என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரியில் பலத்த மழை
    X

    தருமபுரியில் பலத்த மழை

    • நேற்று மாலையும் திடீரென மழை பெய்தது.
    • பென்னாகரம், கம்பைநல்லூர், அரூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்தது.

    தருமபுரி,

    தென்மேற்கு பருவமழை காலதாமதமாக தொடங்கியுள்ளது. இதனால் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தினம் தோறும் கனமழை பெய்து வருகிறது.

    தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய 8 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

    இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தினந்தோறும் மாலை நேரத்தில் மிதமான மழை பெய்து வருகிறது.

    இந்நிலையில் நேற்று மாலையும் திடீரென மழை பெய்தது.

    தருமபுரியில் மிதமான மழையும், நல்லம்பள்ளி அதனை சுற்றி உள்ள பகுதிகளில் கனமழையும் பெய்தது.

    அதேபோல் பென்னா கரம், கம்பைநல்லூர், அரூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்தது.

    இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சீதோஷ்ண நிலை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்தது.

    Next Story
    ×