என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகள் உழவன் செயலி மூலம் மரக்கன்றுகளை இலவசமாக பெறலாம்
    X

    விவசாயிகள் உழவன் செயலி மூலம் மரக்கன்றுகளை இலவசமாக பெறலாம்

    • உழவன் செயலி மூலம் மரக்கன்றுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
    • ஏக்கருக்கு 200 மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது

    தருமபுரி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் இளங்கோவன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியி ருப்பதாவது:-

    தமிழ்நாட்டின் சுற்றுப்புறச் சூழலை பாதுகாத்திடவும், விவசாய நிலங்களில் நிரந்தர பசுமை சூழ்நிலையினை உருவாக்குவதற்கும் பசுமை தமிழ்நாடு இயக்கம் என்ற திட்டத்தின் மூலம் அனைத்து மாவட்டங்களிலும் தமிழ்நாடு வேளான்மைத்துறை மற்றும் வனத்துறை மூலமாக செயல்படுத்தப்பட உள்ளது.

    இந்த திட்டத்தின் மூலம் வருங்காலங்களில் விவசாயிகளுக்கு ஒரு நிரந்தர வைப்புத் தொகை கிடைப்பதுடன் விவசாய நிலங்களின் மண் வளம் பாதுகாக்கப்படுவதுடன் மாநிலத்தின் பசுமை பரப்பும் சுற்றுப்புறச் சூழலும் மேம்படுத்தும் இந்த திட்டத்தின் கீழ் தேக்கு,ஈட்டி,மகாகனி, மருது, வேம்பு, மலை வேம்பு, நாவல், பெருநல்லி, செம்மரம்,புங்கன், வேங்கை மற்றும் சந்தன உள்பட பல்வேறு தரமான மரகன்றுகள் தமிழ்நாடு அரசு நாற்றங்கால்களில் உற்பத்தி செய்யப்பட்டு விவசா யிகளுக்கு வழங்கு வதற்கு தயாராக உள்ளன.

    விவசா யிகள் மரக்கன்று களை பெறுவதற்கு உழவன் செயலியில் பதிவு செய்து வேளாண்மை துறையின் பரிந்துரையின்படி தேவையான மரக்கன்றுகளை அருகில் உள்ள தமிழ்நாடு வனத்து றையின் நாற்றங்காலில் இருந்து இலவ சமாக பெற்றுக்கொள்ளலாம்.

    மரக்கன்றுகள் விநியோ கம் வரப்பு நடவு முறை எனில் ஏக்கருக்கு 60 மரக்கன்றுகளும், விவசாய நிலங்களில் தனியாக நடவு செய்ய ஏக்கருக்கு 200 மரக்கன்று களும் வழங்கப்படும். இத்திட்டத்தில் விருப்ப முள்ள அனைத்து விவசாயிகளும் சேர்ந்து பயன்பெறலாம்.

    சிறுகுறு விவசாயிகள் பெண் விவசாயிகள் ஆதிதிர்விடர் மற்றும் பழங்குடி இன விவசாயி களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். உழவன் செயலி மூலமாக தேவையான மரக்கன்றுகளை விவசாயிகள் பதிவு செயிது பெற்று கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

    இத்திட்டத்தில் விவசாய நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டு உள்ள பயிர் உற்பத்தி மற்றும் உற்பத்தி திறன் பாதிப்படையாமல் கூடுதலாக ஊடு பயிராக மரங்களை வளர்த்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×