என் மலர்
செங்கல்பட்டு
- சுடுகாட்டு பகுதிக்கு சென்ற அன்பரசு நேற்று இரவு நண்பர்களோடு சேர்ந்து மது அருந்தினார்.
- அன்பரசோடு இருந்தவர்களை விரட்டும் எண்ணத்தில் அங்கு நின்றிருந்த அன்பரசுவின் கார் கண்ணாடியை ஆயுதங்களால் தாக்கியும் வெண்குண்டுகளை வீசியும் உடைத்தனர்.
திருப்போரூர்:
வண்டலூர் அருகே உள்ள வேங்கடமங்கலம் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் கல்யாணி.
இவரது கணவர் ரவி ஏற்கனவே ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து உள்ளார். இவர்களுக்கு அன்புராஜ், அன்பரசு மகன்கள் உள்ளனர். 2-வது மகனான அன்பரசு 9-வது வார்டு உறுப்பினராக பதவி வகித்து வந்தார்.
இந்த நிலையில் அன்பரசு துக்க நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக நேற்று வேங்கடமங்கலத்தில் இருந்து கீரப்பாக்கத்துக்கு சென்றார். நவீன்குமார் என்பவர் மரணம் அடைந்ததை தொடர்ந்து அவரது படத்திறப்பு விழா நிகழ்ச்சியில் அன்பரசு பங்கேற்றார்.
பின்னர் அருகில் உள்ள சுடுகாட்டு பகுதிக்கு சென்ற அன்பரசு நேற்று இரவு நண்பர்களோடு சேர்ந்து மது அருந்தினார். பின்னர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது இரவு 11 மணி இருக்கும். இந்த நேரத்தில் 5 பேர் கொண்ட கும்பல் கையில் பயங்கர ஆயுதங்களுடன் அங்கு வந்தது.
அவர்கள் அன்பரசோடு இருந்தவர்களை விரட்டும் எண்ணத்தில் அங்கு நின்றிருந்த அன்பரசுவின் கார் கண்ணாடியை ஆயுதங்களால் தாக்கியும் வெண்குண்டுகளை வீசியும் உடைத்தனர். இதில் பலத்த சத்தத்துடன் கார் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின.
இதையடுத்து ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போகிறது என்பதை உணர்ந்த அன்பரசுவும் அவரது நண்பர்களும் உஷாராகி அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இருப்பினும் மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் விடாமல் விரட்டிச் சென்றனர். அன்பரசுவுடன் வந்தவர்கள் தெறித்து ஓட்டம் பிடித்து விட்ட நிலையில், அன்பரசு மட்டும் சிக்கிக் கொண்டார். அப்போது அவரை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர்.
இதில் அன்பரசுவின் உடலில் பல இடங்களில் வெட்டுக்காயங்கள் விழுந்தன. கை, கால்கள், கழுத்து, தலை, முகம் உள்ளிட்ட இடங்களில் வெட்டுக்காயம் விழுந்ததில் ரத்த வெள்ளத்தில் அன்பரசு கீழே சரிந்தார். பின்னர் சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து பலியானார். அன்பரசுவை வெட்டிக்கொன்ற கொலையாளிகள் தப்பி ஓடி தலைமறைவானார்கள்.
இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் காயார் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அன்பரசுவின் உடலை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், டி.எஸ்.பி.ஜெகதீஸ்வரன், மற்றும் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் ஆகியோர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். கொலையாளிகள் யார்? எதற்காக அன்பரசு கொலை செய்யப்பட்டார்? என்பது பற்றிய விவரங்கள் உடனடியாக தெரியவில்லை.
இதையடுத்து கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. தனிப்படை போலீசார் கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு அன்பரசுக்கு கொலை மிரட்டல் வந்து உள்ளது.
இதுதொடர்பாக தாழம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த நிலையில்தான் அன்பரசு கொடூரமான முறையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
எனவே கொலை மிரட்டல் விடுத்த கும்பலுக்கு கொலை சம்பவத்தில் தொடர்பு உள்ளதா? என்பது பற்றி விசாரணை நடந்து வருகிறது. அன்பரசுக்கு வேறு யாரும் எதிரிகள் உள்ளார்களா? என்பது குறித்தும் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டு உள்ளனர்.
