என் மலர்
உள்ளூர் செய்திகள்

மணியாம்பாடி வெங்கட்ரமண சாமி கோவிலில் சாமி தரிசனம் செய்ய கட்டாய பணம் வசூல்
- மணியாம்பாடி வெங்கட்ரமண சாமி கோவிலில் சாமி தரிசனம் செய்ய கட்டணம் வசூலிப்பதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
- நபருக்கு ரூ. 50 வசூல் என புகார்-
தருமபுரி மாவட்டம் கடத்தூர் அருகே உள்ள மணியம்பாடியில் வெங்கட்டரமண சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் சனிக்கிழமைகள் தோறும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றது.
மூகூர்த்த நாட்களில் 100- க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்று வருகின்றது. விஷேச நாட்களில் சிறப்பு பூஜைகளும் புரட்டாசி சனிக்கிழமைகளில் மாவட்டத்தில் உள்ளவர்கள் மட்டும் இன்றி வெளியூர், வெளி மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஊர்களில் இருந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து விரதம் முடித்து தரிசனம் செய்து வருவது பல ஆண்டாத தொடர்ந்து வருகின்றது.
இந்த நிலையில் இந்த ஆண்டு புரட்டாசி சனிக்கிழமைகள் 3 மட்டும் உள்ளதால் நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. நடுசனி விரதம் முடிக்க பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். இங்கு பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர். இந்த நிலையில் எந்த நாலும் இல்லாத வகையில் சிறப்பு தரிசனம் என்ற வகையில் ரூ.50 என கட்டாய வசூலில் சிலர் ஈடுபட்டனர். இதனால் குடும்பத்துடன் சாமி கூம்பிட வந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
பணம் இல்லாத ஏராளமானோர் பல மணிநேரம் காத்துருந்து தரிசனம் செய்தனர். அறநிலையதுறை அதிகாரிகளிடம் தெரிவிக்க சென்றால் அதிகாரிகள் இல்லாத நிலையில் பெரும் அதிர்ச்சியடைந்தனர். மன அமைதிக்காகவும், விரதம் முடிக்கவும் குடும்பத்தாருடன் கடவுளை தரிசனம் செய்ய வருபவர்களிடம் கட்டாய வசூலில் ஈடுபட்டு வரும் சிலருக்கு அறநிலையத்துறை அதிகாரிகள் துணையாக உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.






