search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாங்கரை அரசு மேல்நிலை பள்ளியில் தமிழகத்தில் முதலிடம் பிடித்த மாணவனுக்கு பாராட்டு விழா
    X

    காமராஜர் உருவபடத்துக்கு அரசு பள்ளி மாணவிகள் மலர் தூவி மரியாதை செலுத்திய காட்சி.

    மாங்கரை அரசு மேல்நிலை பள்ளியில் தமிழகத்தில் முதலிடம் பிடித்த மாணவனுக்கு பாராட்டு விழா

    • நிகழ்ச்சியில் பல்வேறு போட்டிகள் நடத்தப் பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படடது.
    • அரசு பள்ளியில் தருமபுரி மாவட்டத்தில் முதலிடம் பிடித்த விக்னேஷ் என்ற மாணவனுக்கு 6000 ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட்டது.

    தருமபுரி,

    பெருந்தலைவர் காமராஜரின் 121-வது பிறந்தநாள் தினம் நேற்று தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது.

    இதன் ஒரு பகுதியாக தருமபுரி அடுத்த மாங்கரை அரசு மேல்நிலைப் பள்ளியில் கர்மவீரர் காமராஜர் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டா டப்பட்டது.

    இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் மாரிமுத்து தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக இதே பள்ளியில் படித்த அரசு மருத்துவர் முனுசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

    நிகழ்ச்சியில் பல்வேறு போட்டிகள் நடத்தப் பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    இதற்கு முன்னதாக பள்ளியில் படிக்கும் 800-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் காமராஜரின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    இதனை தொடர்ந்து இதே பள்ளியில் 12-ம் வகுப்பு படித்த பச்சியப்பன் என்ற மாணவன் 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ். தேர்ச்சியில் தமிழகத்தில் முதலிடம் பிடித்து பள்ளிக்கு பெருமை சேர்த்தமைக்காக மாணவனுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டு 10 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது.

    அதேபோல் அரசு பள்ளியில் தருமபுரி மாவட்டத்தில் முதலிடம் பிடித்த விக்னேஷ் என்ற மாணவனுக்கு 6000 ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட்டது.

    மேலும் இந்நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முருகேசன், துணைத்தலைவர் சரவணன், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் அசோக்குமார், பள்ளியின் இணைந்த கரங்கள் அமைப்பு மாரிமுத்து, சந்திரன், மற்றும் சம்பத்குமார், ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×