என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 45 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது.
    செங்கல்பட்டு:

    தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 20,246 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 11,313 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 154-ஆக உள்ளது.
     
    அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 618 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 13,362 ஆக அதிகரித்துள்ளது. 6,895 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 113-ஆக உள்ளது.

    இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்கனவே 1000 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று ஒரே நாளில் 45 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,045 ஆக உயர்ந்துள்ளது.

    இதுவரை 443 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 11 பேர் உயிரிழந்துள்ளனர். 
    செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 56 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்குகிறது.
    செங்கல்பட்டு:

    தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 19,372 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 10,548 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 145-ஆக உள்ளது.
     
    அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 559 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 12,762 ஆக அதிகரித்துள்ளது. 6,304 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 106-ஆக உள்ளது.

    இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்கனவே 933 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று ஒரே நாளில் 56 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 989 ஆக உயர்ந்துள்ளது.

    இதுவரை 403 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
    செங்கல்பட்டை அடுத்த செட்டிபுண்ணியம் ஊராட்சியில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை எளியோர் 400 பேருக்கு அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் காய்கறி உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டை அடுத்த செட்டிபுண்ணியம் ஊராட்சியில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை எளியோர் 400 பேருக்கு அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் காய்கறி உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.

    நிகழ்ச்சிக்கு அ.தி.மு.க. காஞ்சிபுரம் மத்திய மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் கவுஸ் பாஷா முன்னிலை வகித்தார். இதில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ் கலந்துகொண்டு ஏழைகளுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். முன்னதாக மாவட்ட பிரதிநிதி சி.ஆர். குணசேகரன் வரவேற்றார். இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அமுதா குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 34 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 922-ஆக உயர்ந்துள்ளது.
    செங்கல்பட்டு:

    தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 18,545 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 9,909 பேர்  குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 133-ஆக உள்ளது.
     
    அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 558 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 12,203 ஆக அதிகரித்துள்ளது. 5,800 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 95-ஆக உள்ளது.

    இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்கனவே 888 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று ஒரே நாளில் 34 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 922 ஆக உயர்ந்துள்ளது.

    இதுவரை 395 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 10 பேர் உயிரிழந்துள்ளனர். 
    காட்டாங்குளத்தூர் எஸ்.ஆர்.எம். மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதியவர் 4 நாட்களில் குணமடைந்தார். அவரை டாக்டர்கள், செவிலியர்கள் உற்சாகமாக வீட்டுக்கு வழியனுப்பி வைத்தனர்.
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 100 படுக்கைகளுடன் கொரோனா சிறப்பு சிகிச்சை பிரிவு அமைக்கப்பட்டது. அந்த சிறப்பு சிகிச்சை பிரிவில் கொரோனா நோய் தொற்று ஏற்பட்ட 16-க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டு, பூரண குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள்.

    கூடுவாஞ்சேரியை சேர்ந்த 63 வயது முதியவர் ஒருவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருதய பரிசோதனை செய்தபோது, கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர், எஸ்.ஆர்.எம். மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் கொரோனா சிறப்பு சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

    டாக்டர்கள், செவிலியர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்த அவர் வெறும் 4 நாட்களில் குணம் அடைந்து வீடு திரும்பினார். அவரை எஸ்.ஆர்.எம். மருத்துவமனையின் கண்காணிப்பாளர் டாக்டர் தங்கராஜ், மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் சுந்தரம், தேசிய சித்த மருத்துவமனை இயக்குனர் டாக்டர் மீனாகுமாரி மற்றும் செவிலியர்கள் கைகளை உற்சாகமாக தட்டி வழியனுப்பி வைத்தனர்.

    கொரோனாவில் இருந்து மீண்ட முதியவர் நிருபர்களிடம் கூறும்போது, கொரோனா வைரஸ் என்பது மற்ற வைரஸ் காய்ச்சல் போன்றதுதான். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தாலும், டாக்டர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்தாலும் விரைவில் குணமடைந்து விடலாம். எனவே பொதுமக்கள் கொரோனா குறித்து அச்சப்படவேண்டாம். கொரோனாவில் இருந்து நான் மீண்டு வந்ததே அதற்கு உதாரணம் என்றார்.
    நந்திவரம் பஸ் நிலையத்தில் முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் பஸ் நிலையத்தில் நேற்று அதிகாலை 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பஸ் நிலையத்திலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் இருந்தார். இதை பார்த்த பொதுமக்கள் கூடுவாஞ்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கூடுவாஞ்சேரி போலீசார் முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை, எதற்காக அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 33 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 890-ஆக உயர்ந்துள்ளது.
    செங்கல்பட்டு:

    தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 17,728 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 9,342 பேர்  குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 127-ஆக உள்ளது.
     
    அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 11,640 ஆக அதிகரித்துள்ளது.

    இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்கனவே 857 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று ஒரே நாளில் 33 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 890 ஆக உயர்ந்துள்ளது.

    இதுவரை 258 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 9 பேர் உயிரிழந்துள்ளனர். 
    செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 12 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 844-ஆக உயர்ந்துள்ளது.
    செங்கல்பட்டு:

    தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 17,082 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 8,731 பேர்  குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
     
    அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 548 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 11,131 ஆக அதிகரித்துள்ளது.

    இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்கனவே 832 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று ஒரே நாளில் 12 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 844 ஆக உயர்ந்துள்ளது.

    இதுவரை 255 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 8 பேர் உயிரிழந்துள்ளனர். 
    செங்கல்பட்டு அருகே தொழிலாளி கொலையில் அவரது நண்பர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு அடுத்த வல்லம் பகுதியை சேர்ந்தவர் கருணாகரன்(40). ஊராட்சியில் குப்பை வண்டி டிரைவராக இருந்தார். நேற்று இரவு அவர் பழவேலி, பச்சையம்மன் கோவில் அருகே படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். விசாரணையில் அவரை நண்பர்களான வினோத், உசேன், சுரேஷ் ஆகியோர் கொலை செய்து இருப்பது தெரிந்தது.

    அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மதுவாங்க கொடுத்த ரூ.2500-யை கருணாகரண் தொலைத்து விட்டதாக கூறி உள்ளார். இதில் ஏற்பட்ட மோதலில் கருணாகரணை கொலை செய்ததாக அவர்கள் தெரிவித்து உள்ளனர்.
    மோட்டார் சைக்கிள் விபத்தில் தனியார் நிறுவன ஊழியர்கள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
    தாம்பரம்:

    சென்னை கொரட்டூர், சாமி அவென்யூ, பாரதி நகரைச் சேர்ந்தவர் ராமானுஜம் (வயது 30). அதேபோல் மண்ணிவாக்கம், மண்ணீஸ்வரர் நகரைச் சேர்ந்தவர் வாசு(54). இவர்கள் இருவரும், அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர். நேற்று மதியம் பணி முடிந்ததும் வாசுவை அவரது வீட்டில் இறக்கி விடுவதற்காக ராமானுஜம் தனது மோட்டார் சைக்கிளில் அவரை ஏற்றிக்கொண்டு வந்தார். ‘டியூப் லெஸ்’ டயர் என்பதால் வாகனத்தின் டயரில் இருந்து காற்று இறங்கியதை இருவரும் கவனிக்கவில்லை என கூறப்படுகிறது.

    முடிச்சூர் பெரிய ஏரி அருகே வண்டலூர் வெளிவட்ட சாலையில் வேகமாக வந்தபோது, டயர் பஞ்சரானதால் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையின் இடதுபுறமாக இழுத்துச் சென்றது. அதில் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலை தடுமாறிய வாசு கீழே விழுந்ததில் அவரின் முகம் சாலையில் மோதியதில், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ராமானுஜம் சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டு மின்கம்பத்தில் மோதி பலியானார்.

    இது குறித்து தகவலறிந்து வந்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    செங்கல்பட்டு:

    தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 16,277 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 8,324 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
     
    அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 587 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 10,576 ஆக அதிகரித்துள்ளது.

    இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்கனவே 779 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று ஒரே நாளில் 45 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 824 ஆக உயர்ந்துள்ளது.

    இதுவரை 253 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
    அச்சரப்பாக்கம் அருகே வாகனம் மோதி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்த வருகின்றனர்.
    அச்சரப்பாக்கம்:

    செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் 40 வயது மதிக்கத்தக்க பெண் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது அவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியானார், அவருக்கு 40 வயது இருக்கும். பச்சை நிறத்தில் பல டிசைன் கொண்ட ஜாக்கெட்டும், புள்ளிகள் போட்ட சிவப்பு நிற சேலையும் அணிந்திருந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லைல.

    இது குறித்து அச்சரப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
    ×