search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரூர் அருகே இடிந்து விழும் நிலையில் ஊராட்சி மன்ற கட்டிடம்
    X

    அரூர் அருகே இடிந்து விழும் நிலையில் ஊராட்சி மன்ற கட்டிடம்

    • அரூர் அருகே இடிந்து விழும் நிலையில் உள்ள ஊராட்சி மன்ற கட்டிடத்தை சீரமைக்க கோரிக்கை.
    • 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.

    தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ளது அச்சல்வாடி ஊராட்சி. இதில் 9 வார்டுகள் உள்ள ஊராட்சியில் 5000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அச்சல்வாடி ஊராட்சியில் கல்லடிப்பட்டி குடுமியாம்பட்டி ஓட்டுமில், ஒடசல்பட்டி, பெரு மாள்கோவில், கதவனேரி ஆகிய குக்கிரா மங்களை உள்ளடக்கியது.

    அச்சல்வாடி ஊராட்சி மன்ற கட்டிடம் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. தற்போது அந்த கட்டிடம் ஆங்காங்கே பெயர்ந்து விழும் நிலையிலும் மழை பெய்தால் தண்ணீர் உள்ளே புகுந்து ஆவணங்கள் மழை நீரில் நனைந்து அழியும் நிலையில் உள்ளதாக பொதுமக்கள் குற்றச் சாட்டை முன்வைக்கின்றனர்.

    இந்த ஊராட்சிக்கு அடிப்படை தேவைகளான நூலகம் மற்றும் சமுதாயக் கூடம், கிராம நிர்வாக அலுவலர் கட்டிடம் ஆகியவை அமைத்து தர வேண்டுமென பலமுறை தருமபுரி மாவட்ட நிர்வாகத்திறகு தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என குற்றச்சாட்டை முன்வைக் கின்றனர்.

    இன்று நடைபெற உள்ள கிராம சபா கூட்டத்தில் இது குறித்து பொதுமக்கள் கேள்விகளை எழுப்பு வார்கள் என்று தெரிகிறது. இடிந்து விழும் நிலையில் உள்ள ஊராட்சி கட்டிடத்தை அகற்றி புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

    Next Story
    ×