search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை
    X

    கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை

    • கிருஷ்ணகிரி மாவட்டத்–திற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று வருகை தந்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
    • 500 பெண்களுக்கு ஏ.டி. எம் கார்டுகளை வழங்கினார்.

    தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்–துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பல்வேறு அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று (திங்கட்கிழமை) கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகிறார்.

    இன்று காலை 8.30 மணிக்கு கிருஷ்ணகிரியில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில்இருந்து புறப்படுகிறார். காலை 8.50 மணிக்கு சென்னப்பள்ளி–யில் உள்ள அக்ரோ புராசிங் சென்டரில் ரூ.26 கோடியே 81 லட்சம் மதிப்பில் நடைபெறும் காய்கறி முதன்மை பதப்படுத்தும் குளிர்பதன கிடங்கின் கட்டுமான பணிகளை ஆய்வு செய்கிறார்.

    காலை 9.20 மணிக்கு சூளகிரி அருகே மருதாண்டப்பள்ளியில் சிப்காட்மொபிலிட்டி பார்க் அமைய உள்ள இடத்தை ஆய்வு செய்கிறார். காலை 10 மணிக்கு குந்தாரப் பள்ளியில் கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் உள்ள குமரன் திருமண மண்டபத்தில் 500 பயனாளிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ்ஏ.டி.எம். கார்டுகள் மற்றும் கையேடுகளை வழங்குகிறார்.தொடர்ந்து காலை 11 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வருகிறார். அங்கு காவலர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார். அங்கு தரை தளத்தில் வேளாண்மைத்–துறை சார்பில் நலத்திட்ட உதவிகளை மாற்று திறனாளிகளுக்கு வழங்குகிறார்.

    காலை 11.15 மணிக்கு முதல் தளத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினருடன்கலந்துரையாடுகிறார். காலை 11.30 மணிக்கு 2-வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். தொடர்ந்து அனைத்து துறைகள் சார்பில் நடை பெறும் வளர்ச்சி திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்கிறார். மாலை 3.45 மணிக்கு கிருஷ்ணகிரி நகரில் பெங்களூரு சாலையில் கிழக்கு மாவட்ட தி.மு.க. அலுவலகம் அருகில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நூலகத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

    அதைத் தொடர்ந்து மாலை 4 மணிக்கு கிருஷ்ணகிரியில் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஸ்ரீ தேவராஜ் மஹாலில் நடைபெறும் மூத்த முன்னோடி நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார். தொடர்ந்து தேவராஜ் மஹால் வளாகத்தில் நடைபெறும் மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார்.

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகை தருவதை முன்னிட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அதே போல அமைச்சர்உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க தி.மு.க. நிர்வாகிகள் ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

    Next Story
    ×