என் மலர்
கடலூர்
கடலூர் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்து 462 ஆக உயர்ந்துள்ளது.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 26 ஆயிரத்து 335 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 25 ஆயிரத்து 465 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 292 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் நேற்று வெளியான பரிசோதனை முடிவில் மேலும் 127 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
இவர்களில் மராட்டியத்தில் இருந்து கடலூர் வந்த 2 பேருக்கும், சென்னையில் இருந்து குமராட்சி, குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வந்த 9 பேருக்கும், விருதுநகரில் இருந்து என்.எல்.சி. பகுதிக்கு வந்த ஒருவருக்கும், அறுவை சிகிச்சைக்காக காத்திருந்த 2 பேருக்கும், சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 41 பேருக்கும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 72 பேருக்கும் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்து 462 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 39 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், இன்னும் 24 பேருடைய உமிழ்நீர் பரிசோதனை முடிவு வரவேண்டியுள்ளது.
சிறுபாக்கம் பகுதியில் சாமந்தி பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன. மேலும் அமோக விளைச்சலால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
சிறுபாக்கம்:
சிறுபாக்கம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதி மக்களுக்கு விவசாயமே பிரதான தொழிலாகும். அப்பகுதி விவசாயிகள் தங்களது நிலங்களில் கரும்பு, மரவள்ளி உள்ளிட்ட பயிர்களை அதிகளவில் சாகுபடி செய்து வந்தனர். ஆண்டுதோறும் ஏற்பட்ட பருவநிலை மாற்றத்தால், இப்பயிா் சாகுபடியில் வருவாய் இழப்பு ஏற்பட்டு வந்தது.
இதனால் சிறு குறு விவசாயிகள் தங்களது வயல்களில் பூ வகை பயிா்களை சாகுபடி செய்ய முடிவு செய்தனா். அதன்படி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் சம்பங்கி, சாமந்தி, டில்லி கனகாம்பரம் உள்ளிட்ட பூ வகை பயிா்களை சாகுபடி செய்தனா். பின்னா் அவற்றுக்கு கிணற்று பாசனம் மூலம் தண்ணீா் பாய்ச்சி பராமாித்து வந்தனா். தற்போது சாமந்தி பூக்கள் பூத்து குலுங்குகின்றன. சாமந்தி பூ அமோக விளைச்சலை கொடுத்துள்ளது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் சாமந்தி சாகுபடி செய்த விவசாயிகள் அதிகாலையில் பூக்களை பறித்து விருத்தாசலம், கள்ளக்குறிச்சி, ஆத்தூர் பகுதிகளில் இருந்து வரும் வியாபாரிகளிடம் விற்று, வருவாய் ஈட்டுகின்றனர். குறைந்த செலவினத்தில் போதிய லாபம் கிடைப்பதால் சிறு குறு விவசாயிகளிடம் பூ வகை பயிா்களை சாகுபடி செய்வது வரவேற்பை பெற்றுள்ளது. இதனை ஊக்குவிக்கும் விதமாக மானிய விலையில் விதைகள், உரம், நெற்றிக்கண் விளக்கு வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேப்பூர் அருகே கார்-மினி லாரி மோதிய விபத்தில் அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியரின் மகன் உயிரிழந்தார்.
வேப்பூர்:
நெல்லை மாவட்டம் ஆவாரைகுளம் பகுதியை சேர்ந்தவர் தங்கராசு(வயது 43). இவர் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
நேற்று காலை தங்கராசு, தனது மனைவி பாலகுமுதா(33), மகன் குருபிரசாத்(5) ஆகியோருடன் தனக்கு சொந்தமான காரில் நெல்லைக்கு புறப்பட்டார். காரை தங்கராசு ஓட்டினார்.
