என் மலர்tooltip icon

    தர்மபுரி

    • பொதுமுடக்கம் ரத்து செய்யப்பட்ட நிலை யிலும் அரசு நகர் பேருந்து 4 ஏ. இயக்கப்படவில்லை.
    • அக்ரஹாரம் சுற்றுவட்டாரப் பகுதியிலுள்ள மாணவர்கள் காலை, மாலை நேரங்களில் பள்ளிக்கு செல்ல முடியாத நிலையுள்ளது.

    அரூர்,

    தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம் எச்.அக்ராஹரம், அழகிரிநகர், நெருப்பாண்டகுப்பம், ஆட்டியானூர், தூரணம் பட்டி, மாவேரிப்பட்டி சோரியம்பட்டி வழித்தடத்தில் அரசு நகர் பேருந்து தடம் எண் 4 ஏ. இயக்கப்பட்டது.

    கொரோனா பொதுமுடக்கம் காரணமாக அரசு நகர் பேருந்து 4 ஏ. தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

    ஆனால், பொதுமுடக்கம் ரத்து செய்யப்பட்ட நிலை யிலும் அரசு நகர் பேருந்து 4 ஏ. இயக்கப்படவில்லை.

    இதனால், அக்ரஹாரம் சுற்றுவட்டாரப் பகுதியிலுள்ள மாணவர்கள் காலை, மாலை நேரங்களில் பள்ளிக்கு செல்ல முடியாத நிலையுள்ளது.

    எனவே, நிறுத்தப்பட்டுள்ள அரசு நகர் பேருந்து 4 ஏ.வை மீண்டும் இயக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு பள்ளி குழந்தைகள், பெற்றோர்கள், மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • விடுமுறை தினமான இன்று ஞாயிற்றுக்கிழமை ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கலில் குவிந்தனர்.
    • கடைகள் ஓட்டல்களில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.

    ஒகேனக்கல்:

    தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான ஒகேனக்கல்லுக்கு கர்நாடகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள்.

    அவர்கள் அருவியில் குளித்தும் பரிசலில் சென்றும் மகிழ்ந்து செல்வார்.

    இதனிடையே இன்று காலை ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 400 கனஅடி தண்ணீர் குறைந்து வந்தது. இந்த நீர்வரத்தை பிலிகுண்டுலுவில் உள்ள மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் விடுமுறை தினமான இன்று ஞாயிற்றுக்கிழமை ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கலில் குவிந்தனர். அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு மெயின் அருவி, சினி பால்ஸ் மற்றும் காவிரி ஆற்றில் பல்வேறு இடங்களில் குளித்து மகிழ்ந்தனர். பின்னர் பாதுகாப்பு உடை அணிந்து பாறைகளுக்கு இடையே காவிரி ஆற்றில் உற்சாகமாக பரிசலில் சென்றனர்.

    மேலும் முதலைப் பண்ணை, சிறுவர் பூங்கா உள்ளிட்ட பகுதிகளையும் சுற்றுலா பயணிகள் சுற்றி பார்த்தனர். ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் நடைபாதை, பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாகவே காணப்பட்டது. இதனால் கடைகள் ஓட்டல்களில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. மேலும் மீன் மார்க்கெட் மற்றும் மீன் வறுவல் கடைகளில் விற்பனை படுஜோராக நடைபெற்றது.

    ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் அசம்பாவிதங்களை தடுக்க போலீசார், ஊர்காவல் படையினர் ஆலம்பாடி, மணல்திட்டு, மெயின் அருவி, பரிசல் துறை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    • மோட்டார் சைக்கிளில் வீட்டில் இருந்து பூமரம் பஸ் நிறுத்தம் அருகே வந்தார்.
    • அங்குள்ள ஒரு வளைவில் திரும்புபோது திடீரென்று சறுக்கி வண்டியில் இருந்து வினோத் கீழே விழுந்தார்.

    தருமபுரி,  

    தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே இருளப்பட்டி பீரங்கி நகரைச் சேர்ந்தவர் சேட்டு., இவரது மகன் வினோத் (வயது17). இந்த சிறுவன் பிளஸ்-1 வரை படித்து விட்டு கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார்.

