என் மலர்
செங்கல்பட்டு
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 136 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,464 ஆக உள்ளது.
செங்கல்பட்டு:
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 36,841 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 19,333 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 326-ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,390 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 25,937 ஆக அதிகரித்துள்ளது. 12,591 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 260-ஆக உள்ளது.
இந்நிலையில் சென்னைக்கு அடுத்தபடியாக உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்கனவே 2,328 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று ஒரே நாளில் 136 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,464 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 897 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

கல்பாக்கம் அருகே வடமாநில தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்பாக்கம்:
அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் அகில்தாஸ் (வயது 36). இவர் செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தை அடுத்த குன்னத்தூர் கிராமத்தில் உள்ள ஒரு இறால் பண்ணையில் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்தார். அவரது குடும்பத்தினர் அசாமில் உள்ளனர். அகில்தாஸ் தனது மனைவியுடன் அடிக்கடி செல்போனில் பேசுவது வழக்கம். நேற்று முன்தினம் அவர் வழக்கம் போல மனைவியுடன் செல்போனில் பேசியுள்ளார், அப்போது கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதில் மனவேதனை அடைந்த அகில்தாஸ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 139 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,285 ஆக உள்ளது.
செங்கல்பட்டு:
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 34,914 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 18,325 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 307-ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,242 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 24,545 ஆக அதிகரித்துள்ளது. 11,730 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 244-ஆக உள்ளது.
இந்நிலையில் சென்னைக்கு அடுத்தபடியாக உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்கனவே 2,146 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று ஒரே நாளில் 139 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,285 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 883 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

வேறு ஒரு நபருடன் பேசியதால் ஆத்திரத்தில் கத்திரிக்கோலால் குத்தி பெண்ணை கொலை செய்த கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.
தாம்பரம்:
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரை சேர்ந்தவர் யசோதா ராணி (வயது 42). இவருக்கு கணவரும், ஒரு மகன், ஒரு மகளும் உள்ளனர். இவர் புதுபெருங்களத்தூர் பாரதி நகர் பகுதியில் தையல் கடை நடத்தி வந்தார். இவருக்கும், கிழக்கு தாம்பரம் கணபதிபுரம் பகுதியைச் சேர்ந்த செல்வக்குமார் (45) என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டு இருவரும் நெருக்கமாக பழகி வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று மதியம் தையல் கடையில் இருந்த யசோதா ராணியிடம், செல்வக்குமார் பேசி கொண்டிருந்தார். திடீரென இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த செல்வக்குமார் கடையில் இருந்த கத்திரிக்கோலை எடுத்து திடீரென்று யசோதா ராணியின் கழுத்தில் குத்திவிட்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுவிட்டார். இதில் படுகாயம் அடைந்த யாசோதா ராணி, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது தொடர்பாக சேலையூர் போலீஸ் உதவி கமிஷனர் சகாதேவன் தலைமையில் தனிப்படை அமைத்து அந்த பகுதிகளில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து செல்வக்குமார் தப்பிச்சென்றதை கண்காணித்தனர்.
அதில் பெருங்களத்தூர் ரோஜா தோட்டம் அருகே செல்வக்குமாரின் மோட்டார் சைக்கிள் அனாதையாக நின்றது. அந்த பகுதியில் போலீசார் தேடியபோது, பைபாஸ் சாலை சர்வீஸ் சாலை அருகே உள்ள பாலத்தின் கீழே அமர்ந்து இருந்த செல்வக்குமாரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.
அதில், கைதான செல்வக்குமார் திருமுடிவாக்கம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 2008ல் திருமணம் நடந்தது. அவருடைய மனைவி ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியையாக உள்ளார். இதற்கு முன்பு குரோம்பேட்டை பகுதியில் வசித்துவந்த யசோதா ராணியுடன், திருமணத்துக்கு முன்பு இருந்தே செல்வக்குமாருக்கு தொடர்பு ஏற்பட்டு இருந்தது. இதையறிந்த செல்வக்குமாரின் மனைவி, அவரை விவாகரத்து செய்துவிட்டு சென்றுவிட்டார்.
தனியாக இருந்த செல்வக்குமார், மீண்டும் யசோதா ராணியுடன் தொடர்பு வைத்துக்கொண்டு அவருடன் உல்லாசமாக சுற்றி வந்துள்ளார். இதற்கிடையில் யசோதா ராணி வேறு ஒரு நபருடன் செல்போனில் அடிக்கடி பேசி வந்தார். இதையறிந்த செல்வக்குமார், நான் இருக்கும்போது வேறு ஒருவருடன் எப்படி பேசலாம் என அவரை கண்டித்தார்.
