என் மலர்
செங்கல்பட்டு
- இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் திரைப்படம் ‘இந்தியன் -2’.
- இப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது.
கல்பாக்கம் அடுத்த சதுரங்கபட்டினம் பகுதியில் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள நானூறு ஆண்டு பழமையான டச்சுக்கோட்டை வளாகத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்-2 படப்பிடிப்பு நடைபெறுகிறது. முதல்நாள் படப்பிடிப்பான நேற்று சுதந்திர போராட்ட காலத்தில் வெள்ளையர்களுடன் சண்டை போடுவது போன்ற காட்சியில் நடிப்பதற்காக கமல்ஹாசன் வந்திருந்தார். தகவலரிந்து அப்பகுதி மக்கள், ரசிகர்கள் என ஏராளமானோர் கோட்டை முன் கமல்ஹாசனை பார்க்க குவிந்தனர்.

ரசிகர்களை பார்த்து கையசைத்த கமல்ஹாசன்
கோட்டை வாசல் பகுதியில் காவலுக்கு இருந்த போலீசாரும், தனியார் பவுண்சர்களும் யாரையும் ஷூட்டிங் பார்க்க அனுமதிக்கவில்லை.பொதுமக்கள் கூடியிருப்பதை அறிந்த கமல்ஹாசன் வளாகத்திற்கு வந்து அங்கிருந்த மேஜை மீது நின்று ரசிகர்களை பார்த்து கையசைத்து கும்பிட்டார். பின்னர் ரசிகர்களும், பொதுமக்களும் அங்கிருந்து சென்றனர். இதையடுத்து நேற்று இரவு 10 மணிக்கு துவங்கிய படப்பிடிப்பு இன்று காலை 5 மணி வரை நடந்தது. இதேபோல் இன்றும், நாளையும் சதுரங்கபட்டினம் டச்சுக்கோட்டையில் படப்பிடிப்பு நடக்க உள்ளது. பின்னர் பனையூர் பகுதியில் இது போன்ற செட் போடப்பட்டு தொடர்ந்து படப்பிடிப்பு நடக்க இருப்பதாக படப்பிடிப்பு குழுவினர் தெரிவித்தனர்.
- விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த வாலிபரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
- போலீஸ் விசாரணையில் அவரது பெயர் சர்மா என்பது தெரியவந்தது.
காட்டாங்கொளத்தூர்:
காட்டாங்கொளத்தூரில் தனியார் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தவர் தாமரை செல்வி.
எம்.எஸ்.சி. முதலாம் ஆண்டு மாணவியான இவர் காட்டாங்கொளத்தூரில் சாலையை கடந்தார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள், மாணவி தாமரைச் செல்வி மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவருக்கு உடலில் பல இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.
ரத்த வெள்ளத்தில் தாமரை செல்வி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார். இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த வாலிபரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
போலீஸ் விசாரணையில் அவரது பெயர் சர்மா என்பது தெரியவந்தது. அரியானாவை சேர்ந்த இவர் அப்பகுதியில் தங்கி இருந்து என்ஜினீயரிங் படித்து வந்தார். ஆஸ்பத்திரியில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக தாம்பரம் போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பெண் காவலர்கள் சந்தித்த வழக்கு அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
- வழக்குகளை தைரியமாக எதிர்கொள்வது குறித்து ஆலோசனை நடத்தினர்.
மாமல்லபுரம்:
கல்பாக்கம் காவல் நிலையத்தில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. அண்மையில் பொறுப்பேற்ற இன்ஸ்பெக்டர் பிரான்வின் டானி அப்பகுதி பெண் காவலர்கள் 10 பேருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்று, கேக் வெட்டி கொண்டாடி, இனிப்புகளை வழங்கினார்.
