என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 78 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,615 ஆக உள்ளது.
    செங்கல்பட்டு:

    தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 27,256ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 14,901 பேர்  குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 220-ஆக அதிகரித்துள்ளது.
     
    அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,072 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 18,693 ஆக அதிகரித்துள்ளது. 9,459 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 167-ஆக உள்ளது.

    இந்நிலையில் சென்னைக்கு அடுத்தபடியாக உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்கனவே 1,537 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று ஒரே நாளில் 78 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,615 ஆக உயர்ந்துள்ளது.

    இதுவரை 678 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 14 பேர் உயிரிழந்துள்ளனர். 
    செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 76 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,446 ஆக உள்ளது.
    செங்கல்பட்டு:

    தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 25,872ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 14,316 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 208-ஆக அதிகரித்துள்ளது.

    இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்கனவே 1,370 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று ஒரே நாளில் 76 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,446 ஆக உயர்ந்துள்ளது.

    இதுவரை 671 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 13 பேர் உயிரிழந்துள்ளனர். 
    செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 52 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,360 ஆக உள்ளது.
    செங்கல்பட்டு:

    தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 24,586ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 13,706 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு இன்று 3 பேர் உயிரிழந்துள்ளதால் பலியானோர் எண்ணிக்கை 200-ஆக அதிகரித்துள்ளது.
     
    அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 806 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 16,585 ஆக அதிகரித்துள்ளது. 8,554 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 150-ஆக உள்ளது.

    இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்கனவே 1,308 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று ஒரே நாளில் 52 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,360 ஆக உயர்ந்துள்ளது.

    இதுவரை 661 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 12 பேர் உயிரிழந்துள்ளனர். 
    செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 48 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,271 ஆக உள்ளது.
    செங்கல்பட்டு:

    தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 23,495 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 13,170 பேர்  குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 184-ஆக உள்ளது.
     
    அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 964 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 15,776 ஆக அதிகரித்துள்ளது. 8,181 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 138-ஆக உள்ளது.  

    இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்கனவே 1,223 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று ஒரே நாளில் 48 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,271 ஆக உயர்ந்துள்ளது.

    இதுவரை 615 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 11 பேர் உயிரிழந்துள்ளனர். 
    தாம்பரம், பல்லாவரம் பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100-ஐ தாண்டி உள்ளது.
    செங்கல்பட்டு:

    தமிழகத்தில் கொரோனா வைரஸ் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது.

    சென்னைக்கு அடுத்த படியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,230 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர், மேடவாக்கம், குரோம்பேட்டை, பெரும்பாக்கம், கவுரிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    இதில் தாம்பரம், பல்லாவரம் பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100-ஐ தாண்டி உள்ளது.

    நேற்று முன்தினம் நிலவரப்படி தாம்பரத்தில் 112 பேருக்கும், பல்லாவரத்தில் 108 பேருக்கும், பம்மலில் 34 பேருக்கும், அனகாபுத்தூரில் 17 பேருக்கும் நோய் தொற்று உறுதியாகி இருந்தது.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆரம்பத்தில் குறைந்த எண்ணிக்கையில் அதிகரித்த நோய் தொற்று தற்போது வேகமாக உயர்ந்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
    செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 53 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,230 ஆக உள்ளது.
    செங்கல்பட்டு:

    தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 22,333 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 12,757 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 173-ஆக உள்ளது.
     
    அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 804 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 14,802 ஆக அதிகரித்துள்ளது. 7,891 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 129-ஆக உள்ளது.  

    இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்கனவே 1,177 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று ஒரே நாளில் 53 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,230 ஆக உயர்ந்துள்ளது.

