என் மலர்
உள்ளூர் செய்திகள்

அக்ரஹாரம் தொடக்கப்பள்ளி வளாகத்தில் சிதலமடைந்த கட்டிடங்களை படத்தில் காணலாம்.
இடிந்து விழும் நிலையில் உள்ள சிதலமடைந்த பள்ளி கட்டிடத்தை அகற்ற வேண்டும்
- ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அனைத்தும் சிதிலமடைந்து ஆங்காங்கே விரிசல்கள் ஏற்பட்டு எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலை உள்ளது.
- ஆபத்தான கட்டிடம் இடிந்தால் பள்ளி வளாகத்தில் சிறு குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கும் போது உயிரிழப்பு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அரூர்,
தருமபுரி மாவட்டம், அரூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட எச்.அக்ரஹாரம் ஊராட்சியில் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வரும் நிலையில் பள்ளிக்கு சொந்தமான நிலத்தில் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்து கடைகள் கட்டி வாடகைக்கு விடப்பட்டிருக்கிறது.
இந்த ஆக்கிரமிப்பு கட்டிடத்தை அகற்றக்கோரி ஊராட்சி மன்ற நிர்வாகத்தில் தீர்மானங்கள் போடப்பட்டும் தற்போது வரை கல்வி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அனைத்தும் சிதிலமடைந்து ஆங்காங்கே விரிசல்கள் ஏற்பட்டு எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலை உள்ளது.
ஆபத்தான கட்டிடம் இடிந்தால் பள்ளி வளாகத்தில் சிறு குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கும் போது உயிரிழப்பு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த அரசு பள்ளியில் சிதிலமடைந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்களை உடனே அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.