இவர்களது கார், வேப்பூர் அடுத்த கண்டப்பங்குறிச்சி பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே ஒசூரில் இருந்து இரும்பு கம்பிகள் ஏற்றி வந்த மினி லாரியும் தங்கராசு ஓட்டிச்சென்ற காரும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி சிறுவன் குருபிரசாத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். தங்கராசு, பாலகுமுதா ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த வேப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து படுகாயமடைந்த தங்கராசு, பாலகுமுதா ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டா்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதற்கிடையே பலியான சிறுவன் குரு பிரசாத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருத்தாசலம் அருகே கோவில் தர்மகர்த்தா அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருத்தாசலம்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மேலப்பாளையூர் கிராமத்தை சேர்ந்தவர் தவலிங்க செல்வராயர் (வயது 72). இவர் அப்பகுதியில் உள்ள கோவில்களுக்கு தர்மகர்த்தாவாக இருந்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு இவர் வீட்டில் இருந்தபோது, அவரது செல்போன் எண்ணுக்கு அழைப்பு வந்தது. இதையடுத்து தவலிங்க செல்வராயர், வீட்டில் உள்ளவர்களிடம் வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார். பின்னர் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் தவலிங்க செல்வராயரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். இருப்பினும் அவரை பற்றிய எந்தவொரு தகவலும் இல்லை.
இந்த நிலையில் நேற்று காலையில் அதே கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகே ஒரு விவசாய நிலத்தில் ரத்தக்காயங்களுடன், தவலிங்க செல்வராயர் பிணமாக கிடந்தார். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து போலீசாருக்கும், அவரது உறவினருக்கும் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அவரது உறவினர்கள் விரைந்து வந்து தவலிங்க செல்வராயரின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
இதற்கிடையே கருவேப்பிலங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். அதில் தவலிங்க செல்வராயரை மர்மநபர்கள் யாரோ அடித்துக்கொலை செய்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. ஆனால் அவரை கொலை செய்தவர்கள் யார்? கொலை செய்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து உடனடியாக தெரியவில்லை.
இதற்கிடையே கடலூரில் இருந்து மோப்பநாய் புருனோ வரவழைக்கப்பட்டது. அது கொலை செய்யப்பட்டவரின் உடலை மோப்பம்பிடித்த படி இறந்தவரின் வீடு வரை சென்று மீண்டும் அதே இடத்திற்கு திரும்பி வந்தது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. மேலும் தடயவியல் நிபுணர்கள், தடயங்களை சேகரித்து சென்றனர்.
முன் விரோதத்தின் காரணமாக தவலிங்க செல்வராயரை யாரேனும் அடித்துக் கொலை செய்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில் தர்மகர்த்தா கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இறந்த தவலிங்க செல்வராயருக்கு புஷ்பவல்லி என்ற மனைவியும், 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளரிடம் பணம் பறித்து கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சிதம்பரம்:
சிதம்பரம் ஆரணியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சந்திரபிரபு (வயது 36). பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்ட செயலாளரான இவர், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சிதம்பரம் தொகுதி வேட்பாளராகவும் போட்டியிட்டார். நேற்று முன்தினம் இரவு இவர் சிதம்பரம் புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்த போது அங்கு வந்த சிதம்பரம் சகஜானந்தா தெருவை சேர்ந்த வெற்றிச்செல்வன்(30) என்பவர், திடீரென சந்திரபிரபுவின் சட்டை பையில் இருந்த பணத்தை பறித்தார். பின்னர் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில் சிதம்பரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து வெற்றிச்செல்வனை கைது செய்தனர்.
சட்டமன்றத் தேர்தலின்போது எதிர்க்கட்சியினருக்கு ஆதரவாக பணியாற்றியமைக்காக அதிமுக நிர்வாகிகள் நீக்கப்பட்டுள்ளனர்.
சென்னை:
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கழகத்தின் கொள்கை- குறிக்கோள்கக்கும் கேட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப் பெயரும் உண்டாகும் விதத்திலும், நடைபெற்று முடிந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலில் கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்த்தும், எதிர்க்கட்சியினருக்கு ஆதரவாகவும் தேர்தல் பணியாற்றிய காரணத்தாலும்,
கடலூர் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த மகளிரணி துணை செயலாளர் சத்யா பன்னீர்செல்வம் எம்எல்ஏ, பண்ருட்டி நகர்மன்ற முன்னாள் தலைவர் பி.பன்னீர்செல்வம், பண்ருட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் பெருமாள், அண்ணாகிராமம் கிழக்கு ஒன்றிய செயலாளர் மார்ட்டின் லூயிஸ், நெல்லிக்குப்பம் நகர செயலாளர் சவுந்தர், வீரபெருமாநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தவைர் ராம்குமார் ஆகியோர் இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள்.
கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
முக கவசம் அணியாமல் சுற்றித்திரிந்த பொதுமக்களிடம் இருந்து இதுவரை ரூ.80 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவ வேண்டும். சானிடைசர் மூலம் கைகளை சுத்தம் செய்ய வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்தினர் அறிவுறுத்தி வருகின்றனர். இருப்பினும் சிலர் முக கவசம் அணியாமல் வீதிகளில் சுற்றித்திரிந்து வருகின்றனர். அவர்களை போலீசார் எச்சரிக்கை செய்ததோடு, அபராதமும் விதித்து வருகின்றனர். இது தவிர சுகாதாரத்துறை அதிகாரிகள், நகராட்சி ஊழியர்களும் அபராதம் விதித்து வருகிறார்கள்.
அதன்படி நேற்று கடலூர் மஞ்சக்குப்பம், திருப்பாதிரிப்புலியூர், புதுப்பாளையம், ரெட்டிச்சாவடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் செந்தில்குமார் உத்தரவின்பேரில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராமமூர்த்தி, ஆய்வாளர்கள் பெருமாள், கவியரங்கன் ஆகியோர் கொண்ட குழுவினர் முக கவசம் அணியாமல் வாகனங்களில் சுற்றித்திரிந்த நபர்களிடம் தலா ரூ.200 அபராதம் விதித்தனர். இதில் போலீசாரும் இணைந்து அபராதம் விதித்தனர். மேலும் பஸ்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்கிறார்களா? முக கவசம் அணிந்திருக்கிறார்களா? என்றும் சுகாதாரத்துறையினர் சோதனை நடத்தினர்.
இது பற்றி சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், மாவட்டத்தில் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் சிலர் முக கவசம் அணியாமல் சுற்றித்திரிகின்றனர். அவர்களுக்கு அபராதம் விதிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி கடந்த 10 நாட்களில் முக கவசம் அணியாமல் சென்றவர்களிடம் 80 ஆயிரத்து 100 ரூபாய் அபராதம் வசூல் செய்துள்ளோம். நிறுவனங்களில் முக கவசம் அணியாவிட்டால், அந்த நிறுவனத்திற்கு ரூ.5 ஆயிரம் அபராதமாக வசூலிக்கிறோம். ஆகவே பொதுமக்கள் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றார்.
விருத்தாசலம் அருகே கோவில் தர்மகர்த்தா அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருத்தாசலம்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மேலப்பாளையூர் கிராமத்தை சேர்ந்தவர் தவலிங்க செல்வராயர்(வயது 72). இவர் அப்பகுதியில் உள்ள கோவில்களுக்கு தர்மகர்த்தாவாக இருந்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு இவர் வீட்டில் இருந்தபோது, அவரது செல்போன் எண்ணுக்கு அழைப்பு வந்தது. இதையடுத்து தவலிங்க செல்வராயர், வீட்டில் உள்ளவர்களிடம் வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார். பின்னர் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் தவலிங்க செல்வராயரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். இருப்பினும் அவரை பற்றிய எந்தவொரு தகவலும் இல்லை.
இந்த நிலையில் நேற்று காலையில் அதே கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகே ஒரு விவசாய நிலத்தில் ரத்தக்காயங்களுடன், தவலிங்க செல்வராயர் பிணமாக கிடந்தார். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து போலீசாருக்கும், அவரது உறவினருக்கும் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அவரது உறவினர்கள் விரைந்து வந்து தவலிங்க செல்வராயரின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
இதற்கிடையே கருவேப்பிலங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். அதில் தவலிங்க செல்வராயரை மர்மநபர்கள் யாரோ அடித்துக் கொலை செய்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. ஆனால் அவரை கொலை செய்தவர்கள் யார்? கொலை செய்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து உடனடியாக தெரியவில்லை.
இதற்கிடையே கடலூரில் இருந்து மோப்பநாய் புருனோ வரவழைக்கப்பட்டது. அது கொலை செய்யப்பட்டவரின் உடலை மோப்பம்பிடித்த படி இறந்தவரின் வீடு வரை சென்று மீண்டும் அதே இடத்திற்கு திரும்பி வந்தது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. மேலும் தடயவியல் நிபுணர்கள், தடயங்களை சேகரித்து சென்றனர்.
