என் மலர்
தர்மபுரி
- அனைத்து வீடுகளுக்கும் பாதுகாக்கப்பட்ட ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் அனைத்து வீடுகளுக்கும் உடனடியாக வழங்கிட வேண்டும்.
- சிப்காட் தொடங்க கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும்.
தருமபுரி,
தருமபுரி மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட ஆலோசனை கூட்டம் தருமபுரியில் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளரும், தருமபுரி சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.வெங்கடேஷ்வரன் தலைமை தாங்கினார்.
மாவட்ட தலைவர் செல்வகுமார் அனைவரை யும் வரவேற்று பேசினார். பா.ம.க. கவுரவத் தலை வரும், பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினருமான ஜி.கே.மணி தருமபுரி நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் சதாசிவம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செந்தில், பாரிமோகன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு கூட்டத்தின் நோக்கம் குறித்து சிறப்புரை யாற்றினர்.
மேலும் ஒன்றிய தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் பலர் கலந்துக்கொண்டனர்.
கூட்டத்தில் காவிரி உபரிநீரை தருமபுரி மாவட்டத்திலுள்ள அனைத்து ஏரிகளுக்கும் நிரப்பும் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
தருமபுரி மாவட்டத்திலுள்ள அனைத்து வீடுகளுக்கும் பாதுகாக்கப்பட்ட ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் அனைத்து வீடுகளுக்கும் உடனடியாக வழங்கிட வேண்டும்.
படித்த இளைஞர்கள் வேலைத்தேடி வெளி மாநிலங்களுக்கும், மாவட்டங்களுக்கும் செல்லும் அவலநிலையை போக்க தருமபுரியில் உடனடியாக சிப்காட் தொடங்க கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும்.
தருமபுரி மாவட்டத்தில் விளையும் தக்காளி பழங்களை, தருமபுரி மாவட்டத்திலுள்ள அனைத்து நியாய விலைக்கடைகளிலும் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- தொடர் திருட்டால் அரூர் பகுதியில் பொதுமக்கள் பீதியில் உறைந்துபோயுள்ளனர்.
- கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருவதால் அரூர் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரூர்:
தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள அச்சல்வாடி கிராமத்தை சேர்ந்தவர் குமரேசன் (வயது46). இவர் கடந்த சிலநாட்களுக்கு முன்பு தனது விவசாய நிலத்தை விற்று விட்டார்.
இதற்காக அவரிடம் இருந்து குமரேசன் ரூ.25 லட்சம் பணம் முன்தொகையாக வாங்கியிருந்தார். அந்த பணத்தை தனது தோட்டத்தில் உள்ள வீட்டில் வைத்திருந்தார்.
இந்த நிலையில் நேற்று இவரது அக்கா வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றார். பின்னர் வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதனை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பீரோவில் இருந்த ரூ.27.50 லட்சம் பணம் மற்றும் 9 பவுன் தங்க நகைகள் ஆகியவை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.
இது குறித்து குமரேசன் அரூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரித்தனர்.
இதைத்தொடர்ந்து குமரேசனின் வீட்டிற்கு தடவியல் நிபுணர்களை வரவழைக்கப்பட்டது. அவர்கள் கொள்ளையர்களின் கைரேகைகள் எதுவும் பதிவாகி உள்ளதா? என சோதனை செய்தனர்.
மேலும் அங்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. மர்ம நபர்கள் தங்களை மோப்பநாய் அடையாளம் கண்டுபிடிக்காமல் இருக்க மிளகாய் பொடி தூவி விட்டு சென்றுள்ளனர் என்பது தெரியவந்தது. இதனால் மோப்ப நாய் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
இந்த சம்பவம் குறித்து அரூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோன்று கடந்த 3 நாட்களுக்கு முன்பு அச்சல்வாடி கிராமத்தில் வெங்கட்ராமன் வீட்டில் ரூ.7 ஆயிரம் பணமும், மொட்டச்சி வீட்டில் முக்கால் பவுன் நகையும், கண்ணகி வீட்டில் ரூ.10 ஆயிரமும் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். தொடர் திருட்டால் அரூர் பகுதியில் பொதுமக்கள் பீதியில் உறைந்துபோயுள்ளனர்.
கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருவதால் அரூர் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- மாணவனிடம், மாணவியின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
- ஆத்திரமடைந்த மாணவியின் உறவினரான அதே பகுதியைச் சேர்ந்த தங்கவேல் என்பவர் மாணவனை சரமாரியாக தாக்கினார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லை அடுத்த ஊட்டமலையில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது மதிக்கத்தக்க சிறுவன், தன்னுடன் படிக்கும் மாணவியை கிண்டலும், கேலியும் செய்துள்ளார்.
இதுகுறித்து மாணவி தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். இதுதொடர்பாக மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளிக்கு வந்து தலைமைஆசிரியர் பாலாஜியிடம் புகார் தெரிவித்தனர்.
அப்போது தலைமை ஆசிரியர் பாலாஜி, துணை தலைமைஆசிரியர் நஞ்சப்பன், ஆசிரியர் வேல் முருகன் ஆகியோர் மாணவனிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது மாணவனிடம், மாணவியின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் ஆத்திரமடைந்த மாணவியின் உறவினரான அதே பகுதியைச் சேர்ந்த தங்கவேல் என்பவர் மாணவனை சரமாரியாக தாக்கினார்.
இதில் காயமடைந்த மாணவனை பள்ளி நிர்வாகிகள் மீட்டு பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு மாணவன் சிகிச்சை பெற்று வருகின்றான். இந்த சம்பவம் குறித்து தலைமையாசிரியர் பாலாஜி ஒகேனக்கல் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவனை தாக்கிய தங்கவேலை கைது செய்தனர்.
மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- தனிமையில் இருந்த அவர் வீட்டை விட்டு வெளியே சென்றார்.
- உடனே அவர் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடிபார்த்தார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் கிழவன் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் குப்புராஜ். இவரது மகள் லட்சுமிபிரியா (வயது20).
இவர் பி.சி.ஏ. படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். தொழிலாளியான குப்புராஜ் கோவையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி காரிமங்கலத்தில் கூலி வேலைக்கு சென்று விடுவது வழக்கம்.
இந்த நிலையில் சம்பவத்தன்று லட்சுமிபிரியாவின் தாய் வேலைக்கு சென்று விட்டார். இதனால் தனிமையில் இருந்த அவர் வீட்டை விட்டு வெளியே சென்றார். மாலையில் குப்புராஜின் மனைவி வேலையை முடித்துவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் தனது மகள் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனே அவர் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடிபார்த்தார். எஙகு தேடியும் லட்சுமிபிரியா காணவில்லை. இதனால் மாயமானது தெரியவந்தது.
இதுகுறித்து அவர் காரிமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த இடத்தில் இறைச்சி கழிவுகளை மர்ம நபர்கள் கொட்டி சீர்கேடு ஏற்படுத்தி உள்ளனர்.
- இந்த இறைச்சி கழிவுகளை, தெரு நாய்கள் ஆங்காங்கே இழுத்துக் கொண்டு செல்வதன் காரணமாக, சாலையோரம் எங்கும் இறைச்சி கழிவுகள் சிதறி கிடக்கிறது.
ஏரியூர்,
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் நாகமரை பிரதான சாலையில், ஏரியூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் அம்மா பூங்கா அமைந்துள்ள பகுதியில், ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட இறைச்சி கழிவுகளை மர்ம நபர்கள் கொட்டுகின்றனர்.
இந்த வழியாக பெள்ளூர், காமராஜ பேட்டை, நெருப்பூர், நாகமரை, ஒட்டனூர் உள்ளிட்ட ஊர்களுக்கான பொதுமக்கள் இந்த பாதையை கடந்து தான் செல்கின்றனர்.
மேலும் அருகிலேயே அரசு நடுநிலைப் பள்ளியும் தனியார் கல்லூரியும் உள்ளது. பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த இடத்தில் இறைச்சி கழிவுகளை மர்ம நபர்கள் கொட்டி சீர்கேடு ஏற்படுத்தி உள்ளனர்.
இந்த இறைச்சி கழிவுகள் காரணமாக, இந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. சாலையை கடக்கும் பொது மக்கள் சுவாசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு வரும் பொது மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
மேலும் இந்த இறைச்சி கழிவுகளை, தெரு நாய்கள் ஆங்காங்கே இழுத்துக் கொண்டு செல்வதன் காரணமாக, சாலையோரம் எங்கும் இறைச்சி கழிவுகள் சிதறி கிடக்கிறது.
