என் மலர்
தர்மபுரி
- திருப்பத்தூர் மேற்கு மாவட்ட செயலாளர் கருணாநிதி, கலந்துகொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள், அன்னதானம் வழங்கினர்.
- நிகழ்ச்சி முடிவில் பாலு நன்றி கூறினார்.
தருமபுரி,
திருப்பத்தூர் நகர சமத்துவ மக்கள் கட்சி நிறுவன தலைவர் நடிகர் சரத்குமார் பிறந்த நாளை முன்னிட்டு பஸ் நிலையத்தில் பொதுமக்களுக்கு இனிப்புகள், அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தொகுதி செயலாளர் லோகநாதன் தலைமை வகித்தார். நகர செயலாளர் சரவணன், ராமு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆனந்தன் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக வேலூர் மண்டல செயலாளர் ஞானதாஸ், திருப்பத்தூர் மேற்கு மாவட்ட செயலாளர் கருணாநிதி, கலந்துகொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள், அன்னதானம் வழங்கினர்.
நிகழ்ச்சியில் பிரபு, பாலு, அஜ்மீர் அலி, சரவணன் சுரேஷ்குமார், வினோத்குமார், மகளிர் அணி செண்பகம், சங்கீதா, கற்பகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவில் பாலு நன்றி கூறினார்.
- விவசாய நிலங்களில் மரக்கன்றுகளை நட்டு வைத்து பயன் பெற வனத்துறை சார்பில் இலவசமாக மரக்கன்றுகள் வழங்கபட்டு வருகிறது.
- விவசாயிகள் தற்போதுள்ள மழைக்கால பருவத்தை பயன்படுத்தி மரக்கன்றுகளை வனத்துறையின் மூலம் நடவு செய்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும்
தொப்பூர்,
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டாரத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. மேலும் ஒரு சில வாரங்களில் பருவ மழையும் தொடங்க உள்ளது.
இதனால் தங்கள் நிலங்களில் மரக்கன்றுகளை நடவு செய்து வனத்துறையை பயன் படுத்திக்கொள்ள விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் விவசாயிகளுக்கு அவர்கள் விருப்பத்தின் பேரில் தங்கள் விவசாய நிலங்களில் மரக்கன்றுகளை நட்டு வைத்து பயன் பெற வனத்துறை சார்பில் இலவசமாக மரக்கன்றுகள் வழங்கபட்டு வருகிறது.
நல்லம்பள்ளி ஒன்றியம், டொக்குபோதனஹள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட கெட்டுப்பட்டி பகுதியில் முதலமைச்சரின் கனவு திட்டமான பசுமைத் தமிழ்நாடு திட்டத்தின் கீழ் வனத்துறை மூலம் நடவு செய்யப்பட்ட மரக்கன்றுகளை தருமபுரி வனபாதுகாவலர் உத்தரவின் பேரில் வனச்சரகர் ராமச்சந்திரன் அடங்கிய குழுவினர் பார்வையிட்டனர்.
மேலும் வனத்துறையின் சார்பில் தருமபுரி மற்றும் தொப்பூர் அலுவலகங்களில் தேக்கு, சில்வர் ஊக், ஈட்டி, நாவல், செம்மரம் உள்ளிட்ட மரக்கன்றுகள் தயார் நிலையில் உள்ளதாகவும் வனத்துறை சார்பில் தெரிவித்தனர்.
விவசாயிகள் தற்போதுள்ள மழைக்கால பருவத்தை பயன்படுத்தி மரக்கன்றுகளை வனத்துறையின் மூலம் நடவு செய்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
- தேனீ வளர்ப்பு முக்கியத்துவம் குறித்து விவசாயிகளுக்கு விரிவாக எடுத்து ரைத்து, தேனீ வளர்ப்பு செயல் விளக்க பயிற்சி அளித்தார்.
- நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை பென்னாகரம் வேளாண்மை துறை மற்றும் அட்மா திட்ட அலுவர்கள் செய்திருந்தனர்.
