என் மலர்
தர்மபுரி
- தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் நல்ல மழை பெய்துள்ளது.
- இன்றுகாலை ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1500 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் அதிகரித்து வந்தது.
ஒகேனக்கல்,
கர்நாடகா மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் நல்ல மழை பெய்துள்ளது.
இதனால் இன்றுகாலை ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1500 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் அதிகரித்து வந்தது. மெயின் அருவி, சினிபால்ஸ், ஐவர்பாணி அருவிகளில் தண்ணீர் ஆர்பரித்து கொட்டுகிறது. காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தை பிலிகுண்டுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளவீடு செய்து கண்காணித்து வருகின்றனர்.
- ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அனைத்தும் சிதிலமடைந்து ஆங்காங்கே விரிசல்கள் ஏற்பட்டு எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலை உள்ளது.
- ஆபத்தான கட்டிடம் இடிந்தால் பள்ளி வளாகத்தில் சிறு குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கும் போது உயிரிழப்பு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அரூர்,
தருமபுரி மாவட்டம், அரூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட எச்.அக்ரஹாரம் ஊராட்சியில் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வரும் நிலையில் பள்ளிக்கு சொந்தமான நிலத்தில் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்து கடைகள் கட்டி வாடகைக்கு விடப்பட்டிருக்கிறது.
இந்த ஆக்கிரமிப்பு கட்டிடத்தை அகற்றக்கோரி ஊராட்சி மன்ற நிர்வாகத்தில் தீர்மானங்கள் போடப்பட்டும் தற்போது வரை கல்வி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அனைத்தும் சிதிலமடைந்து ஆங்காங்கே விரிசல்கள் ஏற்பட்டு எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலை உள்ளது.
ஆபத்தான கட்டிடம் இடிந்தால் பள்ளி வளாகத்தில் சிறு குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கும் போது உயிரிழப்பு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த அரசு பள்ளியில் சிதிலமடைந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்களை உடனே அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
- தென்பெண்ணை ஆற்றிலும் இன்று காலை தர்ப்பணம் கொடுக்க ஏராளமானோர் வந்தனர். அவர்கள் ஆற்றின் கரையோரம் இருந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிப்பட்டனர்.
- தருமபுரி மாவட்டத்தில் உள்ள மாரியம்மன் கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.
தருமபுரி,
ஆடி அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடக்கூடிய மிக சிறந்த நாளாக கருதப்படுகிறது. அந்த நாளில் முன்னோர்களை நினைத்து எள்ளும், தண்ணீரும் இரைத்து செய்யும் வழிபாடு தர்ப்பணம் ஆகும்.
வருடந்தோறும், ஆடி மாதத்தில் வரக்கூடிய அமாவாசை நாளில் ஆறு, குளம் போன்ற நீர்நிலைகளில் பொது–மக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்வார்கள்.
இந்த வருடம் ஆடி பிறப்பான முதல் நாளான இன்று ஆடி அமாவாசையும் சேர்ந்து வருவதால், பொது–மக்கள் ஆறு, குளம் போன்ற நீர்நிலைகளில் உள்ள கோவில்களுக்கு சென்று சாமியை தரிசனம் செய்ய குவிந்தனர்.
ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று தருமபுரி, கிருஷ்ண–கிரி மாவட்டங்களில் நீர் நிலைகளில் மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர்.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள கெல–வரப்பள்ளி அணையிலும், போச்சம்பள்ளி அருகேயுள்ள இருமத்தூர், ஊத்தங்கரை அடுத்த அனுமந்தீர்த்தம் ஆகிய பகுதியில் ஓடும் தென்பெண்ணை ஆற்றிலும் இன்று காலை தர்ப்பணம் கொடுக்க ஏராளமானோர் வந்தனர். அவர்கள் ஆற்றின் கரையோரம் இருந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிப்பட்டனர்.
ஆடிபிறப்பையொட்டி கிருஷ்ணகிரியில் மாரியம்மன், காளியம்மன் கோவில்களில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர்.