இதற்கிடையில் அந்த நபர், யாசோதா ராணியின் மகள் பிறந்த நாளுக்கு கேக் ஆர்டர் கொடுத்தார். இதனால் மேலும் ஆத்திரம் அடைந்த செல்வக்குமார், நேற்று மதியம் யசோதாராணியுடன் இது தொடர்பாக தகராறில் ஈடுபட்டபோது ஆத்திரத்தில் அவரை கத்திரிக்கோலால் குத்திக்கொலை செய்தது அவரிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
கொலை நடந்த 4½ மணி நேரத்தில் கொலையாளியை கைது செய்த தனிப்படை போலீசாரை போலீஸ் உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 100 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,088 ஆக உள்ளது.
செங்கல்பட்டு:
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 33,229ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 17,527 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 286-ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 23,298 ஆக அதிகரித்துள்ளது. 11,256 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 254-ஆக உள்ளது.
இந்நிலையில் சென்னைக்கு அடுத்தபடியாக உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்கனவே 1,988 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று ஒரே நாளில் 100 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,088 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 788 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

பொத்தேரி, கூடுவாஞ்சேரியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.
வண்டலூர்:
மறைமலைநகர், கூடுவாஞ்சேரி துணை மின் நிலையங்களில் நாளை (புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. ஆகவே நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மறைமலைநகர் தொழிற்பேட்டை, காட்டாங்கொளத்தூர், திருக்கச்சூர், பேரமனூர், சட்டமங்கலம், சிங்கப்பெருமாள்கோவில், செங்குன்றம், மல்ரோஜாபுரம், பொத்தேரி, தைலாவரம், பெருமாட்டுநல்லூர், காயரம்பேடு, நந்திவரம், மகாலட்சுமி நகர், கோவிந்தராஜபுரம், கூடுவாஞ்சேரி டவுன், மாடம்பாக்கம், ஆதனூர், ஊரப்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும்.
இந்த தகவலை மறைமலைநகர் மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்கியது.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சி கீழக்கரணை வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசிக்கும் 37 வயது ஆண், ஊரப்பாக்கம் ஊராட்சியில் உள்ள கிளாம்பாக்கம் செல்லியம்மன் நகர் பகுதியில் வசிக்கும் 60 வயது மூதாட்டி, காரணைப்புதுச்சேரி கோகுலம் காலனி விரிவு பகுதியில் வசிக்கும் 3 வயது சிறுவன், காரணைப்புதுச்சேரி பகுதியை சேர்ந்த 30 வயது வாலிபர் உள்பட நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் 6 பேரும், சிங்கபெருமாள் கோவில் பகுதியில் 4 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டடு உள்ளனர்.
இவர்களுடன் செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 134 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,988 ஆனது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்கியது. இவர்களில் 788 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுவரை 15 பேர் உயிரிழந்து உள்ளனர். மற்றவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஊத்துக்கோட்டை சர்ச் வீதியை சேர்ந்த ஒருவர், திருவள்ளூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியராக உள்ளார். 4 நாட்களுக்கு முன் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் மருத்துவ பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதால் சென்னை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில் அவரது தாய், மனைவி, மகன், மகள் ஆகியோருக்கு பரிசோதனை செய்ததில் 4 பேருக்கும் நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி ஆனது. 4 பேரும் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
இவர்களுடன் திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 57 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,386 ஆனது. இவர்களில் 732 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 14 பேர் உயிரிழந்தனர். 640 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை குளக்கரை தெருவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 40 வயது ஆண், 35 வயது பெண் மற்றும் 22 வயது பெண், 9 வயது சிறுவன் ஆகிய 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த குடும்பத்தில் ஏற்கனவே ஆண் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. இதே போல் மணிமங்கலம் கருணீகர் தெருவை சேர்ந்த 50 வயது ஆணுக்கு கொரொனா தொற்று உறுதியானது.
இவர்களுடன் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று 18 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 534 ஆனது. இவர்களில் 321 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 5 பேர் உயிரிழந்தனர். 208 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நல்லம்பாக்கத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே உள்ள நல்லம்பாக்கம் துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் கண்டிகை, ரத்தினமங்கலம், கீரப்பாக்கம், பனங்காட்டுபாக்கம், போலீஸ் குடியிருப்பு, நல்லம்பாக்கம் குமிழி, அம்மணம்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும்.