    இந்த நிலையில் கடந்த வாரம் சொந்த ஊருக்கு வந்த சிறுவன் மீண்டும் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். இந்த நிலையில் வினோத் நேற்று மோட்டார் சைக்கிளில் வீட்டில் இருந்து பூமரம் பஸ் நிறுத்தம் அருகே வந்தார். அப்போது அங்குள்ள ஒரு வளைவில் திரும்புபோது திடீரென்று சறுக்கி வண்டியில் இருந்து வினோத் கீழே விழுந்தார்.

    இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு உடனே பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த வினோத் இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து ஏ.பள்ளிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டிட கூட்ட அரங்கில் மாவட்ட கலெக்டர் சாந்தி, தலைமையில் நடைபெறவுள்ளது.
    • குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 24.7.2023 அன்று மாலை 4 மணி அளவில் நடக்கிறது.

    தருமபுரி, 

    தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி, வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தருமபுரி மாவட்ட முப்படையில் பணிபுரிந்து வெளி வந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவரை சார்ந்தோருக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 24.7.2023 அன்று மாலை 4 மணியளவில் தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டிட கூட்ட அரங்கில் மாவட்ட கலெக்டர் சாந்தி, தலைமையில் நடைபெறவுள்ளது.

    தருமபுரி மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவரைச் சார்ந்தோர்கள் குறைகள் ஏதேனுமிருப்பின் தங்களது குறைகளை கோரிக்கை மனுவாக இரட்டை பிரதிகளில் தருமபுரி மாவட்ட கலெக்டர் அவர்களிடம் நேரில் அளிக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தனது மனைவியிடம் ஆண் வாரிசு பெற்று கொள்வதற்காக உனது தங்கையை 2-வதாக திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியுள்ளார்.
    • மனமுடைந்த காணப்பட்ட ராஜேஸ்வரி வீட்டில் தனியாக இருந்தபோது விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

    தருமபுரி, 

    தருமபுரி செட்டிகரை ஐம்பேரி. இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது32). இவர்களுக்கு 3 பெண்குழந்தைகள். இதனால் தனக்கு 4-வதாக ஒரு ஆண் வாரிசு வேண்டும் என்று மனைவியிடம் கணவர் தினமும் குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்டு வந்தார். சம்பவத்தன்று கணவன்-மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

    அப்போது ஜம்பேரி தனது மனைவியிடம் ஆண் வாரிசு பெற்று கொள்வதற்காக உனது தங்கையை 2-வதாக திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியுள்ளார்.

    இதனால் மனமுடைந்த காணப்பட்ட ராஜேஸ்வரி வீட்டில் தனியாக இருந்தபோது விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே அவரை உறவினர்கள் மீட்டு தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தருமபுரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிறுமி கடந்த 12-ந் தேதி பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை.
    • இதனால் பதறிப்போன சிறுமியின் பெற்றோர் பலஇடங்களில் தேடிபார்த்தனர்.

    தருமபுரி, 

    தருமபுரி குமாரசாமிப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் தொழிலாளி.

    இவருக்கு திருமணமாகி கடந்த 20வருடங்கள் ஆகியும் குழந்தைகள் ஏதும் இல்லை. இதனால், அவர்கள் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்தனர். இந்த நிலையில் அந்த குழந்தை அவர்கள் நன்றாக படிக்க வைத்தனர். அந்த சிறுமி தற்போது அதியமான்கோட்டை அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு பயின்று வந்தார்.

    இந்த நிலையில் அந்த சிறுமி கடந்த 12-ந் தேதி பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் பதறிப்போன சிறுமியின் பெற்றோர் பலஇடங்களில் தேடிபார்த்தனர். எங்கும் தேடியும் சிறுமி கிடைக்காததால், அவர் மாயமானது தெரியவந்தது.

    இதுகுறித்து சிறுமியின் தந்தை தருமபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சிறுமியை தேடிவருகின்றனர்.

