என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறுபாக்கத்தில் சாமந்தி பூக்கள் பூத்துக்குலுங்குவதை படத்தில் காணலாம்.
    X
    சிறுபாக்கத்தில் சாமந்தி பூக்கள் பூத்துக்குலுங்குவதை படத்தில் காணலாம்.

    சிறுபாக்கம் பகுதியில் பூத்துக்குலுங்கும் சாமந்தி பூக்கள்- அமோக விளைச்சலால் விவசாயிகள் மகிழ்ச்சி

    சிறுபாக்கம் பகுதியில் சாமந்தி பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன. மேலும் அமோக விளைச்சலால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
    சிறுபாக்கம்:

    சிறுபாக்கம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதி மக்களுக்கு விவசாயமே பிரதான தொழிலாகும். அப்பகுதி விவசாயிகள் தங்களது நிலங்களில் கரும்பு, மரவள்ளி உள்ளிட்ட பயிர்களை அதிகளவில் சாகுபடி செய்து வந்தனர். ஆண்டுதோறும் ஏற்பட்ட பருவநிலை மாற்றத்தால், இப்பயிா் சாகுபடியில் வருவாய் இழப்பு ஏற்பட்டு வந்தது.

    இதனால் சிறு குறு விவசாயிகள் தங்களது வயல்களில் பூ வகை பயிா்களை சாகுபடி செய்ய முடிவு செய்தனா். அதன்படி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் சம்பங்கி, சாமந்தி, டில்லி கனகாம்பரம் உள்ளிட்ட பூ வகை பயிா்களை சாகுபடி செய்தனா். பின்னா் அவற்றுக்கு கிணற்று பாசனம் மூலம் தண்ணீா் பாய்ச்சி பராமாித்து வந்தனா். தற்போது சாமந்தி பூக்கள் பூத்து குலுங்குகின்றன. சாமந்தி பூ அமோக விளைச்சலை கொடுத்துள்ளது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில் சாமந்தி சாகுபடி செய்த விவசாயிகள் அதிகாலையில் பூக்களை பறித்து விருத்தாசலம், கள்ளக்குறிச்சி, ஆத்தூர் பகுதிகளில் இருந்து வரும் வியாபாரிகளிடம் விற்று, வருவாய் ஈட்டுகின்றனர். குறைந்த செலவினத்தில் போதிய லாபம் கிடைப்பதால் சிறு குறு விவசாயிகளிடம் பூ வகை பயிா்களை சாகுபடி செய்வது வரவேற்பை பெற்றுள்ளது. இதனை ஊக்குவிக்கும் விதமாக மானிய விலையில் விதைகள், உரம், நெற்றிக்கண் விளக்கு வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×