இதேபோல பொத்தேரி துணை மின்நிலையத்திலும் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. ஆகவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகம், கிழக்கு பொத்தேரி, மேற்கு பொத்தேரி (ஒரு பகுதி), சீனிவாசபுரம், டிபன்ஸ் காலனி, தைலாவரம் நரசிம்மன்நகர், வல்லாஞ்சேரி சாமூண்டீஸ்வரி நகர், கோவிந்தராஜபுரம், வள்ளி நகர், கிருஷ்ணாபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் மின் வினியோகம் நிறுத்தப்படும். இந்த தகவலை மறைமலைநகர் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 12 சிறுவர், சிறுமிகள் உள்பட 95 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியானது.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி பாலகிருஷ்ணன் தெரு, நேரு நகர் பகுதியில் வசிக்கும் 30 வயது இளம்பெண், சிங்கபெருமாள்கோவில் அடுத்த செங்குன்றம் பெரிய தெருவில் வசிக்கும் 33 வயது வாலிபர், வண்டலூர் ஊராட்சியில் நடேசன் தெரு, ரத்தினம் நகரில் வசிக்கும் 30 வயது வாலிபர், காரணைப்புதுச்சேரி ஊராட்சியில் உள்ள கோகுலம் காலனி விரிவு பகுதியில் வசிக்கும் 26 வயது இளம்பெண் ஆகியோருக்கு கொரோனா உறுதியானது.
கூடுவாஞ்சேரி வேதாச்சலம் நகரில் வசிக்கும் 5 வயது சிறுமி, மறைமலைநகர் நக்கீரன் நகர் பகுதியில் வசிக்கும் 8 வயது சிறுமி, மேலும் 1 வயது பெண் குழந்தை, ஒன்றரை வயது ஆண் குழந்தை, 2 வயது பெண் குழந்தை, 4 வயது சிறுவன் உள்பட 12 சிறுவர், சிறுமிகள் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
இவர்களுடன் செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 95 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று முன் தினம் வெளிநாடுகளில் இருந்து வந்த நபர்களில் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களுடன் சேர்த்து மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,719 ஆனது. இவர்களில் 763 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுவரை 14 பேர் உயிரிழந்தனர். மற்றவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை முருகாத்தம்மன் பேட்டை அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த 35 வாலிபர், சோமங்கலம் பகுதியை சேர்ந்த 40 வயது பெண், மணிமங்கலம் பகுதியை சேர்ந்த 64 வயது முதியவர் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியானது.
இவர்களுடன் காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 16 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 500 ஆனது. இவர்களில் 309 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 4 பேர் உயிரிழந்தனர். 187 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே ரங்கய்யபள்ளி கிராமத்தை சேர்ந்த மாவுமில் உரிமையாளர் வாத நோய்க்காக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இவருக்கு உடல்நிலையில் கோளாறு ஏற்பட்டதால் மீண்டும் மற்றொரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை பெற சென்றார். அங்கு அவருக்கு ரத்த பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அவர் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அவரை சிகிச்சைக்காக சென்னைக்கு வாடகை காரில் அழைத்து சென்ற 2 கார் டிரைவர்களும், மாவுமில் உரிமையாளர் மனைவி, மகள், மகன் ஆகிய 5 பேரும் கொரோனா பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இவருடன் சேர்த்து திருவள்ளூர் மாவட்டத்தில் 79 நேற்று பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,274 ஆனது. இவர்களில் 668 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 11 பேர் உயிரிழந்தனர். 595 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஊனமாஞ்சேரியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.
வண்டலூர்:
ஊனமாஞ்சேரி துணை மின் நிலையத்தில் நாளை (திங்கட்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் கொளப்பாக்கம், ஊனமாஞ்சேரி, போலீஸ் அகாடமி, கிரஷர், நெடுங்குன்றம், ஆலப்பாக்கம், வண்டலூர் மிருகக் காட்சி சாலை, காரணைப் புதுச்சேரி, ஓட்டேரி மற்றும் ஊரப்பாக்கத்தின் ஒரு பகுதி போன்ற இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும் என்று மறைமலைநகர் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 80 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,704 ஆக உள்ளது.
செங்கல்பட்டு:
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 28,694ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 15,762 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 232-ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,116 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 19,826 ஆக அதிகரித்துள்ளது. 10,210 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 178-ஆக உள்ளது.
இந்நிலையில் சென்னைக்கு அடுத்தபடியாக உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்கனவே 1,624 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று ஒரே நாளில் 80 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,704 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 689 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

சிறுதாவூரில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.
கல்பாக்கம்:
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தை அடுத்த ஒமேகா துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ஓமேகா சிப்காட், அகரம், ஆமூர், பஞ்சந்தீர்த்தி, கழனிபாக்கம், நெல்வாய், முந்திரி தோப்பு, மேல கனகப்பட்டு, அருங்குன்றம், சிறுதாவூர் உள்ளிட்ட கிராமங்களில் மின் வினியோகம் தடை செய்யப்படும் என்று செங்கல்பட்டு மின் செயற்பொறியாளர் மனோகரன் தெரிவித்துள்ளார்.