search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரி ராகவேந்திர கோவிலில்  சீதா திருக்கல்யாண வைபவம்
    X

    திருக்கல்யான வைபவத்தை முன்னிட்டு சாமி பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாளித்த காட்சி.

    தருமபுரி ராகவேந்திர கோவிலில் சீதா திருக்கல்யாண வைபவம்

    • தருமபுரி ராகவேந்திர கோவிலில் சீதா திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
    • பல்வேறு ஆன்மீக நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    தருமபுரி நகரில் விருபாட்சிபுரத்தில் உள்ள ஸ்ரீ ராகவேந்திர சாமி பிருந்தாவனத்தில் 23- வது ஆண்டு நாம சங்கீர்த்தன மேளா நடைபெற்றது.இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்நிகழ்ச்சியின் முதலா வதாக சனிக்கிழமை அன்று காலை ஸ்ரீ விக்னேஸ்வர பூஜையுடன் வைபவம் தொடங்கியது.

    அதைத் தொடர்ந்து ஸ்ரீ விஷ்ணு சகஸ்ர நாம நாராயணமும், திருச்சி மணிகண்டேஸ்வரா பாகவதரின் விட்டல் நாம பிரச்சார பஜனையும் நடைபெற்றது. சனிக்கிழமை அன்று மாலை திருச்சி வெங்கட்ராம பாகவதர் தஞ்சாவூர் அள்ளூர் ராமன் பாகவதரின் பஜனை நிகழ்ச்சி நடைபெற்றது.

    நி கழ்ச்சியின் இரண்டாம் நாளான நேற்று காலை நடைபெற்ற ஸ்ரீராதா, ஸ்ரீருக்மணி, ஸ்ரீ சீதா திருக்கல்யாண வைபவத்தை ஸ்ரீ மணிகண்டேஸ்வர பாகவதர் குழுவினர் நடத்தி வைத்தனர். இதைத் தொடர்ந்து மாலையில் வசந்த கேளிக்கை ஆஞ்சநேயர் உற்சவம் ஸ்ரீராம் பாகவதர் குழுவி னரால் நடத்த ப்பட்டது.

    இரண்டு நாட்கள் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் தருமபுரியைச் சேர்ந்த ஏராளமான ஆன்மீக பக்தர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். அன்னதானமும் வழங்கப்பட்டது. வைபவத்திற்கான ஏற்பாடுகளை தருமபுரி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஸ்ரீனிவாசன் சிறப்பான முறையில் செய்திருந்தார்.

    Next Story
    ×