இதன் காரணமாக துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடும் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- நேற்று மாலையும் திடீரென மழை பெய்தது.
- பென்னாகரம், கம்பைநல்லூர், அரூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்தது.
தருமபுரி,
தென்மேற்கு பருவமழை காலதாமதமாக தொடங்கியுள்ளது. இதனால் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தினம் தோறும் கனமழை பெய்து வருகிறது.
தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய 8 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தினந்தோறும் மாலை நேரத்தில் மிதமான மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் நேற்று மாலையும் திடீரென மழை பெய்தது.
தருமபுரியில் மிதமான மழையும், நல்லம்பள்ளி அதனை சுற்றி உள்ள பகுதிகளில் கனமழையும் பெய்தது.
அதேபோல் பென்னா கரம், கம்பைநல்லூர், அரூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்தது.
இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சீதோஷ்ண நிலை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்தது.
- தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சேலம் மற்றும் கிருஷ்ணகிரி, தொப்பூர் டோல் ரோடு இணைந்து மரம் நடும் விழா நடைபெற்றது.
- நெடுஞ்சாலை ஓரத்தில் விடுபட்ட இடத்தில் மரக்கன்றுகள் நட முடிவெடுக்கப்பட்டு முதல் கட்டமாக டோல்கேட் முதல் பாளையம் வரை 50-க்கும் மேற்பட்ட மரங்கள் நடப்பட்டது.
தருமபுரி,
சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு இந்திய அரசு பல்வேறு நிகழ்வுகளை நிகழ்த்தி வருகிறது. அதில் 75-வது சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் நேற்று இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சேலம் மற்றும் கிருஷ்ணகிரி, தொப்பூர் டோல் ரோடு இணைந்து மரம் நடும் விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் திட்டத் தலைவர் நரேஷ் (கிருஷ்ணகிரி, தொப்பூர் டோல் ரோடு), தொழில்நுட்ப மேலாளர் திலீப் (இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சேலம்), மற்றும் குழு தலைவர் உப்பம் கன்சல்டன்சி ரவி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் 500 மரங்கள் இலக்காக கொண்டு தொப்பூர்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் விடுபட்ட இடத்தில் மரக்கன்றுகள் நட முடிவெடுக்கப்பட்டு முதல் கட்டமாக டோல்கேட் முதல் பாளையம் வரை 50-க்கும் மேற்பட்ட மரங்கள் நடப்பட்டது.
இதில் பாளையம் டோல் பிளாசா ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
- மற்ற பகுதிகளை காட்டிலும் ஒகேனக்கல் பகுதியில் மின்தடை ஏற்படாதவாறு மின்சார வாரியம் மற்றும் அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
- தங்கு தடையின்றி ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும். தங்கு தடையின்றி ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஒகேனக்கல்,
தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் நீரேற்று நிலையத்தில் பென்னாகரம் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ. ஆய்வு மேற்கொண்டு, நாள்தோறும் இரு மாவட்ட மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரின் அளவுகள் குறித்து கூட்டுக் குடிநீர் திட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் கடந்த சில நாட்களாக முறையாக கிடைப்பதில்லை என புகார் எழுந்துள்ளது.
இதற்கான காரணம் ஒகேனக்கல் பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின்தடை என கூட்டுக் குடிநீர் திட்ட அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஒகேனக்கல் பகுதிக்கு இரண்டு வழிப்பாதையில் மின்விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில், அவற்றில் ஏதேனும் ஒன்று பழுதடைந்தால் அதனை சரி செய்வதற்காக சென்னை மற்றும் சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஊழியர்கள் வர வேண்டிய நிலை உள்ளது.
இதனால் குடிநீர் விநியோகம் பாதிப்பு ஏற்படுகிறது. மற்ற பகுதிகளை காட்டிலும் ஒகேனக்கல் பகுதியில் மின்தடை ஏற்படாதவாறு மின்சார வாரியம் மற்றும் அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இது குறித்து மின்வாரிய அலுவலர், கூட்டு குடிநீர் திட்ட அலுவலர்களிடம் கலந்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.
