என் மலர்
செங்கல்பட்டு
மாடம்பாக்கத்தில் மின்சாரம் தாக்கி மின்ஊழியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அம்பேத்கர் நகர், துலுக்கானத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கண்ணாயிரம் (வயது50), இவர் கூடுவாஞ்சேரி மின்வாரிய அலுவலகத்தில் மின் பாதை ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் மாலை கூடுவாஞ்சேரியை அடுத்த மாடம்பாக்கம் ராகவேந்திரா நகரில் உள்ள ஒரு மின்கம்பத்தில் ஏறி பழுதை கண்ணாயிரம் சரி செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென மின்சாரம் தாக்கி கண்ணாயிரம் மின் கம்பத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார்.
உடனே சக ஊழியர்கள் கண்ணாயிரத்தை மீட்டு பொத்தேரியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு உள்ள டாக்டர்கள் கண்ணாயிரத்தை பரிசோதனை செய்துவிட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
குரோம்பேட்டை பகுதியில் என்ஜினீயர் உள்பட ஒரே குடும்பத்தில் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.
தாம்பரம்:
சென்னையை அடுத்த குரோம்பேட்டை அஸ்தினாபுரம் ஸ்ரீராம் நகர் பகுதியைச் சேர்ந்த 48 வயது சிவில் என்ஜினீயர், அவருடைய 44 வயது மனைவி, 18 வயது மகள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு நேற்று கொரோனா பாதிப்பு உறுதியானது.
பல்லாவரம் நகராட்சிக்கு உட்பட்ட கீழ்கட்டளை அம்பாள் நகர் பகுதியைச்சேர்ந்த 38 வயது ஆண், பம்மலைச் சேர்ந்த 32 வயது பெண், கவுரிவாக்கத்தைச் சேர்ந்த 55 வயது ஆண் ஆகியோருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
தாம்பரம் ரங்கநாதபுரத்தில் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் மனைவி, அவருடைய மகள் ஆகியோருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. தாம்பரம் சானடோரியம் பகுதியைச் சேர்ந்த 18 வயது வாலிபர் ஒருவருக்கும், அபிராமி நகரைச் சேர்ந்த 69 வயது மூதாட்டிக்கும், முடிச்சூரைச் சேர்ந்த 53 வயது ஆண் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
இவர்கள் உள்பட செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 39 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 733 ஆனது.
இவர்களில் 245 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 6 பேர் உயிரிழந்தனர். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையை அடுத்த வரதராஜபுரம் பகுதியை சேர்ந்த 23 வயது நர்சு ஒருவருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது. அவர் சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மாடம்பாக்கம் குத்தனூர் பகுதியைச் சேர்ந்த 56 வயது ஆணுக்கும், கொரோனா உறுதியானதால் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இவர்கள் உள்பட காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று 13 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 264 ஆனது. இவர்களில் 155 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். ஒருவர் உயிரிழந்தார். 108 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கூடுவாஞ்சேரி அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் உள்ள நந்திவரம் கோவிந்தராஜபுரம் முதல் குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் ஜார்ஜ். இவருடைய மகன் அருண்குமார் (வயது 35). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது. இவர், கடந்த சில ஆண்டுகளாக மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். கடந்த 20-ந் தேதி இரவு அருண்குமாரை அவரது தந்தை ஜார்ஜ் வந்து பார்த்தார். அதன்பிறகு அருண்குமார் வீடு பூட்டியே கிடந்தது.
நேற்று அருண்குமார் தங்கி இருந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. கதவு உள்புறமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அங்கு அருண்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர் தற்கொலை செய்து 2 நாட்கள் ஆகி இருக்கலாம் என தெரிகிறது. இதனால் அவரது உடல் அழுகி துர்நாற்றம் வீசியது. இதுபற்றி தகவல் அறிந்து வந்த கூடுவாஞ்சேரி போலீசார், அருண்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த ஏக்கத்தினால் அருண்குமார் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என விசாரித்து வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு:
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 13,967 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 6,282 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 567 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 8,795 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்கனவே 655 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று ஒரே நாளில் 26 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேடவாக்கம், பெரும்பாக்கம், செங்கல்பட்டு, காட்டாங்கொளத்தூர், குரோம்பேட்டை, பொழிச்சலூர், பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் 26 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 681 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 233 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