இதற்கிடையே அன்பரசு கொலை செய்யப்பட்டதை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் வண்டலூர்- கேளம்பாக்கம் சாலையில் ரத்னமங்கலம் சந்திப்பில் 'திடீர்' சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் தாழம்பூர் போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கொலையாளிகளை கைது செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்ததையடுத்து மறியல் கைவிடப்பட்டது. இருப்பினும் அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
- தென்மாவட்டங்களை நோக்கி ஏராளமான அரசு பஸ்கள், ஆம்னி பஸ்கள், வாகனங்கள் சென்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
- ஆயத பூஜை தொடர்விடுமுறையையொட்டி பஸ்கள், கார்கள், ரெயில்கள் மூலம் இதுவரை சுமார் 7 லட்சம் பேர் சென்னையில் இருந்து வெளியூர் பயணம் செய்து உள்ளனர்.
தாம்பரம்:
ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜையையொட்டி நாளை, நாளை மறுநாள் தொடர்ந்து விடுமுறைகள் வருகின்றன. இதற்கு முன்னதாக சனி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்கள் என்பதால் நேற்று முன்தினம் முதலே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிப்பவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கினர். அவர்களுக்கு வசதியாக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
நேற்று இரவு வழக்கத்தை விட ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு செல்ல கோயம்பேடு பஸ் நிலையம், ரெயில்நிலையத்தில் குவிந்தனர். சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் 950 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டது. மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல கோயம்பேடு பஸ் நிலையத்தில் ஏராளமான பயணிகள் குவிந்ததால் நள்ளிரவு வரை பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் தங்கி இருந்தவர்கள் ஏராளமானோர் சொந்த கார்களிலும் நேற்று இரவு புறப்பட்டு சென்றனர். தென்மாவட்டங்களை நோக்கி ஏராளமான அரசு பஸ்கள், ஆம்னி பஸ்கள், வாகனங்கள் சென்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கோயம்பேடு பஸ்நிலைய பகுதி, தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, பெருங்களத்தூர் ஜி.எஸ்.டி. சாலையில் நள்ளிரவு வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன.
இதேபோல் கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலையம் அருகே மழைநீர் கால்வாய் அமைக்க சென்னை-திருச்சி நெடுஞ்சாலையின் குறுக்கே பள்ளம் தோண்டப்பட்டு நேற்று பணிகள் நடந்தன. போக்குவரத்து எதிர்திசையில் மாற்றப்பட்டு இருந்தன. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பரனூர் சுங்கச்சாவடியிலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்று சென்றன.
மேலும் குரோம்பேட்டை தனியார் வணிக வளாகங்களில் பொதுமக்கள் பொருட்களை வாங்க குவிந்து இருந்ததால் குரோம்பேட்டை, பல்லாவரம், தாம்பரம் சானிடோரியம் ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்பட்டது. போக்குவரத்து போலீசார் குறைந்த அளவே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதால் போக்குவரத்து நெரிசலை சரி செய்வதில் தாமதம் ஏற்பட்டது.
ஆயத பூஜை தொடர்விடுமுறையையொட்டி பஸ்கள், கார்கள், ரெயில்கள் மூலம் இதுவரை சுமார் 7 லட்சம் பேர் சென்னையில் இருந்து வெளியூர் பயணம் செய்து உள்ளனர். இன்று இரவும் ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து கோயம்பேடு பஸ்நிலையத்தில் இருந்து பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதலாக பஸ்கள் இயக்க அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.
