என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    கொரோனா சிறப்பு வார்டை ஐ.ஜி.நாகராஜன், டி.ஐ.ஜி. தேன்மொழி, செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், மதுராந்தகம் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
    மதுராந்தகம்:

    செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்கும் பணியில் சுகாதார துறையினர், வருவாய் துறையினர், போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் தற்போது கொரோனா சிகிச்சை பிரிவு செயல்படுகிறது. போலீஸ் துறையை சேர்ந்தவர்களுக்காகவே 200 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த சிறப்பு வார்டை ஐ.ஜி.நாகராஜன், டி.ஐ.ஜி. தேன்மொழி, செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், மதுராந்தகம் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    அப்போது ஆஸ்பத்திரி முதன்மை செயல் அலுவலர் சேகர் உள்பட ஆஸ்பத்திரி அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
    செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 108 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,379 ஆக உள்ளது.
    செங்கல்பட்டு:

    தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 48,019 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 26,782 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 428-ஆக அதிகரித்துள்ளது.
     
    அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 34,245 ஆக அதிகரித்துள்ளது.
     
    இந்நிலையில் சென்னைக்கு அடுத்தபடியாக உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்கனவே 3,271 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று ஒரே நாளில் 108 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,379 ஆக உயர்ந்துள்ளது.

    இதுவரை 1,597 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 33 பேர் உயிரிழந்துள்ளனர். 
    செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 63 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,171 ஆக உள்ளது.
    செங்கல்பட்டு:

    தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 48,019 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 26,782 பேர்  குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 428-ஆக அதிகரித்துள்ளது.
     
    அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 34,245 ஆக அதிகரித்துள்ளது.

    இந்நிலையில் சென்னைக்கு அடுத்தபடியாக உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்கனவே 3,108 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று ஒரே நாளில் 63 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,171 ஆக உயர்ந்துள்ளது.

    இதுவரை 1,501 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 30 பேர் உயிரிழந்துள்ளனர். 
    செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று ஒரே நாளில் 88 பேர் பாதிப்புக்கு உள்ளாகினர். 3 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 30 ஆக உயர்ந்தது.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட காட்டாங்கொளத்தூரை சேர்ந்த 30 வயது வாலிபர், இளவழகனார் தெருவில் வசிக்கும் 33 வயது வாலிபர், மறைமலைநகர் பகுதியை சேர்ந்த 55 வயது ஆண் ஆகியோர் கொரோனா பாதிப்படைந்துள்ளனர்.

    அதே போல் நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட ஊரப்பாக்கம் குலசேகரன் அவென்யூ, பாரதி நகர் பகுதியை சேர்ந்த 32 வயது பெண், ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்த 42 வயது ஆண், கூடுவாஞ்சேரி வீரபத்திர நகரை சேர்ந்த 54 வயது பெண், காயரம்பேடு சவுபாக்கிய நகருக்குட்பட்ட 27 வயது இளம்பெண் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    இவர்களுடன் செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 88 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்ட முழுவதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,108 ஆக உயர்ந்தது. இவர்களில் 1,501 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

    இந்த நிலையில் நேற்று 60 வயது மூதாட்டி, 55 வயது ஆண், 52 வயது பெண் ஆகிய 3 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்தது.

    அதே போல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 46 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர்.

    இதனால் மாவட்ட முழுவதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 803 ஆக உள்ளது.

    இவர்களில் 440 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ள நிலையில், 355 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 8 பேர் இதுவரை கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 52 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிப்படைந்த நிலையில், மாவட்ட முழுவதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1945 ஆக உயர்ந்தது. இதில் 914 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

    1001 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில் இதுவரை 30 பேர் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 80 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,085 ஆக உள்ளது.
    செங்கல்பட்டு:

    தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 46,504 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 25,344 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 479-ஆக அதிகரித்துள்ளது.

    அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 33,244 ஆக அதிகரித்துள்ளது.
     
    இந்நிலையில் சென்னைக்கு அடுத்தபடியாக உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்கனவே 3,005 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று ஒரே நாளில் 80 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,085 ஆக உயர்ந்துள்ளது.

    இதுவரை 1,288 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
    செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 95 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,977 ஆக உள்ளது.
    செங்கல்பட்டு:

    தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 40,698 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 22,047 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 367-ஆக அதிகரித்துள்ளது.
     
    இந்நிலையில் சென்னைக்கு அடுத்தபடியாக உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்கனவே 2,882 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று ஒரே நாளில் 95 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,977 ஆக உயர்ந்துள்ளது.

