என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பட்டுக்கூடுகள் விலை உயர்வு"

    • நேற்று முன்தினம் அதிகபட்சமாக ரூ.447-க்கு விற்பனையான பட்டுக்கூடு நேற்று கிலோவிற்கு ரூ.61 விலை அதிகரித்தது.
    • மொத்தம் ரூ.6 லட்சத்து 55 ஆயிரத்து 132 மதிப்பில் பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது.

    தருமபுரி,

    தருமபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக் கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள்.

    இந்த அங்காடிக்கு நேற்று முன்தினம் 1,814 கிலோவாக (1¾ டன்) இருந்த பட்டுக்கூடுகள் வரத்து நேற்று 1531 கிலோவாக (1½ டன்) குறைந்தது.

    பட்டுக்கூடுகள் வரத்து குறைந்த நிலையில் தேவை அதிகரித்ததால் நேற்று முன்தினம் அதிகபட்சமாக ரூ.447-க்கு விற்பனையான பட்டுக்கூடு நேற்று கிலோவிற்கு ரூ.61 விலை அதிகரித்தது.

    நேற்று ஒரு கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.508-க்கும், குறைந்த பட்சமாக ரூ.287-க்கும், சராசரியாக ரூ.427.83-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.6 லட்சத்து 55 ஆயிரத்து 132 மதிப்பில் பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது.

    ×