இதுகுறித்து போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது:-
வெளியூர் செல்லும் பொதுமக்களின் தேவைக்கேற்ப பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நேற்று சென்னையில் இருந்து இயக்கப்படும் 2100 பஸ்களுடன் சேர்ந்து 950 பஸ்கள் இயக்கப்பட்டது. நேற்று 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டடோர் முன்பதிவு செய்து பயணம் செய்தனர். பல்வேறு விதிமுறை மீறல்களில் ஈடுபட்ட 1545 பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ.27.67 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு ரூ.15.41 லட்சம் வசூலிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் ரூ.24.53 லட்சம் வரி விதிக்கட்ட நிலையில் ரூ.7.54 லட்சம் வசூலிக்கப்பட்டது. 102 பஸ்கள் சிறை பிடிக்கப்பட்டன. சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் திரும்புவதற்காக சிறப்பு பஸ்கள் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
- அதே பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சிலருக்கும் உடும்பனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது
- அனைவரும் கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
மாமல்லபுரம்:
தஞ்சாவூரை சேர்ந்தவர் ரூபன் என்கின்ற உடும்பன் (வயது23). இவர், கடந்த 5ஆண்டுகளாக மாமல்லபுரம் ஒத்தவாடை தெரு பகுதியை சேர்ந்த ஒருவரிடம் குதிரை ஓட்டும் தொழில் செய்து வந்தார். அவர் மாமல்லபுரம் கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகளை குதிரையில் அழைத்து செல்வது வழக்கம்.
இந்நிலையில் இன்று காலை மாமல்லபுரம் கடற்கரை கோயில் அருகே உள்ள கடற்கரையில் உடும்பன் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார். தகவல் அறிந்ததும் மாமல்லபுரம் போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
நேற்று இரவு அதே பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சிலருக்கும் உடும்பனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. இதன் தொடர்ச்சியாக கொலை நடந்து இருப்பது தெரியவந்து உள்ளது. இது தொடர்பாக 5 பேரை போலீசார் பிடித்து உள்ளனர். அவர்கள் அனை வரும் கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதன்பின்னரே கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது தெரியவரும்.
மாமல்லபுரம் கடற்கரையில் வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கட்டிடம் கட்ட அனுமதி கேட்டிருந்த 35பேரை வரவழைத்து கமிட்டி குழுவினருடன் அமர்ந்து ஆவணங்களை ஆய்வு செய்து பேசினார்.
- மாவட்ட நிர்வாகம் சார்பில் இதை பரிசீலனை செய்வார்கள் என கூறியதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
மாமல்லபுரம்:
கல்பாக்கத்தில் உள்ள அணுமின் நிலையத்தை சுற்றி 5கி.மீ தூரத்தில் கட்டிடம் கட்டவோ, விவசாய நிலத்தை வீட்டு மனையாக்கி விற்கவோ அணுசக்தி துறையின் "நிலா" கமிட்டி அனுமதி வழங்குவதில்லை.
இதனால் அப்பகுதி மக்கள் நிலங்களை விற்க முடியாமலும், வாங்க முடியாமலும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதுகுறித்து பொது மக்கள் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் திருக்கழுகுன்றம் தாசில்தார், உள்ளிட்டோரிடம் முறையிட்டு வந்தனர்.
இந்நிலையில் "நிலா" கமிட்டியில் அணுசக்திதுறை சார்பில் முக்கிய பொறுப்பில் இருக்கும் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் வெங்கட்ராமன், அப்பகுதியில் கட்டிடம் கட்ட அனுமதி கேட்டிருந்த 35பேரை வரவழைத்து கமிட்டி குழுவினருடன் அமர்ந்து ஆவணங்களை ஆய்வு செய்து பேசினார். இதில் அணுசக்திதுறையால் மக்களின் குடியிருப்பு பயன்பாட்டிற்கு எந்த தடையும் கிடையாது, வணிக பயன்பாட்டிற்கு தற்போது அனுமதி கிடையாது. மாவட்ட நிர்வாகம் சார்பில் இதை பரிசீலனை செய்வார்கள் என கூறியதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
- செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
- கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் அடுத்த கடம்பாடி இருளர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது30), கூலி வேலை செய்பவர். இவருக்கு அதே பகுதியில் வசிக்கும் உறவினரான ஏழுமலை என்பவருடன் குடும்ப பிரச்சினை இருந்து வந்தது.
