என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளி செல்லா, இடை நின்ற குழந்தைகளைகண்டறிந்து, மீண்டும் பள்ளியில் சேர்க்கவேண்டும்
    X

    பள்ளி செல்லா, இடை நின்ற குழந்தைகளைகண்டறிந்து, மீண்டும் பள்ளியில் சேர்க்கவேண்டும்

    • அரசு பள்ளிகளின் வளர்ச்சியில் அங்கு படித்த முன்னாள் மாணவர்களை பங்குபெறச் செய்ய வேண்டும்.
    • அரசு பள்ளிகளில் படித்த முன்னாள் மாணவர்கள், தங்கள் விவரங்களை பதிவு செய்து, முன்னாள் மாணவர்கள் மன்றத்தில் இணைய வேண்டும்.

    தருமபுரி,

    இக்கூட்டத்தில் முக்கிய அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பு செய்வது, தொடர்ந்து உயர்கல்வி வரை படிக்க வழிகாட்டுவது, இடையில் நின்ற மாணவர்களை பள்ளியில் சேர்ப்பது என முடிவு செய்யப்பட்டது.

    தருமபுரி நகராட்சி தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:-

    பள்ளிகளின் வளர்ச்சியில் மேலாண்மை குழு உறுப்பினர்களின் பங்குகள் மற்றும் கடமைகள் அதிகம் உள்ளன. அரசு பள்ளிகளின் வளர்ச்சியில் அங்கு படித்த முன்னாள் மாணவர்களை பங்குபெறச் செய்ய வேண்டும்.

    இதற்காக பள்ளிக் கல்வித் துறையால் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. https://nammaschool.tnschools.gov.in என்ற இணையதளத்தில் அரசு பள்ளிகளில் படித்த முன்னாள் மாணவர்கள், தங்கள் விவரங்களை பதிவு செய்து, முன்னாள் மாணவர்கள் மன்றத்தில் இணைய வேண்டும். அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டுக்காக தமிழக அரசு மற்றும் பள்ளி கல்வித்துறை எடுத்து வரும் முயற்சிகளுக்கு பக்க பலமாக இருக்க வேண்டும்.

    மேலும், தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் நான் முதல்வன், பள்ளி செல்லா மற்றும் இடை நின்ற குழந்தைகளை கண்டறிந்து, மீண்டும் பள்ளியில் சேர்க்கவேண்டும்.

    இல்லம் தேடிக் கல்வி, 4 மற்றும் 5 வகுப்பு மாணவர்களின் கற்றல் அடைவை மேம்படுத்த அறிமுகப்படுத்தப்பட்டு உள்ள எண்ணும் எழுத்தும் திட்டம் , மற்றும் சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கான செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வை மேலாண்மை குழு, உறுப்பினர்கள் ஏற்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×