பென்னாகரம்,
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே சின்னம்பள்ளி கிராமத்தில் வேளாண்மைத்துறை மற்றும் அட்மா திட்டத்தின் சார்பில் தேனீ வளர்ப்பு செயல் விளக்க பயிற்சி நடைபெற்றது.
இதில் உதவி வேளாண் அலுவலர் தமிழ்செல்வி கலந்து கொண்டு தேனீ வளர்ப்பு முக்கியத்துவம் குறித்து விவசாயிகளுக்கு விரிவாக எடுத்துரைத்து, தேனீ வளர்ப்பு செயல் விளக்க பயிற்சி அளித்தார்.
இந்த நிகழ்ச்சியில் 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பென்னாகரம் வேளாண்மை துறை மற்றும் அட்மா திட்ட அலுவர்கள் செய்திருந்தனர்.
- அரசு பள்ளிகளின் வளர்ச்சியில் அங்கு படித்த முன்னாள் மாணவர்களை பங்குபெறச் செய்ய வேண்டும்.
- அரசு பள்ளிகளில் படித்த முன்னாள் மாணவர்கள், தங்கள் விவரங்களை பதிவு செய்து, முன்னாள் மாணவர்கள் மன்றத்தில் இணைய வேண்டும்.
தருமபுரி,
இக்கூட்டத்தில் முக்கிய அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பு செய்வது, தொடர்ந்து உயர்கல்வி வரை படிக்க வழிகாட்டுவது, இடையில் நின்ற மாணவர்களை பள்ளியில் சேர்ப்பது என முடிவு செய்யப்பட்டது.
தருமபுரி நகராட்சி தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:-
பள்ளிகளின் வளர்ச்சியில் மேலாண்மை குழு உறுப்பினர்களின் பங்குகள் மற்றும் கடமைகள் அதிகம் உள்ளன. அரசு பள்ளிகளின் வளர்ச்சியில் அங்கு படித்த முன்னாள் மாணவர்களை பங்குபெறச் செய்ய வேண்டும்.
இதற்காக பள்ளிக் கல்வித் துறையால் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. https://nammaschool.tnschools.gov.in என்ற இணையதளத்தில் அரசு பள்ளிகளில் படித்த முன்னாள் மாணவர்கள், தங்கள் விவரங்களை பதிவு செய்து, முன்னாள் மாணவர்கள் மன்றத்தில் இணைய வேண்டும். அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டுக்காக தமிழக அரசு மற்றும் பள்ளி கல்வித்துறை எடுத்து வரும் முயற்சிகளுக்கு பக்க பலமாக இருக்க வேண்டும்.
மேலும், தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் நான் முதல்வன், பள்ளி செல்லா மற்றும் இடை நின்ற குழந்தைகளை கண்டறிந்து, மீண்டும் பள்ளியில் சேர்க்கவேண்டும்.
இல்லம் தேடிக் கல்வி, 4 மற்றும் 5 வகுப்பு மாணவர்களின் கற்றல் அடைவை மேம்படுத்த அறிமுகப்படுத்தப்பட்டு உள்ள எண்ணும் எழுத்தும் திட்டம் , மற்றும் சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கான செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வை மேலாண்மை குழு, உறுப்பினர்கள் ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- சம்பவத்தன்று அந்த தங்க செயின் அறுந்து விழும் நிலையில் இருந்ததால், அதனை கழற்றி கடையில் உள்ள மேஜையின் மீது வைத்திருந்தார்.
- ஜெயக்கொடி மேஜையின் மீது வைத்திருந்த 5 பவுன் நகையை காணவில்லை.
தருமபுரி,
தருமபுரி கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள அழகாபுரி பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மனைவி ஜெயக்கொடி (வயது67). இவர் அதே பகுதியில் மளிகை கடை ஒன்றை நடத்தி வருகிறார். ஜெயக்கொடி தனது கழுத்தில் 5 பவுன் தங்க செயின் ஒன்றை அணிந்து இருந்தார். சம்பவத்தன்று அந்த தங்க செயின் அறுந்து விழும் நிலையில் இருந்ததால், அதனை கழற்றி கடையில் உள்ள மேஜையின் மீது வைத்திருந்தார்.
