கவுன்சிலர்கள் ஆலோசனைக் கூட்டம்

ஒன்றிய குழு சேர்மன் பாஞ்சாலை கோபால் தலைமையில் நடைபெற்றது. வரவு செலவு கணக்குகளை அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.
கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.
கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.
Published on

பாலக்கோடு,

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் ஆலோசனைக் கூட்டம் ஒன்றிய குழு சேர்மன் பாஞ்சாலை கோபால் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்திற்க்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுருளிநாதன், சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற வரவு செலவு கணக்குகளை அதிகாரிகள் எடுத்து ரைத்தனர்.

மேலும் மருத்துவத் துறை சார்பில் மழைக்காலங்களில் பரவும் வைரஸ் நோய்கள், டெங்கு, மலேரியா மற்றும் கொசு ஒழிப்பு மற்றும் அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஒவ்வொரு ஊராட்சி பகுதிகளிலும் பனை விதைகள், மரக்கன்றுகளை நடுதல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர்கள் முத்துசாமி, ஜோதி, சரண்யா, உள்ளிட்ட கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com