இதன் காரணமாக இருதரப்பினர் இடையே வாய் தகராறு ஏற்பட்டு, அடிதடி ஆனது. இதில் ஆத்திரம் அடைந்த ஏழுமலை அருகில் கிடந்த செங்கல்லால் குமாரை தாக்கினார். இதில் தலையில் அடிபட்டு மயக்கமடைந்த குமாரை உறவினர்கள் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
வழியிலேயே குமார் உயிரிழந்தார். மாமல்லபுரம் போலீசார் ஏழுமலையை கைது செய்து, அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
- இறுதிச்சடங்கு நிகழ்வில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்றே்பு.
- உடல் அடக்கம் செய்யப்படும் இடத்தில் பளிங்கு சிலை வைக்கப்பட உள்ளது.
பங்காரு அடிகளாருக்கு நேற்று மாலை 5 மணி அளவில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவரது இறப்பு செய்தி கேட்டதும் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பங்காரு அடிகளாருக்கு அஞ்சலி செலுத்த மேல்மருவத்தூர் நோக்கி ஏராளமான பக்தர்கள் வரத் தொடங்கினர். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டது. விடிய விடிய பக்தர்கள் காத்திருந்து அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், இன்று மாலை பங்காரு அடிகளார் உடலுக்கு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெற்றது.
இறுதிச்சடங்கு நிகழ்வில் ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் பொன்முடி, எம்.பி.ஜெகத்ரட்சகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதைத்தொடர்ந்து, ஓம் சக்தி பராசக்தி என பக்தர்கள் முழுங்க பங்காரு அடிகளாரின் உடல், சித்தர் முறைப்படி அமர்ந்த நிலையில் அடக்கம் செய்யப்பட்டது.
அவரது உடலுக்கு 6 மூலிகைகள் மற்றும் பால், பன்னீர், சந்தனம், குங்குமம், மஞ்சள், இளநீர் மூலம் அபிஷேகம் செய்யப்பட்டது.
அடிகளார் அருள்வாக்கு சொல்லும் புற்று மண்டபம் கருவறை அருகே உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
உடல் அடக்கம் செய்யப்படும் இடத்தில் பளிங்கு சிலை வைக்கப்பட உள்ளது.
+2
- பங்காரு அடிகளார் மறைவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அனைத்து கட்சியினர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
- வெளியூர்களில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
மதுராந்தகம்:
பக்தர்களால் 'அம்மா' என்று அழைக்கப்பட்டவர் பங்காரு அடிகளார் (வயது 82). இவர் மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி சித்தர் பீடம் நிறுவி பக்தர்களுக்கு அருள்வாக்கு அளித்து வந்தார்.
இந்த கோவிலுக்கு வருபவர்கள் சிவப்பு நிற ஆடைகள் அணிந்து வருவதால் செவ்வாடை பக்தர்கள் என்று அழைக்கப்பட்டனர்.
பங்காரு அடிகளார் கடந்த ஒரு ஆண்டாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் அவர் கோவில் வளாகத்தில் உள்ள வீட்டில் இருந்தபடியே மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் பங்காரு அடிகளார் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவரது இறப்பு செய்தி கேட்டதும் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதைத்தொடர்ந்து நேற்று மாலை முதலே பங்காரு அடிகளாருக்கு அஞ்சலி செலுத்த மேல்மருவத்தூர் நோக்கி ஏராளமான பக்தர்கள் வரத் தொடங்கினர். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டது. விடிய விடிய பக்தர்கள் காத்திருந்து அஞ்சலி செலுத்தினர்.
பங்காரு அடிகளார் மறைவையொட்டி இன்று (வெள்ளிக்கிழமை) மதுராந்தகம் கோட்டத்துக்குட்பட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மேல்மருவத்தூர், சோத்துப்பாக்கம் பகுதியில் இன்று அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன.
மேலும் பங்காரு அடிகளார் மறைவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அனைத்து கட்சியினர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
இதற்கிடையே இன்று அதிகாலை முதல் வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்காரு அடிகளாருக்கு அஞ்சலி செலுத்த குவிந்தனர். கார் மற்றும் வாகனங்களில் பக்தர்கள் வந்து கொண்டு இருந்ததால் கூட்டம் தொடர்ந்து அதிகரித்தது.பெண் பக்தர்கள் கண்ணீர் சிந்தியபடி அஞ்சலி செலுத்தினர்.
