என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரி தொன்போஸ்கோ கல்லூரியில் இலக்கியத் திறனாய்வு குறித்த கருத்தரங்கு
    X

    தருமபுரி தொன்போஸ்கோ கல்லூரியில் இலக்கியத் திறனாய்வு குறித்த கருத்தரங்கு

    • தருமபுரி தொன்போஸ்கோ கல்லூரியில் இலக்கியத் திறனாய்வு கருத்தரங்கு நடைபெற்றது.
    • ஆய்வு முறைகள் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது.

    தருமபுரி, தொன் போஸ்கோ கல்லூரியில், ஆங்கிலத்துறை சார்பாக இலக்கியத் திறனாய்வு குறித்த கருத்தரங்கம் 27.9.2023 அன்று நடைபெற்றது.

    இந்நிகழ்விற்குக் கல்லூரிச் செயலரும், சமூகப் பணித்துறைத் தலைவருமான ராபர்ட் ரமேஷ் பாபு தலைமை வகித்தார். முதல்வர் ஆஞ்சலோ ஜோசப் முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்கினார்.

    இக்கருத்தரங்கில் சிறப்பு அழைப்பாளராக பாலக்கோடு, மூகாம்பிகை மகளிர் கலை, அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத்துறை உதவிப்பேராசிரியை, லிஸ்சி கலந்துகொண்டு, ஆங்கில இலக்கியங்களில் திறனாய்வுக் கோட்பாடுகள் வாயிலாக நிகழ்த்தக்கூடிய ஆய்வு முறைகளைப் பற்றி விளக்க உரையாற்றினார்.

    இந்நிகழ்வில் கல்லூரித் துணை முதல்வர் முனைவர் பாரதி பெர்னாட்ஷா, பொருளாளர் அந்தோணி பாப்புராஜ், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் எனப்பலரும் கலந்து கொண்டனர். ஆங்கில இலக்கியங்களில் திறனாய்வுக்குரிய தளங்கள் மற்றும் இலக்கியங்களின் தரத்தை ஆய்வு செய்யும் திறனாய்வு கோட்பாடுகளின் அவசியம் குறித்தும் மாணவ, மாணவியர் உணரும்விதமாக அமைந்த இந்நிகழ்வுக்கான ஏற்பாடு களை ஆங்கிலத்துறை தலைவர் ரெஜினா மேரி தலைமையில் துறைப்பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×