இன்னும் ஓரிரு நாட்களுக்குள் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு தங்கு தடையின்றி ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த ஆய்வுகளின் போது உதவி நிர்வாகப் பொறியாளர் முருகன், மாவட்டத் தலைவர் செல்வகுமார், இளைஞர் சங்க மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- பீரோவை உடைத்து அதில் வைத்திருந்த சுமார் 14 பவுன் தங்க நகைகள் மற்றும் ரொக்கப் பணம் ரூ.10 ஆயிரத்தை மர்மகும்பல் திருடி சென்றது தெரிய வந்தது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து, வீட்டில் கைவரிசை காட்டிய மர்மகும்பலை தேடி வருகின்றனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளியை அடுத்துள்ள ஈச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 35). இவர் லாரி உரிமையாளர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு வீட்டை பூட்டிவிட்டு, பச்சியப்பன்கொட்டாய் பகுதியில் உள்ள அவரது மாமனார் வீட்டிற்கு சொந்த வேலையாக குடும்பத்துடன் சென்றதாக கூறப்படுகிறது.
பின்னர் மீண்டும் நேற்று காலை, ஈச்சம்பட்டி கிராமத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்து அவர் பார்த்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவை உடைத்து அதில் வைத்திருந்த சுமார் 14 பவுன் தங்க நகைகள் மற்றும் ரொக்கப் பணம் ரூ.10 ஆயிரத்தை மர்மகும்பல் திருடி சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து அதியமான்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, வீட்டில் கைவரிசை காட்டிய மர்மகும்பலை தேடி வருகின்றனர்.
- காவல் கண் காணிப்பாளர் அலுவ லகத்தில் மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
- இந்த கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமை தாங்கினார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பாக மாவட்ட காவல் கண் காணிப்பாளர் அலுவ லகத்தில் மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமை தாங்கினார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் காவல் நிலையங்களில் பதியப்பட்ட குற்ற வழக்குகளின் நிலையை குறித்தும் மேற்கொண்டு செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் காவல் அதிகாரிகளுக்கு, எஸ்.பி. அறிவுரை வழங்கினார்.
மேலும் இந்த ஆய்வுக் கூட்டத்தின் போது சிறப்பாக பணிபுரிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை எஸ்.பி. ஸ்டீபன் ஜேசுபாதம் வழங்கினார்.
இதில் காவல் கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன், காவல் துறை கண்காணிப்பாளர்கள் செந்தில்குமார், ராமச்சந்திரன், மகாலட்சுமி, செல்வி, சிந்து மற்றும் காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.
- அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று காளியப்பன் மீது மோதியது.
- அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி திருமல்வாடி கிராமத்தைச் சேர்ந்தவர் காளியப்பன் (வயது70). விவசாயி.
இவர் சம்பவத்தன்று பாலக்கோடு-பாப்பா–ரப்பட்டி சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டு விட்டு வெளியே நடந்து சென்றார்.
அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று காளியப்பன் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாய–மடைந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து காளியப்பனை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பாப்பாரப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நேற்று முன்தினம் அதிகபட்சமாக ரூ.447-க்கு விற்பனையான பட்டுக்கூடு நேற்று கிலோவிற்கு ரூ.61 விலை அதிகரித்தது.
- மொத்தம் ரூ.6 லட்சத்து 55 ஆயிரத்து 132 மதிப்பில் பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது.
தருமபுரி,
தருமபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக் கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள்.
இந்த அங்காடிக்கு நேற்று முன்தினம் 1,814 கிலோவாக (1¾ டன்) இருந்த பட்டுக்கூடுகள் வரத்து நேற்று 1531 கிலோவாக (1½ டன்) குறைந்தது.
பட்டுக்கூடுகள் வரத்து குறைந்த நிலையில் தேவை அதிகரித்ததால் நேற்று முன்தினம் அதிகபட்சமாக ரூ.447-க்கு விற்பனையான பட்டுக்கூடு நேற்று கிலோவிற்கு ரூ.61 விலை அதிகரித்தது.
நேற்று ஒரு கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.508-க்கும், குறைந்த பட்சமாக ரூ.287-க்கும், சராசரியாக ரூ.427.83-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.6 லட்சத்து 55 ஆயிரத்து 132 மதிப்பில் பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது.