வாகன நெரிசலை தடுப்பதற்காக சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேல்மருவத்தூர் நோக்கி வந்த வாகனங்களை ஆங்காங்கே சாலையோரம் நிறுத்தி செல்ல அறிவுறுத்தினர். இதனால் சுமார் 5 கி.மீ. தூரத்துக்கு பக்தர்கள் காத்திருந்து பங்காரு அடிகளாருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்பிரனீத் மேற்பார்வையில் சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இன்று காலை 9.30 மணியளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்காரு அடிகளார் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
இதேபோல் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனும் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
இதைத் தொடர்ந்து பங்காரு அடிகளாரின் உடல் வீட்டில் இருந்து தியான மண்டபத்திற்கு வாகனத்தில் எடுத்து செல்லப்பட்டது. பின்னர் அங்கு பொதுமக்கள், பக்தர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது.
வெளியூர்களில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
பங்காரு அடிகளாரின் உடல் அடக்கம் அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
அதன்படி இன்று மாலை 5 மணிக்கு மேல் பங்காரு அடிகளாரின் உடல் அடக்கம் நடைபெறுகிறது. முதலில் அவர் ஏற்கனவே 2 ஆண்டுக்கு முன்பு தியான மண்டபம் அருகே கட்டி வைத்திருந்த சமாதியில் உடல் அடக்கம் நடைபெறும் என்று கூறப்பட்டது.
தற்போது கோவில் அருகே உள்ள புற்று மண்டபத்தில் உடல் அடக்கம் சித்தர் முறைப்படி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
தற்போது அதிக அளவில் பக்தர்கள் குவிந்து வருவதால் பஸ் நிலையம், ரெயில் நிலைய பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். பங்காரு அடிகளாரின் மறைவால் மேல்மருவத்தூர் பகுதியே சோகமாக காட்சி அளிக்கிறது.
- கடந்த ஓர் ஆண்டாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார்
- நேற்று மாலை 5 மணி அளவில் பங்காரு அடிகளார் மாரடைப்பால் மரணம் அடைந்தார்
பக்தர்களால் "அம்மா" என்று அழைக்கப்பட்டவர் பங்காரு அடிகளார். ஆன்மிகப் பணியாற்றி வந்த பங்காரு அடிகளார் கடந்த ஓர் ஆண்டாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். கோவில் வளாகத்தில் உள்ள வீட்டில் இருந்தபடியே அவர் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், நேற்று மாலை 5 மணி அளவில் பங்காரு அடிகளார் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
அவர் மரணம் அடைந்த செய்தி, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் பக்தர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. பக்தர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மேல்மருவத்தூர் குவிந்த வண்ணம் உள்ளனர்.
அதேபோல், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் பக்தகர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். பக்தர்கள் அனைவரும் கண்ணீர் சிந்தியபடி அஞ்சலி செலுத்த நீண்ட வரிசையில் காத்து நிற்கின்றனர்.
இதற்கிடையே புதுச்சேரி ஆளுநகர் தமிழிசை சவுந்தரராஜன், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்த உள்ளார்.
- பங்காரு அடிகளார் மறைவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார்.
- மறைந்த பங்காரு அடிகளாரின் உடலுக்கு பக்தர்கள் ஏராளமானோர் கண்ணரீ அஞ்சலி.
ஆன்மீகவாதி மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் (82) மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.
உடல்நலக் குறைவால் உயிரிழந்த பங்காரு அடிகளார் மறைவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார். மேலும், மு.க.ஸ்டலின் நாளை நேரில் அஞ்சலி செலுத்த உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த பங்காரு அடிகளாரின் உடலுக்கு பக்தர்கள் ஏராளமானோர் கண்ணரீ அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பங்காரு அடிகளார் மறைவையொட்டி மதுராந்தகம் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் அறிவித்துள்ளார்.
- வித்தியாசமான போஸ்டரை செங்கல்பட்டு மாவட்ட தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கத்தினர் ஒட்டி இருந்தனர்.
