இல்லாமல் மாணவர்கள் அவதிப்படுவதாகவும் இதனால் சேர்க்கை விகிதமும் குறைந்து விட்டதாக தலைமை ஆசிரியர் தெரிவித்தார்.
மேலும் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் உள்ளிட்ட வற்றில் ஆசிரியர்கள் மாணவர்கள் சிறப்புடன் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும் பள்ளியில் பயின்ற மாணவர்கள் 500 மதிப்பெண்களுக்கு 490 மதிப்பெண் பெற்றுள்ளனர் என தெரிவித்தார். ஆனால் மாணவர்க ளுக்கான அடிப்படை வசதிகள் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வருவதாகவும் கூறினார்.
மாவட்ட கலெக்டர் நபார்டு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டால் கட்டிடம் கட்ட அனுமதி தருகிறோம் என்று தெரிவித்தார். இதில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்க ளுக்கு தன்னு டைய சொந்த நிதியில் இருந்து தலா ரூ. 10 ஆயிரம் வீதம் பரிசுத் தொகையை ஊராட்சி மன்ற தலைவர், மாவட்ட கலெக்டர் மூலம் வழங்கினார்.
இந்த கிராம சபை கூட்டத்தில் தருமபுரி எம்எல்ஏ வெங்க டேஸ்வரன், தாசில்தார் ஆறுமுகம், பி.டி.ஓ ஆறுமுகம், மற்றும் துறை சார்ந்த அலுவலர் பெருமக்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், ஊராட்சி பொதுமக்கள், மகளிர் சுயஉதவிக்குழு பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