முன் விரோதத்தின் காரணமாக தவலிங்க செல்வராயரை யாரேனும் அடித்துக் கொலை செய்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில் தர்மகர்த்தா கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இறந்த தவலிங்க செல்வராயருக்கு புஷ்பவல்லி என்ற மனைவியும், 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
வடலூர் அருகே மொபட் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
வடலூர்:
வடலூர் அருகே உள்ள சேராக்குப்பம் சின்ன காலனி என்கிற ரோட்டு மருவாய் பகுதியை சேர்ந்தவர் பால்சாமி மகன் கணேசன் (வயது 54). தொழிலாளி. இவர் நேற்று வடலூர் சேத்தியாத்தோப்பு சாலையில் மொபட்டில் மருவாய் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் வந்த அரசு பஸ் மோதியது. இதில் படுகாயமடைந்த கணேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் வடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பரங்கிப்பேட்டை அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
பரங்கிப்பேட்டை:
குறிஞ்சிப்பாடி அருகே உள்ள ஆடூர் அகரம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் மனைவி கசம்பூ(வயது 65). சம்பவத்தன்று இவர் தனது உறவினருக்கு பெண் பார்ப்பதற்காக ஆடூர் அகரம் கிராமத்தில் இருந்து உறவினருடன் மோட்டார் சைக்கிளில் பரங்கிப்பேட்டை அருகே உள்ள சில்லங்குப்பம் கிராமத்துக்கு சென்று கொண்டிருந்தார்.
சில்லங்குப்பம் மாரியம்மன் கோவில் அருகே உள்ள வேகத்தடையில் மோட்டார் சைக்கிள் ஏறி இறங்கியபோது, பின்னால் அமர்ந்திருந்த கசம்பூ எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தார்.
இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே கசம்பூ பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பரங்கிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் 0தேவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கடலூர் மாவட்டத்தில் 2 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடலூர்:
உலக நாடுகளை கடந்த ஓராண்டுக்கும் மேலாக தனது கட்டுக்குள் வைத்திருந்த கொரோனா வைரஸ், கடந்த 3 மாதமாக குறைந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 2 வாரங்களாக கொரோனா 2-வது அலையின் காரணமாக தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இந்த கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, கடந்த ஓராண்டாக மக்கள் டெங்கு காய்ச்சல் பற்றி சிந்திக்க கூடவில்லை.
ஆனாலும் ஒரு புறம் கொரோனா வைரஸ் வேகமாக பரவிக்கொண்டிருக்கும் நிலையில், மற்றொரு புறம் டெங்கு காய்ச்சலும் கடலூர் மாவட்டத்தில் பரவி வருகிறது. தற்போது டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2 பேர், கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதுபற்றிய விவரம் வருமாறு:-
வடலூர் அடுத்த கருங்குழி பகுதியை சேர்ந்தவர் 21 வயது வாலிபர். கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவர், அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இருப்பினும் அவருக்கு காய்ச்சல் குணமாகவில்லை. இந்த நிலையில் அவர், சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு ரத்த மாதிரி எடுத்து பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த வாலிபர் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.
இதேபோல் கடலூரை சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், திண்டுக்கல்லில் வேலை பார்த்து வருகிறார். அப்போது காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவர், அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இருப்பினும் அவருக்கு காய்ச்சல் குறையவில்லை. இதனால் சொந்த ஊருக்கு திரும்பிய அவர், கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அப்போது அவருக்கு கொரோனா மற்றும் டெங்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அந்த வாலிபர், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். கொரோனா வைரஸ் பரவி வரும் சூழ்நிலையில், தற்போது 2 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

குழந்தையை அடித்த மனைவியுடன் தகராறில் ஈடுபட்டதால் மனமுடைந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அண்ணாமலை:
சிதம்பரம் அண்ணாமலை நகர் சந்திரமலை பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் துரை(வயது 24). இவரது மனைவி சரண்யா. இந்த தம்பதிக்கு 1 வயதில் பெண் குழந்தை உள்ளது.
கடந்த 5-ந் தேதி இரவு துரை வீட்டில் இருந்தார். அப்போது அவரது குழந்தை தின்பண்டத்தை கீழே இறைத்ததாக கூறப்படுகிறது. இதனால் சரண்யா, குழந்தையை அடித்துள்ளார். இதை துரை கண்டித்ததால் கணவன், மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறில் முடிந்தது.
இதனால் மனமுடைந்த துரை, சேலையால் வீட்டின் உத்தரத்தில் தூக்குப்போட்டுக்கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சரண்யா மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அண்ணாமலை நகர் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி துரை நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஆறுமுகம், அண்ணாமலை நகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.