தருமபுரி
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் அதிகாலை முதலே தங்கள் முன்னோர்க–ளுக்கு தர்ப்பணம் செய்ய குவிந்தனர். காவிரி ஆற்றில் நீராடி தங்களின் முன்னோர்களுக்கு பூஜை செய்து தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர். இதேபோன்று பென்னாகரம், நாகமரை, ஏரியூர் ஆகிய பகுதியில் காவிரி ஆற்றில் பொது–மக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிப்பட்டனர்.
ஆடி பிறப்பை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்தில் பொதுமக்கள் தங்களது குலத்தெய்வத்திற்கு கோழி, கிடா வெட்டி, பொங்கல் வைத்து வழிப்பட்டு வருவது வழக்கம். இதையொட்டி இன்று தருமபுரி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்களது குலத்தெய்வ கோவிலுக்கு சென்று பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு செய்தனர்.
இதேபோன்று நீர்நிலை–களில் உள்ள கோவில்க–ளுக்கும் சென்று பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர். இதைத்தொடர்ந்து அரூர் அருகே தீர்த்தமலை நீப்பத்துறையில் ஆற்றில் பக்தர்கள் நீராடிவிட்டு கிடா வெட்டி பொங்கல் வைத்து வழிப்பட்டனர்.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள மாரியம்மன் கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.
ஒகேனக்கல்லில் குவிந்த புதுமண தம்பதிகள்
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு ஆடி அமாவாசை மற்றும் ஆடி பிறப்பை முன்னிட்டு இன்று தருமபுரி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் மற்றும் கிருஷ்ணகிரி, சேலம் போன்ற மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அதிகாலை முதலே குவிந்த வண்ணம் இருந்தனர்.
பொதுமக்களில் சிலர் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இறங்கி நீராடிவிட்டு தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.
இதேபோன்று ஆடிபிறப்பை யொட்டி புதுமண தம்பதிகள் ஒகேனக்கல்லுக்கு வந்து நீராடிவிட்டு அவர்கள் கொண்டு வந்த பூமாலையை ஆற்றில் விட்டு சூரியனை வணங்கினர். மேலும், அங்குள்ள காவிரியம்மன் கோவிலில் அம்மனை வழிபட்டனர்.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தற்போது வினாடிக்கு 1500 கன அடி தண்ணீர் வந்துக்கொண்டிருக்கிறது. அதிக அளவில் மக்கள் கூட்டம் வரும் என்பதால் ஒகேனக்கல் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்
- சோதனை நடத்தியதில், விற்பனைக்காக கஞ்சா பொட்டலங்களை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.
- அவனிடமிருந்த ரூ.500 மதிப்பிலான கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
தொப்பூர்,
தருமபுரி மாவட்டம், நார்த்தம்பட்டி பேருந்து நிறுத்தம் பகுதியில் கஞ்சா பொட்டலங்கள் விற்பதாக போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த தகவலின்பேரில் சம்மந்தப்பட்ட பேருந்து நிறுத்தம் பகுதியில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர்.
அப்போது நார்த்தம்பட்டி பேருந்து நிறுத்தம் பகுதியில், அமர்ந்திருந்த 17 வயது சிறுவனை போலீசார் பிடித்து சோதனை நடத்தியதில், விற்பனைக்காக கஞ்சா பொட்டலங்களை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.
பிடிப்பட்ட 17 வயது சிறுவன் நார்த்தம்பட்டி பகுதியை சேர்ந்தவன் என்பது தெரியவந்தது. பின்னர் அதியமான்கோட்டை போலீசார் 17 வயது சிறுவனை கைது செய்து, அவனிடமிருந்த ரூ.500 மதிப்பிலான கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
- சம்மந்தப்பட்ட கோவிலுக்கு பின்புறம் சூதாட்டத்தில் ஈடுபட்ட கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர்.
- அவர்களிடமிருந்த ரொக்கம் ரூபாய் 300-ஐ பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
தொப்பூர்,
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே நார்த்தம்பட்டி கிராமத்தில் உள்ளது மாரியம்மன் கோவில். இக்கோவிலுக்கு பின்புறம் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அப்பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர்.