    • செல்போன் நம்பர் உடன் அருகில் உள்ள இ -சேவை மையத்திற்கு நேரில் சென்று புதுப்பித்துக் கொள்ளலாம்.
    • இது தொடர்பான விவரங்களை உதவி வேளாண்மை அலுவலர்களை கேட்டு அறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    காரிமங்கலம்,

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டாரத்தில் பிரதம மந்திரியின் கவுரவ நிதி புதுப்பிக்க மேலாண்மை துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    இது குறித்து காரிமங்கலம் வேளாண்மை உதவி இயக்குனர் புவனேஸ்வரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-

    காரிமங்கலம் வட்டாரத்தில் பிரதம மந்திரியின் கவுரவ நிதி பி.எம் கிசான் திட்டம் மூலம் ஆண்டிற்கு 6000 பெறும் விவசாயிகள் அனைவரும் தங்கள் பதிவை பி.எம் கிசான் இணையதளத்தில் இ-கே.ஒய்.சி மூலம் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

    பதிவை புதுப்பிக்க தவறிய விவசாயிகள் தங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள செல்போன் நம்பர் உடன் அருகில் உள்ள இ -சேவை மையத்திற்கு நேரில் சென்று புதுப்பித்துக் கொள்ளலாம்.

    அவ்வாறு புதுப்பிக்க தவறினால் இனி வரும் காலங்களில் பிரதம மந்திரியின் கவுரவ நிதியினை பெற இயலாது. மேலும் விவசாயிகள்

    பி. எம் கிசான் திட்டத்தில் தொடர்ந்து நிதி உதவி பெற தங்களது நில உடமையை உறுதி செய்து கொள்வது அவசியம்.

    ஆகையால் விவசாயிகள் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலகத்தை நேரில் அணுகி தங்கள் பெயரில் உள்ள சிட்டா, ஆதார், ரேஷன் கார்டு நகல்கள் மற்றும் ஓ.டி .பி. பதிவு பெறப்பட்ட செல்போன் எண் ஆகியவற்றை எடுத்து வந்து சரி பார்த்து பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    இது தொடர்பான விவரங்களை உதவி வேளாண்மை அலுவலர்களை கேட்டு அறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    காரிமங்கலம் கெரகோட அள்ளி, கும்பார அள்ளி, நாகனம்பட்டி ஆகிய பகுதிகளுக்கு மலர்விழி என்பவரையும், அனுமந்தபுரம், முக்குளம், அண்ணாமலை அள்ளி, நரியன அள்ளி, கொண்டசாமன அள்ளி ஆகிய பகுதிகளுக்கு சிவஞானம் என்பவரையும், அடிலம் கொட்டுமாரன அள்ளி, புலிக்கல் ஆகிய பகுதிகளுக்கு சிவராமன் என்பவரையும், பைசு அள்ளி, காளப்பன அள்ளி, பூமாண்ட அள்ளி ஆகிய பகுதிகளுக்கு அமராவதி என்பவரையும் ஜக்க சமுத்திரம் கருக்கன அள்ளி, ஜிட்டாண்டஅள்ளி ஆகிய பகுதிகளுக்கு கிருஷ்ணன் என்பவரையும் விவசாயிகள் அணுகி விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • ரூ.4.50 கோடி மதிப்பில் பென்னாகரம் புதிய பேருந்து நிலைய கட்டுமான கட்டடப் பணிகள் நடக்கிறது.
    • பென்னாகரம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வரும் திட்ட பணிகளை தரமானதாகவும், ஒப்பந்த காலத்திற்குள்ளாக கட்டடப் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பென்னாகரம், 

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பகுதிகளில் நடைபெற்று வரும் ரூ.10.45 கோடி மதிப்பிலான

    வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் சாந்தி ஆய்வு மேற்கொண்டார்.

