என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரி மாவட்டத்தில் அனைத்து வீடுகளுக்கும் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் வழங்க வேண்டும்
    X

    கூட்டத்தில் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி பேசிய காட்சி.

    தருமபுரி மாவட்டத்தில் அனைத்து வீடுகளுக்கும் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் வழங்க வேண்டும்

    • அனைத்து வீடுகளுக்கும் பாதுகாக்கப்பட்ட ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் அனைத்து வீடுகளுக்கும் உடனடியாக வழங்கிட வேண்டும்.
    • சிப்காட் தொடங்க கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும்.

    தருமபுரி,

    தருமபுரி மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட ஆலோசனை கூட்டம் தருமபுரியில் நடைபெற்றது.

    இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளரும், தருமபுரி சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.வெங்கடேஷ்வரன் தலைமை தாங்கினார்.

    மாவட்ட தலைவர் செல்வகுமார் அனைவரை யும் வரவேற்று பேசினார். பா.ம.க. கவுரவத் தலை வரும், பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினருமான ஜி.கே.மணி தருமபுரி நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் சதாசிவம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செந்தில், பாரிமோகன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு கூட்டத்தின் நோக்கம் குறித்து சிறப்புரை யாற்றினர்.

    மேலும் ஒன்றிய தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் பலர் கலந்துக்கொண்டனர்.

    கூட்டத்தில் காவிரி உபரிநீரை தருமபுரி மாவட்டத்திலுள்ள அனைத்து ஏரிகளுக்கும் நிரப்பும் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

    தருமபுரி மாவட்டத்திலுள்ள அனைத்து வீடுகளுக்கும் பாதுகாக்கப்பட்ட ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் அனைத்து வீடுகளுக்கும் உடனடியாக வழங்கிட வேண்டும்.

    படித்த இளைஞர்கள் வேலைத்தேடி வெளி மாநிலங்களுக்கும், மாவட்டங்களுக்கும் செல்லும் அவலநிலையை போக்க தருமபுரியில் உடனடியாக சிப்காட் தொடங்க கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும்.

    தருமபுரி மாவட்டத்தில் விளையும் தக்காளி பழங்களை, தருமபுரி மாவட்டத்திலுள்ள அனைத்து நியாய விலைக்கடைகளிலும் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    Next Story
    ×