அனைவரும் ஒரே கலரில் சேலை உடுத்தி காவல் நிலையம் வந்திருந்தனர். ஒருவருக்கொருவர் தைரியம் ஊட்டும் வகையில் அவரவர் சந்தித்த வழக்கு அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். பெண்கள் பாதுகாப்பு, பாலியல் சீண்டல், சிறுவயது திருமணம், வன்கொடுமை உள்ளிட்ட வழக்குகளை தைரியமாக எதிர்கொள்வது குறித்து ஆலோசனை நடத்தினர்.
- வழக்கமாக வெளிநாட்டு பயணிகள் ரூ.600 கட்டணம் செலுத்தி பார்க்க வேண்டும்.
- பெண்ணுரிமை, இட ஒதுக்கீடு உள்ளிட்ட பொது உரிமைகளை வெளிநாட்டு பயணிகள் பாராட்டினர்.
மாமல்லபுரம்:
இன்று சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மாமல்லபுரம் புராதன சின்னங்களான அர்ச்சுனன் தபசு, ஐந்து ரதம், கடற்கரை கோவில் உள்ளிட்ட பகுதிளை சுற்றுலா பயணிகள் இலவசமாக உள்ளே சென்று பார்க்கலாம் என இந்திய தொல்லியல்துறை அறிவித்தது. இதையடுத்து அனைத்து உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் இலவசமாக பார்த்து ரசித்தனர்.
முதல் முறையாக மகளிர் தினத்தில் இலவசம் என்பதை மத்திய அரசு அறிவித்திருப்பது பெண்களுக்கு பெருமையாக இருப்பதாக அங்கு வந்த உள்நாட்டு பெண்கள் தெரிவித்தனர். வழக்கமாக, வெளிநாட்டு பயணிகள் ரூ.600 கட்டணம் செலுத்தி பார்க்க வேண்டும். ஆனால் மகளிர் தினமான இன்று மாமல்லபுரம் புராதன சின்னங்களை இலவசமாக சுற்றி பார்த்ததை நினைத்து, இந்திய நாட்டின் பெண்ணுரிமை, அவர்களுக்கான தனி மரியாதை, அங்கீகாரம், இட ஒதுக்கீடு உள்ளிட்ட பொது உரிமைகளை பாராட்டி சென்றனர்.
- ஆட்டம் பாட்டத்துடன் ஒன்றுகூடி பாரம்பரிய முறைப்படி குலதெய்வமான கன்னியம்மனை வழிபட்டனர்.
- இருளர்களின் போக்குவரத்து வசதிக்காக இன்று செங்கல்பட்டு, தாம்பரம் பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் கடற்கரையில் பழங்குடி இருளர்கள் தங்களின் குலதெய்வமான கன்னியம்மனை மாசிமக பவுர்ணமியன்று வழிபட்டு வேண்டுதல்களை நிறைவேற்ற ஆண்டுதோறும் ஒன்று கூடுவது வழக்கம்.
இந்த ஆண்டு மாசிமக வழிபாட்டுக்காக நேற்று முன்தினம் மாமல்லபுரம் கடற்கரையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இருளர்கள் குவிந்தனர்.
அவர்கள் ஆட்டம் பாட்டத்துடன் ஒன்றுகூடி பாரம்பரிய முறைப்படி குலதெய்வமான கன்னியம்மனை வழிபட்டனர். நேற்று முன்தினம் திருமணம், நிச்சயம், காதுகுத்து, மொட்டையடித்தல் உள்ளிட்ட வேட்டுதல்களை செய்தனர். பின்னர் அவர்களின் பாரம்பரிய கலை விழாவால் அப்பகுதியே களைகட்டியது.
விழாவின் நிறைவு நாளான நேற்று பக்கிங்காம் கால்வாயில் குடும்பமாக இறங்கி மீன்பிடித்தும், சந்தையில் கறி, மீன் வாங்கியும் கடலோரத்தில் அவர்கள் அமைத்திருந்த தற்காலிக சேலைக்குடிலில் அமர்ந்து சமைத்து விருந்து வைத்தனர்.