    இதுவரை 610 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 11 பேர் உயிரிழந்துள்ளனர். 
    கூடுவாஞ்சேரி அருகே சென்னையைச் சேர்ந்த தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் தைலாவரம் கிராமத்தில் ரெயில்வே தண்டவாளம் அருகே நேற்று காலை ஆண் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடப்பதாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், கூடுவாஞ்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார் கொலை செய்யப்பட்டு கிடந்த நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்ட நபர் சென்னை எண்ணூர் அன்னை சிவகாமி நகரைச் சேர்ந்த ரமேஷ் (வயது 33) என்பதும், கட்டிடத்தொழிலாளி என்பதும் தெரியவந்தது.

    கொலை செய்யப்பட்ட ரமேஷ் மீது சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களில் 20-க்கும் மேற்பட்ட திருட்டு, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. சமீபத்தில் சிறையில் இருந்து வெளியே வந்த ரமேஷ், சிறையில் தனக்கு பழக்கமான கூடுவாஞ்சேரியை அடுத்த தைலாவரம் பகுதியைச் சேர்ந்த தனது நண்பர் வீட்டில் தங்கி இருந்தார்.

    அப்போது அவரை முன்விரோதம் காரணமாக யாராவது வெட்டி படுகொலை செய்தார்களா அல்லது மது குடிக்கும்போது நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் வெட்டி கொலை செய்யப்பட்டாரா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், வண்டலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் ஆகியோர் நேரில் சென்று கொலை நடந்த இடத்தை பார்வையிட்டு அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தனர்.

    கொலையாளிகளை பிடிக்க கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
    மாமல்லபுரத்தில் மதுக்கடைகள் மூடப்படுவதாக பரவிய வதந்தியால் குவிந்த மது பிரியர்கள் பெட்டி, பெட்டியாக வாங்கி சென்றனர்
    மாமல்லபுரம்:

    கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் மதுக்கடைகள் மூடப்பட்டன. பின்னர் கோர்ட்டு அனுமதி அளித்ததன் பேரில் மீண்டும் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. தற்போது 4-ம் கட்ட ஊரடங்கு முடிவுக்கு வரும் வேளையில் சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா தொற்று நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது.


    இந்த மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்றும், கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மீண்டும் செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுக்கடைகள் மூடப்பட உள்ளதாகவும் சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக வதந்தி பரவி வருகிறது.

    மதுக்கடைகளை மூடிவிட்டால் மீண்டும் மது கிடைக்காமல் போய் விடுமோ, பிறகு எப்போது கடை திறப்பார்களோ என அச்சமடைந்த மதுபிரியர்கள், மதுக்கடைகளில் குவிந்தனர். பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த மது பிரியர்களால் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அயல்நாட்டு மதுபான கடையில் நேற்று மது பிரியர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    தகவலறிந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் குப்புசாமி உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கூட்டத்தை ஒழுங்குபடுத்தினர். பின்னர் மதுபிரியர்கள் பலர் சில மணி நேரம் காத்திருந்து வரிசையில் சென்று தங்களுக்கு பிடித்த மது வகைகளை வாங்கி சென்றனர்.

    கூட்டத்தில் முண்டியடித்து செல்ல முயன்றவர்களை எச்சரித்த போலீசார், சமூக விலகலை கடைபிடித்து வரிசையில் சென்று மது வாங்கி செல்ல அறிவுறுத்தினர். பலர் கார்களில் வந்து பல்வேறு மது வகைகளை பெட்டி, பெட்டியாக வாங்கி சென்றனர். இதனால் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சர்வீஸ் சாலையில் கார்கள் அணிவகுத்து நின்றன. மேலும் மொத்தமாக மது வாங்கி சென்றவர்களுக்கு வசதியாக அங்கு சாலையோர திடீர் பை கடைகளும் தோன்றின.