அப்போது மளிகை கடைக்கு பொருள் வாங்க ஒருவர் வந்தார். அவர் பொருளை வாங்கி சென்ற பின்பு ஜெயக்கொடி மேஜையின் மீது வைத்திருந்த 5 பவுன் நகையை காணவில்லை. இதனால் பதறிப்போன அவர் கடையில் பல்வேறு இடங்களில் தேடிபார்த்தார். எங்கு தேடியும் அந்த நகை கிடைக்கவில்லை.
இது குறித்து ஜெயக்கொடி தருமபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் கடையில் மேஜையின் மீது வைத்திருந்த தனது 5 பவுன் செயினை மளிகை பொருட்கள் வாங்க வந்த நபர் திருடி சென்றிருக்கலாம் என்று சந்தேகத்தின் பேரில் புகார் கொடுத்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த நபர் யார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர்.
- ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.
பென்னாகரம்,
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள செக்குமேடு பகுதியை சேர்ந்தவர் மாணவி. இவர் நல்லானூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி மாலை 4 மணி அளவில் வீட்டிலிருந்து ஜெராக்ஸ் எடுக்க சென்று வருவதாக கூறிச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
இதனால் அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் பென்னாகரம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் காணாமல் போன கல்லூரி மாணவியை தீவிரமாக தேடி வருகின்றனர்.
- 4,450 கிலோவாக இருந்த பட்டுக்கூடுகள் வரத்து நேற்று 3,576 கிலோவாக குறைந்தது.
- மொத்தம் ரூ.15 லட்சத்து 5ஆயிரத்து 850-க்கு பட்டுக்கூடுகள் விற்பனையானது.
தருமபுரி,
தருமபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டு கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள்.
இந்த அங்காடிக்கு நேற்று முன்தினம் 4,450 கிலோவாக இருந்த பட்டுக்கூடுகள் வரத்து நேற்று 3,576 கிலோவாக குறைந்தது. இதேபோல் நேற்று முன்தினம் ரூ.556-க்கு விற்பனையான 1 கிலோ பட்டுக்கூடு நேற்று கிலோவிற்கு ரூ.36 விலை குறைந்தது.
அதன்படி பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.520-க்கும், குறைந்த பட்சமாக ரூ.300-க்கும், சராசரியாக ரூ.421.04-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.15 லட்சத்து 5ஆயிரத்து 850-க்கு பட்டுக்கூடுகள் விற்பனையானது.
- மாரசத்திரம் பகுதியில் உள்ள ஒரு ஏரியில் குளிக்க சென்றார்.
- அந்த வழியாக சென்றவர்கள் ஏரியில் நரசிம்மா பிணமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தேர்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் முனிராஜ். இவரது மகன் நரசிம்மா (வயது28).
இவர் நேற்று முன்தினம் மாரசத்திரம் பகுதியில் உள்ள ஒரு ஏரியில் குளிக்க சென்றார். அப்போது நரசிம்மா ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
அப்போது அந்த வழியாக சென்றவர்கள் ஏரியில் நரசிம்மா பிணமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே அவர்கள் தேன்கனிக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நரசிம்மாவின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பொய்யப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவி களுக்கு இலவச நோட்டு, பேனா, பென்சில், அழிப்பான், பென்சில் திருவி, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
- கொங்குவேம்பு, வீ.அண்ணாநகர் கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் 900 மாணவ, மாணவி களுக்கு நோட்டு, பேனா, பென்சில், அழிப்பான், பென்சில் திருவி வழங்கப்பட்டது.
