search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒகேனக்கல் நீரேற்று நிலையத்தில் எம்.எல்.ஏ. ஆய்வு
    X

    ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் முதல் நீரேற்று நிலையத்தில் பென்னாகரம் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் ஜி.கே.மணி ஆய்வு மேற்கொண்டார்.

    ஒகேனக்கல் நீரேற்று நிலையத்தில் எம்.எல்.ஏ. ஆய்வு

    • மற்ற பகுதிகளை காட்டிலும் ஒகேனக்கல் பகுதியில் மின்தடை ஏற்படாதவாறு மின்சார வாரியம் மற்றும் அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
    • தங்கு தடையின்றி ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும். தங்கு தடையின்றி ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஒகேனக்கல்,

    தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் நீரேற்று நிலையத்தில் பென்னாகரம் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ. ஆய்வு மேற்கொண்டு, நாள்தோறும் இரு மாவட்ட மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரின் அளவுகள் குறித்து கூட்டுக் குடிநீர் திட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் கடந்த சில நாட்களாக முறையாக கிடைப்பதில்லை என புகார் எழுந்துள்ளது.

    இதற்கான காரணம் ஒகேனக்கல் பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின்தடை என கூட்டுக் குடிநீர் திட்ட அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

    ஒகேனக்கல் பகுதிக்கு இரண்டு வழிப்பாதையில் மின்விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில், அவற்றில் ஏதேனும் ஒன்று பழுதடைந்தால் அதனை சரி செய்வதற்காக சென்னை மற்றும் சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஊழியர்கள் வர வேண்டிய நிலை உள்ளது.

    இதனால் குடிநீர் விநியோகம் பாதிப்பு ஏற்படுகிறது. மற்ற பகுதிகளை காட்டிலும் ஒகேனக்கல் பகுதியில் மின்தடை ஏற்படாதவாறு மின்சார வாரியம் மற்றும் அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இது குறித்து மின்வாரிய அலுவலர், கூட்டு குடிநீர் திட்ட அலுவலர்களிடம் கலந்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.

    இன்னும் ஓரிரு நாட்களுக்குள் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு தங்கு தடையின்றி ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இந்த ஆய்வுகளின் போது உதவி நிர்வாகப் பொறியாளர் முருகன், மாவட்டத் தலைவர் செல்வகுமார், இளைஞர் சங்க மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×