என் மலர்
நீங்கள் தேடியது "தொழிற்சாலைகள் அடைப்பு"
- தருமபுரி மாவட்டத்தில் சிறு, குறு தொழிற்சாலைகள் இன்று அடைக்கப்பட்டன.
- முதல் அமைச்சர் கவனத்தை ஈர்க்கும் வகையில் நடந்தது
தமிழகம் முழுவதும் மின் கட்டண உயர்வை குறைக்க வலியுறுத்தி சிறு மற்றும் குறு தொழில்கள் சங்கத்தின் சார்பில் முதல்-அமைச்சர் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று (திங்கட்கிழமை) ஒரு நாள் அடையாள உற்பத்தி நிறுத்த போராட்டத்திற்கு அ ழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி தருமபுரி மாவட்ட சிறு மற்றும் குறு தொழில்கள் சங்கம் சார்பில் இன்று தொழிற் சாலைகள் அடைக்கப்பட்டு உற்பத்தி நிறுத்த போராட்டம் நடை பெற உள்ளது.
காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் இந்த போராட் டத்தில் மாவட்டத்தில் உள்ள சுமார் 1000-க்கும் மேற்பட்ட சிறு, குறு தொழிற் சாலைகள் மூடப்பட்டிருக்கும். இதன் மூலம் சுமார் ஒரு லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் சூழ்நிலை உருவாகி யுள்ளது.