அரூர்,
கர்மவீரர் காமராஜரின் 121 வது பிறந்தநாளை முன்னிட்டு தருமபுரி மாவட்டம், அரூர் விஜய் மக்கள் இயக்க ஒன்றிய இளைஞரணி சார்பாக பொய்யப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவி களுக்கு இலவச நோட்டு, பேனா, பென்சில், அழிப்பான், பென்சில் திருவி, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய இளைஞரணி தலைவர் விஜய்நவின், பொருளாளர் சிலம்பரசன், இணைச் செயலாளர் கலையரசன், நகர செயலாளர் முரளி, ஒன்றிய தொண்டரணி துணை தலைவர் சிட்லிங் அசோக், இணைச்செயலாளர் மோட்டூர் சக்தி, கிளை நிர்வாகிகள் சக்திவேல், குமரேசன், கோவிந்தன், பாலாஜி, திருப்பதி, செல்வம், சத்தியராஜ், மூவேந்தன், இளங்கோ, விக்னேஷ், சக்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் அரூர் ஒன்றிய இளைஞரணி தலைமையில் கிராமங்களில் உள்ள கிளை சார்பாக சிட்டிங், பொருசு மரத்துவளவு, ரெட்டை குட்டை, தண்டா, பறையப்பட்டிபுதூர், ஈச்சம் பாடி, கொங்குவேம்பு, வீ.அண்ணாநகர் கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் 900 மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, பேனா, பென்சில், அழிப்பான், பென்சில் திருவி வழங்கப்பட்டது.
- அலங்கரிக்க ப்பட்ட உற்சவ மூர்த்தியை பக்தர்கள் தலையில் தூக்கிக் கொண்டு கோவிலை வலம் வந்தனர்.
- மேலும் பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பிரதோஷ வழிபாட்டில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தருமபுரி
தருமபுரி மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் நேற்று ஆனி மாத 2-வது சனி பிரதோஷத்தை யொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி நந்தி மற்றும் லிங்கத்துக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் வழிபாடுகள் நடந்தது. இதில் அந்தந்த பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தருமபுரி கோட்டை கல்யாண காமாட்சி அம்மன் உடனாகிய மல்லிகார்ஜூன சாமி கோவிலில் சனி பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதையொட்டி நந்திக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட வகையான வாசனை திரவியங்கள் மற்றும் பழங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது.
தொடர்ந்து மூலவருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் உபகார பூஜைகளும், தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது. பின்னர் கோவில் வளாகத்திலேயே சாமி திருவீதி உலா நடைபெற்றது.
தொப்பூர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ஞான லிங்கேஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
மாலை 4 மணி அளவில் அபிஷேகமும், 6 மணி அளவில் தீபாரதனையும் நடந்தது.
இதில் ஸ்ரீ ஞானலிங் கேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர் களுக்கு காட்சி அளித்தார்.
மேல் பூரிக்கல் கிராமத்தில் தியானேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு 32 அடி உயரம் தியானேஸ்வரர் சிலையும் கைலாசநாதர் கோவிலும் அமைந்துள்ளது.
இவ்விரு திருத்தலங் களிலும் நேற்று மாலை சனி மகா பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
இதேபோன்று தருமபுரி நெசவாளர் நகரில் உள்ள மங்களாம்பிகை உடனாகிய மகாலிங்கேஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷத்தையொட்டி நந்தி மற்றும் மகாலிங்கேஸ் வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
தருமபுரி குமாரசாமிப் பேட்டை சிவகாமசுந்தரி உடனாகிய ஆனந்த நடராஜர் கோவிலில் நடைபெற்ற சனி பிரதோஷ வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஓசூர் சந்திரசூடேஸ்வரர் மலைக்கோவில், நெசவுத்தெருவில் உள்ள சோமேஸ்வரசாமி ஆலயம், காமராஜ் காலனியில் உள்ள காசி விசுவநாதர் கோவில், ராம்நகரில் உள்ள சொர்ணாம் பிகை சமேத சோமேஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில் பிரதோஷத்தை யொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து நந்தியம் பெருமானுக்கும் பால், தயிர், வெண்ணெய், பன்னீர், இளநீர், குங்குமம் மஞ்சள், சந்தனம், பஞ்சாமிர்தம், விபூதி உள்ளிட்ட திரவியங்களை கொண்டு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது.