    வரிசையில் நின்றவர்களுக்கு துணி பைகளை விற்று வியாபாரம் செய்த துணிப்பை வியாபாரிகளையும் காண முடிந்தது. சென்னையில் இருந்து கார்களில் வந்திருந்த இளம்பெண்கள் சிலரும் வரிசையில் சென்று தங்களை யாரும் அடையாளம் கண்டு கொள்ளாத வகையில் முகத்தை சுடிதார் துப்பட்டாவால் மூடிக்கொண்டு பீர், ஒயின் உள்ளிட்ட மதுவகைகளை வாங்கி சென்றனர். 
    கூடுவாஞ்சேரி அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியை அடுத்த கன்னிவாக்கம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலு (வயது 42). இவர் ஒரகடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் கூலி வேலை செய்து வந்தார். அடிக்கடி மது குடித்து விட்டு வரும் அவர் தனது மனைவி சுமதியிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார். நேற்று முன்தினம் சுமதி வேலைக்கு சென்று விட்டார்.

    பாலு பாண்டூர் சமுதாயக்கூடம் அருகே பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடப்பதாக அக்கம்பக்கத்தினர் சுமதிக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சுமதி தனது கணவரை மீட்டு பொத்தேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
    மேல்மருவத்தூர் அருகே குப்பை எரிக்கும் தகராறில் விவசாயி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மதுராந்தகம்:

    செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரை அடுத்த கிளியா நகரைச் சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 56). விவசாயி. நேற்று இவருக்கும், இவரது வீட்டின் எதிரே உள்ள ஜனார்த்தனன் என்பவரது மனைவி ரேவதிக்கும் குப்பையை எரிப்பதில் தகராறு ஏற்பட்டது.

    அப்போது அங்கு வந்த ரேவதியின் உறவினர்களான முகேஷ் (27), மோகன்ராஜ் (29) ஆகியோர் பிரபாகரனை கீழே தள்ளியதாக தெரிகிறது. இதில் படுகாயம் அடைந்த பிரபாகரன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து பிரபாகரனின் மனைவி மேல்மருவத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் வழக்குப்பதிவு செய்து முகேஷ், மோகன்ராஜ் இருவரையும் கைது செய்தார்.
    செங்கல்பட்டு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகை, ரூ.5 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு அடுத்த சாந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 61). ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர். இவர் செங்கல்பட்டு சக்திநகர் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட வீட்டிற்கு சென்று அங்கு 2 நாட்களாக தங்கி இருந்தார்.

    இந்த நிலையில் நேற்று காலை சாந்திநகரில் உள்ள அவரது வீட்டின் பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர், உங்கள் வீட்டின் வெளி கேட் மற்றும் கதவு திறந்து இருப்பதாக போன் மூலம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து பாலகிருஷ்ணன் அங்கு சென்று பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோ மற்றும் அலமாரிகள் உடைக்கப்பட்டிருந்தது.

    அதன் அருகில் இருந்த பெட்டியில் வைக்கப்பட்டிருந்த 25 பவுன் நகை மற்றும் ரூ.5 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து பாலகிருஷ்ணன் செங்கல்பட்டு தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். பாலகிருஷ்ணனின் வீட்டின் எதிரே திருப்போரூர் கூட்டு சாலை சோதனைச்சாவடி இயங்கி வருகிறது. அங்கு 24 மணி நேரமும் போலீசார் கண்காணிப்பில் இருப்பர். அதையும் மீறி இந்த இடத்தில் கொள்ளை போயுள்ளது பொதுமக்களுடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
    கூடுவாஞ்சேரியில் பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றர்.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் உள்ள கற்பகாம்பாள் நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் ரூபிணி (வயது 23). இவர் சிங்கப்பெருமாள்கோவிலை அடுத்த மகேந்திரா சிட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு கடந்த 2 ஆண்டுகளாக வயிற்று வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    கடந்த 27-ந் தேதி இரவு அவருக்கு மீண்டும் வயிற்று வலி அதிகமானதால் வீட்டில் உள்ள அறையில் உள்தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு நீண்டநேரமாக வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது ரூபிணி தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

    உடனடியாக அவரை மீட்டு தாம்பரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலை அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    ×