என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சங்கு தீர்த்த குளம்"

    • பாசிகளை அகற்ற முதலில் அனுமதி கொடுத்த கோவில் நிர்வாகம் குளத்தில் இறங்கும் சமயம் அனுமதி அளிக்கவில்லை.
    • கடந்த 2011ல் சங்கு பிறந்த சமயம் தண்ணீர் பாசிகள் இன்றி சுத்தமாக இருந்தது.

    மாமல்லபுரம்:

    12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு தோன்றும் அதிசய தீர்த்தமான, திருக்கழுக்குன்றம் சங்குதீர்த்த குளம் நிர்வாக குறைபாடு காரணமாக பாசி படர்ந்து பாழடைந்து வருகின்றது. சங்கு தீர்த்த குளத்தின் பாசிகளை அகற்றிட சென்னையிலிருந்து உழவாரப்பணி குழுவினர் முன் அனுமதி பெற்று பணிக்கான விளம்பர நோட்டீஸ் அளித்து கடந்த 12ம் தேதியன்று 100 பேருடன் குளத்தின் பாசிகளை அகற்ற தேவையான உபகரணங்கள் (டியூப், பாஞ்சா, கயிறு) உள்ளிட்டவைகளுடன் வந்தனர்.

    முதலில் அனுமதி கொடுத்த கோவில் நிர்வாகம் குளத்தில் இறங்கும் சமயம் அனுமதி அளிக்கவில்லை. இதனால் வந்தவர்கள் திரும்பியதாக கூறப்படுகிறது.

    இந்த வருடம் சங்கு பிறக்க இருப்பதால் பாசிகளை அகற்றினால் சங்கு பிறக்காது, அதனால் பாசிகளை அகற்ற வேண்டாம் என முடிவெடுத்துள்ளதாக கோவில் நிர்வாகம் கூறிவருகிறது.

    கடந்த 2011ல் சங்கு பிறந்த சமயம் தண்ணீர் பாசிகள் இன்றி சுத்தமாக இருந்தது. தற்போது பாசிகள் படர்ந்து கிடப்பதால் சங்கு மேலே வரமுடியாமல் சென்றால் என்ன செய்வது? என உள்ளூர் மக்களும் பக்தர்களும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

    ×