- சமூக வலைதளங்களிலும் இந்த போஸ்டர்கள் மக்களிடையே வரவேற்பை பெற்றன.
செங்கல்பட்டு:
நடிகர் விஜய் நடித்த லியோ படம் இன்று வெளியாவதை தொடர்ந்து நேற்று மாலையில் இருந்தே ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் நேற்று பல்வேறு நகரங்களில் லியோ படத்தை வரவேற்கும் விதமாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன. அந்த போஸ்டர்களில் இடம் பெற்றிருந்த வாசகங் கள் நடிகர் விஜய்யை வித விதமாக புகழும் வகையில் அமைந்திருந்தன. பெரும்பாலான ஊர்களில் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை பிரதிபலிக்கும் வகையில் போஸ்டர் வாசகங்கள் இருந்தன.
செங்கல்பட்டு நகரில் மற்றும் மறைமலைநகர் பகுதிகளில் வித்தியாசமான போஸ்டரை செங்கல்பட்டு மாவட்ட தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கத்தினர் ஒட்டி இருந்தனர். அந்த போஸ்டரில் ஜோசப் விஜய் என்னும் நான் என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது.
மேலும் சிறப்பு காட்சிக்கு அனுமதி இல்லை. பரவாயில்லை. சிறப்பு விருந்தினராக உங்களை அழைப்போம். எங்கள் தளபதியின் பதவி ஏற்பு விழாவுக்கு என்று வாசகங்கள் இடம் பெற்றிருந்தன. இதேபோன்று தான் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் லியோ பட போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன.
தமிழகம் முழுவதும் விஜய் மக்கள் இயக்கத்தினர் ஒட்டி இருந்த போஸ்டர் வாசகங்கள் வைரலாக பரவின. சமூக வலைதளங்களிலும் இந்த போஸ்டர்கள் மக்களிடையே வரவேற்பை பெற்றன.
இதன் காரணமாக நடிகர் விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர்.
- காரை நிறுத்தி சோதனை செய்தபோது பெட்டி,பெட்டியாக மதுபாட்டில்கள் இருந்தன.
- பள்ளங்குப்பம் பகுதியை சேர்ந்த சிவசங்கர்(38) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
செங்கல்பட்டு:
பாண்டிச்சேரியில் இருந்து செங்கல்பட்டு பகுதிக்கு மதுபாட்டில்கள் கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து புதுப்பட்டு பகுதியில் உள்ள சோதனைச்சாவடியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது காரை நிறுத்தி சோதனை செய்தபோது பெட்டி,பெட்டியாக மதுபாட்டில்கள் இருந்தன. அவற்றை பாண்டிச்சேரியில் இருந்து கடத்தி வந்திருப்பது தெரிந்தது.
இதையடுத்து காரில் மதுபாட்டில் கடத்தலில் ஈடுபட்ட செய்யூர் அருகே உள்ள பள்ளங்குப்பம் பகுதியை சேர்ந்த சிவசங்கர்(38) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.2 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள சுமார் 3 ஆயிரம் மதுபாட்டில்கள், கார் பறிமுதல் செய்யப்பட்டது.
- சென்னையில் இருந்து பாண்டிச்சேரி நோக்கி புதுச்சேரி அரசு பஸ் சென்று கொண்டு இருந்தது.
- ஆத்திரம் அடைந்த கதிரேசன் மாமல்லபுரத்தில் பஸ்சை வழிமறித்து தகராறில் ஈடுபட்டார்.
மாமல்லபுரம்:
சென்னையில் இருந்து பாண்டிச்சேரி நோக்கி புதுச்சேரி அரசு பஸ் சென்று கொண்டு இருந்தது. மாமல்லபுரம் அடுத்த புலிக்குகை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் சென்றபோது திருவான்மியூரை சேர்ந்த கதிரேசன் என்பவர் குடும்பத்துடன் சென்ற மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதுவது போல் சென்றதாக தெரிகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த கதிரேசன் மாமல்லபுரத்தில் பஸ்சை வழிமறித்து தகராறில் ஈடுபட்டார். மேலும் பஸ்சின் கண்ணாடியையும் கல்வீசி நொறுக்கினார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