ரூ.1 கோடியே 35 லட்சத்தில் நடவு எந்திரம், களை பறிக்கும் எந்திரம், உழவு எந்திரம் உள்ளிட்ட வேளாண் கருவிகள் வழங்கப்பட்டது.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டத்திற்குட்பட்ட கிராமங்களில் 2017-18-ம் ஆண்டு முதல் வேளாண்மை துறையின் மூலம் கூட்டுப்பண்ணை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் கீழ் நல்லாத்தூர், அம்மணம்பாக்கம், நல்லூர், நத்தம் போன்ற கிராமங்களில் 100 சிறு, குறு விவசாயிகளை கொண்ட உழவர் ஆர்வலர் குழுக்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுக்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்பட 27 குழுக்களுக்கு தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.1 கோடியே 35 லட்சத்தில் நடவு எந்திரம், களை பறிக்கும் எந்திரம், உழவு எந்திரம் உள்ளிட்ட வேளாண் கருவிகள் வழங்கப்பட்டது.
இந்த கருவிகளை மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ் பயனாளிகளுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுகுமார், வேளாண்மை துணை இயக்குனர் ரேவதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
செங்கல்பட்டு அருகே பரனூர் சுங்கச்சாவடி நீண்ட நாட்களுக்கு பின்னர் திறக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்பட்டது.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு அருகே பரனூர் சுங்கச்சாவடி இயங்கி வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நீண்ட நாட்களாக மூடி வைக்கப்பட்டிருந்த இந்த சுங்கச்சாவடி நேற்று முன்தினம் நள்ளிரவு முன்னறிவிப்பின்றி திறக்கப்பட்டது.
இதனால் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் சுங்க கட்டணம் செலுத்துவதற்காக மிகுந்த சிரமத்திற்குள்ளானார்கள்.
இதனால் அந்த வழித்தடத்தில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன. அந்த பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டது. செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் சென்னை, திருச்சி என இரு மார்க்கங்களிலும் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. சுங்கச்சாவடியில் அதிக அளவு வாகனங்கள் வருவதால் செங்கல்பட்டு மாவட்டம் இயல்பு நிலைக்கு திரும்பி வருவதாக கருதப்படுகிறது.

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட 15 ஆயிரம் பேருக்கு நிவாரண பொருட்களை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
தாம்பரம்:
சென்னையை அடுத்த தாம்பரம் தாலுகாவுக்கு உட்பட்ட பெரும்பாக்கம் ஊராட்சியில் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் அமைந்துள்ளன. கொரோனா பாதிப்பு காரணமாக குடிசை மாற்று வாரிய பகுதிகள் ‘சீல்’ வைக்கப்பட்டு உள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட அந்த பகுதியில் வசிக்கும் 15 ஆயிரம் பேருக்கு பாரத் பெட்ரோலியம் நிறுவனம் மற்றும் இந்திய புகையிலை நிறுவனம் இணைந்து, ரூ.50 லட்சம் மதிப்புள்ள மளிகை பொருட்கள் அடங்கிய நிவாரண பொருட்களை வழங்கும் நிகழ்ச்சி தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்தது.
இதில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான்லூயிஸ் கலந்துகொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.
இதில் மெப்ஸ் சிறப்பு பொருளாதார மண்டல மேம்பாட்டு அதிகாரி சண்முகசுந்தரம், பரங்கிமலை துணை கமிஷனர் பிரபாகரன், தாம்பரம் கோட்டாட்சியர் ராஜ்குமார், தாசில்தார் சரவணன், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்திய புகையிலை நிறுவன அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று புதிதாக 55 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 615 ஆக உயர்ந்துள்ளது.
செங்கல்பட்டு:
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 12,448 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 4,895 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 552 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 7,672 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்கனவே 560 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று புதிதாக 55 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 615 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 190 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

அச்சரப்பாக்கம் அருகே வாகனம் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அச்சரப்பாக்கம்:
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், வெள்ளபுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சகாதேவன் (வயது 60). இவர் வசந்தவாடி கிராமத்தில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சென்றுவிட்டு, ஒலக்கூர் கிராமத்தில் உள்ள தனது அண்ணன் வீட்டுக்கு நடந்தே சென்றார். அச்சரப்பாக்கம் அருகே சென்றபோது சகாதேவன் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
இதில் சகாதேவன் பலத்த காயம் அடைந்தார். தகவல் அறிந்த அச்சரப்பாக்கம் போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.
இதுகுறித்து அச்சரப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
பெருமாட்டுநல்லூர் ஊராட்சியில் இரவு மற்றும் பகல் நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியை அடுத்த பெருமாட்டுநல்லூர் ஊராட்சியில் அடங்கிய கன்னிவாக்கம், தர்காஸ் போன்ற கிராமங்களில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த கிராமங்களில் இரவு மற்றும் பகல் நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர்.
சம்பந்தப்பட்ட கூடுவாஞ்சேரி மின்வாரிய செயற்பொறியாளர் பெருமாட்டுநல்லூர் ஊராட்சியில் உள்ள கன்னிவாக்கம், தர்காஸ் கிராமங்களில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தாம்பரம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பல் டாக்டர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாம்பரம்:
சென்னை மேற்கு தாம்பரம், ராஜாஜி சாலையை சேர்ந்தவர் சரவணன் (வயது 31). பல் டாக்டரான இவர், மேற்கு தாம்பரம் மற்றும் அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் கிளனிக்குகள் வைத்து நடத்தி வந்தார்.
நேற்றுமுன்தினம் இவர், அம்பத்தூரில் உள்ள கிளனிக்கிற்கு சென்று விட்டு அதே பகுதியில் உள்ள தனது நண்பரையும் பார்த்துவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் மதுரவாயல் தாம்பரம் பைபாஸ் சாலையில் தாம்பரம் நோக்கி வந்து கொண்டு இருந்தார்.
மேற்கு தாம்பரம், கன்னடபாளையம் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோரம் இருந்த தடுப்பின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் தலை, கை, கால் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் அடைந்த பல் டாக்டர் சரவணன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுபற்றி குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 40 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 538 ஆக உயர்ந்துள்ளது.
செங்கல்பட்டு:
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 11,224 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 4,172 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 480 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6,750 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்கனவே 498 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று ஒரே நாளில் 40 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 538 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 187 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 4 பேர் உயிரிழந்துள்ளனர்.