பின்னர், சிவன், நந்தி உள்ளிட்ட உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகங்களும், அலங்காரங்களும் செய்யப் பட்டன. பின்னர், அலங்கரிக்கப்பட்ட உற்சவ மூர்த்தியை பக்தர்கள் தலையில் தூக்கிக் கொண்டு கோவிலை வலம் வந்தனர். மேலும் பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பிரதோஷ வழிபாட்டில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிப்பட்டனர்.
- நிகழ்ச்சியில் பல்வேறு போட்டிகள் நடத்தப் பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படடது.
- அரசு பள்ளியில் தருமபுரி மாவட்டத்தில் முதலிடம் பிடித்த விக்னேஷ் என்ற மாணவனுக்கு 6000 ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட்டது.
தருமபுரி,
பெருந்தலைவர் காமராஜரின் 121-வது பிறந்தநாள் தினம் நேற்று தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக தருமபுரி அடுத்த மாங்கரை அரசு மேல்நிலைப் பள்ளியில் கர்மவீரர் காமராஜர் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டா டப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் மாரிமுத்து தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக இதே பள்ளியில் படித்த அரசு மருத்துவர் முனுசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் பல்வேறு போட்டிகள் நடத்தப் பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இதற்கு முன்னதாக பள்ளியில் படிக்கும் 800-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் காமராஜரின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதனை தொடர்ந்து இதே பள்ளியில் 12-ம் வகுப்பு படித்த பச்சியப்பன் என்ற மாணவன் 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ். தேர்ச்சியில் தமிழகத்தில் முதலிடம் பிடித்து பள்ளிக்கு பெருமை சேர்த்தமைக்காக மாணவனுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டு 10 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது.
அதேபோல் அரசு பள்ளியில் தருமபுரி மாவட்டத்தில் முதலிடம் பிடித்த விக்னேஷ் என்ற மாணவனுக்கு 6000 ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட்டது.
மேலும் இந்நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முருகேசன், துணைத்தலைவர் சரவணன், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் அசோக்குமார், பள்ளியின் இணைந்த கரங்கள் அமைப்பு மாரிமுத்து, சந்திரன், மற்றும் சம்பத்குமார், ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கார் சிலை முன்பு நடைபெற்றது.
- பள்ளி குழந்தைகள் என அனைவரும் கலந்து காமராஜர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தருமபுரி,
தருமபுரி மேற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில், காமராஜர் பிறந்த நாள் விழா மற்றும் தொல் திருமாவளவன் தந்தை தொல்காப்பியன் நினைவு நாள், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கார் சிலை முன்பு நடைபெற்றது.
இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் ஜெயந்தி, தலைமை தாங்கினார். தருமபுரி நகர துணைச் செயலாளர் உமா சங்கர், நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மண்டல செயலாளர் நந்தன், மாவட்ட பொருளாளர் மன்னன், தருமபுரி சட்டமன்ற தொகுதி செயலாளர் சக்தி (எ) சமத்துவன், மாவட்ட துணைச் செயலாளர் மின்னல் சக்தி, தருமபுரி நகராட்சி 30 வார்டு வி.சி.க. கவுன்சிலர் விஜயலட்சுமி உமாசங்கர், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கட்சியின் மாநில, மாவட்ட, தொகுதி, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் அம்பேத்வளவன், ரங்கநாதன் (எ) கரிகாலன், ராமதுரை மற்றும் முகாம் பொறுப்பாளர்களும், துணைநிலை அமைப்பின் பொறுப்பாளர்களும், உள்ளாட்சி பிரதிநிதிகள், பள்ளி குழந்தைகள் என அனைவரும் கலந்து காமராஜர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தந்தை தொல்காப்பியன் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.