அப்போது சம்மந்தப்பட்ட கோவிலுக்கு பின்புறம் சூதாட்டத்தில் ஈடுபட்ட கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர்.
பிடிபட்ட நபர்கள் நார்த்தம்பட்டி பகுதியைச் சேர்ந்த குப்பாகவுண்டன், கார்த்தி, வேடியப்பன் ஆகியோர் என்பது தெரியவந்தது. பின்னர் மூன்று பேரையும் அதியமான்கோட்டை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்த ரொக்கம் ரூபாய் 300-ஐ பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
- கூலி தொழிலாளியான இவரை சம்பவத்தன்று 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று தாக்கி, சம்மந்தப்பட்ட வீடியோவை சமூக வலைதளங்களில் வைரலாக பதிவிட்டதாக கூறப்படுகிறது.
- இந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்ககோரி, கூலி தொழிலாளி பெருமாள் போலீசில் புகார் கொடுத்தார்.
தொப்பூர்,
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் பெருமாள் (வயது45). கூலி தொழிலாளியான இவரை சம்பவத்தன்று 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று தாக்கி, சம்மந்தப்பட்ட வீடியோவை சமூக வலைதளங்களில் வைரலாக பதிவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்ககோரி, கூலி தொழிலாளி பெருமாள் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின்பேரில் அதியமான்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, கூலி தொழிலாளியை தாக்கி சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்ட விவகாரம் தொடர்பாக, நல்லம்பள்ளி ஆதிதிராவிடர் காலனியை பகுதியைச் சேர்ந்த ஆதிகேசவன் (23), அபிஷேக் (21), சுந்தரமூர்த்தி (22) ஆகிய 3 பேரை நேற்று கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும் இதில் தலைமறைவாகியுள்ள 17 வயது சிறுவனையும் போலீசார் தேடி வருகின்றனர்.
- இப்பகுதியில் உள்ள நன்கு வளர்ந்த மரங்களை வெட்டி செங்கல் சூளைக்காக லாரிகளில் சில மர்ம நபர்கள் கடத்தி வருகின்றனர்.
- அரசு அதிகாரிகளுக்கு போன் மூலம் தகவல் கொடுத்தும் அதிகாரிகள் வெள்ளக்கரடு பகுதிக்கு ஆய்வுக்கு வராமலேயே பட்டா நிலத்தில் தான் மரங்கள் வெட்டப்படுகிறது என்று கூறுகின்றனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுகா மாங்கரை பஞ்சாயத்திற்கு உட்பட்ட மஞ்சநாயக்கனஅள்ளி கிராமம், வெள்ளக்கரடு பகுதியில் அரசுக்கு சொந்தமான 100 ஏக்கருக்கு மேல் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது.
இந்த புறம்போக்கு நிலத்தில் வேம்பு, துருஞ்சி, பாலை வகையைச் சேர்ந்த மரங்கள் வளர்ந்து வனப்பகுதி போல் காட்சியளிக்கிறது. இப்பகுதியில் உள்ள நன்கு வளர்ந்த மரங்களை வெட்டி செங்கல் சூளைக்காக லாரிகளில் சில மர்ம நபர்கள் கடத்தி வருகின்றனர்.
இதேபோல் நேற்று வெள்ளக்கரடு பகுதியில் உள்ள துருஞ்சி, வேம்பு, பாலை உள்ளிட்ட மரங்களை மர்மநபர்கள் வெட்டி கடத்தியுள்ளனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில் வெள்ளக்கரடு ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி என்பதால் மர்ம நபர்கள் சிலர் நன்கு வளர்ந்த மரங்களை வெட்டி லாரிகளில் கடத்தி வருகின்றனர்.