ஏராளமான இருளர்கள் நேற்று மாலையில் அங்குள்ள சாலையோர கடைகளில் பாத்திரங்கள், பொம்மைகள், விளையாட்டு பொருட்கள், கவரிங் நகைகள், உடைகள் மற்றும் அவர்களின் வேட்டை-தொழில் ஆயுதமான கத்தி, அரிவாள், உள்ளிட்ட பொருட்களை வாங்கினர். இதனால் கடை வீதி முழுவதும் பரபரப்பாக இயங்கியது.
இதைத்தொடர்ந்து இரவு முதல் மாமல்லபுரத்தில் இருந்து அவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். இன்று காலையும் ஏராளமானோர் பஸ்களில் ஊர்களுக்கு திரும்பினர். இதனால் மாமல்லபுரம் பஸ் நிலையம் நிரம்பி வழிந்தது.
இருளர்களின் போக்குவரத்து வசதிக்காக இன்று செங்கல்பட்டு, தாம்பரம் பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்காக தமிழக பழங்குடியினர் நலத்துறை சார்பில் ரூ.2 லட்சமும், கலை பண்பாட்டுத்துறை சார்பில் ரூ.1 லட்சமும் நிதி ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இருளர்களின் பாரம்பரிய விழாவால் களைகட்டி இருந்த மாமல்லபுரம் கடற்கரை பகுதி இன்று சகஜநிலைக்கு திரும்பியது.
- இருளர்கள் ஒன்று கூடி அவர்களது குலதெய்வமான கன்னியம்மனை வழிபட்டு வருகின்றனர்.
- ஆயுஷ் பிரிவு டாக்டர் வானதி நாச்சியார் அறிவுரைகள் வழங்கி நிலவேம்பு கஷாயம் வழங்கினார்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தில் இருளர்கள் பங்கேற்கும் மாசிமக பவுர்ணமி விழா இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது. பல்வேறு மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான இருளர்கள் ஒன்று கூடி அவர்களது குலதெய்வமான கன்னியம்மனை வழிபட்டு வருகின்றனர்.
இவர்களிடையே தொற்று நோய் தடுப்பு, எதிர்ப்பு சக்தி, உடல் பாதுகாப்பு, பராமரிப்பு உள்ளிட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மாமல்லபுரம் அரசு மருத்துவமனை ஆயுஷ் பிரிவு டாக்டர் வானதி நாச்சியார் அங்கு முகாமிட்டு அரிமா சங்கத்துடன் இணைந்து, அறிவுரைகள் கூறி நிலவேம்பு கஷாயம் வழங்கினார்.
- மணிகண்டன் அரிவாளால் தாய் அமுலுவை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
- சிட்லபாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.
தாம்பரம்:
தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் இந்திரா காந்தி தெருவை சேர்ந்தவர் அமுலு (59). இவரது மகன் மணிகண்டன். ஆட்டோ டிரைவர். நேற்று மாலை அவர், வீட்டில் இருந்த தாய் அமுலுவிடம் செலவுக்கு பணம் கேட்டார். ஆனால் அவர் கொடுக்க வில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் அரிவாளால் தாய் அமுலுவை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதில் பலத்த காயம் அடைந்த அமுலுவுக்கு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சிட்லபாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.
- குடிநீர் தொட்டியில் இருந்து குதித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- சிட்லப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாம்பரம்:
குரோம்பேட்டையை அடுத்த ஜமீன்ராய பேட்டையை சேர்ந்தவர் ஆனந்த்ராஜ் (வயது30). பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். அவருக்கு திருமணம் செய்ய பெற்றோர் பெண் பார்த்து வந்தனர்.
இந்த நிலையில் இரவு மது போதையில் வந்த ஆனந்த்ராஜ் திடீரென வீட்டின் அருகே எரிகரை தெருவில் உள்ள 100 அடி உயரம் கொண்ட குடிநீர் தொட்டியின் மீது ஏறினார். சிறிது நேரத்தில் அவர் குடிநீர்தொட்டியின் உச்சிக்கு சென்றார். பின்னர் ஆனந்த்ராஜ் அங்கிருந்து கீழே குதித்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ஆனந்த்ராஜை மீட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை ஆனந்த்ராஜ் பரிதாபமாக இறந்தார்.