    பென்னாகரம் பேரூராட்சிக்குட்பட்ட கிருஷ்ணாபுரம் பகுதியில் 2018 - 19 ஆம் நிதி ஆண்டில் ரூ. 2.66 கோடி மதிப்பில் கசடு கழிவு நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி, 2021- 22 ஆம் நிதியாண்டில் மூலதன மானியத் திட்டத்தின் கீழ் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நவீன எரிவாயு தகன மேடை அமைக்கும் பணி, 2021 - 22 ஆம் நிதியாண்டின் மூலதன மானிய திட்டத்தின் கீழ் ரூ.4.50 கோடி மதிப்பில் பென்னாகரம் புதிய பேருந்து நிலைய கட்டுமான கட்டடப் பணிகள்,

    2022-23 ஆம் நிதி ஆண்டில் கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ1.79 கோடி மதிப்பீட்டில் பென்னாகரம் தேசிய நாயகன் ஏரி புனரமைத்து தூர்வாரும் பணிகள் உள்ளிட்ட ரூ.10.45 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகளை தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    பென்னாகரம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் திட்ட பணிகளை தரமானதாகவும், ஒப்பந்த காலத்திற்குள்ளாக கட்டடப் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

    இந்த ஆய்வுகளின் போது உதவி செய்பொறியாளர் சுப்பிரமணி, பென்னாகரம் வட்டாட்சியர் சவுகத் அலி, பேரூராட்சி துணைத் தலைவர் வள்ளியம்மாள் பவுன்ராஜ், இளநிலை உதவியாளர் சின்னசாமி, வார்டு உறுப்பினர்கள் ராதிகாபாய் மாதவசிங், ஷானு, வருவாய் ஆய்வாளர்,கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • வங்கி பணிகளில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்.
    • தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு முறையை பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தருமபுரி,

    தருமபுரி பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு வங்கிப் பணிகளில் தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறிக்கும் மந்திய அரசை கண்டித்து திராவிடர் கழகம இளைஞர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில இளைஞரணி துணை செயலாளர் செல்லதுரை தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி தலைவர் முனியப்பன் வரவேற்றார்.

    முன்னாள் மாவட்ட தலைவர் சிவாஜி, மாவட்ட தலைவர் சரவணன், மாவட்ட துணை செயலாளர் காமராஜ், கழக காப்பாளர்கள் ஆசைத்தம்பி, விடுதலை தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மேலும் மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்செல்வி, பொதுக்குழு உறுப்பினர் வேட்ராயன், பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் செந்தில்குமார், மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

    தலைமைக் கழக அமைப்பாளர் ஜெயராமன் சிறப்புரையாற்றினார்.

    வங்கி பணிகளில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு முறையை பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூக ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் பொது சிவில் சட்டம் நடைமுறைப்படுத்தும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் போன்ற கோரிக்ககைளை ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.

    • மருத்துவக் கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் குப்பைகளை டன் கணக்கில் கொண்டு வந்து நள்ளிரவு நேரத்தில் ஏரி பகுதியில் கொட்டியுள்ளனர்.
    • ஏரி பகுதிகளுக்கு மேய்ச்சலுக்கு வரும் கால்நடைகள் பாதிக்கப்படுகின்றன.

    தொப்பூர்,

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்துள்ள கெட்டுப்பட்டி பகுதியில் ஏரி ஒன்று அமைந்துள்ளது.

    இப்பகுதியில் கிராமங்களுக்கான நீர் ஆதாரமாக உள்ளது. மேலும் மேய்ச்சல் புறம்போக்கு நிலங்களும் அதிக அளவில் இப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளன.

    மேலும் இந்த ஏரியை சுற்றிலும் விவசாய நிலங்கள் அமைந்துள்ளதால் பாசனத்திற்காகவும், குடிநீருக்காகவும், கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளும் அமைக்கபட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இந்த ஏரியில் மர்ம கும்பல் ஒன்று வாகனங்களில் அதிக அளவிலான மருத்துவக் கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் குப்பைகளை டன் கணக்கில் கொண்டு வந்து நள்ளிரவு நேரத்தில் ஏரி பகுதியில் கொட்டி யுள்ளனர்.