இதே போல் நேற்றும் வெள்ளக்கரடு பகுதியில் 5 லட்சம் மதிப்புள்ள மரங்களை வெட்டி லாரியில் ஏற்றும் போது சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு போன் மூலம் தகவல் கொடுத்தும் அதிகாரிகள் வெள்ளக்கரடு பகுதிக்கு ஆய்வுக்கு வராமலேயே பட்டா நிலத்தில் தான் மரங்கள் வெட்டப்படுகிறது என்று கூறுகின்றனர்.
எனவே மரங்களை வெட்டி கடத்தி வரும் மர்ம நபர்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தொடர்ந்து தூய இருதய ஆண்டவர் தேர் பவனி நடைபெற்றது.
- இன்று 17-ந்தேதி தூய இருதய ஆண்டவர் ஆண்டு விழா நிறைவுற்று கொடியிறக்கம் நடைபெறும்.
தருமபுரி,
தருமபுரி மரை மாவட்ட தூய இருதய ஆண்டவர் பெருவிழா கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தருமபுரி மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ் பயாஸ் தலைமையேற்று திருப்பலி உடன் கொடியேற்றி தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து 9 நாட்கள் நவ நோன்பு நடைபெற்று வந்த நிலையில் நேற்று 16-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணிக்கு தூய இருதய ஆண்டவர் தேர் பவனி தொடங்கியது.
அதற்கு முன்னதாக மறைமாவட்ட தலைமை அருள் ராஜ் தலைமையில் திருபலி நடைபெற்றது. இந்த திருப்பலி நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
அதனை தொடர்ந்து தூய இருதய ஆண்டவர் தேர் பவனி நடைபெற்றது. இந்த தேர்பவனி எஸ்.வி. ரோடு, பி.எஸ்.என்.எல். அலுவலகம், செங்கொடிபுரம், பஸ்நிலையம் வழியாக தூய இருதய ஆண்டவர் ஆலயத்தை வந்தடைந்தது.
இதனைத் தொடர்ந்து நற்கருணை ஆசீர் ஆகிய நிகழ்ச்சிகள் தருமபுரி பங்கு ஆலயத்தின் சார்பில் நடைபெற்றது. இன்று 17-ந்தேதி தூய இருதய ஆண்டவர் ஆண்டு விழா நிறைவுற்று கொடியிறக்கம் நடைபெறும்.
நிகழ்ச்சியில் தருமபுரி மறை மாவட்ட ஆயர் தலைமையில் பல்வேறு கிறிஸ்துவ அமைப்புகளின் நிர்வாகிகளும், ஆயர் இல்ல செயலர், தருமபுரி சமூக சேவை இயக்குனர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.
- எதிர்பாராத விதமாக காரில் இருந்து புகை கிளம்பி உள்ளது.
- தொடர்ந்து தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தருமபுரி,
தருமபுரி அடுத்த செட்டிக்கரை அருகேயுள்ள சத்யா நகர் பகுதியில் ரங்கசாமி என்பவருக்கு சொந்தமான காரை, உறவுக்கார இளைஞர்கள் சிலர் நேற்று மாலை மைதானத்திற்கு எடுத்துச் சென்று கார் ஓட்டி பழகும் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்பகுதியில் இருந்த சிலர் கார் பயிற்சியில் ஈடுபட்டவர்களை இப்பகுதியில் அச்சுறுத்தும் வகையில் காரை ஓட்டக்கூடாது என்று எச்சரித்துள்ளனர்.
அப்போது காரை நிறுத்திவிட்டு, காரில் இருந்து இறங்கி தூரமாக சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக காரில் இருந்து புகை கிளம்பி உள்ளது.
இதனைக் கண்டு காரில் வந்தவர்கள் பார்த்துள்ளனர். அப்போது காரில் தீ பற்றி எரிந்துள்ளது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த இளைஞர்கள் உடனடியாக தருமபுரி தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.
தொடர்ந்து தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் இந்த தீ விபத்தில் கார் முழுமையாக எரிந்து சேதமானது.
இந்த சம்பவம் குறித்து தருமபுரி நகர காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து குடியிருப்பு பகுதிக்குள் கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- திட்ட பணிகளுக்கான பூமி பூஜை பேரூராட்சி தலைவர் கே.எஸ். மணி தலைமையில் நடைபெற்றது.
