என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருக்கழுக்குன்றம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்- தொழிலாளி பலி
- எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் திடீரென வேலுவின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாமல்லபுரம்:
திருக்கழுகுன்றம் அடுத்த கொத்திமங்கலம் பகுதியை சேர்ந்தவர் வேலு(வயது49). கொத்தனார். இவர் நீலமங்கலத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தார்.
அகத்தீஸ்வரமங்கலம் ரோட்டில் வந்தபோது பெட்ரோல் இல்லாமல் மோட்டார் சைக்கிள் நின்றது. இதையடுத்து வேலு மோட்டார் சைக்கிளை தள்ளிக்கொண்டு வந்தார். அப்போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் திடீரென வேலுவின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த வேலு பலியானார். இதுகுறித்து திருக்கழுகுன்றம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