    இதனால் ஏரி பகுதிகளுக்கு மேய்ச்சலுக்கு வரும் கால்நடைகள் பாதிக்கப்படுகின்றன. அதனை தொடர்ந்து தற்பொழுது மழை பெய்ய தொடங்கி இருப்பதால் மருத்துவ கழிவுகளும் நிலத்தடி நீருடன் கலப்பதால் தண்ணீர் நஞ்சாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனால் மருத்துவக் கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்தி கொட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • அயோடின் உப்பு அவசியம் குறித்தும், உப்பில் அயோடின் உள்ளதா? இல்லையா? கண்டறிதல் குறித்தும் அயோடின் உப்பு, அயோடின் இல்லாத உப்பு வேறுபாடு அறிதல் குறித்தும் செயல் விளக்கம் அளித்த னர்.
    • மாணவ, மாணவிகளின் சந்தேகங்களுக்கும் உரிய விளக்கம் அளிக்கப்பட்டது.

    தருமபுரி, 

    தருமபுரி கேந்திர வித்யாலயா பள்ளி வளா கத்தில் உணவு பாதுகாப்பு துறை மற்றும் கிருஷ்ணகிரி நுகர்வோர் விழிப்புணர்வு நல சங்கம் இணைந்து உணவுப் பொருள்களில் லேபிள் நடைமுறை, கலப்படம் கண்டறிதல் மற்றும் நுகர்வோர் சட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை பெற்றது.

    இதில் பள்ளி பொருளி யல் ஆசிரியர் திருநாவுக்கரசு அனை வரையும் வர வேற்றார்.

    பள்ளி முதல்வர் ஜெயச்சந்திரன் தலைமை வகித்தார்.

    கிருஷ்ணகிரி நுகர்வோர் நலச்சங்கம் மாநில தலைவர் மற்றும் பயிற்சி இயக்குனர் ஜாய் முன்னிலை வகித்தார்.

    உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் பானுசுஜாதா, காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் ஆகியோர் உணவு பொருள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    அயோடின் உப்பு குறித்தும் அயோடின் சத்து குறைபாடினால் ஏற்படக்கூடிய குறைபாடுகள் குறித்தும், அயோடின் உப்பு அவசியம் குறித்தும், உப்பில் அயோடின் உள்ளதா? இல்லையா? கண்டறிதல் குறித்தும் அயோடின் உப்பு, அயோடின் இல்லாத உப்பு வேறுபாடு அறிதல் குறித்தும் செயல் விளக்கம் அளித்த னர்.

    இதில் மாணவ, மாணவிகளின் சந்தேகங்களுக்கும் உரிய விளக்கம் அளிக்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில், ஆங்கில பேராசிரியை கீதாகோபாலன், கேந்திர வித்யாலயா துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியை (பொறுப்பு ) பிரதீபா கவுதம், காவேரிப்பட்டணம் செஞ்சிலுவை சங்க செயலாளர் செந்தில்குமார் மற்றும் 700-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் உடன் பள்ளி ஆசிரியை, ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

    • செயற்குழு கூட்டம் கடத்தூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
    • கூட்டத்தில் பா.ம.க .கவுரவ தலைவர் பென்னாகரம் எம்.எல்.ஏ. ஜி.கே மணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

    கடத்தூர்,

    தருமபுரி கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழு கூட்டம் கடத்தூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    கூட்டத்தில் பா.ம.க .கவுரவ தலைவர் பென்னாகரம் எம்.எல்.ஏ. ஜி.கே மணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

    மாவட்ட தலைவர் அல்லிமுத்து தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்ட செயலாளர் அரசாங்கம் அனைவரையும் வரவேற்றார்.

    இதில் தருமபுரி தேர்தல் பணிக்குழு தலைவர் ஸ்டீல்ஸ் சதாசிவம், முன்னாள் எம்.எல்.ஏ. வேலுசாமி, செந்தில், ராமசுந்தரம், முத்துசாமி, ஜெயகுமார், சிவகுமார், வணங்காமுடி, இமயவர்மன், ராமலிங்கம் உள்ளிட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய கிளை நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் ஜி.கே. மணி பேசும் போது எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

    கட்சியின் 35-வது ஆண்டு துவக்கவிழா எழுச்சியோடு கொண்டாட வேண்டும். ஆழுகின்றவர்களுக்கு ஆலோசனை வழங்கும் கட்சியாக பாமக உள்ளது என பேசினார்.

    ×