- ரூ.50 லட்சம் மதிப்பில் பேவர்பிளாக் சாலை அமைக்க பூமி பூஜை போடப்பட்டது.
கடத்தூர்,
தருமபுரி மாவட்டம், கடத்தூர் பேரூராட்சி பகுதியில் ரூ.70 லட்சத்தில் திட்ட பணிகளுக்கான பூமி பூஜை பேரூராட்சி தலைவர் கே.எஸ். மணி தலைமையில் நடைபெற்றது.
5-வது வார்டில் ரூ.20 லட்சம் மதிப்பில் மூன்று வீதிகளில் தார் சாலை மற்றும் 6-வது வார்டில் ரூ.50 லட்சம் மதிப்பில் பேவர்பிளாக் சாலை அமைக்க பூமி பூஜை போடப்பட்டது.
இந்த நிகழ்சியில் துணைத்தலைவர் வினோத் (எ) தீர்த்தகிரி, சிவன், மாறன் உள்பட ஊர்பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- புதிய வீட்டிற்கு மின் இணைப்புகள் வழங்குவதற்காக அருகில் உள்ள வீட்டில் இருந்து மின்சாரம் எடுக்கும் போது மின்சாரம் பாய்ந்ததில் முருகன் தூக்கி வீசப்பட்டார்.
- அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
பென்னாகரம்,
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே புளிக்கரை பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (வயது45). எலக்ட்ரீசியன். இவர் தனது உறவினரான பென்னாகரம் எம்.கே.எஸ். நகர் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவரின் வீட்டிற்கு எலக்ட்ரீசியன் வேலை செய்ய வந்துள்ளார்.
புதிய வீட்டிற்கு மின் இணைப்புகள் வழங்குவதற்காக அருகில் உள்ள வீட்டில் இருந்து மின்சாரம் எடுக்கும் போது மின்சாரம் பாய்ந்ததில் முருகன் தூக்கி வீசப்பட்டார்.
இதில் படுகாயம் அடைந்த முருகனை அக்கம் பக்கத்தினர் மீட்டு பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக உடல் அனுப்பப்பட்டது.
இது குறித்து பென்னாகரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- இவ்விழாவில் பள்ளி மழலைகள் காமராஜர் போல் வேடம் அணிந்து கல்வி கண் திறந்த காம ராசரை பெருமைப்படுத்தினர்.
- இவ்விழாவை சிறப்பிக்க கல்வி இயக்குநர் ஜான் இருதயராஜ் பட்டிமன்றத்தின் நடுவராக தலைமை தாங்கினார்.
மொரப்பூர்,
தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர், ஸ்ரீராம் பப்ளிக் பள்ளியில் காமராஜரின் 121-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
வள்ளுவர் தமிழ் இலக்கிய மன்றத்தின் சார்பாக பள்ளியின் தாளாளர் வேடியப்பன், சாந்தி வேடியப்பன் ஆகியோர் காமராஜரின் உருவபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதில் பள்ளி இயக்குநர் தமிழ்மணி, பவானி தமிழ்மணி கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினர்.
மேலும் இவ்விழாவை சிறப்பிக்க கல்வி இயக்குநர் ஜான் இருதயராஜ் பட்டிமன்றத்தின் நடுவராக தலைமை தாங்கினார். பள்ளியின் முதல்வர் வெற்றிவேல் செல்வம் நன்றி கூறினார்.
பள்ளியின் ஒருங்கிணைப்பாளர்கள் ராஜ்குமார், ஏஞ்சலீனா, உமா தேவி மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் பள்ளி மழலைகள் காமராஜர் போல் வேடம் அணிந்து கல்வி கண் திறந்த காமராசரை பெருமைப்படுத்தினர். மேலும் பள்ளியில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் தாளாளர், இயக்குநர் மற்றும் முதல்வர் ஆகியோர் பரிசுகளை வழங்கி பாராட்டினர்.