    இதுவரை 1255 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 24 பேர் உயிரிழந்துள்ளனர். 
    படப்பை அருகே செல்போன் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    படப்பை:

    அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் சுமோ (வயது 35). இவர் படப்பையை அடுத்த சோமங்கலம் அருகே உள்ள காட்ரம்பாக்கம் பகுதியில் உள்ள நிறுவனத்தில் தங்கியிருந்து வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 4-ந்தேதியன்று காட்ராம்பாக்கம் பாக்கியம் நகரில் செல்போனில் பேசி கொண்டிருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் சுமோவிடம் இருந்த செல்போனை பறித்துச் சென்றனர். போலீஸ் விசாரணையில், செல்போனை பறித்து சென்றவர்கள் ஸ்ரீபெரும்புதூர் தாலுகா மேவலுர் குப்பம் பகுதியை சேர்ந்த சதீஷ் (வயது 19) மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் கைப்பற்றினர்.
    செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 160 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,865 ஆக உள்ளது.
    செங்கல்பட்டு:

    தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 1,989 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42,687 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து 14 வது நாளாக கொரோனா பாதிப்பு ஆயிரத்தைத் தாண்டி பதிவாகியுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்துள்ளது.  

    இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 30 பேரின் உயிரை கொரோனா நேற்று பறித்து உள்ளது. இதன் மூலம் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 397 ஆக அதிகரித்து உள்ளது.  தமிழக மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று 1,362 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதன் மூலம் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்து 409 ஆக உயர்ந்துள்ளது ஆறுதல் அளிக்கும் வகையில் உள்ளது.
     
    இந்நிலையில் சென்னைக்கு அடுத்தபடியாக உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்கனவே 2,705 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று ஒரே நாளில் 160 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,865 ஆக உயர்ந்துள்ளது.
    பல்லாவரம் நகராட்சியில் நேற்று ஒரே நாளில் 18 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது.
    தாம்பரம்:

    சென்னையை அடுத்த பல்லாவரம் நகராட்சியில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 18 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதன்மூலம் பல்லாவரம் நகராட்சியில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 300 ஆக உயர்ந்துள்ளது.

    அதேபோல் பம்மல் நகராட்சிக்கு உட்பட்ட நாகல்கேணி, எம்.ஜி.ஆர். சாலையில் உள்ள ஒரு கடையில் பணிபுரியும் 4 ஊழியர்களுக்கு,நேற்று கொரோனா உறுதியானது. இதனால் அந்த கடைக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். இதன் மூலம் பம்மல் நகராட்சியில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 91 ஆக உயர்ந்துள்ளது. இதில் 31 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

    கொரோனா ஊரடங்கால் 15 நாடுகளில் சிக்கித்தவித்த 7,513 பேர் சிறப்பு விமானங்கள் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு பிறகு தனிமைப்படுத்தப்பட்டனர். வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் இதுவரை 177 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இதில் 71 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

    இந்த நிலையில் முகாமில் தங்கியிருந்தவர்களில் கத்தாரில் இருந்து வந்த 10 பேருக்கும், ஒமனில் இருந்து வந்த ஒருவருக்கும், எத்தியோப்பியாவில் இருந்து வந்த 2 பேருக்கும் என மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

    அதேபோல் சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்துக்கு பல்வேறு நகரங்களில் இருந்து 429 விமானங்களில் 29 ஆயிரத்து 461 பேர் வந்து உள்ளனர். இவர்கள் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனர். இதில் 20 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
    செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 72 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,641 ஆக உள்ளது.
    செங்கல்பட்டு:

    தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 40,698 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 22,047 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 367-ஆக அதிகரித்துள்ளது.
     
    அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,477 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 28,924 ஆக அதிகரித்துள்ளது. 14,723 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 294-ஆக உள்ளது.

    இந்நிலையில் சென்னைக்கு அடுத்தபடியாக உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்கனவே 2,569 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று ஒரே நாளில் 72 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,641 ஆக உயர்ந்துள்ளது.

    இதுவரை 1142 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 22 பேர் உயிரிழந்துள்ளனர். 
    ஆம்புலன்ஸ் மோதி மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வண்டலூர்:

    சென்னை அசோக்நகர் ஜாபர்கான்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் யமுனா (வயது 62), இவர் நேற்று முன்தினம் சிங்கபெருமாள் கோவில் அருகே வசிக்கும் தனது மகளை பார்ப்பதற்காக வந்துள்ளார். பின்னர் காட்டாங்கொளத்தூர் பஸ் நிறுத்தம் அருகே சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த தனியார் ஆம்புலன்ஸ் யமுனா மீது மோதியது.

    இதில் பலத்த காயம் அடைந்த யமுனாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இருந்தார். இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 96 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,540 ஆக உள்ளது.
    செங்கல்பட்டு:

    தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 38,716 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 20,705 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 349-ஆக அதிகரித்துள்ளது.
     
    அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,406 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 27,398 ஆக அதிகரித்துள்ளது. 13,808 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 279-ஆக உள்ளது.

    இந்நிலையில் சென்னைக்கு அடுத்தபடியாக உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்கனவே 2,444 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று ஒரே நாளில் 96 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,540 ஆக உயர்ந்துள்ளது.

    இதுவரை 903 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 20 பேர் உயிரிழந்துள்ளனர். 
    ×