ஆனந்த்ராஜ் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து சிட்லப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
+2
- செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் கடற்கரை கோயில் வளாகத்தில் அவர்களை வரவேற்றார்.
- சுற்றுலா அலுவலர் சக்திவேல், மாமல்லபுரம் டி.எஸ்.பி ஜெகதீஸ்வரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மாமல்லபுரம்:
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த, பாராளுமன்ற உறுப்பினர்கள் 13 பேர் கொண்ட பொதுக் கணக்கு குழுவினர் மாமல்லபுரம் வந்தனர். அவர்கள் இன்று மாலை மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை சுற்றி பார்த்தனர்.
முன்னதாக நேற்று பாண்டிச்சேரி சென்ற அவர்கள் இன்று மதியம் கோவளம் வந்து அங்குள்ள பிஷர்மேன்கோ நட்சத்திர விடுதியில் மத்திய, மாநில அரசு உயர் அதிகாரிகளுடன் மார்ச் இறுதி ஆண்டுக் கணக்கு விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் கடற்கரை கோயில் வளாகத்தில் அவர்களை வரவேற்றார். சுற்றுலா அலுவலர் சக்திவேல், மாமல்லபுரம் டி.எஸ்.பி ஜெகதீஸ்வரன், திருப்போரூர் தாசில்தார், மாமல்லபுரம் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
- பணிபுரிய விருப்பமுள்ள தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
- அரசு ஆஸ்பத்திரி வளாகம், தாம்பரம் (இருப்பு) குரோம்பேட்டையில் வருகிற 27-ந்தேதி (திங்கட்கிழமை) மாலை 5.30க்குள் விண்ணப்பிக்கவும்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
செங்கல்பட்டு மாவட்ட இணை இயக்குநர் நலப்பணிகள் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு ஆஸ்பத்திரிகளில் காலியாக உள்ள 5 சமையலர் மற்றும் சலவையாளர் போன்ற பணியிடங்களில் பணிபுரிய விருப்பமுள்ள தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பங்கள் அரசு ஆஸ்பத்திரி வளாகம், தாம்பரம் (இருப்பு) குரோம்பேட்டையில் வருகிற 27-ந்தேதி (திங்கட்கிழமை) மாலை 5.30 மணிக்குள் தங்களது புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பம் மற்றும் தகுதி சான்று நகல்களுடன் விண்ணப்பிக்கவும்.
இதுபோல செங்கல்பட்டு மாவட்ட இணை இயக்குநர் நலப்பணிகள் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டுவரும் மாமல்லபுரம், திருப்போரூர் அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும ஈஞ்சம்பாக்கம் அரசு புறநகர் ஆஸ்பத்திரியில் 3 பல் மருத்துவ உதவியாளர் தற்காலிக பணியிடங்களில் பணிபுரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வருகிற 15-ந்தேதி மாலை 5.45 மணிக்குள் விணணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பாசிகளை அகற்ற முதலில் அனுமதி கொடுத்த கோவில் நிர்வாகம் குளத்தில் இறங்கும் சமயம் அனுமதி அளிக்கவில்லை.
- கடந்த 2011ல் சங்கு பிறந்த சமயம் தண்ணீர் பாசிகள் இன்றி சுத்தமாக இருந்தது.
மாமல்லபுரம்:
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு தோன்றும் அதிசய தீர்த்தமான, திருக்கழுக்குன்றம் சங்குதீர்த்த குளம் நிர்வாக குறைபாடு காரணமாக பாசி படர்ந்து பாழடைந்து வருகின்றது. சங்கு தீர்த்த குளத்தின் பாசிகளை அகற்றிட சென்னையிலிருந்து உழவாரப்பணி குழுவினர் முன் அனுமதி பெற்று பணிக்கான விளம்பர நோட்டீஸ் அளித்து கடந்த 12ம் தேதியன்று 100 பேருடன் குளத்தின் பாசிகளை அகற்ற தேவையான உபகரணங்கள் (டியூப், பாஞ்சா, கயிறு) உள்ளிட்டவைகளுடன் வந்தனர்.
முதலில் அனுமதி கொடுத்த கோவில் நிர்வாகம் குளத்தில் இறங்கும் சமயம் அனுமதி அளிக்கவில்லை. இதனால் வந்தவர்கள் திரும்பியதாக கூறப்படுகிறது.
இந்த வருடம் சங்கு பிறக்க இருப்பதால் பாசிகளை அகற்றினால் சங்கு பிறக்காது, அதனால் பாசிகளை அகற்ற வேண்டாம் என முடிவெடுத்துள்ளதாக கோவில் நிர்வாகம் கூறிவருகிறது.
கடந்த 2011ல் சங்கு பிறந்த சமயம் தண்ணீர் பாசிகள் இன்றி சுத்தமாக இருந்தது. தற்போது பாசிகள் படர்ந்து கிடப்பதால் சங்கு மேலே வரமுடியாமல் சென்றால் என்ன செய்வது? என உள்ளூர் மக்களும் பக்தர்களும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
- தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பேர் கலந்து கொண்டனர்.
- மாமல்லபுரம் கடற்கரை பகுதியே விழாக்கோலமாக காணப்பட்டது.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் கடற்கரையில் இன்று மாசி மக விழாவையொட்டி ஏராளமான பழங்குடி இருளர்கள் குடும்பத்துடன் குவிந்தனர். இதற்காக அவர்கள் நேற்று இரவே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாமல்லபுரத்திற்கு வந்தனர்.
அவர்கள் கடற்கரையோரங்களில் குடில் அமைத்து தங்கி இருந்தனர். இன்று அதிகாலையில் இருந்தே இருளர்களின் மாசிமக திருவிழா விமரிசையாக தொடங்கியது.
இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பேர் கலந்து கொண்டனர். இதனால் மாமல்லபுரம் கடற்கரை பகுதியே விழாக்கோலமாக காணப்பட்டது.
இருளர்கள் தங்களது குலதெய்வமான கன்னியம்மனை நினைத்து கடல் மண்ணில் கோவிலாக அலங்காரம் செய்து வழிபட்டனர். அப்போது பூசாரிகள் சிலர் குறி கூறினர்.
இதேபோல் கடற்கரையில் நிச்சயதார்த்தம், திருமணம், காதுகுத்து, மொட்டையடித்தல் உள்ளிட்ட குலதெய்வ வழிபாட்டு வேண்டுதல்களை நிறைவேற்றினர். பாரம்பரிய திருமண விழாவால் அப்பகுதியே களை கட்டியது. சுமார் 25-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்தது.
பின்னர் வந்திருந்த இருளர்கள் தற்காலிகமாக அமைத்து தங்கியிருந்த சேலைக் குடில்களில் சமைத்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.
இன்று இரவு விடிய, விடிய ஆட்டம், பாட்டம், கூத்து, தப்பாட்டம், திருநங்கைகள் நடனம் உள்ளிட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். இரவு முழுவதும் கடற்கரை மணலில் உற்சாகமாக விழாவை கொண்டாடுகின்றனர். நாளை காலை கடற்கரை கோவிலின் வடபுறம் மீனவர் பகுதியில் தீர்த்தவாரி விழா நடக்கிறது. இதில் அனைவரும் கலந்து கொள்கிறார்கள்.
இதைத்தொடர்ந்து மாமல்லபுரத்தில் இருந்து இருளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி செல்ல உள்ளன். இருளர் விழாவையொட்டி போக்குவரத்து வசதிக்காக செங்கல்பட்டு, தாம்பரம் பகுதியில் இருந்து சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர், மின்விளக்கு, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன. மாமல்லபுரம் டி.எஸ்.பி ஜெகதீஸ்வரன் உத்தரவின் படி இன்ஸ்பெக்டர் ருக்மாந்தகன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.






